இவ்வாறு நாட்டின் குறிப்பிட்ட பிரதேசத்தில் நடைபெறும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் நிறுத்தப்படவோ அதற்க்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் தான் என்ன?நாடு முழுவதும் இந்த நிலைமை என்றால் பெரிதாக கவனத்துக்கு வந்திருக்காது.ஆனால் யாழில் குறிப்பாக அன்மைக்காலங்களின் நடைபெறும் இத்தகைய சம்பவங்களை கண்டும் காணாததுமாக இருக்கும் பொறுப்பு கூறவேண்டிய தரப்பினர் அவற்றுக்கு உடந்தை போகின்றனரா என்பது சாதாரண குடிமகனுக்கும் எழக்கூடிய கேள்வியாகும்!
கடந்த மாதம் மட்டும் யாழில் 28 கொலைகள் மற்றும் தற்கொலைகள் இடம்பெற்றிருப்பதாக உத்தியோக பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில் இவற்றுக்கான காரணங்கள் யாவை,அவற்றை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகள் யாவை என்று பார்த்தோமானால் வெறும் ஏமாற்றமே மிஞ்சும் என்பது கண்கூடு!
ஆதாரமற்ற சில இணையத்தளங்கள் எதோ பெண்கள் தான் விரும்பி இத்தகைய காரியத்தில் ஈடுபடுவதாக முன்னிலைப்படுத்தி செய்திகளை வெளியிட்டு வருகின்றன.சில சந்தர்ப்பங்களில் இவை உண்மையாக இருந்தாலும்,பல சந்தர்ப்பங்களில் வேறு காரணிகளே இவற்றுக்கு ஏதுவாகின்றன!அண்மைக்காலங்களில் பல பெண்கள்,பெற்றோர் ஆதரவற்ற பெண்கள் பலர் வெளி நபர்கள் சிலரது மோசடி வார்த்தைகளுக்கு உடன்போய் நாதியற்று நிற்பதுவும் நடந்து வருகிறது.இவர்களை ஏமாற்றி பிழைக்கவென்று ஒரு கூட்டமே இயங்கி வருகிறது.அது யார் ஆதரவுடன் நடைபெறுகிறதோ தெரியவில்லை ஆனால் பிடிபட்ட சில சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட நபர்கள் தப்பித்துக்கொண்ட சந்தர்ப்பங்களே அதிகம்!வன்முறையாளர்கள் ஊழல்,லஞ்சம் அதிகார மற்றும் மறைமுக மிரட்டல்கள் மூலம் தப்பித்துக் கொள்கின்றமை கண்கூடு!இத்தகைய அழுத்தங்கள் மூலம் செயல்ப்படுத்தப்படும் வன்முறை சம்பவங்களானவை எதிர்காலத்தில் பெண்களின் கல்வி மற்றும் தொழில் வாய்ப்பு பற்றி சிந்திக்க முடியாது போக வழிவகுக்கும் என்பது தான் உண்மை!
உடனடி காதல் திருமணம் என்ற பெயரில் சில நாள் காதல்கள் திருமணங்களில் முடிந்து கடைசியில் அந்த பெண்களை ஏமாற்றி கையில் குழந்தையை கொடுத்துவிட்டு தலைமறைவாகும் பல இழிவான ஆண்களும் நம்முள் இருக்கின்றனர்.ஒட்டுமொத்தத்தில் பெண்களை மட்டுமே குறை கூற முடியாது.ஆனால் அவர்களும் அவதானமாய் இருத்தல் அவசியமாகின்றது.
கொசுறு:உலகில் பெண்களுக்கெதிரான வன்முறை அதிகமாக ஆப்கானிஸ்தானிலும்,அப்புறம் காங்கோ,பாக்கிஸ்தான் என்று வரும் பட்டியலில் இந்தியா நான்காம் இடத்தில் உள்ளது! |
37 comments:
தமிழ் மணம் ஆட்டோமடிக்காய் இணையுமா பாஸ்?
வேதனை தரும் விஷயம் நண்பரே
மைந்தன் சிவா said...
தமிழ் மணம் ஆட்டோமடிக்காய் இணையுமா பாஸ்
ஆம் இப்பொழுது அவர்களே எடுத்து கொள்கிறார்கள் ,ஒரு சில சமயம்
நாம் சப்மிட் செய்ய கிளிக் செய்தால் சேர்ந்து விடும் நண்பரே
கொடூரம் சிவா! என்றைக்குத்தான் இப்பிரச்சினையெல்லாம் தீர்வது?
///இவ்வாறு நாட்டின் குறிப்பிட்ட பிரதேசத்தில் நடைபெறும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் நிறுத்தப்படவோ அதற்க்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருப்பதற்கு காரணம் தான் என்ன?நாடு முழுவதும் இந்த நிலைமை என்றால் பெரிதாக கவனத்துக்கு வந்திருக்காது.ஆனால் யாழில் குறிப்பாக அன்மைக்காலங்களின் நடைபெறும் இத்தகைய சம்பவங்களை கண்டும் காணாததுமாக இருக்கும் பொறுப்பு கூறவேண்டிய தரப்பினர் அவற்றுக்கு உடந்தை போகின்றனரா//// வேலிகள் அனுமதியுடன் மேயப்படும் பயிர்கள்... இல்லை "இன்னொரு நாட்டு பெண்கள் தானே" என்ற எண்ணமோ என்னமோ ...
/ஆதாரமற்ற சில இணையத்தளங்கள் எதோ பெண்கள் தான் விரும்பி இத்தகைய காரியத்தில் ஈடுபடுவதாக முன்னிலைப்படுத்தி செய்திகளை வெளியிட்டு வருகின்றன/.நிச்சயமாக உண்மை தல
////ஆதாரமற்ற சில இணையத்தளங்கள் எதோ பெண்கள் தான் விரும்பி இத்தகைய காரியத்தில் ஈடுபடுவதாக முன்னிலைப்படுத்தி செய்திகளை வெளியிட்டு வருகின்றன.// இந்த இடத்தில் நான் நீயூ ஜெப்னாவை நினைக்கவில்லை....
///ஒட்டுமொத்தத்தில் பெண்களை மட்டுமே குறை கூற முடியாது.ஆனால் அவர்களும் அவதானமாய் இருத்தல் அவசியமாகின்றது.// உண்மை தான் பாஸ் ,இந்த இடத்தில் பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் தொடர்பாக அதிக சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்...
//கந்தசாமி. said...
////ஆதாரமற்ற சில இணையத்தளங்கள் எதோ பெண்கள் தான் விரும்பி இத்தகைய காரியத்தில் ஈடுபடுவதாக முன்னிலைப்படுத்தி செய்திகளை வெளியிட்டு வருகின்றன.// இந்த இடத்தில் நான் நீயூ ஜெப்னாவை நினைக்கவில்லை....//
இவனுகள் தான் படு கேவலமானவங்கள் !!
சீரியஸ் பதிவு.............
தமிழ் மணம் ஆட்டோமடிக்காய் இணையுமா பாஸ்?######யாரு கூட???????????
(கார்த்திகா கூடவா?)
என்ன செய்ய மைந்தன்?கலாசார சீரழிவு என்பது வடக்கில் குறிப்பாக யாழில் தலை விரித்தாடத் தொடங்கியது அவர்கள் இல்லாது போன்தால் தான்!உண்மை சுடும்!
இந்த விடயத்தில் பெற்றோர் பிள்ளைகளுடன் நன்பர்போல் பழகி வந்தால் அரைவாசி பிரச்சனைவராது....
காட்டான் குழ போட்டான்...
சமூக பதிவொன்று மைந்தனிடமிருந்து! தம்பி இவைகளை நாங்க கேட்டு ஒண்ணும் செய்யேலாது. சட்டத்தை கையில் வைத்திருப்பவர்கள் உணர்ந்தால்தான் உண்டு
அட..நம்ம சிவாவா இது..உருப்படியான பதிவுகூட எழுதுவாரா? அருமை.
பின் தங்கிய நாடுகளில் நடை பெறும் பெண்கள் மீதான வன்முறைகளின் தொடர்ச்சியே யாழ்ப்பாணத்திலும் நடை பெறுகிறது. விசேடமாக யாழ்ப்பாணத்தை குறிப்பிடுவதன் மூலம் உங்கள் அரசியல் நோக்கத்தை அறிய முடிகிறது.
அவிழ்த்து விட்ட பட்டி மாடுகள் போன்று, அதிகளவான வசதி வாய்ப்புக்களைக் கண்டதால் தான் இந்த நிலை சகோ. என்ன சொல்ல.
எங்களூர் வேலிகளே பயிர்களை மேய்கின்றது.
நல்லதொரு விழிப்புணர்வுப் பதிவினைத் தந்திருக்கிறீங்க. இத்தகைய பெண்கள் மீதான வன்முறைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமாயின், முதலாவது விடயமாக கைத் தொலைபேசிகளில் டூயட் பாடும் இளைஞர்- யுவதிகள் மீது பெற்றோர் தீவிர கண்காணிப்புடன் செயற்பட வேண்டும்.
நல்ல பதிவு பாஸ்,
கவனிக்க வேண்டிய விடயம்
இங்கே வேலியே பயிரை மேய்வது போல சில இடங்களில் பயிரே வேலியை
மேய விடுகிறதே, இத எங்க போய் சொல்ல
மைந்தன் சிவா said...
தமிழ் மணம் ஆட்டோமடிக்காய் இணையுமா பாஸ்?//
இதென்ன கத்தரிக்காயோட அக்காவா?
அடோ! கமெண்ட் அடிக்க தான் நாங்க இருக்கமே! எதுக்கு முந்திரி கொட்டை மாதிரி முந்துறாய்.
நீ கொழும்பு வந்த பிறகுமா யாழ்ப்பாணத்தில இதெல்லாம் நடக்குது! கடவுளே!
நல்ல பதிவு மைந்தன், இதை வாசிக்கும் போது என் நண்பர்கள் இருவரது உண்மை கதைகளை பதிவிடலாம் என எண்ணுகிறேன். அவர்கள் கோபிப்பர்களா தெரியவில்லை,
வேதனை தரும் விடயம்
//பொறுப்பு கூறவேண்டிய தரப்பினர் அவற்றுக்கு உடந்தை போகின்றனரா என்பது சாதாரண குடிமகனுக்கும் எழக்கூடிய கேள்வியாகும்!//
என்ன பாஸ்.. அவங்கள் தானே செய்யிறாங்கள். பிறகென்ன நீங்கள் உடந்தை அது இது எண்டு கொண்டு :-)
வேதனை தரும் விஷயம் நண்பரே...
உங்களின் புதிய பரிமாணம்...வாழ்த்துக்கள்
//இவை குறிப்பிட்ட கால ஓட்டத்தில் மறைந்துவிடுமென்று இல்லை இல்லை குறைந்துவிடுமென்று நான் நினைக்கிறேன்..//
உண்மை! ஆனால் அதற்கு ஐந்து வருடங்கள் ஆகலாம்!
நல்ல பதிவொன்று மைந்தனிடமிருந்து... நான்தான் தமிழ்மணம் ஏழாவது! :-)
வேதனை தரும் விடயம்தான் .அனைவருமே எதிர் கால நலனை கருத்தில் கொண்டு இதில் அதிக அக்கறை செலுத்தவேண்டும் ......
வேதனை தரும் விஷயம்.விரைவில் இந்நிலை மாற வேண்டும்.
கொஞ்சம் எல்லாம் விடயத்திலும் முன்னெச்சரிக்கை தேவை ..
வல்லூறுகள் திருந்த வேண்டும் .. இல்லை திருத்தப்பட வேண்டும் ..
நான் வெளியூர் என்பதால் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.
மைந்தன் ஐயா அவர்களுக்கு!
என்னுடைய வாழ்த்துக்கள். தொடர்ந்தும் மொக்கைப் பதிவு போடாமல் அவ்வப்போது சமூக அக்கறையிலான பதிவுகளையும் போடுவதற்கு.
யாழ்ப்பாணத்தைச் சுற்றி மிகத் தெளிவாக அரசியலொன்று செய்யப்படுகின்றது. அதனை, தமிழ் ஊடகங்கள் பல பிழையாகவும் விளங்கிக்கொண்டு விட்டதாகப் படுகிறது.
கலாசாரமும்- பண்பாடும் தமிழ் மக்களின் சொத்தாக இருந்து வந்திருக்கிறது. அதில், கபடியாட பலர் முனைகிறார்கள். அதற்குள் சிலர் மாட்டிக்கொள்கிறார்கள் என்பதுதான் வலிக்கிறது.
யாழ் பெண்களுக்காக ஒரு பதிவு.பாராட்டுக்கள்
சொந்த உறவுகள் ஆண்கள் வீட்டுக்கு வந்தாலே உள்ளுக்குப் போ என்று சொல்லி பொத்திப் பொத்தி வளர்த்த கலாசாரம்.கொடுமையிலும் கொடுமை சிவா.வேறென்ன சொல்ல !
neenga yaazhpannatha vittu kelambuna ooyum
கண்டிக்கவேண்டிய செய்தி, அனால் கண்டிக்க ஆள் இல்லையே, வருத்தமா இருக்குன்னு ஒரு வார்த்தை சொல்லிரலாம் ஈஸியா. ஆனா வேதனை , அவங்களுக்கு தானே தெரியும்.
வலி
Post a Comment