
கண்களுக்குள் காதல்
வைத்தால்..
கண்ணுக்குள் வருத்தமடி..
மனதுக்குள் காதல்
வைத்தால் ...
மனதுக்குள் வருத்தமடி..
மனங்கள் இரண்டும் சந்திக்கட்டும்
அரவமற்ற இராப்பொழுதில்.. !!!

தாய்மையின் தூய்மை..
மழலையின் மனது..
வாலிபனின் முதல் காதல்..
முதுமையின் அமைதி..
அத்தனையும் புனிதமானவை
வாழ்விலே.. !!

மற்றவர்களை
உன்னோடு
ஒப்பிடும் அளவிற்கு
நீ
அழகின் நியமம்
ஆகிவிட்டாய் எனக்கு!!

தனிமை
வடிக்கும்
கவிதைகளுக்கு
ஆழம் அதிகம்.. உனை
தனிமையில் காணும்
நிமிடங்களின்
நீளம் கொஞ்சம்..!!
உங்கள் பின்னூட்டல்கள் தான் எனக்கு ஊக்கமருந்தாகுமாதலால்...மறக்காமல் உங்கள் பதிவுகளை விட்டுச்செல்லுங்கள் பின்னூடல்களாய்!



.jpg)





