தமிழ் திரை வரலாற்றில் எந்தக்காலப்பகுதியிலும் விஜய் அஜித் போல இரண்டு மாஸ் ஹீரோக்கள் ஆட்சி பண்ணியதில்லை!மாஸ்'னா என்ன அப்பிடீன்னு கூகிள்'ல கூட வரைவிலக்கணம் காணப்படவில்லை.ஆனால் தற்போது அதிகப்படியானோரின் வாயில் உச்சரிக்கப்படும் மந்திரமாக மாறி இருக்கிறதென்றால் அதற்க்கு அஜித் விஜய் தான் முக்கிய காரணம்.
பலதரப்பட்ட படங்களில் நடித்து வந்த தல,தளபதி மாஸ் என்ற அந்த ஒற்றை சொல்லால் படும் பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல...அவர்களின் ரசிகர்கள் பாடு அதை விட அதிகம்!!நீயா மாஸ் நானா மாஸ் உன் தலையா மாஸ் தளபதியா மாஸ் என்று அடிபடும் சமயம் இந்த "மாஸ்" என்ற சொல்லு நமக்கு எதனை தந்திருக்கிறதென்று பார்ப்போம்.
துள்ளாத மனமும் துள்ளும்,காதலுக்கு மரியாதை என்று காதல் படங்களில் நடித்துக்கொண்டிருந்த விஜய்'ஜை திருப்பாச்சி என்ற ஒரு அதிரடியில் அறிமுகம் செய்தார் பேரரசு.விஜய்யின் புதிய அவதாரமான திருப்பாச்சி பெரிய வெற்றியை விஜய்க்கு தந்திருந்ததமை விஜய்யை அதே மாதிரியிலான கதைகளில் நடிக்க தூண்டியது.ஏன் இயக்குனர்கள் கூட விஜய்யை அந்த மாதிரியான கதாபாத்திரத்தில் அழகுபடுத்தவே விரும்பினர்.அதன் பின்னர் தொடர்ச்சியாக வந்த சிவகாசி போக்கிரி என்பன மாபெரும் ப்ளாக் புஸ்டர் ஆகி வெற்றி பெற,மேலும் உந்துதலால் அதே வகையான கதைகளை தெரிவு செய்து நடித்தார் விஜய்.சில விடயங்கள் சரியாக அமையாததால் தொடர்ந்து சில படங்கள் குருவி சுறா என்று தோல்வியை தழுவியது.ஆனாலும் அந்த மாஸ் என்பதை விட விஜய்க்கும் விருப்பம் இல்லை.இயக்குனர்களுக்கும் விருப்பம் இல்லை.விஜய் ரசிகர்களுக்கும் விருப்பம் இல்லை..அதனால் விஜய்'யால் அந்த ட்ராக்'ஐ விட்டு வெளிவர முடியவில்லை.காவலனில் நடித்திருந்தாலும்,அது மாதிரியான சாப்ட்'டான பாத்திரங்களில் விஜய்'யை பார்ப்பதை விட அதிரடி பாத்திரங்களில் பார்ப்பதையே அவரது ரசிகர்கள் பெரிதும் விரும்புகிறார்கள் என்பது வேலாயுதம் வெற்றியிலிருந்து புலப்படும்.
முகவரி,வாலி என்று அழகிய கதைகளில் நடித்து பாராட்டுப் பெற்ற தல அஜித்,சிட்டிசன்,ரெட் போன்ற படங்களில் தனது மாஸ் பயணத்தை ஆரம்பித்திருந்தார்.அதற்க்கு அடுத்தபடியாக வந்த ஜீ,ஆஞ்சநேயா போன்ற சில படங்கள் தோல்வியை கொடுக்க கிரீடம் படத்தில் சாந்தமான பையனாக நடித்து பாராட்டு பெற்றார்.அதற்க்கு பின்னர் பில்லா ரீமேக்'இல் நடித்த அஜித்,அதன் மாபெரும் வெற்றியால் அது மாதிரியான கதைகளை தெரிவு செய்யதொடங்கினார் .தொடர்ச்சியாக ஸ்டைலிஷ்,அதிரடி போர்முலாவில் வெளிவந்த மங்காத்தாவும் மாபெரும் வெற்றி பெற்றது.அடுத்து பில்லா பாகம் இரண்டில் நடிக்கும் அஜித் கூட அதே வகையான படங்களுக்கு அடிமையாகி விட்டார் என்றே சொல்லலாம்.அவர் ரசிகர்களும் அந்த மாதிரியான படங்களையே அதிகம் விரும்புகிறனர்.இயக்குனர்களும் அதே மாதிரியான கதாபாத்திரத்தில் தலை'யை நடிக்க வைக்கவே விரும்புகிறனர்.
விஜய்'யோ சரி அஜித்தோ சரி தெரிந்தோ தெரியாமலோ ஒரே வகையான போர்முலாவில் சிக்குப்பட்டு இருக்கின்றனர் என்பது தெளிவாக புலப்படும்."மாஸ் ஹீரோ" என்பது அனைத்து நடிகர்களுக்கும் இலகுவில் கிடைத்துவிட கூடிய அந்தஸ்து அல்ல.அது விஜய்'க்கும் அஜித்துக்கும் கிடைத்திருக்கிறது.அதனை இழக்கவும் அவர்கள் விரும்பமாட்டார்கள்.அவர்களது ரசிகர்களும் விரும்பமாட்டார்கள்.தொடர்ச்சியான மசாலா படங்களே விஜய் என்ற அடையாளமாக இருக்கப்போவதும்,தொடர்ச்சியான கோர்ட் சூட் ஸ்டைலிஷ் இருமணிநேர படங்கள் தான் அஜித்தின் அடையாளமாக இருக்கப்போவதும் தவிர்க்கப்பட முடியாதது.
நான்கு ஐந்து படங்கள் வெளிவரும் போது மேல் கூறிய போர்முலா தவிர்த்து ஒரு படம் வெளிவருவது என்பது அதிசயமாக தான் பார்க்கப்படும் காலம் உருவாகிக்கொண்டிருக்கிறது.பில்லா-1 ,ஏகன்,அசல்,மங்காத்தா,பில்லா-2 போன்ற இறுதி அஜித்தின் ஐந்து படங்களையும் பாருங்கள்.உண்மை புலப்படும்.அதே மாதிரி விஜய்யின் வில்லு,வேட்டைக்காரன்,சுறா,காவலன்,வேலாயுதம் போன்ற வரிசையும் அவ்வாறானதே!!
இந்த "மாஸ்"என்ற அடையாளத்தை விட்டு வேறு மாதிரியான படங்களை தல,தளபதி ரசிகர்கள் தவிர்த்த ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.ஆனால் அந்த "மாஸ்"அடையாளத்தை விட்டுக்கொடுக்க தல தளபதி விரும்பமாட்டார்கள் என்பது தான் உண்மை.
மாஸ் ஹீரோவாகவும் இருக்க வேண்டும்,பல தரப்பட்ட கதைகளில் வித்தியாசமாகவும் நடிக்க வேண்டும் என்பதே பெரும்பாலான தல தளபதி ரசிகர்களின் எதிர்பார்ப்பும் கூட! |
35 comments:
ஒரு பால் கோப்பி கிடைக்குமா???
ம்ம்..நல்லாத்தான் சொல்றீங்க பாஸ்!
மாஸ் என்று அவர்கள் இலைகின்றார்களோ தெரியாது ஆனால் சில இயக்குனர்கள் இப்படி ஒரு வட்டத்தை நாடிப்போவது சரியல்ல!
//தனிமரம் said...
ஒரு பால் கோப்பி கிடைக்குமா???/
குடியுங்க தல
நடிகன் என்பவன் ஒரு பாத்திரத்தை உள்வாங்கி சிறப்பாக செய்யக்கூடியதாக இருந்தால் தான் ரசிகர்கள் ரசிப்பார்கள் வீனா வாய்ச்சாடல் மூலம் இனியும் மக்களை வெறும் ஓட்டுக்கூட்டமாக நினைத்தால் அது அழிவின் ஆரம்பமாகவே இருக்கும் இதை ரசிகர்கள் என்ற போர்வையில் இருக்கும் வெறியர்கள் புரிந்து கொள்ளவேண்டும் .
தெளிவு பெறுவார்களா மைந்தன் சிவா????
நான் தலயும் இல்ல வாழும் இல்லை சிவா தனிமரம் ஒரு போதிமரத்தை நாடும் சாமானிய ரசிகன்!
//தனிமரம் said...
நான் தலயும் இல்ல வாழும் இல்லை சிவா தனிமரம் ஒரு போதிமரத்தை நாடும் சாமானிய ரசிகன்!///
போதி மரம்??
ஓஹோ அவரா நீங்க ?
விஜய்யின் வெற்றி பெற்ற முதல் மாஸ் திரைப்படம் திருமலை; அதற்க்கு முன்னர் பகவதி மூலம் விஜய் முயற்சி செய்தாலும் அது கைகூடவில்லை; திருமலையை தொடர்ந்து கில்லி, திருப்பாச்சி, சிவாகாசி, போக்கிரி என விஜயின் மாஸ் படங்கள் வெற்றி பெற்றன.
ஆனால் விஜய்க்கு முன்னாலே அஜித்,விக்ரம் மாஸ் ஹீரோவாக மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டார்கள். அஜித் மாஸ் ஹீரோவாக அறியப்பட்டது தீனா மூலம், அடுத்த அத்தலைமுறை நடிகர்களின் முதல் மாஸ் படம் அதுதான். அடுத்து அமர்க்களம், வில்லன் என அஜித் மாஸ் படங்கள் பட்டையை கிளப்பின.
அஜித்திற்கு அடுத்து மாஸ் ஹீரோவாக தன்னை வெளிக்காட்டினாலும் தொடர்ந்து மாஸ் ஹீரோவாக அதிக காலம் கலக்கியது விக்ரம்தான்; சாமி, தில், தூள், ஜெமினி என விக்ரம் நடித்த அத்தனை மாஸ் படங்களும் பட்டையை கிளப்பின, அத்தனையும் ப்ளாக் பூஸ்டர். அந்நியன் திரைப்படம் விக்ரமின் சினிமா பாணியை மாற்றவே விக்ரம் பெரிய பட்ஜெட் படங்களை தேடி தேடி நடித்து தனது இமேஜை கோட்டை விட்டார். இப்போது அடுத்து விக்ரம் நடித்திருக்கும் ராஜபாட்டை பக்கா மசாலா படம், ராஜபாட்டை மூலம் விக்ரம் தன் இடத்தை மீண்டும் எட்டிப்பிடிக்கிறாரா என்று பார்க்கலாம்!!!!
விஜய், அஜித், விக்ரம் யாராக இருந்தாலும் திரைக்கதை சிறப்பாக அமைந்தால்த்தான் படம் பட்டையை கிளப்பும், திரைக்கதை சொதப்பினால் மாஸ் திரைப்படங்கள் ஜெயிப்பது மிக கடினம்; இதற்கு உதாரணமாக அருள், ஜனா, ஆதி, பீமா, திருப்பதி, மதுர போன்ற திரைப்படங்களை சொல்லலாம்.
சூர்யாவிற்கு இவர்கள் அளவிற்கு மாஸ் அந்தஸ்து இல்லை என்றாலும் வேல், சிங்கம் வெற்றிகள் சூர்யாவிற்கும் மாஸ் அந்தஸ்து உள்ளதென்பதையே காட்டுகின்றது. இவர்கள் தவிர்த்து விஷாலிற்கும் மாஸ் அந்தஸ்து உண்டு, ஆனால் அண்மைக்காலமாக சிறப்பான எந்த திரைக்கதையும் விஷாலுக்கு அமையவில்லை.
அண்மையில் காவலன் படம் பார்த்தேன், நீண்ட நாளைக்கு பின்னர் விஜயை ரசித்து பார்த்தேன் (இறுதி 15 நிமிடங்கள் தவிர்த்து), ஆனால் இதை நான் எங்கும் பகிரவில்லை, காரணம் விஜய் மாஸ் படங்களில் நடிப்பது பிடிக்காமல் இதை நான் சொல்வதாக சிலர் எண்ணலாம் என்பதற்காகவே. விஜய்க்கு மாஸ் திரைப்படங்களைவிட காதல், குடும்ப திரைப்படங்கள்தான் சிறப்பு; ஆனால் இதை ஒருபோதும் விஜையால் கடைப்பிடிக்க முடியாது, காரணம் வணிக மற்றும் போட்டி சினிமா; உண்மையில் இந்த விடயத்தில் விஜயையும் குறை கூற முடியாது. விஜயிடம் அதிக பட்சம் எதிர்பார்ப்பது மசாலா திரைப்பட என்றாலும் அலுப்படிக்காத, ஓவர் பில்டப் செய்யாத நேர்த்தியான வேகமான திரைக்கதை சினிமாக்களைத்தான்.
விஜய் மாறுபட்ட கெட்டப் போட தேவையில்லை, மாறுபட்ட கதைகளிலும் நடிக்க தேவையில்லை; குறைந்தபட்சம் சுவாரசியமான வேறுபட்ட திரைக்கதையுள்ள மாஸ் படங்களில் நடிக்கலாம்; அனால் விஜய் அதை முயற்சிப்பதில்லை; அதுதான் விஜய்க்கு இத்தனை ரசிகர்கள் இருந்தும் ஒரு படத்தை ஓடவைக்க இவ்வளவு பாடு படவேண்டி இருப்பதன் காரணம்.
இன்னுமொரு விடயம் மாஸ் என்பது பஞ்ச் டயலாக் மற்றும் ஆக்ஷன் மட்டுமல்ல; என்னை கேட்டால் டாரே சமீம்பரில் அமீர்கான் செய்ததும் ஒரு மாஸ் ஹீரோ சப்ஜெக்ட்தான்.
அடிதடி பன்ச் வேறு மாஸ் வேறு என்று ரசிகர்கள் பிரித்து பார்க்கமாட்டார்கள்.முக்கியமாக அடிதடி பன்ச் தான் மாஸ் என்ற மாயையும் இருக்கிறது.
ம்ம் காவலன் நல்ல படம் தான்.
விஜய் நீங்கள் கூறியது போன்ற நல்ல தெரிவுகளை மேற்கொள்ள வேண்டும் கதை தெரிவு செய்யும் போது!!
விக்ரம்,சூர்யாக்கு என்ன தான் மாஸ் இருந்தாலும் விஜய் அஜித் அளவுக்கு இல்லை என்பதே உண்மை.விக்ரம் சூர்யா மாஸ் பாத்திரங்கள் செய்தால் ரசிப்பார்கள்.ஆனால் அந்த மாஸ்'கென்றே ரசிகர் பட்டாளம் தனியே உருவாக வாய்ப்புகளில்லை!
அழகான வித்தியாசமான பார்வை!
////விஜய்'யோ சரி அஜித்தோ சரி தெரிந்தோ தெரியாமலோ ஒரே வகையான போர்முலாவில் சிக்குப்பட்டு இருக்கின்றனர் என்பது தெளிவாக புலப்படும்/////
உண்மை தான் மைந்து ஆனால் அவர்கள் விலத்த நினைத்ததாலும் அவர்கள் ரசிகர்கள் விடமாட்டார்கள் அல்லவா...
எப்பூடி.. said... ''தீனா மூலம், அடுத்த அத்தலைமுறை நடிகர்களின் முதல் மாஸ் படம் அதுதான். அடுத்து அமர்க்களம், வில்லன் என அஜித் மாஸ் படங்கள் பட்டையை கிளப்பின.''
அமர்க்களம்-1999, தீனா-2001 அமர்க்களம் தானே முதலில் வந்தது .
கதையை நம்பி தன்னுடைய திறமையை நம்பி நடிக்காதவரை மாஸ் என்ற வார்த்தை யாருக்கும் சொந்தமில்லை...
வணக்கம் மைந்தரே!நலமா?நன்றாக அலசியிருக்கிறீர்கள்!இதெல்லாம் சின்னப் பசங்க சமாச்சாரம் என்பதால் வடை,சாரி விடைபெறுகிறேன்!நன்றி,வணக்கம்!
உண்மை தான் அன்பரே சிறப்பான அலசல்
நல்ல தெளிவான அலசல் .
இந்த குட்டைக்குள் வரும் தலைமுறை நடிகர்களும் விழ துடிக்கின்றனர் ...
@
K.s.s.Rajh said...
////துள்ளாத மனமும் துள்ளும்,காதலுக்கு மரியாதை என்று காதல் படங்களில் நடித்துக்கொண்டிருந்த விஜய்'ஜை திருப்பாச்சி என்ற ஒரு அதிரடியில் அறிமுகம் செய்தார் பேரரசு.விஜய்யின் புதிய அவதாரமான திருப்பாச்சி பெரிய வெற்றியை விஜய்க்கு தந்திருந்ததமை விஜய்யை அதே மாதிரியிலான கதைகளில் நடிக்க தூண்டியது.////
மாப்ள திருப்பாச்சிக்கு முதலே விஜய்,பகவதி,திருமலை என்று மாஸில் இறங்கிவிட்டார்....பகவதி பெரிய அளவு மாஸ் படம் இல்லாவிட்டாலும் விஜயின் முதல் பக்கா மாஸ் படம் திருமலைதான்...அதுக்கு பிறகுதான் திருப்பாச்சி...
ஆனால் அஜித் 1999லேயே அமர்க்களம் மூலம் களம் இறங்கி அந்தப்படம் மெகா ஹிட்டாகவும் ஆனது.
அதைவிட ஷாலினி அஜித்துக்கும் லவ் ஆரம்பித்த படம் அந்த வைகையில் அஜித்துக்கு அந்தப்படம் மேலும் சிறப்பு
@ kobiraj
//அமர்க்களம்-1999, தீனா-2001 அமர்க்களம் தானே முதலில் வந்தது//
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி, ஆம் அமர்க்களம் தான் முதல் வந்தது, அப்படியானால் அமர்க்களம்தான் அஜித்தின் முதல் மாஸ் திரைப்படம், தீனாவின் பின்னர்தான் அஜித் தலை என்று அழைக்கப்பட்டார்.
அஜித்தின் நடிப்ப பாணி வேறு....அஜித்தின் படங்களில் ஒன்றை கவனித்தால் தெரியும் அஜித்தின் மெகா ஹிட் மாஸ் படங்களான,தீனா,அமர்க்களம்,பில்லா,வாலி,போன்ற படங்களில் நெக்கட்டிவ் ரோலில் நடித்திருப்பார்...ஆனாலும் அஜித் ஓரே மாதிரி நடிக்கின்றார் என்ற குற்ற சாட்டுவராததுக்கு காரணம்,பல படங்களில் இரட்டை வேடங்கள்,மூன்று வேடங்கள் என்று பல பரிமானங்களை அஜித் படங்களில் தொட்டுச்செல்லாவார்.....
ஆனால் விஜய் அதே போல மாஸ் படங்களில் நடிக்கும் போது அவர் பெரும்பாலும் நடிப்பில் ரிஸ்க் எடுக்க விரும்புவது இல்லை அழகிய தமிழ் மகன் என்று ஓரு படத்தில் நெக்கட்டிவ் ரோலில்,இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் ஆனால் படம் பெரிய வெற்றியடையவில்லை.....
இப்படி சில காரணங்களால்தான் விஜய் ஓரே மாதிரி நடிகின்றார் என்று ரசிகர்கள் மனதில் எண்ணத்தோனுகின்றது....
அஜித்தை அப்படி எண்ணத்தோனாதுக்கு காரணம் ஓரே மாதிரி கதையுள்ள படங்களாக இருந்தாலும் அவர் இரட்டைவேடம்,மூன்று வேடம் என்று நடிப்பில் இறங்குவதுதான்..
சரிதான்.
//// மைந்தன் சிவா said...
விக்ரம்,சூர்யாக்கு என்ன தான் மாஸ் இருந்தாலும் விஜய் அஜித் அளவுக்கு இல்லை என்பதே உண்மை.விக்ரம் சூர்யா மாஸ் பாத்திரங்கள் செய்தால் ரசிப்பார்கள்.ஆனால் அந்த மாஸ்'கென்றே ரசிகர் பட்டாளம் தனியே உருவாக வாய்ப்புகளில்லை////
இதுவும் சரிதான்.......என்னைகேட்டால் சூர்யாவை,விஜய்யுடன் ஓப்பிடுவது பொருத்தம் இல்லை ஆனால் காலத்துக்கு காலம் விஜய் ரசிகர்கள் தான் எதாவது ஓரு நடிகருடன் விஜயை ஓப்பிட்டு பார்த்துகொள்கின்றார்கள்.....
இந்த "மாஸ்"என்ற அடையாளத்தை விட்டு வேறு மாதிரியான படங்களை தல,தளபதி ரசிகர்கள் தவிர்த்த ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர் // இது உண்மை மாப்ள...
நான் எந்த ஓரு நடிகருக்கும் ரசிகன் கிடையாது,ஆனால் தமிழ் சினிமாவுக்கு ரசிகன் எந்த நடிகரின் படங்கள் என்றாலும் உடனே பார்த்துவிடுவேன்...
ஓவ்வொறு நடிகரின் படங்களையும் ரசிப்பேன் அஜித்,சூர்யா,விக்ரம் இவர்களின் மாஸ் படங்களுடன் ஓப்பிடும் போது விஜயின் மாஸ் படங்கள் ரசிக்க சிறந்தது...
ஆனாலும் தொடர்ச்சியாக விஜய் அப்படி நடிப்பதைதான் ரசிக்க முடியவில்லை...
ஆனால் நண்பன் படம் விஜயின் வழக்கமான படங்களில் இருந்து வித்தியாசப்படும் என்று எதிர்பார்கின்றேன்...
nice post
@ மைந்தன் சிவா
//விக்ரம்,சூர்யாக்கு என்ன தான் மாஸ் இருந்தாலும் விஜய் அஜித் அளவுக்கு இல்லை என்பதே உண்மை.விக்ரம் சூர்யா மாஸ் பாத்திரங்கள் செய்தால் ரசிப்பார்கள்.ஆனால் அந்த மாஸ்'கென்றே ரசிகர் பட்டாளம் தனியே உருவாக வாய்ப்புகளில்லை//
இப்போது இல்லை என்பது உண்மைதான் ஆனால் 2002 முதல் 2005 வரை விக்ரமின் மாஸ் திரைப்படங்களுடன் போட்டிக்கு வெளியாகிய பெரும்பாலான விஜய், அஜித், கமல் படங்கள் வசூலில் விக்ரம் படங்களை நெருங்கவில்லை. அன்று இருந்த விக்ரமின் உயரம்தான் ரஜினியே தன் வாயால் இன்றைய தேதியில் விக்ரம்தான் சூப்பர் ஸ்டார் என்று கூறுமளவிற்கு இருந்தது. ஆனால் 2005 முதல் இப்போது வரை விக்ரமின் நிலை படு மோசம் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை.
இனிய காலை வணக்கம் மச்சி,
நல்லதோர் அலசல்,
உண்மையில் ரசிகர்களின் ரசனையும் இந்த நடிகர்களை ஒரு குறுகிய வட்டத்தினுள் வைத்துப் பார்ப்பதற்கு காரணமாக இருக்கிறது என்பதனையும் நாம் மறுக்க முடியாதல்லவா?
11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...
மாப்ள என்னமா பேலன்ஸ் பன்றய்யா சூப்பர்!
இந்த மாஸ் வட்டத்தை விட்டு வெளிவருவது மிக கடினம். ஆனால் ரசிகர்களையும் ஏமாற்றாமல் மாஸ் வட்டத்தை விட்டு வெளியே வந்து படங்கள் கொடுப்பது உடனே முடியாத காரியம். அது கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நடைபெறும்.
சிவா, அஜித்,விஜய் இருவரையும் நல்லா அலசிக் காயப்போட்டிட்டியள். யாராயிருந்தாலும் கதையிலை கோட்டைவிட்டால் குப்புறவிழவேண்டியதுதான்.
வணக்கம் மைந்தா!
என்னையா இப்படி அஜித்தையும் மாஸ் ஹீரோன்னு நீங்களே சேர்க்கலாமா..? சாமி கண்ண குத்தப்போது கவனம்..!!!!!)))
Post a Comment