Saturday, August 20, 2011

சாமர சில்வா என்கிற தலைசிறந்த துடுப்பாட்டவீரர்!!



இலங்கை ஒருநாள் துடுப்பாட்ட வரிசையில் அசைக்க முடியாத ஒரு வீரராக அண்மைய காலங்களில் வலம்வரும் ஒரு துடுப்பாட்ட நட்சத்திரம் தான் "லிண்டம்லிலகே பிரகீத் சாமர சில்வா"!இலங்கை என்று சொன்னாலே வெளிநாட்டவர்களின் வாயில் அண்மைய காலங்களில் கதைபடும் அளவுக்கு மிக பிரபலமாக இருந்து வரும் சாமர சில்வா இலங்கை கிரிக்கட் அணியின் தெரிவுக்குழுவின் நம்பிக்கை நட்சத்திரமும் கூட!

1979 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதின்னான்காம் தேதி இலங்கையில் பாணதுறை எனப்படும் இடத்தில் இலங்கை கிரிக்கட்டை வாழவைக்க உதித்த செம்மல் சாமர சில்வா!பாணதுற ராயல் கல்லூரியில் தனது கல்வியை தொடர்ந்த சாமர சில்வா 1998 இல் முதல்தர கிரிக்கட் போட்டிகளில் களமிறங்கி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்! 2007 ஆம் ஆண்டு உலகக்கிண்ண தொடரில் ஒரு நான்கு ஐந்து அரைச்சதங்களை மத்தியவரிசையில் வந்து விளாசி இப்போ இன்று மட்டும் ரசிகர்கள் மனதில் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கும் நாயகன் இப்போ நான் இந்தப் பதிவை எழுதும் போது கூட ஒரு சிறந்த சாதனையாக பூச்சியத்தில் ஆட்டமிழந்து அவுஸ்திரேலிய அணிக்கெதிரான தீர்க்கமான தொடரை தீர்மானிக்கும் போட்டியில் இலங்கை அணிக்கு ஒரு கிளுகிளுப்பை ஏற்படுத்திவிட்டு சென்றிருக்கிறார்!

மொத்தமாக எழுபத்தி இரண்டு ஒருநாள் போட்டியில் விளையாடியிருக்கும் சாமர சில்வா,ஒரே ஒரு சதம் மற்றும் 'பண்ணி இரண்டு" அரை சதங்களை விளாசித்தள்ளி இருக்கிறார்!இவற்றில் நான்கு 2007 ஆம் ஆண்டு உலகக்கிண்ண தொடரில் பெறப்பட்டதுடன் அந்த ஒரே ஒரு சதம் அந்த உலகக்கிண்ண தொடருக்கு முன்பதாக இந்திய அணிக்கெதிராக பெறப்பட்டது.அப்போ போர்ம்'க்கு வந்த சாமர சில்வா இன்று வரை அந்த போர்ம்'ஐ தொடர்ந்து வருகின்றமை அவரது அண்மைய சாதனைகளை பார்க்கும் போது தெட்டத்தெளிவாக தெரிகிறது!அவரது பன்னிரண்டு அரைச்சதங்களில்,முதலாவது அவரது முதல் அறிமுகப்போட்டியில் அவுஸ்த்ரேலிய அணிக்கெதிராக பெறப்பட்டது.உலகக்கிண்ணம்,அறிமுகப்போட்டி தவிர்த்து மிகுதியாக இருக்கும் எழு அரைச்சதங்களையும் இலங்கை அணியின் 'பல வெற்றி வாய்ப்புகளை தடுத்து" பெற்று சாதனை படைத்திருக்கிறார்.

பெரும்பாலும் ஒரு நாள் போட்டியில் முப்பத்தைந்து,நாற்பது ஓவர்களின் பின்னர் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அடித்தாட வேண்டிய இறுதி தருணங்களில் வந்து அத்தனை நாட்களாக நோன்பு நோற்று முடிந்து வந்தவனை போல பந்துகளை விழுங்கி ஏப்பம் விடுவதில் அவருக்கு நிகர் அவரே!!ரசல் ஆர்னோல்ட்'ஐ அவர் ஓய்வு பெறும் போது பிரதிநித்துவம் செய்ய அணிக்குள் வந்த புயல் என்று சாமர சில்வாவை ஆரம்ப காலத்தில் சொல்லும் போது நான் சந்தேகப்பட்டேன் அப்பவே..இப்ப அதனை நிரூபிக்கிறார் நம்ம தலைவர்!!


சமூக வலைத்தளங்களில் கிரிக்கட் விரும்பி இலங்கை ரசிகர்களால் பெரும்பாலும் பாவிக்கப்பட்ட ஒரே கிரிக்கட் நாமம் சாமர சில்வா!!எவ்வளவு தான் கடி மேல் கடி விழுந்தாலும் மீசையில மண் ஒட்டாத நட்சத்திரம் சாமர சில்வா,நாட்பத்தைந்தாவது ஓவர்களில் கஷ்டப்பட்டு பத்து பந்துகளை வீணாக்கி பெறப்படும் ஒரே ஒரு ஓட்டத்தை பூர்த்தி செய்ய உசிரைக்கூட பொருட்படுத்தாது பாயக்கூட தயங்கியதில்லை என்பதிலிருந்து அவர் எந்தளவுக்கு இலங்கை கிரிக்கட்டின் எழுச்சிக்கு பயன்பட்டிருக்கிறார் எனபதை நீங்கள் ஊகித்து அறியலாம்!!

சில சமயங்களில் அவருக்குள்ளே ஒரு வேகம் பிறக்கும்..அப்போது அடிப்பார் பாருங்கள் கையிலிருக்கும் பேட் கூட பறக்கும் பாஸ்!!சும்மா அவரின் இடத்தை தக்க வைக்க அவர் தட்டும் சிங்கிள் எங்கயாச்சும் மிஸ் ஆகி எல்லைக்கோட்டை தொட்டுவிட்டால் அவரின் சந்தோசத்துக்கு அளவே இருக்காது!!
இலங்கை கிரிக்கட் அணியின் ரசிகர்கள் கைகளில் சாமர சில்வாவோ,அல்லது அவரை சளைக்காமல் களைக்காமல் தெரிவு செய்யும் தெரிவுக்குழுவினரோ கைக்கெட்டிய தூரத்தில் சிக்குவார்களாய் இருந்தால் அவர்கள் பாடு ரொம்பக் கஷ்டம் தான் போங்கள்!அவ்வளவு அன்பில் இருக்கிறாங்க நம்ம பசங்க!!

இன்னிக்கு நடக்கும் நான்காவது ஒருநாள் போட்டியிலும் வான வேடிக்கை காட்டி இருக்கும் சாமர சில்வாவை நினைக்க நினைக்க மனம் பெருமை கொள்கிறது!!வாழ்க சாமர சில்வா..வளர்க உன் ரசிக பெருமக்கள்!!

Post Comment

48 comments:

Gunaharan said...

உண்மையிலே சிந்திக்க வேண்டிய விடயந்தான், இவ்வாறான வீரரை நாம் எந்தனையாம் தரமாக துடுப்பாட்டத்தில் இறக்கலாம் ...?????

Riyas said...

ஆரம்ப காலத்திலிருந்தே எனக்கு அவரை பிடிப்பதில்லை எதற்குத்தான் தெரிவு செய்கிறார்களோ தெரியவில்லை.. அவரின் துடுப்பாட்டம் படு மோசம்..

Mathuran said...

கிரிக்கட்டா? நான் போயிட்டு அடுத்த வருசம் வாறன் பாஸ்

Unknown said...

இப்போதைக்கு வாக்குகளும், வாழ்த்துக்களும்.. மீண்டும் வருகிறேன்... (ஆணீ)

Unknown said...

அதற்குள் தமிழ்மணத்தில் இணைத்து வைய்யுங்கள்..

ARV Loshan said...

ROTFL :) :) :)

சுதா SJ said...

கிரிக்கட் பற்றி நமக்கு ஒண்ணும் தெரியாது
அதால நோ கமெண்ட்ஸ்

நிரூபன் said...

வணக்கம் மாப்பு,
உவர் சாமர சில்வாவே இன்றைக்கு உங்கள் கையில் மாட்டினவர்.

நிரூபன் said...

என்னய்யா? தமிழ் மணத்தை வைச்சு இழுத்துக் கிட்டிருக்கிறீங்க.
மெதுவா தள்ளி விட வேண்டியது தானே?

நிரூபன் said...

மச்சி, தமிழ் மணம் அனுப்பிட்டேன்.
அவ்....

rajamelaiyur said...

ஆம் உண்மையில் நல்ல வீரர் அவர் ...
(தூக்க கலகத்தில் எழுதியது)

rajamelaiyur said...

நம்ம அணியில் உள்ள ஸ்ரீசாந்த் போல

நிரூபன் said...

சில்வா,நாட்பத்தைந்தாவது ஓவர்களில் கஷ்டப்பட்டு பத்து பந்துகளை வீணாக்கி பெறப்படும் ஒரே ஒரு ஓட்டத்தை பூர்த்தி செய்ய உசிரைக்கூட பொருட்படுத்தாது பாயக்கூட தயங்கியதில்லை//

ஆகா இப்படியொரு அற்புதமான வீரரா அவர்.
இதுவரை நாளும் சாமரசில்வா பற்றித் தெரியாமல் இருந்திட்டேனே..

நிரூபன் said...

இன்னிக்கு நடக்கும் நான்காவது ஒருநாள் போட்டியிலும் வான வேடிக்கை காட்டி இருக்கும் சாமர சில்வாவை நினைக்க நினைக்க மனம் பெருமை கொள்கிறது!!வாழ்க சாமர சில்வா..வளர்க உன் ரசிக பெருமக்கள்!!//

அடப் பாவி,
உங்களுக்கு எவ்வளவு நல்ல மனசு.
இலங்கை அணியினாது இறுதி விக்கட்டுக்களை இழக்கும் வரை, அதாவது சாமர சில்வா வரும் வரை ஆட்டமிழக்கனும் என்று காத்திருக்கிறீங்க போல இருக்கே.

நிகழ்வுகள் said...

முன்னர் ஒரு முறை எனது நண்பன் சொன்னான் 'சாமர சில்வா இலங்கை கிரிக்கெட்டின் இன்னொரு அரவிந்தா' என்று.. நல்ல வேளை இது அரவிந்தாவின் காதுகளுக்கு எட்டவில்லை..எட்டியிருந்தால் விபரீதமான முடிவு எடுத்திருப்பார்..

மாய உலகம் said...

கிரிக்கெட் பதிவு கலக்கல். வாக்குகளும் வாழ்த்துகளும்

செங்கோவி said...

ஓ..துடுப்பாட்டம்னா கிரிக்கெட்டா..சரி, சரி!

மாய உலகம் said...

thamilmanam4

M.R said...

கிரிக்கெட் செய்தி !

M.R said...

தமிழ் மணம் 5

shanmugavel said...

வாழ்க சாமர சில்வா..வளர்க உன் ரசிக பெருமக்கள்!!

ஷஹன்ஷா said...

ஆகா...... பாவம்யா அவனு......

சென்னை பித்தன் said...

த.ம.8!

சென்னை பித்தன் said...

பாவம் சமரசில்வா!இப்படிக் கிண்டல் பண்ணுறீங்க?

கவி அழகன் said...

இவர் ரொம்ப நல்லவர்

Anonymous said...

சிவா...படகோட்டியாங்க அவர்...

Anonymous said...

சாமர சில்வாவிற்கு சாமரம் வீசிய சிவா, நீங்கள் கிரிக்கெட் வீரரா?

தமிழ்வாசி பிரகாஷ் said...

என்னமோ சொல்ற மைந்தா.... ஒன்னுமே புரியல?

Unknown said...

இன்ட்லில என்ன பிரச்சனைன்னு தெரியல!

மழைக்காகிதம் said...

Duck out :)

sinmajan said...

எவன்டா..நமம ’தல’ சாமர சில்வாவ வம்புக்கிழுக்கிறது..??
யார் எது சொன்னாலும் நம்ம தல அடுத்த போட்டியிலும் விளையாடிக் கிழிக்கும் என்பதை இத்தால் சகலருக்கும் அறியத் தருகின்றோம்.
#கைப்பிள்ள சாமர சில்வா ரசிகர் மன்றம்

ஆகுலன் said...

ஏன் உங்களுக்கு அவரில இவ்வளவு கோபம்...............

ஆகுலன் said...

நான் தொடக்கத்த வாசித்து விட்டு கொஞ்சம் குழம்பி போனேன் பிறகு தான் மேட்டர் தெரிஞ்சுது......

007 said...

பிடிக்கவில்லை

எப்பூடி.. said...

சாமர சில்வா போனால் அடுத்து தில்லானா கண்டாம்பி, இல்லை திலான் சமரவீர!!! ரண்டீவ்,மென்டிஸ் எண்டு ரெண்டு நல்ல ஸ்பின்னேர்ஸ் இருக்கேக்க 40 புது ஸ்பின்னேசை அறிமுகப்படுத்திற எருமை மாடுகள் இளய புதிய துடுப்பாட்ட வீரர்களை அறிமுகப்பச்டுத்த மட்டும் எதுக்கு தயங்குதுகள்? பானுஷ ராஜபக்ச 27 வயதிலா அணிக்குள் வருவார்?

நான் இறுதியாக எழுதிய கிரிக்கட் பதிவில் இந்த பாழாய்ப்போன சாமர சில்வாவை மீண்டும் இந்த கம்மனாட்டி செலேக்டேர்ஸ் சேர்ப்பார்கள் என்று கூறியிருந்தேன், என் வாக்கை அந்த நாய்கள் பொய்யாக்கவில்லை. பட்டிங் ஓடரா போடுனாணுக? 3 ம் இலக்கத்தில் சிறப்பாக ஆடக்கூடிய சந்டிமலை சங்கா, மகேலா என்னும் இரு ஓட்ட விரும்பி கழுகுகளுக்காக 5 ஆம் இலக்கத்தில் விளையாட விட்டதும், பின்னர் தூக்கியதும் படு முட்டாள்த்தனம்.இளம் வீறேர்களுக்கு 3 மற்றும் 4 ஆம் இலக்கங்களை விட்டுக்கொடுத்து மஹேல 5 ஆம் இலக்கத்திலும் சங்கா 6 ஆம் இலக்கத்திலும் வரும்வரை இலங்கை கிரிக்கட் ஒருநாள் போட்டிகளில் உருப்படாது :-((

சில சொற்கள் நாகரீகமாக இல்லை, ஆனால் நியாயமாக சொல்லவேண்டியவைதான்

காட்டான் said...

மன்னிச்சுடு மாப்பிள இந்த விளையாட்டில எனக்கு ஆர்வமில்லை... ஓட்டு போட்டுட்ட்டன் ஆனா அது மைனசா பிளசான்னுதாயா தெரியல...

காட்டான் குழ போட்டான்...

K.s.s.Rajh said...

வணக்கம் பாஸ் கொஞ்சம் லேட்டாதான் வாரன்.லேட்டா வந்தாலும் லேட்டஸா வாரன்.எனக்கு ரொம்பநாளாவே மனதில் இருந்த விடயம்.ஏன் இவரை அணியில் வைத்து இருக்கின்றார்கள்.என்று.இந்த விடயங்களில் அவுஸ்ரேலியா அணியை பாராட்டலாம்.அது ஸ்ரிவோக்காக இருந்தாலும் சரிதான்,அலன் போடர்ராக இருந்தாலும் சரிதான்,பொண்டிங்காக இருந்தாலும் சரிதான்.சரியா விளையாடாவிட்டால் அணியில் இருந்து தூக்கிவிடுவார்கள்.இதுதான் பல நல்ல வீரர்கள் தொடர்ந்து அவுஸ்ரேலியா அணியில் வருவதான் காரணம்.ஆனால் ஆசிய அணிகள்தான் பழய சாதனைகளைக் மனதில் வைத்து வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பவர்கள்.இதனால்தான் பல திறமையான வீரர்கள் சந்தர்ப்பம் கிடைக்காமலே போய்விடுகின்றனர்.இது மாறினால் தான் ஆசிய அணிகள் உருப்படும்.

Unknown said...

//எப்பூடி.. said...//

ஹிஹி பரவாய் இல்ல பாஸ்!இதை விட கேவலமா திட்டி இவனுக்கெல்லாம் பதிவு போடணும்...கொய்யாலே..கைல சிக்கினான்...

கோகுல் said...

நல்ல நேரம் பாத்து ஆரமிச்சிங்கய்யா ரசிகர் மன்றம்!விளங்கிடும்!

MANO நாஞ்சில் மனோ said...

நானும் வந்துட்டேன் ஹி ஹி....

எஸ் சக்திவேல் said...

>வந்து அத்தனை நாட்களாக நோன்பு நோற்று முடிந்து வந்தவனை போல பந்துகளை விழுங்கி ஏப்பம் விடுவதில் அவருக்கு நிகர் அவரே!!

ஹீ ஹீ :-)

Unknown said...

கிரிக்கெட் கிரிக்கெட் கிரிக்கெட் கிரிக்கெட் கிரிக்கெட் hehe!

தமிழ்விருது said...

இலைமறை காயாக உள்ள பல பதிவர்களை இனம் காணல்.இது எமது தளத்தின் நோக்கம்.கொஞ்சம் எல்லாப்பதிவர்களும் வந்து ஆதரவைத்தாருங்கள்

KANA VARO said...

சாமர சில்வா இந்திய அணிக்கெதிராக பெற்ற சதம் மறக்க முடியாதது. அந்த போட்டியில் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்ட அவர் சிங்களத்தில் கதைக்க மஹேல மொழி பெயர்த்ததும் மறக்க முடியாதது.

vidivelli said...

பதிவு நல்லாயிருக்கு..
இது தொடர்பாக கொஞ்சம் ஆர்வம் இல்லைத்தானே,,,
கருத்துச்சொல்ல முடியல..
பகிர்வுக்கு வாழ்த்துக்கள் சகோ..

கார்த்தி said...

மைந்தன் சிவாவிற்கு தொப்பி தொப்பி!!!

Unknown said...

தமிழ்மணத்தில் வாக்களித்து, பிறவி பலனை அடைந்து விட்டேன்..

Mohamed Faaique said...

பதிவின் ஆரம்பத்துல உள்குத்து..அப்புறம் வெளிக்குத்து.. மொத்தத்துல செம குத்து..

Related Posts Plugin for WordPress, Blogger...