Thursday, July 22, 2010

கல்நெஞ்ச மறுமொழி??



காதல் என்னை தீண்டும் போதும்
காற்று மெல்ல வருடும் போதும்
பெண்மை என்னை இழுக்கும் போதும்
கவிதை தானடி உறைவிடமாகும்!

கண்ணுக்குள்ளே கதிர்வீச்சு
உன் கண்கள் கண்டால்
மனதில்
தெருக்கூத்து!
கனவு காட்சியில் வந்த
காதல் தேவதை நீ
என் இதயம் என்பதோ
உன் வசந்த மாளிகை!
என் மூச்சாகி நின்றவளே!


காலமெல்லாம் காத்திருப்பேன் என
மனம் கூறும் உறுதிமொழி
மன்மத்தின் திடத்தை
கலைக்க வருமா
கல்நெஞ்ச மறுமொழி??
புயல் அடித்த பின்பும்
தென்றலின் சுவாசம் நுகரலாம்..
உன் பதில் பார்த்து நானும்
எப்பாதை நகரலாம்??

Post Comment

Wednesday, July 21, 2010

உசுரே போகுதே ...


இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த ,
என் புத்திக்குள்ள தீப்பொரிய நீ வெதச்ச ,
அடி தேக்கு மர காடு பெருசு தான்,
சின்ன தீ குச்சி ஒசரம் சிருசு தான்.......

அடி தேக்கு மர காடு பெருசு தான்,
சின்ன தீ குச்சி உசரம் சிருசு தான்
ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி,
கரும் தேக்கு மரக் காடு வெடிக்குதடி.....

உசுரே போகுதே ...
உசுரே போகுதே ....
உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில....

ஓ... மாமன் தவிக்குறேன்
மடிப்பிச்ச கேக்குறேன்,
மனச தாடி என் மணிக் குயிலே....

அக்கரை சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி,
அக்னி பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி.

உடம்பும் மனசும் தூரம் தூரம் ஒட்ட நினைக்க ஆகல,
மனசு சொல்லும் நல்ல சொல்ல மாய உடம்பு கேக்கல....

தவியா , தவிச்சு, உசுரு தடம் கெட்டு திரியுதடி,
தைலம் குருவி என்னை தள்ளி விட்டு சிரிக்குதடி.

இந்த மம்முத கிருக்கு தீருமா?
அடி மந்திரிச்சு விட்ட கோழி மாருமா?

என் மயக்கத்தை தீர்த்து
வச்சி மன்னிச்சிருமா,
சந்திரனும் சூரியனும்,
சுத்தி ஒரு கொட்டில் வருகுதே....
சத்தியமும் பத்தியமும் இப்போ தல சுத்தி கிடக்குதே!!


உசுரே போகுதே உசுரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில

ஓ... மாமன் தவிக்குறேன்
மடிப்பிச்ச கேக்குறேன்,
மனச தாடி என் மணிக் குயிலே.

அக்கரை சீமையில் நீ இருந்தும்
ஐவிரல் தீண்டிட நினைக்குதடி,
அக்னி பழமுன்னுதெரிஞ்சிறுந்தும்
அடிக்கடி நாக்கு துடிக்குதடி.

இந்த உலகத்தில் இது ஒன்னும் புதுசில்ல....
ஒன்னு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கதுல....

விதி சொல்லி வழி போட்டான் மனுஷ புள்ள
விதி விலக்கு இல்லாத விதியும் இல்ல.....

எட்ட இருக்கும் சூரியன் பாத்து மொட்டு விரிக்குது தாமரை
தொட்டு விடாத தூரம் இருந்தும் சொந்த பந்தமோ போகல

பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியல
பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலையே

என்கட்டையும் ஒரு நாள் சாகலாம்
என் கண்ணுல உன் முகம் போகுமா
நான் மண்ணுக்குள்ள....
உன் நெனப்பு நெஞ்சுக்குள்ள....


சந்திரனும் சூரியனும்,
சுத்தி ஒரு கொட்டில் வருகுதே...
சத்தியமும் பத்தியமும் இப்போ தல சுத்தி கிடக்குதே!!

உசுரே போகுதே உசுரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ... மாமன் தவிக்குரேன் மடிப்பிச்ச கேக்குரேன்,
மனச தாடி என் மணிக் குயிலே.

அக்கரை சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி,
அக்னி பழம்'னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி.......

உசுரே போகுதே உசுரே போகுதே உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில
ஓ... மாமன் தவிக்குரேன் மடிப்பிச்ச கேக்குரேன்,
மனச தாடி என் மணிக் குயிலே.

அக்கரை சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி,
அக்னி பழம்'னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி.......

Post Comment

Tuesday, July 20, 2010

பூக்களும் காயம் செய்யும்!!

போடி போடி கல்நெஞ்சி!

மார்புக்கு ஆடை
மனசுக்கு பூட்டு

ஒரே பொழுதில்
இரண்டும் தரித்தவளே!

காதல் தானடி
என்மீதுனக்கு?

பிறகேன்
வல்லரசின்
ராணுவ ரகசியம்போல்
வெளியிட மறுத்தாய்?

தூக்குக்கைதியின்
கடைசி ஆசைபோல்
பிரியும்போது ஏன்
பிரியம் உரைத்தாய்?

நஞ்சு வைத்திருக்கும்
சாகாத நாகம்போல்
இத்தனை காதல் வைத்து
எப்படி உயிர் தரித்தாய்?

இப்போதும் கூட
நீயாய்ச் சொல்லவில்லை
நானாய்க் கண்டறிந்தேன்

இமைகளின் தாழ்வில் -
உடைகளின் தளர்வில் -

என்னோடு பேசமட்டும்
குயிலாகும் உன்குரலில் -

வாக்கியம் உட்காரும்
நீளத்தில் -
வார்த்தைகளுக்குள் விட்ட
இடைவெளியில் -

சிருங்காரம் சுட்ட
பெருமூச்சில்

வறண்ட உதட்டின்
வரிப்பள்ளங்களில் -

நானாய்த்தான் கண்டறிந்தேன்
காதல் மசக்கையில்
கசங்கும் உன் இதயத்தை.

சேமித்த கற்பு
சிந்தியா போயிருக்கும்?

நீயாக கேட்டிருந்தால்
நெஞ்சு மலர்ந்திருப்பேன்

உண்டென்றால்
உண்டென்பேன்
இல்லையென்றால்
இல்லையென்பேன்

இப்போதும் கூட
தேசத்துரோகமென்பதை
ஒப்புக்கொள்ளாத தீவிரவாதி மாதிரி

உள்ளாடும் காதலை
ஒளிக்கவே பார்க்கிறாய்

காதலில்
தயக்கம் தண்டனைக்குரியது
வினாடி கூட
விரயமாதல் கூடாது

காலப் பெருங்கடலில்
நழுவி விழும் கணங்களை
மீண்டும் சேகரிக்க
ஒண்ணுமா உன்னால்

இந்தியப் பெண்ணே!
இதுவுன்
பலவீனமான பலமா?
பலமான பலவீனமா?

என்
வாத்தியக்கூடம்வரை
வந்தவளே

உன் விரல்கள்
என் வீணைதடவ வந்தனவா?

இல்லை
புல்லாங்குழல் துளைகளைப்
பொத்திப்போக வந்தனவா?

என் நந்தவனத்தைக்
கிழித்துக்கொண்டோடிச்
சட்டென்று வற்றிவிட்ட நதி நீ

உன் காதலறிந்த கணத்தில்
என் பூமி பூக்களால் குலுங்கியது

நீ வணங்கிப் பிரிந்தவேளை
என் இரவு நடுங்கியது

பிரிவைத் தயாரித்துக் கொண்டுதானே
காதலையே அறிவித்தாய்





இருபதா? முப்பதா?
எத்தனை நிமிடம்?
என் மார்பு தோய்ந்து நீ
அழுததும் தொழுததும்

என் பாதியில்
நீ நிறையவும்
உன் பாதியில்
நான் நிறையவும்
வினாடித்துகள் ஒன்று
போதுமே சிநேகிதி

நேரம் தூரம் என்ற
தத்துவம் தகர்த்தோம்

நிமிஷத்தின் புட்டிகளில்
யுகங்களை அடைத்தோம்

ஆலிங்கனத்தில்
அசைவற்றோம்

உணர்ச்சி பழையது
உற்றது புதியது

இப்போது
குவிந்த உதடுகள்
குவிந்தபடி
முத்தமிட நீயில்லை

தழுவிய கைகள்
தழுவியபடி
சாய்ந்து கொள்ள நீயில்லை

என் மார்புக்கு வெளியே
ஆடும் என் இதயம்
என் பொத்தானில் சுற்றிய
உன் ஒற்றை முடியில்

உன் ஞாபக வெள்ளம்
தேங்கி நிற்குது
முட்டி அழுத்தி நீ
முகம்பதித்த பள்ளத்தில்

தோட்டத்துப் பூவிலெல்லாம்
நீ விட்டுப்போன வாசம்

புல்லோடு பனித்துளிகள்
நீவந்துபோன அடையாளமாய்க்
கொட்டிக் கிடக்கும்
கொலுசுமணிகள்

நம் கார்காலம்
தூறலோடு தொடங்கியது
வானவில்லோடு நின்றுவிட்டது

உன் வரவால்
என் உயிரில் கொஞ்சம்
செலவழிந்து விட்டது

இந்த உறவின் மிச்சம்
சொல்லக்கூடாத
சில நினைவுகளும்

சொல்லக்கூடிய
ஒரு கவிதையும்.

வைரமுத்துவின் வைரவரிகள்

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...