Monday, August 1, 2011

யாழ்ப்பாணத்தில் பெண்கள் மீதான வன்முறை ஓயுமா?

என்ன தான் யுத்தம் இலங்கையில் முடிவடைந்துவிட்டிருந்தாலும் கூட வன்முறைகள் இன்னமும் குறையவில்லை என்பதற்கு பெண்கள் மீதான வன்முறைகள் ஒரு உதாரணமாகும்!பெண்களுக்கு எதிரான வன்முறை நாளுக்கு நாள் கட்டுப்பாடுகள் இன்றி அதிர்கரித்த வண்ணமே இருக்கிறது.உதாரணமாக யாழ்ப்பாண பிரதேசத்தை எடுத்துக்கொண்டால் அதிகளவான பெண்கள் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்படுவதாகவே மருத்துவ அறிக்கைகளும் சாட்சிகளும் தெரிவிக்கின்றன என்று பத்திரிகைகள் செய்தி வெளியிடுகின்றன.


இவ்வாறு நாட்டின் குறிப்பிட்ட பிரதேசத்தில் நடைபெறும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் நிறுத்தப்படவோ அதற்க்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் தான் என்ன?நாடு முழுவதும் இந்த நிலைமை என்றால் பெரிதாக கவனத்துக்கு வந்திருக்காது.ஆனால் யாழில் குறிப்பாக அன்மைக்காலங்களின் நடைபெறும் இத்தகைய சம்பவங்களை கண்டும் காணாததுமாக இருக்கும் பொறுப்பு கூறவேண்டிய தரப்பினர் அவற்றுக்கு உடந்தை போகின்றனரா என்பது சாதாரண குடிமகனுக்கும் எழக்கூடிய கேள்வியாகும்!

கடந்த மாதம் மட்டும் யாழில் 28 கொலைகள் மற்றும் தற்கொலைகள் இடம்பெற்றிருப்பதாக உத்தியோக பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில் இவற்றுக்கான காரணங்கள் யாவை,அவற்றை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் யாவை என்று பார்த்தோமானால் வெறும் ஏமாற்றமே மிஞ்சும் என்பது கண்கூடு!

ஆதாரமற்ற சில இணையத்தளங்கள் எதோ பெண்கள் தான் விரும்பி இத்தகைய காரியத்தில் ஈடுபடுவதாக முன்னிலைப்படுத்தி செய்திகளை வெளியிட்டு வருகின்றன.சில சந்தர்ப்பங்களில் இவை உண்மையாக இருந்தாலும்,பல சந்தர்ப்பங்களில் வேறு காரணிகளே இவற்றுக்கு ஏதுவாகின்றன!அண்மைக்காலங்களில் பல பெண்கள்,பெற்றோர் ஆதரவற்ற பெண்கள் பலர் வெளி நபர்கள் சிலரது மோசடி வார்த்தைகளுக்கு உடன்போய் நாதியற்று நிற்பதுவும் நடந்து வருகிறது.இவர்களை ஏமாற்றி பிழைக்கவென்று ஒரு கூட்டமே இயங்கி வருகிறது.அது யார் ஆதரவுடன் நடைபெறுகிறதோ தெரியவில்லை ஆனால் பிடிபட்ட சில சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட நபர்கள் தப்பித்துக்கொண்ட சந்தர்ப்பங்களே அதிகம்!வன்முறையாளர்கள் ஊழல்,லஞ்சம் அதிகார மற்றும் மறைமுக மிரட்டல்கள் மூலம் தப்பித்துக் கொள்கின்றமை கண்கூடு!இத்தகைய அழுத்தங்கள் மூலம் செயல்ப்படுத்தப்படும் வன்முறை சம்பவங்களானவை எதிர்காலத்தில் பெண்களின் கல்வி மற்றும் தொழில் வாய்ப்பு பற்றி சிந்திக்க முடியாது போக வழிவகுக்கும் என்பது தான் உண்மை!

உடனடி காதல் திருமணம் என்ற பெயரில் சில நாள் காதல்கள் திருமணங்களில் முடிந்து கடைசியில் அந்த பெண்களை ஏமாற்றி கையில் குழந்தையை கொடுத்துவிட்டு தலைமறைவாகும் பல இழிவான ஆண்களும் நம்முள் இருக்கின்றனர்.ஒட்டுமொத்தத்தில் பெண்களை மட்டுமே குறை கூற முடியாது.ஆனால் அவர்களும் அவதானமாய் இருத்தல் அவசியமாகின்றது.


இத்தகைய போர் முடிந்த தருணத்தில் கலாச்சார சீரழிவுகள் பல கட்டுக்குள் இல்லாமல் நடந்தேறுவதாக தான் பலரும் கூறுகின்றனர்.ஆனால் இவை குறிப்பிட்ட கால ஓட்டத்தில் மறைந்துவிடுமென்று இல்லை இல்லை குறைந்துவிடுமென்று நான் நினைக்கிறேன்..ஆனாலும் குறிப்பிட்ட பாதிப்படையும் தரப்பினர் குறிப்பாக பெண்கள் தங்கள் வாழ்க்கை விடயத்தில் அதிக சிரத்தை எடுத்து அவதானமாய் இருப்பார்களே ஆனால் அவர்கள் வாழ்வு சிறப்படையும்.என்ன தான் நடந்தாலும் வன்முறைகளை குறிப்பிட்டதரப்பினர் கட்டுக்குக்குள் கொண்டுவர மாட்டார்கள்/முடியாது.ஆகவே உங்கள் வாழ்க்கை உங்கள் கைகளில்.உணர்ந்து செயல்படுங்கள் பெண்களே!!

கொசுறு:உலகில் பெண்களுக்கெதிரான வன்முறை அதிகமாக ஆப்கானிஸ்தானிலும்,அப்புறம் காங்கோ,பாக்கிஸ்தான் என்று வரும் பட்டியலில் இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது!

Post Comment

37 comments:

Unknown said...

தமிழ் மணம் ஆட்டோமடிக்காய் இணையுமா பாஸ்?

M.R said...

வேதனை தரும் விஷயம் நண்பரே

M.R said...

மைந்தன் சிவா said...
தமிழ் மணம் ஆட்டோமடிக்காய் இணையுமா பாஸ்

ஆம் இப்பொழுது அவர்களே எடுத்து கொள்கிறார்கள் ,ஒரு சில சமயம்

நாம் சப்மிட் செய்ய கிளிக் செய்தால் சேர்ந்து விடும் நண்பரே

shanmugavel said...

கொடூரம் சிவா! என்றைக்குத்தான் இப்பிரச்சினையெல்லாம் தீர்வது?

Anonymous said...

///இவ்வாறு நாட்டின் குறிப்பிட்ட பிரதேசத்தில் நடைபெறும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் நிறுத்தப்படவோ அதற்க்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் தான் என்ன?நாடு முழுவதும் இந்த நிலைமை என்றால் பெரிதாக கவனத்துக்கு வந்திருக்காது.ஆனால் யாழில் குறிப்பாக அன்மைக்காலங்களின் நடைபெறும் இத்தகைய சம்பவங்களை கண்டும் காணாததுமாக இருக்கும் பொறுப்பு கூறவேண்டிய தரப்பினர் அவற்றுக்கு உடந்தை போகின்றனரா//// வேலிகள் அனுமதியுடன் மேயப்படும் பயிர்கள்... இல்லை "இன்னொரு நாட்டு பெண்கள் தானே" என்ற எண்ணமோ என்னமோ ...

kobiraj said...

/ஆதாரமற்ற சில இணையத்தளங்கள் எதோ பெண்கள் தான் விரும்பி இத்தகைய காரியத்தில் ஈடுபடுவதாக முன்னிலைப்படுத்தி செய்திகளை வெளியிட்டு வருகின்றன/.நிச்சயமாக உண்மை தல

Anonymous said...

////ஆதாரமற்ற சில இணையத்தளங்கள் எதோ பெண்கள் தான் விரும்பி இத்தகைய காரியத்தில் ஈடுபடுவதாக முன்னிலைப்படுத்தி செய்திகளை வெளியிட்டு வருகின்றன.// இந்த இடத்தில் நான் நீயூ ஜெப்னாவை நினைக்கவில்லை....

Anonymous said...

///ஒட்டுமொத்தத்தில் பெண்களை மட்டுமே குறை கூற முடியாது.ஆனால் அவர்களும் அவதானமாய் இருத்தல் அவசியமாகின்றது.// உண்மை தான் பாஸ் ,இந்த இடத்தில் பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் தொடர்பாக அதிக சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்...

Unknown said...

//கந்தசாமி. said...
////ஆதாரமற்ற சில இணையத்தளங்கள் எதோ பெண்கள் தான் விரும்பி இத்தகைய காரியத்தில் ஈடுபடுவதாக முன்னிலைப்படுத்தி செய்திகளை வெளியிட்டு வருகின்றன.// இந்த இடத்தில் நான் நீயூ ஜெப்னாவை நினைக்கவில்லை....//
இவனுகள் தான் படு கேவலமானவங்கள் !!

ஆகுலன் said...

சீரியஸ் பதிவு.............

Yoga.S.Fr said...

தமிழ் மணம் ஆட்டோமடிக்காய் இணையுமா பாஸ்?######யாரு கூட???????????
(கார்த்திகா கூடவா?)

Yoga.S.Fr said...

என்ன செய்ய மைந்தன்?கலாசார சீரழிவு என்பது வடக்கில் குறிப்பாக யாழில் தலை விரித்தாடத் தொடங்கியது அவர்கள் இல்லாது போன்தால் தான்!உண்மை சுடும்!

காட்டான் said...

இந்த விடயத்தில் பெற்றோர் பிள்ளைகளுடன் நன்பர்போல் பழகி வந்தால் அரைவாசி பிரச்சனைவராது....

காட்டான் குழ போட்டான்...

கார்த்தி said...

சமூக பதிவொன்று மைந்தனிடமிருந்து! தம்பி இவைகளை நாங்க கேட்டு ஒண்ணும் செய்யேலாது. சட்டத்தை கையில் வைத்திருப்பவர்கள் உணர்ந்தால்தான் உண்டு

செங்கோவி said...

அட..நம்ம சிவாவா இது..உருப்படியான பதிவுகூட எழுதுவாரா? அருமை.

BC said...

பின் தங்கிய நாடுகளில் நடை பெறும் பெண்கள் மீதான வன்முறைகளின் தொடர்ச்சியே யாழ்ப்பாணத்திலும் நடை பெறுகிறது. விசேடமாக யாழ்ப்பாணத்தை குறிப்பிடுவதன் மூலம் உங்கள் அரசியல் நோக்கத்தை அறிய முடிகிறது.

நிரூபன் said...

அவிழ்த்து விட்ட பட்டி மாடுகள் போன்று, அதிகளவான வசதி வாய்ப்புக்களைக் கண்டதால் தான் இந்த நிலை சகோ. என்ன சொல்ல.

எங்களூர் வேலிகளே பயிர்களை மேய்கின்றது.

நிரூபன் said...

நல்லதொரு விழிப்புணர்வுப் பதிவினைத் தந்திருக்கிறீங்க. இத்தகைய பெண்கள் மீதான வன்முறைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமாயின், முதலாவது விடயமாக கைத் தொலைபேசிகளில் டூயட் பாடும் இளைஞர்- யுவதிகள் மீது பெற்றோர் தீவிர கண்காணிப்புடன் செயற்பட வேண்டும்.

சுதா SJ said...

நல்ல பதிவு பாஸ்,
கவனிக்க வேண்டிய விடயம்
இங்கே வேலியே பயிரை மேய்வது போல சில இடங்களில் பயிரே வேலியை
மேய விடுகிறதே, இத எங்க போய் சொல்ல

KANA VARO said...

மைந்தன் சிவா said...
தமிழ் மணம் ஆட்டோமடிக்காய் இணையுமா பாஸ்?//

இதென்ன கத்தரிக்காயோட அக்காவா?

அடோ! கமெண்ட் அடிக்க தான் நாங்க இருக்கமே! எதுக்கு முந்திரி கொட்டை மாதிரி முந்துறாய்.

KANA VARO said...

நீ கொழும்பு வந்த பிறகுமா யாழ்ப்பாணத்தில இதெல்லாம் நடக்குது! கடவுளே!

KANA VARO said...

நல்ல பதிவு மைந்தன், இதை வாசிக்கும் போது என் நண்பர்கள் இருவரது உண்மை கதைகளை பதிவிடலாம் என எண்ணுகிறேன். அவர்கள் கோபிப்பர்களா தெரியவில்லை,

கவி அழகன் said...

வேதனை தரும் விடயம்

Hajananth said...

//பொறுப்பு கூறவேண்டிய தரப்பினர் அவற்றுக்கு உடந்தை போகின்றனரா என்பது சாதாரண குடிமகனுக்கும் எழக்கூடிய கேள்வியாகும்!//

என்ன பாஸ்.. அவங்கள் தானே செய்யிறாங்கள். பிறகென்ன நீங்கள் உடந்தை அது இது எண்டு கொண்டு :-)

Anonymous said...

வேதனை தரும் விஷயம் நண்பரே...
உங்களின் புதிய பரிமாணம்...வாழ்த்துக்கள்

test said...

//இவை குறிப்பிட்ட கால ஓட்டத்தில் மறைந்துவிடுமென்று இல்லை இல்லை குறைந்துவிடுமென்று நான் நினைக்கிறேன்..//
உண்மை! ஆனால் அதற்கு ஐந்து வருடங்கள் ஆகலாம்!

test said...

நல்ல பதிவொன்று மைந்தனிடமிருந்து... நான்தான் தமிழ்மணம் ஏழாவது! :-)

கூடல் பாலா said...

வேதனை தரும் விடயம்தான் .அனைவருமே எதிர் கால நலனை கருத்தில் கொண்டு இதில் அதிக அக்கறை செலுத்தவேண்டும் ......

சென்னை பித்தன் said...

வேதனை தரும் விஷயம்.விரைவில் இந்நிலை மாற வேண்டும்.

arasan said...

கொஞ்சம் எல்லாம் விடயத்திலும் முன்னெச்சரிக்கை தேவை ..
வல்லூறுகள் திருந்த வேண்டும் .. இல்லை திருத்தப்பட வேண்டும் ..

பாலா said...

நான் வெளியூர் என்பதால் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

maruthamooran said...

மைந்தன் ஐயா அவர்களுக்கு!

என்னுடைய வாழ்த்துக்கள். தொடர்ந்தும் மொக்கைப் பதிவு போடாமல் அவ்வப்போது சமூக அக்கறையிலான பதிவுகளையும் போடுவதற்கு.


யாழ்ப்பாணத்தைச் சுற்றி மிகத் தெளிவாக அரசியலொன்று செய்யப்படுகின்றது. அதனை, தமிழ் ஊடகங்கள் பல பிழையாகவும் விளங்கிக்கொண்டு விட்டதாகப் படுகிறது.

கலாசாரமும்- பண்பாடும் தமிழ் மக்களின் சொத்தாக இருந்து வந்திருக்கிறது. அதில், கபடியாட பலர் முனைகிறார்கள். அதற்குள் சிலர் மாட்டிக்கொள்கிறார்கள் என்பதுதான் வலிக்கிறது.

K.s.s.Rajh said...

யாழ் பெண்களுக்காக ஒரு பதிவு.பாராட்டுக்கள்

ஹேமா said...

சொந்த உறவுகள் ஆண்கள் வீட்டுக்கு வந்தாலே உள்ளுக்குப் போ என்று சொல்லி பொத்திப் பொத்தி வளர்த்த கலாசாரம்.கொடுமையிலும் கொடுமை சிவா.வேறென்ன சொல்ல !

கேரளாக்காரன் said...

neenga yaazhpannatha vittu kelambuna ooyum

Karthikeyan Rajendran said...

கண்டிக்கவேண்டிய செய்தி, அனால் கண்டிக்க ஆள் இல்லையே, வருத்தமா இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லிரலாம் ஈஸியா. ஆனா வேதனை , அவங்களுக்கு தானே தெரியும்.

சி.பி.செந்தில்குமார் said...

வலி

Related Posts Plugin for WordPress, Blogger...