இப்போதெல்லாம் பெரும்பாலானோர் ட்விட்டரிலும்,பேஸ்புக்கிலும் தான் தங்கள் எழுத்துக்களை வீணடித்துக்கொண்டிருக்கின்றனர்.மீளப்பெற முடியாத எழுத்துக்கள், கற்பனைகள் அவை.அதனால் மாதத்துக்கு இருதடவையேனும் ட்விட்டர்,பேஸ்புக்கில் கிறுக்கித் தள்ளுவனவற்றை ப்ளாக்கில் பதிந்து வைக்கலாம் என்று நினைக்கிறேன்,எனக்கான ஒரு சேமிப்பாக..!எதிர்காலத்தில் திரும்பிப்பார்த்தால் ஒரு அசைபோட்டது போன்று இருக்கலாம்..!விரும்பியவர்கள் படித்துக்கொள்ளுங்கள்.என்னுடன் பேஸ்புக்கில்,ட்விட்டரில் நண்பர்களாக இருப்பவர்களுக்கு இவை பழைய விடயங்கள் தான் :)
பேஸ்புக் சாட்டில் இருக்கும் சுவாரசியம் எங்கும் இருக்காது..!உதாரணமா சில:
"நீ பேஸ்புக்கில அதிகமா அரசியல் பேசுறே..!"
"சரி குறைச்சுக்கிறேன்..!"
"நீ ஸ்டேடஸ்ல அசிங்கமா பேசுறே"
"சரி திருத்திக்கிறேன்"
"நீ பதினஞ்சு வரில ஓவரா அலட்டுறே.."
'சரி மூடிக்கிறேன்.."
'ட்விட்டர் மாதிரி ஒரு வரில போடுறே நீயி!"
'சரி நீட்டிக்கிறேன்.."
"என்ன நீ போடவே இல்ல இன்னிக்கு?"
'சரி இருங்க போடுறேன்.."
"திரும்ப திரும்ப அசிங்கமா பேசுறே நீயி..!"
நான்: 'ஙே.......... ???'
--------------------
'டேய்,நாலு லைக் விழுதுன்னா என்ன வேணும்னாலும் பண்ணுவியாடா?"
'ஏன் பாஸ் என்னாச்சு?
'எங்கட சனம் படுற பாட்டுக்கு உனக்கு சமந்தா-நஸ்ரியா கிளுகிளுப்பு கேக்குதோ?'
"அது வந்து..."
"அவனவன் படாத பாடு படுறான்..நீங்க எடுக்கிறீங்க எனடா?உங்களையெல்லாம் திருத்தவே முடியாதுடா"
'இல்ல பாஸ்..அதில என்ன தப்பு......."
'என்ன தப்பா?என்னவாச்சும் பண்ணி தொலைங்கடா...!"
"வெண்பனியே வெண்பனியே...."
"என்னடா பாட்டு படிக்கிறே?"
" I am watching அலெக்ஸ் பாண்டியன் @ ****** Cinema..!"
"நான் என்னவோ சொல்லிக்கிட்டிருக்கேன்..நீ படம் பாக்கிறியாடா?'
"Big weekend..Going for a Party..Lets Rock guys with ******,*****&****!!"
"பார்ட்டி போப்போறியா?"
"இல்லை பாஸ்,இவ்ளோவும் உங்க Wall'ல நீங்க ஆறு மாசத்துக்கு முன்னாடி பகிர்ந்திருந்தது..உங்களுக்கு பிடிக்குமேன்னு....."

---------------------------------------
'ஏங்க இவ்ளோ நாளா சொல்லவே..இல்ல உங்களுக்கு கல்யாணம் ஆகிரிச்சா?'
(எப்பிடி கண்டுபிடிச்சிருப்பா?எந்த தடையமும் இல்லாம தானே மெயிண்டெயின் பண்ணிக்கிட்டிருக்கேன் பேஸ்புக்கில..)
'இல்லையே,யார் சொன்னது உனக்கு?'
'இப்பிடி அப்பட்டமா பொய் சொல்லாதீங்க..உங்கள எல்லாம் நம்பி பழகினேன் பாரு..என்ன சொல்லனும்.."
"ஏய் லூசா உனக்கு? என்னாச்சு இப்போ? ஏன் இப்பிடி கத்துறே?"
"இப்ப தான் உங்க கவர் போட்டோ பாத்தேன்..உங்க கல்யாணப்படம் போட்டிருந்திச்சு.."
"ஹெஹெ..அடி சிறுக்கி மவளே..அது இன்னிக்கு கல்யாணம் செஞ்சுக்கிட்ட ஜீ.வி,சைந்தவி போட்டோடி..நான்லாம் ஆன்லைன்ல ஆயிரம் பொண்ணுக இருந்தாலும்,உன்கூட மட்டும் தான் கடலை போடுவேன் தெரியுமாடி..என்னப்போயி..."
'சாரிங்க..நீங்க நல்லவர்னு எனக்கு எப்பவோ தெரியும்..நான் சும்மா கலாய்ச்சு பாத்தேன்..ஹிஹி"

-----------------------------------------
'நீங்க யாரு?உங்கள பத்தி சொல்லுங்களேன்?"
'அது தான் ப்ரொபைல்ல போட்டிருக்கேனே!?"
'சரி சும்மா சொல்லுங்களேன்..?"
'நான் தான் மரியான் பட ஹீரோ"
'அப்பிடியா??
'ஆமா..ஏன்?"
"நம்பவே முடியலைங்க..எவ்ளோ பெரிய படம்.."
'ஆமா.."
'ரஹ்மான் வேற மியூசிக்.."
'ஆமா ஆமா.."
"நான் தனுஷ் தானே ஹீரோன்னு நெனைச்சுக்கிட்டிருந்தேன்..நீங்களா ஹீரோ???'
"அட ஆமாங்க நான் தான்..!"
'எப்பிடிங்க படிச்சிக்கிட்டே நடிக்கவும் செய்யுறீங்க??'
'இப்போ கூட நீயி ஒரிஜினல் எக்கவுண்ட்ல வந்து மொக்கை போட்டுகிட்டு பேக் ஐடிலயும் வந்து மொக்கை போடுறாய்ன்னா..உன் ப்ரெண்ட்'க்கு இதொண்ணும் பெரிய விசயமே இல்லைங்க..!"
'ஹிஹி மச்சான் கண்டுபிடிச்சிட்டியா :P ?"
--------------------------------------
என்னோட கடந்த இருவார பேஸ்புக் நிலைத்தகவல்கள் சில: @மைந்தன் சிவா
'போன மாசம் 25ஆம் தேதி வந்திச்சுடா..இந்த மாசம் தான் மூணு நாளு லேட்டு 28ஆம் தேதி தான் வந்திருக்கு..!'வீதியால் செல்லும் அனைவருக்கும் கேட்க்கும் தொனியில் போனில் யாருக்கோ சொல்லிக் கொண்டு சென்றாள்.ஒரு 28வயது இருக்கும்.ஒரு பொறுப்பு வேண்டாம்?
என்ன கொடுமையடா இது என்று பார்த்தால்,அவள் எனக்கு முன்னாடியே சென்றுகொண்டிருந்ததால் அவளின் கதை தொடர்ச்சி கேட்டுக்கொண்டே இருந்தது..!
'டேட் பிந்தி வர்றது சரி இல்லைடா..வீட்டு வாடகை கூட 24 ஆம் தேதி கட்டணும்..சம்பளம்னா 25ஆம் தேதிக்கு கரெக்ட்டா வந்திடணுமா இல்லையா சொல்லு?"

-----------------------------------------------
'ஒருபக்கம் பற்றீஸ்'க்கும் கொழுக்கட்டைக்கும் வித்தியாசம் தெரியாத தலைமுறை ஒன்று உருவாகிக்கொண்டிருக்க,மறுபக்கம் கொழுக்கட்டைக்கும் மோதகத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் உருவமில்லா ஒரு உருண்டையை செய்து படைக்கும் அம்மாமார்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றனர்.!
எப்படியிருந்தாலும் அது திங்கிற ஐட்டம் தானே என்று 'தின்பவர்கள் கூட்டம்"மட்டும் என்றுமே மாறாமல்
#ஆடிப்பிறப்பு '
எப்படியிருந்தாலும் அது திங்கிற ஐட்டம் தானே என்று 'தின்பவர்கள் கூட்டம்"மட்டும் என்றுமே மாறாமல்
#ஆடிப்பிறப்பு '
----------------------------------------------
'இன்றைய "சுடர்விடும்" பத்திரிகை ஒன்றில் கொட்டை எழுத்துக்களில் பிரசுரமாகி இருக்கும் தலைப்புகள் இவை:
-'விக்கினேஸ்வரனை நியமித்தால் தமிழரசு கட்சி தனி அணியாக குதிக்க முடிவு"
-"தமிழரசுக்கட்சி யாழ்கிளை விக்கி-ன்க்கு எதிர்ப்பு"
-"மாவையே முதலமைச்சர் வேட்பாளர்-திருமலையில் தமிழரசுக்கட்சி அதிரடி"
-"அரசியல் அனுபவம் என்னிடமில்லை-மாவையிடம் அது நிறையவே உண்டு--ஒப்புக்கொண்டார் விக்கினேஸ்வரன்"
-"மாவை தான் வேண்டும்-மக்கள் குரல்"
'மாவையை முதலமைச்சர் வேட்பாளராக நீ நிறுத்துகிறாய்.Dot"என்கின்ற அதிகார தோரணையில் 'மாவை தான் முழுத்தகுதியானவர்-விக்கி எவ்விதத்திலும் தகுதியற்றவர்"என்று அந்த பத்திரிகை கூட்டமைப்பை வற்புறுத்தியிருப்பது போல்தான் தெரிகிறது.பெரும்பாலான மக்களின் குரலாக அது இருக்கலாம்.இன்று விக்கினேஸ்வரன் தான் முதன்மை வேட்பாளர் என்று கூட்டமைப்பு அறிவித்திருக்கும் இந்த தருணத்தில் நாளையில் இருந்து இப்பத்திரிகையின் செய்திகள் எப்படியாக இருக்கும் என்று நினைக்கையில் உண்மையிலேயே மிகக்கவலையாக இருக்கிறது!வரலாற்றுக் கடமை என்பது எம்தலை மீது எழுதப்பட்டது.எப்போதும் கூடவே இருந்து அலைக்கழித்துக்கொண்டே இருக்கும்.
முடிவு யார் எடுத்தது,பின்ணணியில் யார் இருந்தனர்,இதன் மறைமுக நோக்கம் என்ன என்று விவாதிக்கலாம்,எதிர்த்து நிற்கலாம்,ஆனால் எனி அது சல்லிக்காசுக்கு உதவப்போவதில்லை.எடுத்த முடிவை வெற்றியாக்குவது தான் இப்போது அனைவரினதும் கடமை.அதிலும், அடிமட்டம் வரை செய்தியை கொண்டு சேர்ப்பதில் பத்திரிகைகளின் பங்கு அளப்பரியது.இதில்,தமிழரசு கட்சி சார்பில் யாழில் சுயேட்சை வேறு களம் இறங்குகிறதாம்.உறுதியானவன் பிரிந்தால் உதிரிக் கட்சிகளுக்கு கொண்டாட்டம் தான்..! #வடமாகாணசபைதேர்தல்'
----------------------------------------------------------
சிறுவயதில்,மின்சாரம் இல்லாமல் ஊரே இருண்டு கிடக்கையில் வீட்டுப் படிக்கட்டில் உட்கார்ந்துகொண்டு ஓடும் நிலாவையும், நட்சத்திரங்களையும்,எப்போதாவது மிக தொலைவில் சிவப்பு நிறத்தில் மின்னி மின்னிச்செல்லும் வானூர்திகளையும் பார்த்துக்கொண்டு 'ஒரு நாட்டிலே..ஒரு ஊரிலே...ஒரு வீட்டிலே.."என்று தினசரி ஒரே கதையை பதினெட்டு விதமாக அப்பா சொல்லக் கேட்டுக்கொண்டு இருந்த நாட்களை எண்ணிக்கொண்டு ஏக்கத்தில் வெளியே எட்டிப் பார்க்கிறேன்..ஆறுதலுக்கு கூட ஒரு நட்சத்திரத்தை காணமுடியவில்லை.இரவு மழை வரும் போல் தெரிகிறது..!
-------------------------------------------------------------
விகடனில் '16வயதினிலே'தான் இதுவரைஅதிக மதிப்பெண் வாங்கிய திரைப்படம்...என்று ஏதோ கேள்வியில் 'கோடம்பாக்கத்தில் முடங்கியிருந்த சினிமாவை கிராமத்தை நோக்கி அழைத்து சென்றது நான் தான்..அதற்காக தான் அத்தனை மார்க் கிடைத்தது.அதனை யாரும் புது இயக்குனர்கள் முறியடித்தால்,மீண்டும் படம் எடுத்து அதனை நான் முறியடிப்பேன்" என்று தனக்கேயுரிய பாணியில் பாரதிராஜா கூறியிருந்தார்.
இதை கூறியது அன்று"16 வயதினிலே,முதல் மரியாதை"போன்ற படங்களை எடுத்த பாரதிராஜா கிடையாது",இன்று "அன்னக்கொடியும் கொடிவீரனும்"எடுத்த பாரதிராஜா தான்.அதிகபட்சமாக கார்த்திகாவை மேலாடை இன்றி ஓடவைத்தது தான் இவரின் சமீபத்திய சாதனை..!வெறும் வீம்புகளை விட்டுவிட்டு இருக்கின்ற புகழுடன் ஓய்வுபெற்றாலே பெரிய விசயம் இவர்களெல்லாம்!

------------------------------------------------------------
முன்னமெல்லாம் வீட்டு மரத்திலயே பழுத்த பெரிய சைஸ் பலாப்பழத்தை பெரிய கத்தியால் ஒரே போடாய் போட்டு,பிளந்து (பிதாமகனில் விக்ரம்-சூர்யா பிளப்பார்களே அப்பிடி!)கையில் எண்ணையை தடவிக்கொண்டு ஒவ்வொரு பக்கமாய் பிரிச்சு மேயுறதில இருக்கிற இன்பம் 'யாழ்ப்பாணத்து பலாப்பழம்"ன்னு சொல்லி அயல்வீட்டுக்காரர் கொடுக்கும் அஞ்சு சுளை கொண்ட பீசில்(ரெண்டு அழுகிவேறு கிடைக்கும் சிலசமயம்) கிடைப்பதில்லை..!!— feeling lost.
--------------------------------------------------
முடி வெட்டும்போது நம்ம தலைய அந்தப்பக்கம் இந்தப்பக்கம் மேல கீழேன்னு திருப்பும் அழுத்தம்,வேகத்திலிருந்து முடிவெட்டுபவர் எந்த மாதிரியான மன நிலையில் இருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள முடியும்..!
சில சமயங்களில் ஒரு பக்கம் கோணலாக தலையை திருப்பிவிட்டு,தன் வேலையை பார்க்க போய்விடும் சில சலூன்காரர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்!எல்லாம் பய பாதியில் எந்திரிச்சு ஓடிடமாட்டாங்கிற தைரியம் தான்!சில பேரு வெட்டும்போது இடையில மூக்கு கடிச்சா கூட சொறிஞ்சிக்க விடமாட்டாங்கையா!ரோதனை..!!

------------------------------------------------------------------------------------------------------------------------------
======================================================================
ட்விட்டர் ட்வீட்ஸ் சில.. @மைந்தன் சிவா
+இணையத்தில் பேக் ஐடியில் பிரபலமாகிவிட்டு,வீதியால் நடந்து செல்கையில் யாராவது நம்மளை நோட்டமிடுகிறார்களான்னு கவனிப்பவன் தான் உண்மையான பிரபலம்!
+மழையின் போது டி.ஷர்ட் நனைந்து கிளுகிளுப்பாக தெரியவேண்டும் என்பதற்காகவே சில பெண்கள் குடையிருந்தும் நனைகிறார்கள்..!
+மணிரத்தினம் காலத்தால் முந்தியவர்..!டிவிட்டர் வருமுன்பே ஒரு சொல்,ஒரு வரியில் தான் தளபதியில் திரைக்கதை வசனம் எழுதியிருந்தார்..!
+தேடிவரும் பிரச்சனைகளை நொடிப்பொழுதில் அகற்றிவிட ஒரு 'ஹிஹி'சிரிப்பே போதுமானது..!பைத்தியக்காரன்னு சொல்றானா?சொல்லட்டும்!யாருக்கு நஷ்டம்!
+எப்போது இன்னொரு தரப்பை கழுவி ஊற்ற தயாராகிவிட்டோமோ,அப்போதே எந்த கழுவி ஊற்றுதலையும் சகித்துக்கொள்ள நாம் தயாராகிவிடவேண்டும்!
+ஓவியம் என்பது எனக்குள் வளராத கலை ஒன்று! பத்துவயதில் கீறிய கடல்கரை காட்சியை தான் இன்னமும் கீறிக்கொண்டிருக்கிறேன்,அதைவிட கேவலமாக..!
+பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்து வைத்தபின் தங்கள் வயோதிக வாழ்க்கைக்கான பொருளாதார ஆதாரத்தை பல பெற்றோர்களால் கண்டுகொள்ளமுடிவதில்லை!
+விக்ரம் ஒரு படம் நடிக்கும்,பாலா&ஷங்கர் ஒரு படம் இயக்கும் காலத்தில்,அஜித் சூர்யா விஜய் முறையே 2,3,4 படங்களை ரிலீஸ் செய்துவிடுகிறார்கள்..!
+காதலியிடம் காரியம் சாதிக்கவேண்டுமெனில்“நீ ரொம்ப அழகா இருக்கேங்கிற அகில உலக பொய்யை ஒரு நாளைக்கு ஐந்து வாட்டியாவது நீங்க சொல்லியே ஆகணும்..!
+அரச அலுவலகங்களுக்கு போய் காரியம் சாதிக்க நினைக்கும் ஒவ்வொருவருக்கும் முதல்வனும் இந்தியனும் கட்டாயம் ஞாபகம் வந்துதொலைவார்கள்!
+சந்தோஷமா இருக்கையில் பேஸ்புக்கும் கோபமாய் இருக்கையில் ட்விட்டரும்!கோபத்தை இரண்டுவரிகளில் திட்டிமுடிக்கவும்,சந்தோஷத்தை நீடித்து பகிரவும்..!
+ஹிட் படத்தில் கூட 1009 ஓட்டைகளை கண்டுபிடித்து தாங்கள் பெரிய புடுங்கிகள் என நிரூபிக்க சிலர் முயன்றுகொண்டிருக்கிறார்கள்!
+முதலிரவில் பால் எடுத்துச்செல்லும் மகத்துவம் என்ன என்பதை யோசிக்கிறேன்.ஒன்றும் பிடிபடுவதாக இல்லை!ஏன் ஒரு டீ,காபி கூடாது? :P
+ஒரு பொண்ணு வீதியில் குனிந்து தனது மார்பை,மாராப்பை பார்க்கிறாளாயின்,அவளை க்ராஸ் பண்ணி போனவன் அதை உற்றுபார்த்துவிட்டு சென்றிருக்கவேண்டும்!
+எப்போது ஒருவன்'நான் நன்றாக எழுதுகிறேன்'என்று இறுமாப்புடன் வாசிப்பை நிறுத்துகிறானோ,அன்றிலிருந்தே அவன் எழுத்தின் தரம் தேய ஆரம்பித்துவிடுகிறது!
+ப்ரியாமணிகுள்ளே ஒரு ஆம்பிளை கேரக்டரும்,ஷாருக் கானுக்குள்ளே ஒரு பொண்ணு கேரக்டரும் ஸ்லீப்பர் செல்லா இருக்காங்க..!
+படம் பார்க்கும்போதே நூறு ட்வீட்டு ட்வீட்டுபவர்கள் எப்படி முழுதாக உள்வாங்கி படத்தை பார்ப்பார்கள் என்று புரியவில்லை.மொக்கைபடங்கள் விதிவிலக்கு!
+மனிதர்களை சுதந்திரம் மிக்கவர்களாக உணரவைப்பதில் நைட்டிகளும் லுங்கிகளும் பெரும்பங்கு வகிக்கின்றன...!!
+உச்சகட்டத்தில் நயன்தாராவின் சம்பளம்-செய்தி
#செய்தி எழுதியவர் நயன்தாரா பெயரைக்கேட்டாலே 'உச்சம்'அடைந்துவிடுகிறார் போலும்!
+தேங்காய் வீட்டின்மேலே விழாமல் இருக்க வலை போடுவது கேரளா! அதுவே பக்கத்திவீட்டுக்காரன் தலையில் விழ மரம் வளர்ப்பது நம்ம ஊரு! :P
+எப்படியும் நாங்கள் தெரிந்து கொடுக்கும் புடவையை ஏதும் காரணம் சொல்லி மனைவி மறுத்துவிடுவாள் என்பதால் வேடிக்கை மட்டும் பார்க்கிறார்கள் கணவர்கள்!
+எழுதனும்ன்னு வற்புறுத்தி வரவழைக்கப்படும் எந்த எழுத்தும் வாசகனை கவர்வதில்லை..!
+யோசிப்பு என்பதை ''ஜோ'சிப்பு என்று எழுதும் வழக்கம் எத்தனை பேரிடம்?'யோசியமா' இல்லை 'ஜோசியமா' என்ற குழப்பம் எத்தனை பேருக்குண்டு?இந்த குழப்பத்துக்கும் 'ஜோ'க்கும் என்ன சம்பந்தம்?'ஜோ' என்பது 'யோ'வை விட கொஞ்சம் கவர்ச்சியான எழுத்து என்று தோன்றுவது என்ன மாதிரியான நோய்க்கூறு?புதிதாய் பிறக்கும் குழந்தைகளுக்கு வைக்கும் பெயர்களின் எங்காவது 'ஷ்"/'ஷ" எழுத்து வருமாறு பார்த்துக்கொள்பவர்களுக்கும் இதற்கும் ஏதும் மரபணுத் தொடர்புகள் இருக்குமா??
ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது..இன்னும் சில வருடங்களின்,தமிழில் எழுத்துப்பிழை இல்லாமல் எழுதத்தெரிந்தவனை எல்லாம் எழுத்தாளனாக மதிக்கத்தொடங்கிவிடுவார்கள்..!!- ட்விட்லோங்கர்
ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது..இன்னும் சில வருடங்களின்,தமிழில் எழுத்துப்பிழை இல்லாமல் எழுதத்தெரிந்தவனை எல்லாம் எழுத்தாளனாக மதிக்கத்தொடங்கிவிடுவார்கள்..!!- ட்விட்லோங்கர்
4 comments:
எல்லாவற்றையும் ஆவணமாக்குகிறீர்கள் போலும் . . வாழ்த்துக்கள் ;-)
வணக்கம் மைந்தரே!நலமா?///நன்றாக இருந்தது.///'ஜோ' கொஞ்சக் காலத்துக்கு முன்பு வரை நம்மிடமும் இருந்தது,இல்லையா,ஹி!ஹி!!ஹீ!!!!
தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகம்... வாழ்த்துக்கள்...
Visit : http://blogintamil.blogspot.in/2013/08/blog-post_6.html
அன்பின் மைந்தன் சிவா -
வலைச்சரம் மூலமாக வந்தேன் -
ஆவணப்படுத்தியாச்சு - எல்லாமே நல்ல்ல்ல்ல்லாருக்கு - படித்தேன் - இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Post a Comment