Tuesday, December 14, 2010

பாட்டி வடை சுட்ட கதை(சத்தியமா மொக்கை இல்ல)!

ஒரு ஊர்ல பாட்டி ஒருத்தி இருந்தாவாம்..அண்ணளவாக ஒரு எழுபது வயசிருக்கும்.அவாட புருஷன் பத்து வருஷத்துக்கு முன்னரேயே பாட்டியோட இடம்பெற்ற அடிதடி ஒன்றில் அகால மரணத்தைத் தழுவிக் கொண்டார்(லேட்டஸ்ட் நியூஸ்'சு,உங்க பேரப் பிள்ளையளுக்கு சொல்லேக்க இந்த பிட்'டையும் சேர்த்துப் போடுங்க).
அந்த சண்டைக்கான காரணம் என்னவெனில் வழமையாக அந்தப் பாட்டி வடை சுட்டு விற்பதில் கெட்டிக்காரி.ஏரியா'வே பாட்டியின் வடையின் ஓட்டையில் சிக்குப் பட்டிருக்கும்.(இதில இருந்தே தெரியணும் பாட்டி உளுந்து வடை தான் சுட்டு வித்து வந்தவா எண்டு).
இப்பிடித்தான் ஒரு தடவ "மெட்ராஸ் ஐ" வந்தப்போ பாட்டிக்கு மட்டும் வரல..ஏனென்டா அந்த சமயம் பாட்டி அத்திப்பட்டி கிராமத்தில ஒரு பங்சனுக்கு வடை சுட போயிருச்சு.(பாட்டிட வடை ஒத்து வராமத் தான் அத்திப் பட்டி கிராமமே அழிஞ்சது யாருக்குமே தெரியாது..நீங்க சிட்டிசன்'ல பாத்ததெல்லாம் சுத்தப் பொய்)

பாட்டி ஸ்பெஷல் வடை ஒண்ணு சுடும்.அதிண்ட ஸ்பெஷல் என்னெண்டா சாதா வடையோட ஒரு வாழைப்பழமும் சேர்த்து விக்கிறது தான்.அந்த சாப்பாட்டில மயங்கினான்களோ இல்லையோ தின்னு போட்ட வாழைப்பழ தோல்'ல வழுக்கி விழுந்தவங்க ஏராளம் பேர்!!
அவ்வாறு வழுக்கி விழுந்தவங்களுக்கு பாட்டி வெள்ள நிவாரண நிதியில இருந்து நஷ்ட ஈடு குடுப்பாங்க.
.

பாட்டிக்கு தினசரி வருமானமே எக்கச்சக்கம்..அதால புருஷன் வேலை செய்யனுமேண்டு தேவை இருக்கல.
அதால தினசரி நாட்டுச் சரக்கு அடிப்பதும் நடு ரோட்'டில படுப்பதும் தான் தலையாய கடமை எண்டு வாழ்ந்து வந்தார்..

இப்பிடித்தான் ஒரு நாள் மரத்தடி'ல பாட்டி வடை சுட்டு விற்றுக்கொண்டு இருக்கும்போது அங்கு வந்த பாட்டியின் கணவர் சின்னப்பு(பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது!),பசி'ல பாட்டிட்ட வந்து..
"எனக்கொரு பருப்பு வடை சுட்டுத் தாடி.."
அப்பிடீன்னு கேட்டாரு கோபமாக..(நாட்டுச் சரக்கை யாரோ மாற்றி வெறும் தண்ணியை கொடுத்து விட்டார்களாம்).

உங்களுக்கு முதலே தெரிந்தது போல உளுந்து வடை மட்டுமே சுட்டு வந்த பாட்டியிடம் பருப்பு வடை சுட்டுத் தர சொன்னால் பாவம் பாட்டி பருப்புக்கு எங்கே போகும்?(நல்ல நேரம் நான் பக்கத்தில இல்ல!)
"பருப்பு நா சின்னப்பு ("நா" என்றால் சிங்கள மொழியில் இல்லை என்று அர்த்தம்)என்றாள் பாட்டி..
(இவர் தான் மிஸ்டர் சின்னப்பு,One and only husband)

வந்ததே கோபம் சின்னப்புவுக்கு.யாரப் பார்த்து நாய்,பருப்பு என்கிறாய் கழுதை என்று கத்திக்கொண்டு பாட்டிய அடிக்க ஓடி வந்த சின்னப்பு அடுப்புக்கு வைக்கப்பட்டிருந்த விறகு தடக்க பெரிய வாணலியில் கொதிக்கும் எண்ணையில் விழுந்தார் தடுமாறி.(பாட்டி ஏரியா'விலேயே பெரிய பேமஸ் எண்டதால பிஸ்னெஸ்'சும் அதிகம்.அதனால் தான் பெரிய வாணலி).அதுவே சின்னப்புவின் கடைசி பாய்ச்சலாகவும் மாறிவிட்டிருந்தது.

அதன் பிறகு தன்னந்தனியாக வடை சுடும் தொழிலை திறம்பட செய்து வந்தாள் அந்தப் பாட்டி.பிள்ளையள் ரெண்டு பேர் கனடாவில இருந்தாலும் பாட்டியின் கனடாவுக்கான வடை எக்ஸ்போர்ட்(ஏற்றுமதி) எண்ணத்துக்கு எந்த வகையிலும் உதவவில்லை. இப்படித் தான் ஒரு நாள் வழமை போல வடை சுடும் போது காக்கா(அப்பாடி இப்பவாச்சும் மேட்டர்'ருக்கு வந்தானே!) ஒன்னு வந்து மரத்தில் உக்கார்ந்து பாட்டியிண்ட தலை மேல ஆயிப் போயிருச்சு!(என்ன ஆயி எண்டு வடை சாப்பிட வந்த பயல் ஒருத்தன் மணந்து பார்த்து காக்கா ஆயி என கண்டு பிடித்தது வேறு கதை)

(ஆயிப் போன காக்கா)

பாட்டிக்கு சுர்ர்ர்ர் எண்டு கோபம் வந்தது..(ஸ்டார்ட் மியூசிக்).காக்காவ பார்த்து என்ன தான் வேணும் உனக்கு வேற இடம் இல்லாம இங்க வந்து ஆயி போடுறா எண்டு பாட்டி கத்திக் கேக்க பயந்து போன காக்கா ஒன்ஸ்மோர் கேட்டது..!!
வடை கேக்குமெண்டு பார்த்த பாட்டி ஏமாந்து போயி கதைய மீண்டும் சொன்னா..எப்பிடீன்னா..

ஒரு ஊர்ல பாட்டி ஒருத்தி இருந்தாவாம்..அண்ணளவாக ஒரு எழுபது வயசிருக்கும்.அவாட புருஷன் பத்து வருஷத்துக்கு முன்னரேயே பாட்டியோட இடம்பெற்ற அடிதடி ஒன்றில் அகால மரணத்தைத் தழுவிக் கொண்டார்(லேட்டஸ்ட் நியூஸ்'சு,உங்க பெறப் பிள்ளையளுக்கு சொல்லேக்க இந்த பிட்'டையும் சேர்த்துப் போடுங்க).
அந்த சண்டைக்கான காரணம் என்னவெனில் வழமையாக அந்தப் பாட்டி வடை சுட்டு விற்பதில் கெட்டிக்காரி.ஏரியா'வே பாட்டியின் வடையின் ஓட்டையில் சிக்குப் பட்டிருக்கும்.(இதில இருந்தே தெரியணும் பாட்டி உளுந்து வடை தான் சுட்டு வித்து வந்தவா எண்டு).

இப்பிடித்தான் ஒரு நாள் மரத்தடி'ல பாட்டி வடை சுட்டு விற்றுக்கொண்டு இருக்கும்போது அங்கு வந்த பாட்டியின் கணவர் சின்னப்பு(பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது!),பசி'ல பாட்டிட்ட வந்து..
"எனக்கொரு பருப்பு வடை சுட்டுத் தாடி.."
அப்பிடீன்னு கேட்டாரு கோபமாக..(நாட்டுச் சரக்கை யாரோ மாற்றி வெறும் தண்ணியை கொடுத்து விட்டார்களாம்).
உங்களுக்கு முதலே தெரிந்தது போல உளுந்து வடை மட்டுமே சுட்டு வந்த பாட்டியிடம் பருப்பு வடை சுட்டுத் தர சொன்னால் பாவம் பாட்டி பருப்புக்கு எங்கே போகும்?(நல்ல நேரம் நான் பக்கத்தில இல்ல!)
"பருப்பு நா சின்னப்பு ("நா" என்றால் சிங்கள மொழியில் இல்லை என்று அர்த்தம்)என்றாள் பாட்டி..

வந்ததே கோபம் சின்னப்புவுக்கு.யாரப் பார்த்து நாய்,பருப்பு என்கிறாய் கழுதை என்று கத்திக்கொண்டு பாட்டிய அடிக்க ஓடி வந்த சின்னப்பு அடுப்புக்கு வைக்கப்பட்டிருந்த விறகு தடக்க பெரிய வாணலியில் கொதிக்கும் எண்ணையில் விழுந்தார் தடுமாறி.(பாட்டி ஏரியா'விலேயே பெரிய பேமஸ் எண்டதால பிஸ்னெஸ்'சும் அதிகம்.அதனால் தான் பெரிய வாணலி).அதுவே சின்னப்புவின் கடைசி பாய்ச்சலாகவும் மாறிவிட்டிருந்தது.

அதன் பிறகு தன்னந்தனியாக வடை சுடும் தொழிலை திறம்பட செய்து வந்தாள் அந்தப் பாட்டி.பிள்ளையள் ரெண்டு பேர் கனடாவில இருந்தாலும் பாட்டியின் கனடாவுக்கான வடை எக்ஸ்போர்ட்(ஏற்றுமதி) எண்ணத்துக்கு எந்த வகையிலும் உதவவில்லை. இப்படித் தான் ஒரு நாள் வழமை போல வடை சுடும் போது காக்கா(அப்பாடி இப்பவாச்சும் மேட்டர்'ருக்கு வந்தானே!) ஒன்னு வந்து மரத்தில் உக்கார்ந்து பாட்டியிண்ட தலை மேல ஆயிப் போயிருச்சு!(என்ன ஆயி எண்டு வடை சாப்பிட வந்த பயல் ஒருத்தன் மணந்து பார்த்து காக்கா ஆயி என கண்டு பிடித்தது வேறு கதை)

பாட்டிக்கு சுர்ர்ர்ர் எண்டு கோபம் வந்தது..(ஸ்டார்ட் மியூசிக்).காக்காவ பார்த்து என்ன தான் வேணும் உனக்கு வேற இடம் இல்லாம இங்க வந்து ஆயி போடுறா எண்டு பாட்டி கத்திக் கேக்க பயந்து போன காக்கா ஒன்ஸ்மோர் கேட்டது..!!
வடை கேக்குமெண்டு பார்த்த பாட்டி ஏமாந்து போயி கதைய மீண்டும் சொன்னா..எப்பிடீன்னா..

என்ன அண்ணே சூடா இருக்கியா..வேணும்னா சூட ஒரு காப்பி சாப்பிடுறியா?
வேணாமா..அப்ப நீ காபி சாப்பிட இங்க வரல?
அப்ப இந்த நிலா நிலா ஓடிவா பாட்ட பாரண்ணே கொஞ்சமாவது சூடு தணியும்..

இப்பிடித்தான் நண்பர் நாஞ்சில் பிரதாப்'பும் ஒரு தடவ குரங்கு கதை சொல்லப் போயி அடி வாங்கினாரு.
ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன்..பதிவுலகில் பெரும்பாலானோர் விஞ்ஞானிகளே!!ஒரு பதிவு போட எவ்வளவு ரிஸ்க் எடுக்கிறாங்க தெரியுமா..?(போடுறதே மொக்க பதிவு இதுக்க அட்வைஸ்'சு வேறயா)..ஆனா வெளில இருந்து பாக்கிற பசங்க எதோ லுச்சாத் தனமா நம்மள ஒரு லுக்கு விடுவாங்க பாருங்க..(கையில கிடைச்சான் செத்தான் என்கிற மாதிரி)..ஒவ்வொரு இரவும் எவ்வளவு நடுக்கத்தோட வாழுறம் எண்டு நமக்குத்தான் தெரியும்!!
வன்முறைக் கலாசாரம் வேணாம்.எதுவா இருந்தாலும் பின்னால(அதாங்க பின்னூட்டத்துல)சொல்லுங்க நண்பெர்ஸ்!!

Post Comment

31 comments:

suthan raj said...

மொக்கையோ மொக்கை...கையில மட்டும் சிக்கினீங்க...

ஜெயந்த் கிருஷ்ணா said...

சார்.. நீங்க எங்க சார் இருக்கீங்க..

சத்தியமா சொல்றேன் இது மொக்கை இல்ல.. எவனாவது இதை மொக்கைன்னு சொன்னா மவனே டங்குவாரு கிழிஞ்சிரும்...

Unknown said...

மவனே சிக்கினாய் எண்டா...
சங்கு தான்

Unknown said...

ஆமா நரி எங்க ?காணேல??

sentooran said...

இதில நிலா நிலா பாட்டு வேற...கடவுளே...
என்ன ஆளுயா நீ??

yathu said...

ஒவ்வொரு இரவும் எவ்வளவு நடுக்கத்தோட வாழுறம் எண்டு நமக்குத்தான் தெரியும்!!

கார்த்தி said...

வாசிச்சதால 5நிமிசம் வேஸ்டா போட்டுது!! lol

ஐயையோ நான் தமிழன் said...

வேணாம் வலிக்குது.....................
இந்த மாதிரி மொக்கை கதை எல்லாம் என்னால தாங்க முடியாது..................
சொல்லிட்டன் ஆமா................

Anonymous said...

எடு செருப்பை..

Unknown said...

கனடாவுக்கு எக்ஸ்போர்ட்'டு வேற??
எப்பிடி உங்களால மட்டும் பாஸ்?
//இப்பிடித்தான் நண்பர் நாஞ்சில் பிரதாப்'பும் ஒரு தடவ குரங்கு கதை சொல்லப் போயி அடி வாங்கினாரு//
அப்ப அடி வாங்கிட்டே இருக்க போறீங்க??
வாங்குங்க...
-மொக்கைப் பதிவர்களை ஒழிப்போர் சங்கம்

Unknown said...

suthan raj said...
மொக்கையோ மொக்கை...கையில மட்டும் சிக்கினீங்க....//
சிக்கினா??

Unknown said...

வெறும்பய said...
சார்.. நீங்க எங்க சார் இருக்கீங்க..

சத்தியமா சொல்றேன் இது மொக்கை இல்ல.. எவனாவது இதை மொக்கைன்னு சொன்னா மவனே டங்குவாரு கிழிஞ்சிரும்...//

ஏன் சார் தேடுறீங்க??

Unknown said...

rasigan said...
மவனே சிக்கினாய் எண்டா...
சங்கு தான்//
ஏனப்பா ஏன் ??

Unknown said...

sentooran said...
இதில நிலா நிலா பாட்டு வேற...கடவுளே...
என்ன ஆளுயா நீ?//

ஹஹா அடியேன் தமிழன் நான் உங்கள் நண்பன்..

Unknown said...

yathu said...
ஒவ்வொரு இரவும் எவ்வளவு நடுக்கத்தோட வாழுறம் எண்டு நமக்குத்தான் தெரியும்!//

நீங்களுமா?

Unknown said...

கார்த்தி said...
வாசிச்சதால 5நிமிசம் வேஸ்டா போட்டுது!! lol//

சொன்னா கேக்கிறீங்களா?

Unknown said...

ஐயையோ நான் தமிழன் said...
வேணாம் வலிக்குது.....................
இந்த மாதிரி மொக்கை கதை எல்லாம் என்னால தாங்க முடியாது..................
சொல்லிட்டன் ஆமா.......//

வேணும்னா சூடா கப் காபி சாபிடுரீன்களா??

Unknown said...

rasigan said...
ஆமா நரி எங்க ?காணேல?//

நரி நாட்டு சரக்கு அடிக்க போய்ட்டுது...

Unknown said...

Anonymous said...
எடு செருப்பை../
இதுக்கெல்லாமா??

Unknown said...

jorge said...
கனடாவுக்கு எக்ஸ்போர்ட்'டு வேற??
எப்பிடி உங்களால மட்டும் பாஸ்?
//இப்பிடித்தான் நண்பர் நாஞ்சில் பிரதாப்'பும் ஒரு தடவ குரங்கு கதை சொல்லப் போயி அடி வாங்கினாரு//
அப்ப அடி வாங்கிட்டே இருக்க போறீங்க??
வாங்குங்க...
-மொக்கைப் பதிவர்களை ஒழிப்போர் சங்கம்//

அடங்கமாட்டமே...என்ன பண்ணுவீங்க?

Anonymous said...

hhaaha i lov it man!!continue

AnushangR said...

ஐயோ ஐயோ... இந்த கொடுமையை எங்க போய் சொல்லி அழுவது?

மொக்கை போடுராராம்....

KANA VARO said...

அடங்! கொய்யாலே, இப்பிடியெல்லாமா யோசிக்கிறது. கலக்கல்.... தொடருங்கோ....

prashanth said...

assignment seijirathayum vidduddu erunthu vaasichcha anakku appidi erukkum. athukkum meet pannekka sollluran.

Unknown said...

Anonymous said...
hhaaha i lov it man!!continue//
thaankz

Unknown said...

AnushangR said...
ஐயோ ஐயோ... இந்த கொடுமையை எங்க போய் சொல்லி அழுவது?

மொக்கை போடுராராம்..//

ஹிஹி சத்தியமா மொக்கை இல்லைங்கோ!!

Unknown said...

KANA VARO said...
அடங்! கொய்யாலே, இப்பிடியெல்லாமா யோசிக்கிறது. கலக்கல்.... தொடருங்கோ..//

நன்றி வரோ..

Unknown said...

prashanth said...
assignment seijirathayum vidduddu erunthu vaasichcha anakku appidi erukkum. athukkum meet pannekka sollluran.//

அது நான் இல்லைங்கோ...எஸ்கேப்...

ம.தி.சுதா said...

நாதாரிப்பய புள்ளைகளா... இப்படியா யோசிப்பானுக... ஹி...ஹி..ஹி

அருமைங்கோ...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
பொது அறிவுக் கவிதைகள் - 4

Vathees Varunan said...

கொய்யால இதிலும் பார்க்க கவிதையே பறவாயில்லை...

Vinu said...

பாட்டி photoவையும் போட்டிருந்தால் நல்லாயிருக்கும் என்று நினைக்கிறன் ஏனென்றால் கஷ்டபட்டு அந்த காக்கையவே போட்டு இருக்கீறீர்களே............

Related Posts Plugin for WordPress, Blogger...