Tuesday, November 22, 2011

மாமல்லன்(ன்னன்)தைமூர்-மன்னர்க்கெல்லாம் மன்னன்!

குறிப்பு:இந்த வீரனின்/கொடுங்கோலனின்(உங்கள் விருப்பப்படி வைத்துக்கொள்ளுங்கள்) வரலாற்றை உங்களுக்கு பகிரத்தூண்டிய சக பதிவர் ஜனா அவர்களுக்கு தான் முதலில் நன்றிகள் சொல்ல வேண்டும்.பல மாதங்களாகிவிட்டது அவர் கேட்டு.நான் பெயரை கூட மறந்து கடந்த வாரம் தான் மீண்டும் கேடு தேடி அலசி கண்டு பிடித்து ஒன்று சேர்த்து ஒரு அப்திவாக்கி வைத்து உங்களுடன் பகிர்கிறேன்.வரலாறுகளை வாசிக்கும் போது என்ன ஒரு இன்பம்..பலருக்கு இதே விதமான ஆசை இருப்பதை கண்டிருக்கிறேன்..நீங்களும் ஒரு வரலாற்றுப் பிரியர் எனில் தொடர்ந்து செல்லுங்கள்!




தைமூர் (6 ஏப்ரல் 1336-19 பெப்ரவரி 1405) 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த துருக்கிய-மங்கோலியரான பேரரசர் ஆவார். இவர் மேற்கு ஆசியா, மத்திய ஆசியா ஆகியவற்றின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றி தைமூரியப் பேரரசை நிறுவினார். தைமூரிய வம்சத்தை உருவாக்கியவரும் இவரே. இப்பேரரசு, இந்தியாவில் முகலாயப் பேரரசாக 1857 ஆம் ஆண்டுவரை நீடித்தது.


மங்கோலிய ஆக்கிரமிப்பாளர்களின் வழி வந்த தைமூரின் இனத்தவர் துருக்கிய அடையாளத்தையும் மொழியையும் கொண்டவர்களாக மாறிவிட்டனர். பாரசீகக் கல்வியும், உயர்ந்த நாகரிகமும் கொண்டு விளங்கிய இவர் தனது மூதாதையர்களின் பேரரசை மீள்விக்க எண்ணம் கொண்டார். இவரது காலத்தில் துருக்கிய இலக்கியத்தில் முக்கியமானவை சில எழுதப்பட்டன. துருக்கியப் பண்பாட்டின் செல்வாக்கும் விரிவடைந்து செழித்தது.


தைமூர் ஒரு போரியல் மேதை. போர் உத்திகளில் தனது திறமையை வளர்த்துக் கொள்வதற்காக ஓய்வு நேரங்களில் சதுரங்கவிளையாட்டில் ஈடுபடுவார். முழுமையான அதிகாரத்தைக் கொண்டு விளங்கிய இவர் ஒருபோதும் எமிர் என்னும் பதவிக்கு மேலாகத் தன்னைப் பெருமைப்படுத்தி அழைத்துக் கொண்டதில்லை.


வரலாற்றில், அவரது வாழ்நாளிலும் கூட, தைமூர் ஒரு முரண்பட்டவராகவும், சர்ச்சைக்கு உரியவராகவும் இருந்தார். பல கலைகளை ஆதரித்த இவர், பல சிறந்த கல்வி மையங்களின் அழிவுக்கும் காரணமாக இருந்தார்.


முகம்மது துக்ளக் என்னும் பாதுஷா டில்லியை ஆண்டுகொண்டிருந்த போது தனது படைகளுடன் வந்த தைமூர் கோட்டை வாயிலில் முகம்ம்மது துக்ளக்கின் படையை தோற்கடித்து அரண்மனையினுள் புகுந்து சூறையாடி டெல்லி வீதிகளில் இரத்தம் ஓட செய்தது இரண்டு வாரங்களில் திரும்பி சென்றதாக வரலாறுகள் கூறுகிறன!


குர்-இ அமீர் என்பது ஆசியாவைக் கைப்பற்றி ஆண்ட தைமூர் அல்லது தாமர்லான் என்பவரின்சமாதிக் கட்டிடம் ஆகும். இது இன்றைய உசுபெகிசுத்தானில் உள்ளசமர்க்கண்ட் என்னும் இடத்தில் உள்ளது. பிற்காலத்து முகலாயக் கட்டிடக்கலை சார்ந்த சமாதிக் கட்டிடங்களுக்கு முன்னோடியாக அமைவதால் இசுலாமியக் கட்டிடக்கலை வரலாற்றில் இது சிறப்பிடம் பெறுகிறது எனலாம். தைமூரின் வழிவந்தவர்களும் வட இந்தியாவை ஆட்சி செலுத்தியவர்களுமான முகலாயப் பேரரசர்கள் இதனை பின்பற்றிக் கட்டிய கட்டிடங்களுள்உமாயூனின் சமாதி, தாஜ் மகால் என்பவை குறிப்பிடத்தக்கவை. இக் கட்டிடம் பிற்காலத்தில் பெருமளவு திருத்த வேலைகளுக்கு உள்ளாகியுள்ளது


இச் சமாதிக் கட்டிடத்தின் கட்டிட வேலைகள் 1403 ஆம் ஆண்டில், தைமூரின் மகனும் முடிக்குரிய வாரிசுமாகிய முகம்மது சுல்தானும்,பேரனும் சடுதியாக இறந்தபோது அவர்களுக்காகக் கட்டப்பட்டது. தைமூர் தனக்காக ஒரு சிறிய சமாதிக் கட்டிடத்தை சகிரிசாப்சுஎன்னும் இடத்தில் அவரது அக்- சாரய் மாளிகைக்கு அருகில் கட்டியிருந்தார். ஆனால், 1405 ஆம் ஆண்டில் சீனா மீது படையெடுத்துச் செல்லும்போது தைமூர் இறந்தார். சகிரிசாப்சுக்குச் செல்லும் வழி பனிமூடி இருந்ததால் தைமூரை இவ்விடத்திலேயே அடக்கம் செய்யவேண்டி ஏற்பட்டது. தைமூரின் இன்னொரு பேரனான உலுக் பெக் இக் கட்டிடத்தைக் கட்டி முடித்தார்.


உலகம் முழுவதையும் வென்று, தம் அதிகாரத்தின் கீழ்கொண்டு வரவேண்டும் என்று, வெறிபிடித்து அலைந்த மாவீரர்களுள் தைமூரும் ஒருவர். அவருக்கு ஒரே கால்தான் உண்டு. போரின்போது மற்றொரு காலை இழந்துவிட்டார்.


உஸ்பெகிஸ்தான் மன்னனான தைமூருக்கும் துருக்கி சுல்தான் பெயசித்துக்கும் பலநாட்களக அவமானகரமான கடித போக்குவரத்து நடைபெற்று வந்தது.பெயசித் தனக்கு சமமான மன்னன் என தைமூரை கருதவில்லை.குறுநில மன்னனுக்கு அனுப்புவது போல தைமூருக்கு கடிதம் எழுதி வந்தார்.கோபமடைந்த தைமூர் பெயசித் மேல் படை எடுத்தான்.அந்த காலத்தில் பேயசித்தை எதிர்க்கும் மன்னனே உலகில் இல்லை.ஐரோப்பிய மன்னர்கள் அனைவரையும் தோற்கடித்து ஐரோப்பாவை பிடிக்கும் ஆற்றல் பெற்றிருந்தார் பேயசித்.செர்பிய மன்னன் அவரிடம் போரில் தோற்று தன் தங்கை டெஸ்பினாவை அவருக்கு திருமணம் செய்து வைத்து தன் நாட்டை காப்பாற்றி கொண்டான்.


இத்தகைய வலிமை வாய்ந்த மன்னர் மத்திய ஆசிய நாட்டோடி கூட்டம் ஒன்றின் தலைவனான தைமூரை தனக்கு சமமானவனாக ஏற்காததில் வியப்பில்லையே?எப்படியோ..போர் மூண்டது. தோல்வியே அடையாத ஆட்டோமான் படை ஒரே நாளில் தைமூரிடம் தோற்று பேயசித் தன் குடும்பத்துடன் தைமூரிடம் பிடிபட்டார்.பெயசித்தை கூண்டில் அடைத்து வைத்த தைமூர் அவர் கண்முண் டெஸ்பினாவை பலாத்காரம் செய்தான்.அதன்பின் அவரை விடுதலையும் செய்துவிட்டான்.


அவமானமடைந்த பேயசித் அதன்பின் ரொம்பநாள் உயிரோடு இருக்கவில்லை.அதன்பின்னர் ஆட்டோமான் வம்சத்தில் பத்துராணி என ஒருவர் இருக்கும் வழக்கமே ஒழிந்து விட்டது.பட்டத்து ராணி இருந்தால் தானே இப்படி அவமரியாதைக்கு உள்லாவார்கள்?மன்னர் யாரையும் கல்யாணம் செய்துகொள்லாமல் அடிமைகளாக மட்டுமே பெண்களை வைத்திருந்தால்??


அதன்பின் இருநூறு வருடங்களுக்கு ஆட்டோமான் சுல்தான்கள் யாரும் பட்டத்து அரசிகளை வைத்திருக்கவில்லை.ஆட்டோமான் வம்சத்தின் ஒப்பற்ற மாமன்னரான சுல்தான் சுலைமான் மட்டுமே இந்த பழக்கத்தை உடைத்தெறிந்து உக்ரேனிய அழகி ரோக்சலீனாவை மணந்துகொண்டார்.ரோக்சலினாவும் ஒன்றும் சாதாரண பெண் இல்லை.ஆட்டோமான் வம்சத்தையே முடித்து கட்டியவர் என வரலாற்றில் திகிலுடன் கூறபடுபவர்.


14-15-ம் நூற்றாண்டில் ஆசியாவை கலங்கடித்த தைமூர் இறந்தபோது, அவனது கல்லறையில் ஒரு சின்னம் பொறிக்கப்பட்டது, அது குறிப்பிடுவதாவது "இந்தக் கல்லறை திறப்பவர்கள் மண்ணில் போர் சூழும்". 1941-ல் ரஷியாவைச் சார்ந்த ஜெரசிமொவ் என்ற ஆராய்ச்சியாளர், தைமூரின் கல்லறையைத் தனது ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார். தைமூரின் உயரம், தோற்ற அமைப்பு, மன்கோலிய அடையாளம் அனைத்தையும் உறுதிபடுத்தினார். அதேசமயம் ரஷியாவில் நாசிகளின் தாக்குதல் நடந்தது. 1942-ல் தைமூரின் உடல் மறுபடியும் அடக்கம் செய்யப்பட்டவுடன், அன்றைய தினமே, ரஷியா ஸ்டாலின்கிரெட்டில் மாபெரும் வெற்றியை ஈட்டியது. நம்ப முடிகிறதா உங்களால்...!!


தைமூர்
தைமூரியப் பேரரசின் எமிர்
Amir TemurZoomed.jpg
உஸ்பெகிஸ்தானின் ஷஹ்ரிசாப்ஸ் என்னும் இடத்தில் உள்ள தைமூரின் சிலை
ஆட்சிக்காலம்1370-1405
முடிசூட்டு விழா1370, பால்க்
முழுப்பெயர்தாமெட் சிங்கிசிட் கான்
பிறப்புஏப்ரல் 6, 1336
பிறப்பிடம்ஷாஹ்ரிசாப்ஸ்,திரான்சாக்சியானா
இறப்புபெப்ரவரி 19, 1405 (வயது 69)
இறந்த இடம்ஒட்ரார், சிர் தார்யா
புதைக்கப்பட்டதுகுர்-எ அமிர்,சமர்க்கண்ட்
முன்னிருந்தவர்அமிர் ஹுசைன்
பின்வந்தவர்காலில் சுல்தான்
அரச குடும்பம்தைமூரியர்
தந்தைமுக்ஹம்மத் தரகாய்
தாய்தெக்கீனா மொஹ்பேகிம்


THE TEXT FOR THE PARAGRAPH GOES HERE

Post Comment

23 comments:

Yoga.S. said...

பகல் வணக்கம்,மைந்தன்!அருமையான ஒரு வரலாற்றை தேடிக் கண்டு பிடித்து உங்கள் நண்பரின் கோரிக்கையை நிறைவேற்றியிருப்பதுடன்,நமக்கும் பயன்பட வழி சமைத்திருக்கிறீர்கள், நன்றி பகிர்வுக்கு!!!!!

பாலா said...

தைமூர் பற்றி நிறைய தகவல்களைத் தந்திருக்கிறீர்கள். யார் அதிக கொலைகள் செய்தது என்பதில் தைமூருக்கும் செங்கிஸ்கானுக்கும் பெரிய போட்டியே வைக்கலாம்.

MANO நாஞ்சில் மனோ said...

அவருக்கு ஒரே கால்தான் உண்டு. போரின்போது மற்றொரு காலை இழந்துவிட்டார்.//

ஒரு போரில் அம்பு காலில் தைத்துவிட்டதால், சற்று விந்தி நடப்பாராம் தைமூர், அல்லாமல் காலை இழக்கவில்லை....

----மதனின் "வந்தார்கள் வென்றார்கள்" புத்தகத்தில் தெளிவாக சொல்லியிருக்கிறார்-----

MANO நாஞ்சில் மனோ said...

அருமையான வரலாற்று தொகுப்பு, செங்கிஸ்கானுக்கு தப்பிய டெல்லி, தைமூர் கைகளில் ரத்தம் தோய்த்து கொண்டது...!!!

kaialavuman said...

அருமையான தகவல்கள். சிலவற்றைப் படித்திருந்தாலும், பல புதிய விஷயங்களைத் தந்ததற்கு நன்றிகள்.

சென்னை பித்தன் said...

த.ம.6
புதிய தகவல்களுக்கு நன்றி.

K.s.s.Rajh said...

அருமையான வரலாற்றுக்குறிப்பு மாப்ள தைமூர் பற்றி நானும் சில இடங்களில் படித்திருக்கின்றேன் உங்களின் பதிவின் மூலம் மேலும் சிலதை அறிந்து கொண்டேன்..

அப்பறம் இடைக்கிடையில் பதிவு போடுங்கையா இல்லை என்றால் இன்னும் சில காலத்தில் மைந்தன் சிவா என்றால் பதிவுலகில் யார் என்று கேட்கிற நிலைவரலாம்.

மைந்தன் சிவா என்றால் பதிவுலகில் கொடிகட்டி பறந்தது ஒரு காலம் அந்தக்காலத்தை மீண்டும் நாங்கள் உங்களிடம் எதிர்பாக்கின்றோம்..

நேரம் கிடைக்கும் போது பதிவுகள் போடுங்க.என்னை எல்லாம் பதிவுலகில் தூக்கிவிட்டவர்களில் நீங்களும் ஒருவர்....மீண்டும் நீங்கள் பழய மைந்தன் சிவாவாக பதிவுலகில் கொடிகட்டி பறக்கவேண்டும் வாழ்த்துக்கள் பாஸ்

Mathuran said...

தைமூர் பற்றி பல புதிய விடயங்களை அறிந்துகொண்டேன் நன்றி பாஸ்

Mathuran said...

தைமூர் பற்றி பல புதிய விடயங்களை அறிந்துகொண்டேன் நன்றி பாஸ்

நிரூபன் said...

மச்சி, ஓட்டுப் போட்டிருக்கேன்!
பதிவு படிக்க அப்புறமா வாரேன்.

Unknown said...

அருமையான வரலாற்று பதிவு. தைமூர் பற்றி வாசித்திருக்கிறேன் முன்பு ஆனால் இப்போ மேலும் விடயங்கள் தெரிந்து கொண்டேன்.

தைமூரின் சமாதியை நாங்களும் திறந்து மூடினால் வெல்வோமா?

சி.பி.செந்தில்குமார் said...

என்னய்யா ஆச்சு? பிரகாஷ், சிவா, லேப் டாப் மனோ என ஆளாளுக்கு நல்ல நல்ல பதிவா போட்டு தாக்கறீங்க?

Prem S said...

அருமையான வரலாற்று பதிவு

M.R said...

தகவல் அறிந்து கொண்டேன் நண்பரே

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

M.R said...

தமிழ் மணம் 10

shanmugavel said...

சுவையான தகவல்கள் சிவா

shanmugavel said...

சுவையான தகவல்கள் சிவா

கோகுல் said...

நிறைய குறிப்புகளைப்படித்து நல்லதோர் பதிவை தந்திருக்கிங்க வாழ்த்துக்கள்!
நிறைய தகவல்களை தெரிந்து கொண்டேன்.நன்றி!
கடைசி தகவல் அதிசயிக்க வைக்குது.

KANA VARO said...

சீரியஸ் பதிவுகளின் எதிரி நான் (ஹீ ஹீ நமக்கு மொக்கையை விட்டா என்ன தெரியும்?)

பி.அமல்ராஜ் said...

அருமையான வரலாற்றுப் பகிர்வு மைந்தன்.. நன்றி.

சுதா SJ said...

மைந்தன் எனக்கு பிடித்த நல்ல பதிவு..
வரலாறு படிப்பது அல்லாத்தி சுகம்
அந்த சுகத்தை நீங்கள் தந்து உள்ளீர்கள்.. தேங்க்ஸ்.

இவரைப்பற்றி இப்போதுதான் அறிகிறேன் (அவ்வ)
வியப்பும் ஆச்சரியம் வருகிறது படிக்கும் போதே....

இப்படியும் அடிகடி எழுதுங்க பாஸ்
எங்களையும் சந்தோஷப்படுத்துங்கள்...

மாலதி said...

அருமையான பகிர்வு.

எஸ் சக்திவேல் said...

அடுத்து செங்கீஸ் கானா?

வாழ்த்துக்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...