Saturday, August 7, 2010

வாலியும் வைரமுத்துவும் தான் கவிஞர்களா??


முத்தெடுக்க ஆர்வலர் இல்லை
கவித்தேன் பருக
பசியுடன் யாருமில்லை
வாலியும் முத்துவும் தான்
கவிஞரெனில்
மற்றோர்கள் ஏது செய்ய?
புலமை வாய்ந்த பலருக்கு
புகழ் தான் வைக்கவில்லை
ஏன்
அடையாளமே கிடைக்கவில்லை
ஆள் மனமே நீ யோசி!

பதிவுலகில் கூட கண்டேன்
ஆயிரமாம் கவிதை பூண்ட
ஆணித்தர கருத்து தந்த
ஒரு சில பாரதியார்கள்
சில பல கண்ணதாசன்
பின்னூட்டல் யாதுமின்றி
பின்தொடர ஆட்களின்றி
கவிதைக்கு மதிப்பு இன்றி
ஆளுக்கே அடையாளமின்றி...
அப்பப்பா.
ஏன் இந்த பாகுபாடு?
ஏன் இல்லை ஈடுபாடு?
ஆள் மனமே நீ யோசி!

கல் கூட கை பட்டால் தான்
முத்தாக வெளிப்படுமே
இவர்களுக்கேங்கே வெளிப்பாடு?
யாரில் நான் குறை தான் சொல்ல??

விடியாத இவர்கள்
வாழ்வில்
விடியல் தான் எப்போது??
விடையில்லா
வினாவோடு
விளக்கமில்லாமலே என் பேனா!!

Post Comment

Friday, August 6, 2010

எங்கே என் சானியா மிர்சா??


சானியா மிர்சா..
ஏன்??
ஏன் நீ திருமணம்
செய்தாய்?
எங்கள் ஆசைகளை
நிராசை ஆக்கினாய்??
கண்ட கனவுகள்
கண்ணீரில் கரைந்ததே!
கல்யாணம் என்று சொல்லி நீ
கண்ணை விட்டு மறைந்ததேன்??

சானியா சானியா
சொக்க வைத்தாய் சானியா!
சொக்கி சொக்கி வந்திச்சே
பலருக்கு நியுமோனியா!!

பத்தாவது படிக்கும் போது
எப்போதும் உன் நினைப்பு!
உன்னை பார்க்கும் போது என் நெஞ்சு
பத்தி எரியும் அடுப்பு!!
கிறங்க என்னை வைத்தது
உன் சிவந்த மேனி சிரிப்பு..
அடித்த ஷொட்டுகள் பிழைக்கும் போது
பிழைத்து போன நடிப்பு!

நீ குனிந்து சர்வீஸ் போடும் போது
பார்ப்பாங்களே விடுப்பு!
உனை பார்க்காதே எண்டு சொல்ல
இப்போ மாலிக் தானே தடுப்பு!!

முதன் முதலாய்
டென்னிஸ் பார்த்ததுவும்
உன்னாலே!
தூங்காமல் தவித்ததுவும்
உன்னாலே!


டென்னிஸ் பார்த்தேன்
காணவில்லை
நியூஸ் பார்த்தேன்
அதிலும் இல்லை!
கண் பார்க்க நீ
அருகிலில்லை
வங்கக்கடலருகில்
நீ இல்லை!!

எத்தனை இரவுகள்
எத்தனை கனவுகள்
உந்தன் நினைவோடு....
எத்தனை எண்ணங்கள்
எத்தனை தவிப்புகள்
எந்தன் மனதோடு...எல்லாம் உன்னாலே!!

மாலிக்குடன் நீ...
தாலிக் கயிறுடன் நான்..
போலி ஆசை என்று
பீத்துகின்றேன் இப்போது...!!

உன் படங்களை கூகிள்'லில்
தேடிய படி..
"சானியா வெறியன்..."


சானியா மிர்சா மீது "பற்றுக்கொண்ட" நீங்கள் கீழே குத்துவதன் மூலம்...!!!!

Post Comment

Thursday, August 5, 2010

தமிழ் திரையுலகின் இன்றைய டாப் கவிஞர்கள்!

தமிழ் திரையுலகை ஆட்டிப்படைக்கின்ற கவிஞர்களில் சிலரின் புகைப்படங்கள்....
கண்ணதாசன்,வைரமுத்து,வாலி போய் விடின் தூய தமிழ்க்கவிதைகள் யாரிடமிருந்து வரக்கூடும்??


கவி மார்க்கண்டேயர் வாலி

கவிப்பேரரசு வைரமுத்து

கவிஞர் நா.முத்துக்குமார்

கவிதாயினி தாமரை

பா.விஜய்

கபிலன்

யுகபாரதி

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...