
ஏன் முதலிலேயே தப்சி பெயர் வர காரணம் எதுன்னு தேடுறீங்க...
மொதல்'ல மத்தவங்க கந்தையா சுப்பையா பெயருகள் வர காரணம் என்னன்னு பாப்பம்....
சாகும் மட்டும் நடை நடையா நடக்க வேண்டியது தானா??
மணிவண்ணன்'னு பெயரு வைச்சா மணி அடிச்சுக்கிட்டே இருக்கனுமா??அப்ப கோயிலுக்கு ஒரு மணிவண்ணன் பிடிக்க எங்க தேடி போவாங்க??
கந்தசாமி'ன்னு பெயரு வைச்சா எல்லாரும் அவரையே கும்புடுவாங்களா??
இல்லை அவர இருக்க வைச்சி தேர் தான் இழுப்பாங்களா??
விக்கி உலகம்னு பெயரு வைச்சா மாம்பழ சண்டை'ல பிள்ளையாரு இவர சுத்தி வந்து மாம்பலத்த ஆட்டைய போட்டிடுவாரா??
நாஞ்சில் மனோ'னு பெயரு வைச்சிக்கிட்டா நாஞ்சில் எக்ஸ்பிரஸ் அவர்ட வீட்டு வாசலுக்காலேயே போகுமா புக்கு புக்குனு சத்தம் போட்டுக்கிட்டு??
ஓட்டவடை நாராயணன் எண்டு பெயரு வைச்சிக்கிட்டா பழைய வடை சுட்ட பாட்டிக்கும் இவருக்கும் கிசு கிசுன்னு பத்திரிகைல போட்டிடுவான்களா என்ன!!
தப்சின்னு பெயரு வைச்சிக்கிட்டா அவங்க பக்கத்தில போனா கப்சி அடிக்காதுன்னு சொல்ல வர்றாங்களா?
தினசரி குளிப்பாங்களோ??
மதி சுதா'னு பெயரு வைச்சிகிட்டா சந்திரன் அவங்க வீட்டுக்கு மேல தான் தினசரி வட்டம் போடுவாரோ??
அல்லது பக்கத்தி வீட்டு சுதா'வ வளைக்க போட்டுகிட்ட திட்டமோ???
பன்னிக்குட்டி ராமசாமி கைவசம் தான் உலகம் பூரா நடக்குற பன்னி பிசினஸ் இருக்குதோ??
பெரிய பன்னி என்ன விலை??குட்டிப் பன்னி என்ன விலை??
மாசத்துக்கொரு தடவையாவது தண்ணி காட்டுவீங்கள்ளே??
சியேர்ஸ் வித் ஜனா எண்டு பெயர் வைச்சிக்கிட்டா நம்ம பசங்க ஒவ்வொரு நயிட்டும் போடுற குவாட்டர் கட்டிங் பார்ட்டிக்கெல்லாம் இவர ஓசில சரக்கடிக்க கூப்பிடுவாங்களோ??
கோமாளி செல்வானு சொன்னா எல்லாரும் இவர் படத்தையே வீட்டுக்கு முன்னால பிரேம் போட்டு மாட்டிடுவாங்களோ??
வீடு உருப்படும்னு சொல்றீங்க??
சிரிப்பு போலீஸ்னு பெயரு வைச்சிக்கிட்டா லைசன்ஸ் இல்லாம ட்ராபிக் போலீஸ்கிட்ட மாட்டினா லஞ்சம் ஒன்னும் கொடுக்க தேவலையோ??
ஹிஹி இல்ல பாடி சைஸ்'ச பாத்து பிழைச்சு போ'னு விட்டிடுவாங்களோ??
சி பி அப்பிடின்னா எல்லாரும் இவரு "சின்னப் பிள்ளை"ன்னு தூக்கி வைச்சு தாலாட்டுவாங்களோ??
மனுசர் ஐடியாவா தான் பெயரு வைச்சிருக்கார்லே!!
| டிஸ்கி 1 : இந்த மாதம் தப்சி மாதமானு நீங்க கேக்குறது புரியுது... அத்தின பதிவு தப்சி பத்தி போட்டாச்சு... நெக்ஸ்டு யாராச்சும் சிக்காம போயிடுவாங்களா என்ன!! டிஸ்கி 2 :இந்தப் பதிவில் வரும் பெயர்கள் யாவும் கற்பனையே..யாரையும் குறிப்பிடுவனவோ மனதை புண்படுத்தவோ இல்லை.அப்புறம் ஆயிரம் கோடி ரூபா நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தாக்கல் பண்ணீடாதீங்க..என்னட்ட கொஞ்சம் கம்மியா தான் கைவசம் காசு இருக்கு.. டிஸ்கி 3 :நண்பர்கள் கோவிச்சுக்காதீங்க..என்னால முடிஞ்ச நேரமெல்லாம் உங்க கடைப்பக்கம் வர ட்ரை பண்ணுறன்.. அப்பிடி வர மறந்துட்டேன்னு சொன்னாக்கா ஏன் டா வரேல நாயே....அப்பிடீன்னு பேசாமா ஒரு கமெண்டு போடுங்க.. அடுத்த நிமிஷம் உங்க காலடில கிடப்பேன்... |








