Monday, April 15, 2013

நடிகை ஸ்ரேயா பௌலிங்..!

                         


'எத்தின டிக்கெட் வேணும்னு சொன்னீங்க?'னு சிங்களத்தில கேட்ட டிக்கட் கவுண்டர் பையனிடம் இரண்டாவது முறையாக 'பதினாறு' என்றேன்.கூடவே, 'இத்தனை டிக்கட் எடுக்கிறோமே, டிஸ்கவுன்ட் கிடையாதா சார்' என்று சகட்டுமேனிக்கு கேட்டேன்.

'இவிங்கெல்லாம் கால் கிலோ வாழைப்பழம் வாங்கினாலே ஒரு பழம் டிஸ்கவுன்ட்டு கேக்கிற பயலுக' அப்பிடின்னு மனசுக்குள்ள நினைச்சிருப்பானோ என்னமோ,மேலும் பேச்சை வளர்க்க விரும்பாமல் 'இல்லை'அப்பிடின்னு சொல்லி டிக்கட்டை கையில் திணிச்சான்.

'கஸ்டமர் கெயார்' சரியில்லைன்னு சொல்லி இவன பிடிச்சு உள்ள போடணும்னு நினைச்சிக்கிட்டே வந்த வேலைய முடிப்பம்னு உள்ளே சென்றேன்.

என்னைய மேலேயும் கீழேயும் பார்த்து,'இதுக்கு முதல் எப்பவாச்சும் 'பௌலிங்' (Bowling) விளையாடின அனுபவம் இருக்காடா?' என்றான் கூடவே வந்த பதினஞ்சு வானரங்களில் ஒருத்தன்.

நான் ஒன்றுமே பேசவில்லை.

'உன்ன பாத்தா இது தான் பெஸ்டு டைம் போல இருக்கே?'என்றான்.

'நான் தான் உன்கிட்ட எதுவுமே கேக்கேலையேடா,அப்புறம் என்னடா வேணும் உனக்கு?'

'இல்லை,இது எனக்கு பெஸ்ட்டு டைம்மு..எனக்கு யாராச்சும் பார்ட்னேர்ஸ் இருந்தா சமாளிச்சுக்கலாம்..இல்லைனா என்னைய தான் இன்னிக்கு முழு பயபுள்ளைகளும் டார்கட் பண்ணி அடிக்க போறாங்கடா..'என்றான்.சற்றே பயம் கலந்த பதட்டம் அவன் மூஞ்சியில் அப்பட்டமாய் தெரிந்தது.

'நான் அப்பவே இது வேணாம்,எங்கியாச்சும் சாப்பிட போவோம்னு கேட்டேன்டா..ஒரு பயலும் ஒத்துக்கலை..பௌலிங் தெரியாதுன்னு சொன்னா நோண்டி ஆயிரும் மச்சி,அதான் ஒண்ணும் சொல்லாம நானும் வந்திட்டேண்டா...' அவன் புலம்பல் ஓய்ந்தபாடில்லை.

உள்ளே போயாச்சு.அரைகுறை வெளிச்சத்தில் ஆளுக்காள் பனம்பழம் சைஸில் ஒவ்வொரு பந்தை வைத்து உருட்டிகொண்டிருந்தனர்.கலர் கலர் பந்துகளை விட,காற்சட்டை போட்ட பெண்களும்,குட்டை பாவாடையில் பந்துருட்டும் பெண்களும் தான் அனைவர் கவனங்களையும் ஈர்த்துக்கொண்டது.

கூடவே வந்திருந்த பாய்ப்ரெண்ட்ஸ் எல்லாம்,என்னோட கேர்ள் பிரெண்டை எத்தின பசங்க சைட் அடிக்கிறாங்கன்னு எண்ணிக்கொண்டிருந்தார்கள். 'மார்க்கெட் ரிசேர்ச்' போலும்!

நமக்குன்னு பந்து உருட்டிவிட இரண்டு ஏரியா தந்தார்கள்.வந்திருந்தவர்கள் இரண்டாய் பிரிக்கப்பட்டு ஒரு ஏரியாக்கு எட்டு பேர் வீதம்,கையில் கொஞ்ச கலர் பந்துகளும், போட்டுக்கொள்ள 'ஷூ'க்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டன!

'அடே தெரிஞ்சா சொல்லி தாடா,இதுக்கு முதல் இந்தபக்கம் வந்ததே இல்ல மச்சி'.இவன் ஒரு பக்கம் நொய் நொய்னு கத்திக்கிட்டிருந்தான்.இந்த நேரத்தில நாலைஞ்சு பேர் பந்தை உருட்டிவிட்டிருந்தனர்.

அவனோட முறை வந்தது.

பச்சை கலர் பந்தை நடுக்கத்துடனேயே தூக்கிக்கொண்டு மூன்று தரம் முன்னாடி பின்னாடியாய் ஆட்டி,வேகத்தை கூட்டி ஒரு கட்டத்தில் பந்தை ரிலீஸ் செய்தான்.எதோ எதிரே நிக்கிறவனுக்கு 'கேட்சிங்' பிராக்டிஸ் குடுப்பவன் போல உருட்டி விடுறதுக்கு பதிலாக மேலே தூக்கி எறிந்துவிட்டான்.ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டிருப்பான் போல!

ஹஹஹ ஹிஹிஹி என்று பொண்ணுகளும் பையன்களுமாய் கலாய்த்துவிட்டார்கள்,பாவம்.எது நடக்கக்கூடாதென்று பயந்தானோ அது நடந்துவிட்டது!

'நாறப்பயலே,இதுக்கு தான் அப்பவே வேணாம்னேன் கேட்டியா?'அவனை பொறுத்த வரைக்கும் என்னையை பார்த்து 'நாக்கை பிடுங்கிக்கிற மாதிரி' கேள்வி கேட்டுவிட்டான்!

இரண்டு பேர் கழித்து என்னுடைய முறை வந்தது.எனக்கு முதல் விளையாடியது ஒரு பொண்ணு.பத்தோ பன்னிரண்டு வெள்ளை காய்கள் இருக்கும் அடிப்பதற்கு,அதில் ஒன்று மட்டுமே மீதம் இருக்கும் வகையில் அபாரமாக அடித்திருந்தாள்.நிச்சயம் முன் அனுபவம் இருந்திருக்கவேண்டும் அவளுக்கு.

கையில் பவுடர் பூசிக்கொண்டு,ஒரு பந்தை எடுத்து மேலும் கீழுமாய் தூக்கி அதன் கனத்தை பார்த்தேன்.எப்படியும் குறைந்தது இரண்டு கிலோ தேறும் போல் தெரிந்தது!

'கமோன் மைந்தன்' பின்னாடி நின்ற எவனோ ஒருத்தன் உசுப்பேத்துறான்னு மட்டும் புரிந்தது.கூடவே ஓரிரு கைதட்டல்களும்! அடடா,என்னையே நம்பி இருக்கிற இவங்களுக்கு என்ன செய்யப்போறாய் மைந்தா.....

அதிகமாய் அலட்டிக்கவில்லை.பந்தை எடுத்து முன்னாடி சென்றேன்.இரண்டு சுற்று சுற்றிவிட்டு வேகமாய் உருட்டிவிட்டேன்..

நல்ல வேகத்துடன் சரியான பாதையில் உருட்டிவிட்டால் என்னாகுமோ,அது நடந்தது எனக்கு.கிளீன் ஹிட்!!சடபுட சடபுட என்று அனைத்தும் கீழே விழுந்தன!!

பரத்த ஆரவாரம்.யாருமே இதை எதிர்பார்த்திருக்கவில்லை போலும்!ஹிஹி ஏன் நான் கூட இதை எதிர்பார்க்கவில்லை!ஒரு கணம் மனசில 'பட்டர்ப்ளை எபெக்டு'!

அனைவரும் கைதட்டுகிறார்கள்,ஒரு முகம் மட்டும் என்னை முறைத்து பார்ப்பது புரிந்தது..அட நம் 'நொய் நொய்' நண்பன்! 

'கவுத்துப்புட்டியே மச்சி...'இன்னும் கவலையில் தான் இருந்தான் அவன். 'கொஞ்சமாச்சும் சொல்லி தந்திருக்கலாமேடா..?'

'அட போடா நீ வேற,நீ விளையாட்டு தெரியாதவன்கிட்ட இதுபத்தி கேட்டு நச்சரித்துக்கொண்டிருந்தாய்..நான் இதுபத்தி விளையாட்டு தெரிஞ்சவன்கிட்டே கேட்டேன்.. பேசிக்கலி,உள்ளே வரும்போது நானும் உன்னமாதிரி தாண்டா.."

அநேகமாக என் முகத்தில் தான் துப்பியிருக்க வேண்டும்.வெளிச்சம் அதிகமில்லாததால் கைப்புள்ளைக்கு சேதமில்லை..!


Post Comment

3 comments:

rajamelaiyur said...

//அநேகமாக என் முகத்தில் தான் துப்பியிருக்க வேண்டும்.வெளிச்சம் அதிகமில்லாததால் கைப்புள்ளைக்கு சேதமில்லை..!
//

பொய் சொல்றாப்போல இருக்கே ??

Unknown said...

நடிகை ஸ்ரேயா பௌலிங்னு ஸ்டில்ல போட்டுட்டு உம்மோட பௌலிங் ஹிஸ்டரிய போட்டுட்டியே தல நான் கூட நம்ம மைந்தன் ஸ்ரேயா கூட விளையாண்டு இருபபரோன்னு வந்தேன் அவ்வ்வ்வ்வ்வ்

தனிமரம் said...

:))))

Related Posts Plugin for WordPress, Blogger...