Tuesday, October 26, 2010

என்று தீரும் இந்த சாதி வெறி??



நூற்றாண்டுகள் கடந்தாலும்
கழியாத
கலையாத
சாதிவெறி..

"சாதிகள் இல்லையடி பாப்பா"
சாதி வெறி பிடித்தோர்க்கு
கேட்புலன் இல்லையடி
அன்றிலிருந்தே!

மாற்றமென்னும் மருந்து
வேறெங்கும்
இல்லை
மனதில் வேண்டும்!!

மனதுள்ளோர்
மாறியிருப்பார்
மாற்றியிருப்பார் என்றோ!

சிலரைத்தவிர
முக்கால்வாசிப்பேர்
மடையர்களாக..கோர்ட் சூட் அணிந்த
கனவான் போர்வையில்
பலவான்கள்!!

மதிவண்ணன் வரிகளைப் போல்,
"எல்லாமும் சாத்தியம்
தானெனினும்
எதையும் செய்யப்போவதில்லை
நான்..
என்னை கீழாகவும் உன்னை
மேலாகவும் காட்ட..
எனக்கு பூட்டிய இழி முகத்தை
மட்டுமல்லாது
நீயநிந்துகொண்ட உயர்
முகத்தையும்
கிழித்துக்கொண்டிருப்பது தவிர!!"

சாதிகள் ஒழியட்டும்
சாதி வெறி அடங்கட்டும்
மனங்களே மனிதர்களே
நாளை உங்கள் கைகளில்!

பிடித்திருந்தால் பதிவு உங்களுக்கு ,பின்னூட்டம் மற்றும் ஓட்டுகள் எனக்கு..!!

Post Comment

Friday, October 22, 2010

இடையினம் கற்றுத் தரவா?


என் கண்களுக்கு
உறக்கமில்லை!!
சதா உன்னையே
பார்க்கின்றனவே
அதனாலோ என்னமோ!!


மெல்லினமே..
உனக்கு
இடையினம் கற்றுத் தரவா?
வல்லினம்
எனது விரல்களே!!


உன் ஸ்பரிசத்தால்
என் உடலில் மின்சாரம்..
நீ என்
சம்சாரம் என
குத்திய முதல் முள்!!

Post Comment

Tuesday, October 19, 2010

பின்நவீனத்துவம்-காதலில்!!


மிஸ்ட் கால்
எஸ் எம் எஸ் இன்றி..
ப்லக்க்பெர்ரி போன்
தான் உண்டு..
முறிக்கிட புது
பைக்குமின்றி..
பைக் என்ன
பென்ஸ்'சும் கொண்டு ..
பார்த்திட ஒரு
சினிமா இன்றி..
அடிக்கடி
ஹொலி வூட் பார்த்து..
கூடிட ஒரு
பீச் பார்க் இன்றி..
பீச் இலே சனம் என்று
பார்க்'கிலே கடலை போட்டு..
கூத்தாட ஒரு
pub தான் இன்றி..
pub 'இலே நைட்
டிஸ்கோத்தே போட்டு..
தபு ஷங்கர்
கவிதைகள் இன்றி..
காதலித்து பார்
கவிதையை திருடி..
பேஸ்புக் ஸ்கைப்'பும்
வழியின்றி..
சாட்டிங் இல்
குட் நைட் மோர்னிங்..
தனிமைக்கு ஒரு
இடம் தான் இன்றி..
தினசரி
மீட்டிங் போட்டு..
காதலித் தார்கள்
அன்று!!
காதலிக்கின்றோம் இன்று!!



என்ன சொல்றீங்க ??அத்தனையும் உண்மை தானே??

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...