1. சாப்பிடுதல், குடித்தல் போன்றவற்றால் (அவைகள் உடலுக்கு பயன்தராத புகைபிடித்தல் போன்றவையாக இருந்தாலும் சரியே) நோன்பு முறிந்து விடும்.
2. முத்தமிடுதல், அணைத்தல், சுய இன்பம் போன்றவற்றால் இந்திரியம் வெளியானால் நோன்பு முறிந்து விடும், தூக்கத்தில் தானாகவே இந்திரியம் வெளியானால் நோன்பு முறியாது.
3. வேண்டுமென்று வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்து விடும். தானாகவே வாந்தி வந்தால் நோன்பு முறியாது.
4. உணவைப் போன்று சக்தியூட்டக்கூடிய பொருட்களை (மருந்து, குளுக்கோஸ் போன்றவைகளை) ஊசி போன்றவற்றின் மூலம் உடம்புக்கு செலுத்தினாலும் நோன்பு முறிந்து விடும்.
5. மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு முறிந்து விடும்.
இவை அனைத்தும் ஓகே,எனக்கு என்ன சந்தேகம் என்றால்,நோன்பு காலத்தில் குறிப்பிட்ட அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி நோன்பு நோற்றால் மட்டும் போதுமா அல்லது மனதும் நல்ல சிந்தனைகளை செயல்களை சிந்திக்க வேண்டுமா?நோன்பு காலத்தில் கெட்ட விடயங்களை சிந்திப்பதும்,தகாத வார்த்தைகளை பேசுவதும் ஏற்புடையதா??அவ்வாறு அத்தகைய வார்த்தைப்பிரயோகங்களை பாவிப்பதன் மூலம் நோன்பின் மகத்துவம் சிதைக்கப்படுமா இல்லையா என்பதே!
"பசி எப்படிப்பட்டது என்பது உணரப்படுகிறது, உடலின் ஆரோக்கியம் பேணப்படுகிறது என்றெல்லாம் காரணங்கள் கூறினாலும் நோன்பினால் இந்தப் பயன்கள் இருக்கலாம். இந்தப் பயன்களைக் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நோன்பு நோற்க வேண்டுமா? நிச்சயமாக இல்லை. நாம் பக்குவப்படுவதும், இறையச்சமுடையவராக ஆவதும்தான் நோன்பின் பிரதான நோக்கம். திருக்குர்ஆன் 2:183வது வசனம் இதனைத் தெளிவுப்படுத்துகிறது.
”பொய் சொல்வதையும், பொய்யான அடிப்படையில் செயல் படுவதையும் எவர் விடவில்லையோ அவர் தனது உணவையும் பானத்தையும் விட்டிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை,” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்- புகாரி, அஹ்மத், திர்மிதி, அபூதாவூத், இப்னுமாஜா.
தவறான நடவடிக்கைகளிலிருந்து விடுபடாமல், பட்டினிக் கிடப்பதோ, தாகித்திருப்பதோ இறைவனுக்குத் தேவையில்லை. என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து விளங்கலாம்"
(நன்றி இஸ்லாம் கல்வி)
எனக்கு தெரிந்த ஒரு முஸ்லிம் நண்பன் நோன்பு நோற்கும் இதே காலத்தில் தொடர்ந்து தகாத வார்த்தை பிரயோகங்களை சமூக வலைத்தளங்களில் பாவித்து வருகிறார்.இதனை பார்க்கும் பொது அவர் பிடிக்கும் நோன்பின் மகத்துவம் செயலற்றுப் போகிறது என்பதை நான் சிந்தித்தேன்.நிச்சயமாக எந்த ஒரு சமயமும் நோன்பின் போது இத்தகைய நடவடிக்கைகளை ஆதரிக்கப்போவதில்லை என்பது நிதர்சனம்.ஆனால் வெறுமனே கடமைக்காக நோன்பு பிடிப்பதை விட அதன் மகத்துவத்தை உணர்ந்து நோன்பு பிடிப்பவர்களுக்கே அதன் உண்மையான பயன் சென்றடையும் என்பது தெளிவு.
அதிகப்படியான கோபத்தின் வெளிப்பாடும்,தகாத வார்த்தைப்பிரயோகங்களும் நோன்பு காலத்தில் தவிர்க்கப்பட வேண்டிய விடயங்கள் தானே?வெறுமனே முஸ்லிம் நண்பர்களை அவமதிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு இந்தப்பதிவை எழுதவில்லை ஆனால் நோன்பின் மகத்துவத்தை அனைவரும் புரிந்து கொள்ளல் வேண்டும் என்ற நோக்கத்துடனே எழுதுகிறேன்.இது முஸ்லிம் நண்பர்களுக்கு மட்டுமன்றி அனைத்து மத நண்பர்களுக்கும் பொருந்தும்.அனைத்து மதங்களும் அன்பு வழியையே அடிப்படியில் போதிக்கின்றன.அதனை விளங்கிக்கொள்ளாத நபர்கள் இத்தகைய புனிதமான ரமலான் மாதத்தில் தங்களை கீழ்த்தரப்படுத்துவது மட்டுமல்லாமல் நோன்பின் மீது மற்றையவர்கள் வைத்திருக்கும் மரியாதையையும் கெடுத்து விடுகிறார்கள்!!
37 comments:
நான் தான் முதலாவதா
பாஸ், முதல்ல ஹக் பண்ணும்போது கொஞ்சம் கவலையாத்தான் இருந்திச்சு.. அப்புறமா விட்டிட்டன். என்ன ஒன்று, பெறுமதிமிக்க என் நண்பர்கள் பலரை இழந்துவிட்டேன்... இனி எல்லோரையும் தேடித்தான் பிடிக்க வேண்டும்
//மதுரன் said...
நான் தான் முதலாவதா///
ஆமா ஆமா..எப்பிடி சுகம்??
//மதுரன் said...
பாஸ், முதல்ல ஹக் பண்ணும்போது கொஞ்சம் கவலையாத்தான் இருந்திச்சு.. அப்புறமா விட்டிட்டன். என்ன ஒன்று, பெறுமதிமிக்க என் நண்பர்கள் பலரை இழந்துவிட்டேன்... இனி எல்லோரையும் தேடித்தான் பிடிக்க வேண்டு/
ஒரு கட்டத்துக்கு மேல எனக்கும் வெறுத்திடிச்சு நண்பா!!
சரி அத விடுவம்...
அப்புறம் உங்கள பதிவு பக்கமே காண கிடைக்குதில்ல... ஒரு நாளைக்கு ஒரு பதிவு எண்டு அசத்திக்கொண்டிருந்த ஆள் இப்போ வாரம் ஒரு பதிவா போச்சுது...
பிஸியா
என்ன நடக்குது! எவனோ ஒருவன் இது தான் தொழிலாய் தொடர்ந்து எல்லார்ரையையும் ஹக் பண்ணுகிறான் போல.. இதால அவனுக்கு என்ன பயன் ,என்னத்தை எதிர்பார்க்கிறான் என்று தான் புரியவில்லை..
//மதுரன் said...
சரி அத விடுவம்...
அப்புறம் உங்கள பதிவு பக்கமே காண கிடைக்குதில்ல... ஒரு நாளைக்கு ஒரு பதிவு எண்டு அசத்திக்கொண்டிருந்த ஆள் இப்போ வாரம் ஒரு பதிவா போச்சுது...
பிஸியா/
எங்க பாஸ்....ஒரே வேலை..அப்புறம் இந்த அல்லக்கைகள் தொல்லை...
உங்க பக்கம் இன்னிக்கு இரவு தான் எல்லார் பக்கமும் விசிட்டிங்
//தவறான நடவடிக்கைகளிலிருந்து விடுபடாமல், பட்டினிக் கிடப்பதோ, தாகித்திருப்பதோ இறைவனுக்குத் தேவையில்லை. என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து விளங்கலாம்"//
”மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற”
விசயம் தெரிந்த உங்களாலேயே இப்பிடிப்பட்ட கயவர்கள கண்டு பிடிக்க முடியவில்லைன்னா அப்ப நாங்க!!!??
அடிக்கடி password மாத்துங்க...
உங்க கணினியை வைரஸ்..வோர்ம்..செக் பண்ணுங்க...
ரௌடேர்க்கும் ...கணினிக்கும் password வைங்க...
கண்டதையும் டவுன்லோட் பண்ணாதீங்க...
ப்ரீயா..மேட்ச்..பாட்டு...நோ..நோ...
Nothing is free in this world...அப்புறம் பார்க்கலாம்...
கமெண்ட் போடவே பயமா இருக்குது...எப்ப யார் நமக்கு ஆப்பு அடிப்பார்களோ என்டுதான்....
உஷார் சிவா! பாஸ்வேர்டை பலப்படுத்துங்கள்.
ரமலான் பற்றி டைமிங் பதிவு.நன்று
தவறான நடவடிக்கைகளிலிருந்து விடுபடாமல், பட்டினிக் கிடப்பதோ, தாகித்திருப்பதோ இறைவனுக்குத் தேவையில்லை. என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து விளங்கலாம்"//
இறைவனுக்கே தேவையில்லாததை ஏன் செய்ய வேண்டும்?
உணர்ந்தால் சரி!
ஹெக்கிங்க போன்ற செயல்களில் ஈடுபடுபவதற்கே சில ஈனப்பிறவிகள் அலைகிறார்கள்
//கடமைக்காக நோன்பு பிடிப்பதை விட அதன் மகத்துவத்தை உணர்ந்து நோன்பு பிடிப்பவர்களுக்கே அதன் உண்மையான பயன் சென்றடையும் என்பது தெளிவு//
உண்மைதான்.. நோன்பு என்ற பெயரில் வெறுமனே பசித்திருப்பதும் தாகித்திருப்பதிலும் எந்த பலனுமில்லை தனது சகல உடல் உறுப்பு உணர்வுகளை கட்டுப்படுத்தி நோற்பதே உண்மையான நோண்பாகும்..
//அதிகப்படியான கோபத்தின் வெளிப்பாடும்,தகாத வார்த்தைப்பிரயோகங்களும் நோன்பு காலத்தில் தவிர்க்கப்பட வேண்டிய விடயங்கள் தானே?//
நிச்சயமாக..!!!
/நோன்பு காலத்தில் கெட்ட விடயங்களை சிந்திப்பதும்,தகாத வார்த்தைகளை பேசுவதும் ஏற்புடையதா??//
இவற்றிலிருந்து தவிர்ந்திருப்பதே நல்லது..
நோன்பை பற்றிய உங்கள் விளக்கங்களுக்கு நன்றி நண்பரே
////தவறான நடவடிக்கைகளிலிருந்து விடுபடாமல், பட்டினிக் கிடப்பதோ, தாகித்திருப்பதோ இறைவனுக்குத் தேவையில்லை. என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து விளங்கலாம்"//
”மனத்துக்கண் மாசிலனாதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற” //
ஆஹா மாட்டினீங்க ஸார் நீங்க!
இறைவனுக்கு இணையா வைக்கிறீங்க?
வைக்கப்போறானுங்க பாருங்க .உங்களுக்கு ஆப்பு
நோன்பு பற்றிய விளக்கங்கள் அருமை..உங்கள் கருத்தும் சரி தான்.
நோன்பு பற்றிய தகவல்கள் நன்று
நோன்பு தகவல்கள் தெரிந்து கொண்டேன்.
என்னய்யா நடக்குது இங்கே?
நோன்பு பற்றி எனக்கு எதுவும் தெரியாது. முதல் முறையாக உங்கள் பதிவு மூலம் நிறைய அறிந்து கொண்டேன் தேங்க்ஸ் நண்பா
அப்புறம் அந்த கேவலமானவர்கள் பற்றி பேசவே புடிக்கவில்லை, இதெல்லாம் என்ன ஜென்மங்களோ?????
அடுத்தவன் அந்தரங்களுக்குள் எப்படித்தான் நுழைகிறார்களோ?? இதைப்போல் ஒரு கேவலம் வேறு ஒன்று இல்லை,
சம்மந்தபட்ட அந்த முட்டாள்களே தாங்கலாய் திருந்தினால் ஒழிய...
உங்கள் மனக்கஸ்டங்களில் இருந்து நீங்கள் மீண்டு.திரும்பவும் பதிவுலகில் கலக்க இறைவனைப்பிராத்திக்கின்றேன் ஒரு நண்பனாக..அன்பு நண்பா.
பொய் சொல்வதையும், பொய்யான அடிப்படையில் செயல் படுவதையும் எவர் விடவில்லையோ அவர் தனது உணவையும் பானத்தையும் விட்டிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை,”/
எல்லோருக்கும் சார்ந்தது..
நோன்பை முன்வைத்து நல்ல கருத்துக்களுடன் பதிவு..
////குறிப்பு:எனது பேஸ்புக் மற்றும் யாகூ எக்கவுண்ட்கள் ஹக் பண்ணப்பட்டன கடந்த இரு நாட்களில் இரண்டு தடவை.இன்னமும் முயற்சிகள் நடக்கின்றன.என்னால் கூட எனது பேஸ்புக்கிட்கு போக முடியவில்லை..மாறி மாறி தடைகள்.எனக்கு மட்டுமல்ல மதிசுதா,மதுரன் போன்ற பதிவர்களும் கடந்த சில நாட்களுக்குள் இதே வேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.இவனுகளை என்ன செய்வதென்று தெரியவில்லை..நாயிலும் கேவலமான பிறப்புகள்.சரி அதனை விடுவோம்.////
ஏன் இந்த மைந்தன் போன்ற அப்பாவிகளையேல்லாம் கஸ்ரப்படுத்துகிறார்கள் இந்த திருட்டு பைத்தியங்கள். கவலை வேண்டாம் மைந்தன், எல்லாத்தடைகளையும் உடைத்து வா! (ஏதாவது போராட்டத்துக்கு அழைப்பதுபோல இருந்தால் நான் பொறுப்பல்ல. ஹிஹிஹி)
அருமையான பதிவு
அன்புள்ள நண்பர்களே
இன்று என் வலையில்
தங்கபாலுவின் சித்தப்பாவா காமராஜர்? நள்ளிரவில் குழப்பம்!
மீண்டும் வணகக்ம் மச்சி,
நேற்றே என் கருத்துக்களைப் பகிர வேண்டும் எனும் ஆவல் மனதில் எழுந்தது.
நேரமின்மையால் ஓடி விட்டேன்.
எமது அந்தரங்கங்களை அறியும் ஆவலில் தானே எங்கள் கணக்குகளைக் களவாடும் முயற்சிகளில் ஒரு சிலர் ஈடுபடுகிறார்கள்.
அவர்கள் விரும்பின் எமது பாஸ்வேர்ட்டினைத் தருகின்றோம்.
தாரளமாக கணக்குகளை எந் நேரமும் கண்காணித்துக் கொண்டிருக்கலாமல்லவா.
நோன்பு பற்றிய விளக்கப் பகிர்விற்கு மிக்க நன்றி மாப்பு.
மாப்ள நான் ரொம்ப லேட்
நோன்பு பற்றிய விசயங்கள் பற்றி தெரிந்து கோண்டேன்...நன்றி நண்பரே!
முறையாக நோன்பிருக்கும் அனைத்து அன்பர்களுக்கும் எனது இதய பூர்வ வாழ்த்துக்கள்
தம்பி இப்ப Facebookல status update பண்ணுறது பழைய மைந்தன் சிவாவா அல்லது புதிய ஹக்கரா? பழைய மைந்தன் சிவா தனர எக்கவுண்டு ஹக் பண்ணிட்டாங்கள் எண்டல்லோ சொல்லுது???
நோன்பு குறித்த பகிர்வுக்கு நன்றி.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
எவனாவது ஹக் பண்ணுரானுங்கனா, நீங்க முன்னேரிட்டீங்க`னு அர்த்தம். அத வச்சி சந்தோசப்படுங்க பாஸ்...
என்ன ஒரு அழகான விளக்கம்.மிக சிறப்பாக விளக்கி உள்ளீர்கள் இதனை இப்பொழுதும் மீள் பதிவாக வெளியிடலாம் சகோ.
Post a Comment