Tuesday, July 9, 2013

தனுஷின் "அம்பிகாபதி"-விமர்சனம் மட்டுமல்ல..!


'அம்பிகாபதி' பார்க்கக்கிடைத்தது.தமிழில் தேசியவிருது வாங்கிய நடிகரின் இந்தி சினிமா நோக்கிய அகலக்கால்.தங்கள் சிக்ஸ்பாக் கட்டழகை காட்டி ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் சல்மான்கான்,ஹிர்திக் ரோஷன் போன்ற நடிகர்கள் மத்தியில் தன்னுடைய நடிப்பு திறமையை மட்டுமே நம்பி கால்வைத்திருக்கிறார் தனுஷ்.ஒரு ஒல்லிப்பிச்சான் நடிகரை இந்தி ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்பதற்க்கு பாக்ஸ்ஆபீஸ் நிலவரமே சான்று பகர்கிறது. சூர்யா,விக்ரம்,மாதவன் போன்ற நடிகர்களுக்கு கிடைக்காத வரவேற்பு தனுஷ்க்கு கிடைத்திருக்கிறது. காரணம் ஒன்றே ஒன்று-அவரின் நடிப்பு..!

'பம்பாய்' போன்று எங்கே இன்னுமொரு இந்து-முஸ்லீம் கதையா என்று யோசித்திருந்த போதும், கதை ஒரு மாதிரியாக திசை மாறி வேறு இடம் நோக்கி செல்கிறது.புரோகிதர் மகன் தனுஷ்க்கும் முஸ்லிம் குடும்பத்து பெண் சோனம் கபூருக்கும் சிறுவயதிலேயே பிடித்துவிடுகிறது.ஆறு வயசா இருக்கும்போது முதன் முதலில் சோனம் கபூரை பார்த்து பிடித்துப்போன தனுஷ் தனது பதினஞ்சு வயசில லவ்வ சொல்கிறார்.தனுஷ்க்கு ஏராளமான அடிகள் கொடுத்தபின் பின்னாடி சோனம் கபூருக்கு பிடித்துவிடுகிறது.ஆனால் அவன் இந்து என்று தெரிந்ததும் அதனை மறுக்கிறார் சோனம் கபூர்.பிரச்சனை பெரிதாக,சோனம்கபூரை வேறொரு ஊருக்கு படிக்க அனுப்பி விடுகின்றனர் பெற்றோர். இங்கு தனுஷ் இவள் நினைப்பில் வாட,அங்கு சென்ற சோனம் கபூர் காலேஜ் சேர்மென் மீது காதல் கொள்கிறார்.அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதை படத்தில் காணுங்கள்.

முதல் பாதி முழுவதும் காதல்&இசைன்னு கலகலப்பாக செல்ல, இரண்டாம் பாதி சீரியசாக மாறுகிறது.தனுஷ் தனக்கு தேசியவிருது கிடைத்தது சரி தான் என்கின்ற வகையில் நடிப்பை காட்டியிருக்கிறார்.தனுஷின் நடிப்பில் அங்காங்கே ரஜனியின் ஸ்டைல் தெரிகிறது.தமிழில் அதனை தன்னுடைய நடிப்பில் கொண்டுவராத தனுஷ் இந்தியில் சேர்த்துக் கொண்டிருக்கிறார். சோனம் கபூர் கலங்கடிக்கிறார்.இங்கிருந்து தனுஷ் எல்லாம் இந்திக்கு செல்கையில்,அங்கிருந்து சோனம் கபூர் போன்றோரை தமிழ் சினிமாவுக்கு கொண்டுவர முடியாதா என்று கேட்கத் தோன்றுகிறது.தாடி மழித்த தனுஷ் மற்றும் சோனம்கபூர் இருவரினதும் பாடசாலை கால காட்சிகளை பார்க்கையில் தனுஷ் நடித்த '3'படத்தில் தனுஷ்-ஸ்ருதியை நினைவூட்டி செல்கின்றனர்.அழகான முதல் பாதி காதல் கதையையே படம் முழுவதுமாக கொண்டு சென்றிருக்கலாம் என்று தோன்றியது. தேவையில்லாமல் அரசியலை கொண்டுவந்து (லாஜிக் கேள்விகளுக்கு இடம்கொடுத்து) முதல் பாதியின் அட்டகாசமான கொண்டாட்டத்தை இரண்டாம் பாதியில் சொதப்பிவிட்டது போன்று தான் தெரிந்தது.தனுஷ்-சோனம் கபூர் காதல் காட்சிகள் அருமை.! 

படம் வெளிவரமுன்னமே இந்தி ராஞ்சனா'வுக்கு ஒரு பெரிய விளம்பரம் கொடுத்ததே ரஹ்மானின் இசைதான்.பாடல்கள் ஒவ்வொன்றும் கலக்கல் ரகம் என்றால் பின்ணனி இசையில் பிரம்மாதப்படுத்தியிருக்கிறார் ரஹ்மான்!வெளிநாட்டில் ஆடும் பாடல் காட்சிகள் இல்லை ,மிரட்டும் சண்டைக் காட்சிகள் கிடையாது.காசி நகரை அழகாக காட்டியிருப்பார்கள்.ஹோலி பண்டிகை சார்ந்து வரும் காட்சிகள் வண்ணமயம்!பெரிதாக ஆஹா ஓஹோ படமும் இல்லை, மட்டமான படமும் இல்லை.நிச்சயம் பார்க்கக்கூடிய படம் தான் அம்பிகாபதி.முஸ்லிம் பெண் இந்து பையன் மீது காதல் கொள்வதாக படத்தில் காட்டியிருப்பதால் பாகிஸ்தானில் படம் தடை செய்யப்பட்டது மேலதிக கிக்கு.

சோனம் கபூர் நல்லவளா இல்லை கெட்டவளா சுயநலவாதியா என்று பல குழப்பங்கள். பெரும்பாலான கதாநாயகிகள் இலகுவில் ஏற்கத்தயங்கும் நெகட்டிவ் ரோல் போன்ற கதாபாத்திரம் இடைவேளைக்கு பின்பதாக.படம் இன்னும் நன்றாக எடுத்திருக்கலாம் என்கின்ற அங்கலாய்ப்பு இருந்தாலும் கூட,தனுஷ்க்கு இந்தியில் முதல்படத்துக்கு இது போன்ற  வெற்றியே பெரிய விஷயம் தான் என்று பாராட்டத்தோன்றுகிறது!இந்த வருடத்தில் படம்வெளி வந்து இரண்டாம் வாரத்தில் அதிக வசூலை பெற்ற திரைப்படங்களில் 'ராஞ்சனா' நான்காம் இடத்திலிருக்கிறது.

1. Yeh jawaani hai Deewani - 44,87,00,000
2. Race 2 - 20,02,00,000
3. Special 26 - 17,99,00,000
4. Raanjhanaa - 17,75,00,000 approx
5. Aashiqui 2 - 17,35,00,000
6. Kai Po Che - 11,82,00,000
7. Fukrey - 10,51,00,000
8. ABCD - Any Body Can Dance - 10,17,00,000

மார்க் 62/100
--------------------------------------------------------------------------------------------

'தமிழருவி 2013'


பல்கலைக்கழகங்களின் ஏதாவது விழாக்கள் என்றால் சற்றே அலேர்ஜி எனக்கு.காரணம் நான் சென்ற பல்கலைக்கழகம் நடாத்திய எந்த விழாக்களும் அடிபிடி சண்டை,கட்சி மோதல்,பழிவாங்கும் நிகழ்வுகளாகவே முடிந்திருந்த ன.அது சமயம் சார்ந்த விழாவானாலும் சரி கலை இலக்கிய விழாக்களானாலும் சரி முடிவு ஒன்றாகத்தான் இருந்தது.கொழும்பிலே சிறப்பாக தமிழ் விழாக்களை நடாத்தும் பல்கலைக்கழகமாக நான் கணித்தது கொழும்பு பல்கலைக்கழகம் தான்.மொரட்டுவ,பேராதனிய பல்கலை கழகங்களும் பெரிய குறையில்லாமல் நிகழ்சிகளை நடாத்தி வருகின்றனர். அந்த வகையில் தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை மொரட்டுவ பல்கலைக் கழகம் நடாத்திய 'தமிழருவி 2013'என்கின்ற கலை இலக்கிய விழாவுக்கு செல்லும் சந்தர்ப்பம் வாய்த்தது.


மூன்று மணிக்கு விழா ஆரம்பம் என்றாலும்,மங்கல விளக்கேறி,தமிழ் வாழ்த்து,வரவேற்புரைகள் முடிய ஒரு நான்கு மணி போல சென்றால் முக்கிய நிகழ்ச்சிகளையும் பட்டிமன்றத்தையும் பார்த்துவிட்டு வரலாம் என்று சென்றேன்.நிறைந்த கூட்டம் ராமகிருஷ்ண மண்டபத்தில்.பெரும்பாலானோர் பல்கலைக்கழக மாணவர்கள்.பின்வரிசைகளில் தான் இடம் கிடைத்து செட்டில் ஆனேன்.சரியான ஒலியமைப்பு இல்லாத காரணத்தால் மேடையில் என்ன பேசுகிறார்கள் என்று ஒரு இழவும் புரிந்திருக்கவில்லை.காட்சிகளை தான் பார்க்க முடிந்தது.நடன நிகழ்ச்சிகள் நன்றாக இருந்தன.நாட்டிய நாடகமும்,வரலாற்று நாடகமும் நன்றாக இருந்ததாக முன்வரிசையில் இருந்தவர்கள் கூறக்கேட்டேன்.ஹாரியின் திரைகக்தை வேகத்தை பார்த்தும்,அதன் சப்தத்தை காது கிழிய கேட்ட இந்த தலைமுறைக்கு ஒழுங்கான ஒலி,ஒளியமைப்பில்லாத,மேடையமைப்பு நெறியாள்கை இல்லாத,இதிகாச வரலாற்று விடயங்களை எடுத்துரைக்கும்,மெதுவாக நகரும் காட்சிகளை கொண்ட நாடகங்கள் மீதான மோகம்,விருப்பு முற்றாக இல்லாது போய்க்கொண்டிருப்பதை காணமுடிந்தது.

'தகுந்த தலைமைகளை இனம்காட்டுவதில் இலங்கை தமிழ் ஊடகங்கள் வெற்றி பெற்றிருக்கின்றன/தோல்வியடைந்திருக்கின்றன' என்கின்ற தலைப்பிலான பட்டிமன்றத்தை பார்ப்பது தான் நிகழ்ச்சிக்கு சென்றதன் நோக்கமாக இருந்தாலும்,மதியம் மூன்று மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சியில் இரவு ஏழு மணி தாண்டியும் பட்டிமன்றம் ஆரம்பிக்கும் அறிகுறி தென்படாததால்,வீடு திரும்பிவிட்டேன்.இப்படியான நிகழ்ச்சிகளை நடாத்துதல் பெரிய வரவேற்கத்தக்க விடயம்.அதையே அதிகபட்சமாக ஒரு நான்கு மணி நேரத்தில் நடாத்தி முடிப்பது இன்னமும் வரவேற்கத்தக்க விடயம்.நிகழ்வில் முகம் தெரியாமல் பழகிய ஏராளமான நண்பர்களை சந்திக்க முடிந்தது.இனிய ஞாயிறு!எப்படியும் பட்டிமன்றத்தின் முடிவு 'தகுந்த தலைமைகளை இனம்காட்டுவதில் இலங்கை தமிழ் ஊடகங்கள் தோல்வியடைந்திருக்கின்றன என்று தான் அமைந்திருக்க வேண்டும். காரணம் கண் முன் தகுந்த தலைமைகள் எவருமே தெரிகிறார்களில்லை!
---------------------------------------------------------------------------------------

"விமர்சகர் வட்ட சிறுகதை போட்டி"




எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு இருக்கும் பேஸ்புக் வாசகர்வட்டம் எந்தளவுக்கு பிரபலமோ,அதற்கு இணையாக பிரபலமாகியிருப்பது அவரின் விமர்சகர் வட்டம்.சகலவிதமான விடயங்களும் கிழித்து தொங்கப்போடும் சம்பவங்களும் அங்கு நடைபெறும்.இவ்வட்டத்தின் உருவாக்கத்துக்கு பின்னதாக சாருவின் எழுத்து,நடத்தையில் மட்டுமன்றி,வாசகர் வட்ட செயல்பாடுகள் அராஜகங்களில் கூட பெரிய மாற்றம் ஏற்பட்டதை இருசம்பவங்களையும் கூர்ந்து அவ்தானித்து வருபவர்கள் அறிந்து கொண்டிருப்பார்கள்.சாரு நிவேதிதா விமர்சகர் வட்டத்தில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் வாசகர் வட்ட அராஜகங்களால் பாதிக்கப்பட்டவர்கள் தான்.வெறுமனே விமர்சனம் செய்வது மட்டுமல்லாமல்,பயனுள்ள வேலைகளையும் செய்யலாமே என்கின்ற அடிப்படையில்,சிறுகதை போட்டியொன்றை நடாத்துகின்றனர் அவர்கள்.விருப்பமானோர் பங்குபற்றலாம். பரிசுகள் உண்டு.போட்டி சம்பந்தமான தகவல்கள் இவை:

விமர்சகர் வட்டம் சிறுகதைப் போட்டி

நண்பர்களே,நமது வட்டம் சார்பாக ஒரு சிறுகதைப் போட்டி நடத்தலாம் என்று முடிவு செய்துள்ளோம்.
முதல் பரிசு = 10000 Rs
இரண்டாம் பரிசு = 5000 Rs
மூன்றாம் பரிசு = 2500 Rs x 2

1. யார் வேண்டுமானாலும் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம்.
2. குறுங்கதை அல்லது சிறுகதையாக இருக்கவேண்டும்.
3. இதுவரை வேறு எங்கும் வெளியிடப்படாத கதையாக இருத்தல் வேண்டும்.
4. நாகரிகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது.
5. 300 வார்த்தைகளுக்கு குறையாமலும், 1000 வார்த்தைகளுக்கு மிகாமலும் பார்த்துக்கொள்ளுங்கள்.
6. இந்தப் போட்டிக்கு மொத்தம் ஐந்து அல்லது ஆறு நடுவர்கள் இருப்பார்கள்.
7. ஒவ்வொரு கதைக்கும் அதிகபட்சமாக 100 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
நடுவர்கள் = 70 %
வட்ட உறுப்பினர்கள் (likes) = 30%
8. கதை எழுதியது யாரென்று நடுவர்களுக்கோ, உறுப்பினர்களுக்கோ முடிவு அறிவிக்கும் வரை தெரிவிக்கப்படாது.
9. ஒவ்வொரு கதையும், நடுவர்கள் மதிப்பெண்கள் வழங்கிய பிறகே வட்டத்தில் பகிரப்படும்.
10. கதைகளை ஒருங்கிணைப்பாளர்களுக்கு மட்டுமே பின்வரும் முகவரியில் அனுப்பவேண்டும்.
11. கதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 31 ஜூலை 2013
12. கதைகள் அனுப்ப வேண்டிய முகவரி vimarsagar.vattam@gmail.com

-----------------------------------------------------------------------------------------
ட்விட்டரில் நான்..!

ட்விட்டரிலும் கொஞ்சம் கால்பதித்திருக்கிறேன்.தனுஷுக்கு இந்தி சினிமா எந்த அளவுக்கு புதியதோ அதைப்போன்று ட்விட்டர் எனக்குப்புதியது.அந்த ரெண்டு வரி ட்விட்டரில் இருப்பவர்கள் விரும்பினால்  பொலோ செய்யுங்கள்.ஏற்கனவே அங்கு சுற்றித்திரிபவர்கள் 'அடடே இங்கயும் வந்திட்டியா வா..வா.."ன்னு வெளியிலும்,'இங்கயும் வந்திட்டியாடா?ஒரு இடத்திலயும் நிம்மதியா இருக்க விடமாட்டியா?"அப்பிடின்னு உள்ளேயும் புலம்புவதை காண முடிகிறது. என்ன செய்வது நாலுபேருக்கு  நல்லதுன்னா எதுவுமே......?!
என்னுடைய ட்விட்டர் ஐடி : "மைந்தன் சிவா"

இந்தவாரம் சிங்கம்-2 தான் ஹாட் டாபிக் ஒப் த டவுன் எண்டதால அது பற்றியே கொஞ்ச கீச்சுக்கள் அடிச்சு விட்டேன்.பரவாயில்லை ஒருசிலர் ரிட்வீட் செய்கிறார்கள்.பேவரிட் செய்கிறார்கள்.ஒரு பயபுள்ள(கும்மாச்சி) ஒரு ட்வீட்டை எடுத்து தன்னோட பதிவில் சேர்த்து அண்ணனை அன்பொழுக வரவேற்றார்.நன்றி நன்றி..!கடந்த சில நாட்களில் என்னுடைய சில ட்வீட்டுகள்:

-முறைப்படி பாத்தா,ஒலிம்பிக்ஸ்ல நம்மாளு தொரைசிங்கம் தான் கோல்ட் மெடல் ஜெயிச்சிருக்கணும்.! ஒன்னத்தையும் காணோம்!! வெண்கல கிண்ணம் கூட கிடையாதாம்!#சிங்கம்2

-சந்தானம் 'வாழைக்காய்','குஞ்சு"ன்னு டபிள் மீனிங்க் காமெடிகளை எப்போதான் விடப்போறாரோ!But'பாத்து சேத்து சீவிட போறீங்க"&"கப்பல் தரை தட்டுது" செம!#சிங்கம்2

-ஓட ஓட ஓட தூரம் குறையல பாட பாட பாட பாட்டும் முடியல போக போக போக ஒன்னும் புரியல ஆகா மொத்தம் ஒன்னும் விளங்கல..!#சிங்கம்2

-அனுஷ்காவ 'மேலோட்டமா'காட்டினா ஹாரிக்கு பிடிக்காது போல.பெயிண்ட் அடிச்சுடுறார்.பின்ன என்ன ***க்கடா அந்த மாதிரி ட்ரெஸ் மாட்டி உடுறீங்க?#சிங்கம்2

-செவ்வாய் கெரகத்தில கூட படம் ஹிட்டுன்னு பேசிக்கிறாங்களாம்!இத ரீமேக் வேற பண்றாங்களாம்..அடுத்த பாகம் அந்த கெரகத்தில தான் போல!#சிங்கம்2

-சிவகுமார் வீட்டுக்கெதிரா ப்ளூக்ராஸ் ஆர்ப்பாட்டம் பண்றாங்களாம்! பின்ன,சிங்கம் சிறுத்தை ரெண்டையும் வீட்டில வளர்த்தா கொஞ்சுவாங்களா?#சிங்கம்2

-சிங்கம் ஓங்கி அடிச்சா ஒன்னர டன் வெயிட்,ஓகே..அனுஷ்கா திருப்பி அடிச்சா எத்தின டன் வெயிட்னு சொல்லாம விட்டிட்டானுகளே..!#சிங்கம்2

-நான் சீக்கிரமாவே காது சம்பந்தமான மருத்துவம் படிக்கலாம்னு இருக்கேன்! செம -பொட்டென்சியல் பிசினெஸ் எதிர்காலத்தில ;)#சிங்கம்3

-படம் பிடிச்சிருந்தவங்களுக்கும் சிங்கத்த பிடிக்காம வைக்கிற முயற்சில சன்,கலைஞர்டிவி,விஜய் டிவில,சூர்யா&ஹாரி இறங்கியிருக்காங்க!#சிங்கம்2

-சிங்கம் 2- சூர்யா ரசிகர்களுக்கு மட்டும்னு வர்ற விமர்சனங்கள பாத்தா சிரிப்பு சிரிப்பா வருது!#சிங்கம்2

-விஜய் டிவி கொஞ்சம் மேல போயி சூர்யா கையில் துப்பாக்கி குடுத்து பலூன் சுட வைக்கிறானுக!சிங்கம் 3 முன்னோட்டம்ன்னு தப்பா நெனைச்சிட்டேன்!#சிங்கம்2

-சிங்கம்2 படத்தை தடை செய்ய வேண்டும் என மதுரை ஆசிரியர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.டீச்சர் சேலைய பிடிச்சு இழுத்த சந்தானம்மேல ஒண்ணுமில்லியா?#சிங்கம்2

-வீட்டில சும்மா கதைக்கும்போது கூட 'வாங்கலே','போங்கலே'ன்னு கத்தி கதைக்க வைச்சதை பார்க்கும்போது சிங்கம் வெற்றி போல்தான் தெரிகிறது! #சிங்கம்2

-டானி தூத்துக்குடில வந்து இறங்கும்போது அவன் வாயசைவை வைத்து அரெஸ்ட் செஞ்சு கொண்டு செல்லும் காட்சி செம மாஸ்!#சிங்கம்2

-சிங்கம் 2'ஓட ஸ்பெசாலிட்டி என்னன்னா,நல்லாவும் புகழ முடியுது அதே சமயம் நல்லா ஓட்டவும் முடியுது..! ஐ ஜஸ்ட் லவ் இட்!#சிங்கம்2

-'துப்பாக்கி'யிலும் 'சிங்கம்-2'லும் உள்ள ஒற்றுமை-நடுக்கடல்ல,கப்பல்ல நடக்கும் ரெண்டு க்ளைமேக்சுமே லாஜிக் இல்லாத க்ளைமேக்ஸ்கள்!#சிங்கம்2

-சிங்கம்3'ல அனுஷ்காக்கு கல்யாண சீனும்,பெஸ்ட் நைட் டூயட்சாங் மட்டும்தான் இருக்கும்போல!சக்காளத்தியா வரப்போற ஹீரோயின் யார்னு நெனைச்சு வெயக்கேன்!#சிங்கம்2
-----------------------------------------------------------------------------------------

டிஸ்கி:குட்டிப்புலி,சிங்கம் முதல் விமர்சனம்(மொக்கை),சிங்கம் இரண்டாம் விமர்சனம் (ஒரிஜினல்) என்று மூன்று பதிவுகளுக்கும் 5000க்கு மேல் ஹிட்ஸ் கொடுத்த நண்பர்கள், வாசகர்களுக்கு நன்றிகள்.

அன்புடன்,

Post Comment

4 comments:

Unknown said...

விமர்சனத்துக்கு நன்றி மைந்தரே!பாதிக் கதை சொல்லி,மீதிக் கதையை வெண்திரையில் காண்க என்று சொன்ன உங்கள் டீலிங் புடிச்சிருக்கு!///ட்விட்டரில வேறயா?விளங்கிடும்,ஹ!ஹ!!ஹா!!!(ச்சும்மா)§§§§§எனக்கும் தானே(ஹிட்ஸ்)நன்றி சொல்லுறீங்க?வழக்கம் போல,வங்கிக் கணக்குக்கே அனுப்பிடுங்க!ஹி!ஹி!!ஹீ!!!

MANO நாஞ்சில் மனோ said...

நடிப்பில் அங்காங்கே ரஜனியின் ஸ்டைல் தெரிகிறது.//

சொந்தமா எதுவும் செய்யமாட்டானுகளா ம்ஹும்....!

தனிமரம் said...

ஆஹா படம் எல்லாம் முதல்ச்சோவில் பார்க்கும் சிவாவும் ஒரு சிங்கமில்லே :)))) டிவிட்டரிலும் கலக்க வாழ்த்துக்கள்.

Unknown said...

Raanjhanaa வை ஒரு lovestory யாக ரசிக்க முடியவில்லை. தனுஷ் நடிப்பு மட்டும் superb . ஹிந்தியில் மட்டும் பழைய படங்கள் தான் அழகு. QSQT ( my all time favourite ), maine pyar kiya , lamhe , Chandhni , Saajan , .........போன்ற படங்கள் இப்போது வருவதில்லை. பழைய படங்கள் எப்போதும் என் collection இல் இருக்கும்.

Related Posts Plugin for WordPress, Blogger...