Sunday, November 18, 2012

துப்பாக்கி-இரண்டாவது ஆட்டம்..!


விஜய் டிவியில் முருகதாஸ் மற்றும் விஜய் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் முருகதாஸ் ஒரு விடயத்தை வெளிப்படுத்தினார்.அது என்னான்னா,துப்பாக்கி பண்ணும்போது தனக்கு  சொல்லிக்கிட்டே விடயம்,என்னோட டார்கெட் ரிப்பீட் ஆடியன்ஸ் தான்; தியேட்டருக்கு ஐந்து தடவை வந்து  சலிக்காத மாதிரி படம் இருக்கணும் அப்பிடின்னு சொன்னார்.ஐந்து தடவை என்பது கொஞ்சம் ஓவராக இருந்தாலும் கூட,படத்தை பலர் இரண்டு தடவை பார்த்திருக்கிறார்கள்.போடா போடி என்கின்ற இன்னொரு தீபாவளி ஆப்சன் இருந்தும் கூட துப்பாக்கியை இரண்டாவது தடவை பார்க்க தூண்டியது முருகதாசின் வெற்றி தான்.



எனது துப்பாக்கி விமர்சனத்தில்,எனக்கு படம் பிடித்திருந்தாலும்,"ஆகா ஓகோ" அளவுக்கு பிடித்திருக்கவில்லை என்று கூறியிருந்தேன்."அதிகமான எதிர்பார்ப்புகள்" இருந்தால் சிலசமயங்களில் இப்படி நடப்பது வழக்கம் என்றும் "மீண்டும் ஒருதடவை படத்தை பாருங்க,எனக்கும் "சிவாஜி" படம் முதல்தடவை பார்த்தபோது அப்படித்தான் இருந்தது,ஆனால் மீண்டும் மீண்டும் பார்க்கையில் பிடித்த படங்களில் ஒன்றானது" என்று பிரபல பதிவர் "எப்பூடி ஜீவா"ண்ணா சொல்லியிருந்தார்.வேலை நிமித்தமாக யாழ் சென்றிருந்த சமயம் கிடைத்த சிறிது நேரத்தை "துப்பாக்கியுடனான எனது இரண்டாம் ஷோ"வுடன் செலவிடலாம் என்று நண்பனுடன் களத்தில் குதித்திருந்தேன்.

 ஏலவே படம் வெளிவந்த இரவு தலைநகரில் "துப்பாக்கியுடனான எனது முதலாம் ஷோ" முடிந்திருந்தது.ஆனால் நான் யாழில் பார்க்க சென்றது படம் வெளிவந்து நான்காம் நாள்.என்ன ஒரு வித்தியாசமான அனுபவம்.கொழும்பில் இல்லாத அளவுக்கு பெரியளவிலான துப்பாக்கி கடவுட்டுகள் "செல்லா திரையரங்கை " பிரம்மாண்டப்படுத்திக்கொண்டிருந்தன.அது போதாதென்று  ரசிகர் பட்டாளம்..!நான்காம் நாள் மதிய நேர காட்சிக்கு தியேட்டர் நிறைந்து,மேலதிக கதிரைகள் பக்கம் பக்கமாக போடப்பட்டு தான் காட்சி ஆரம்பித்தது.தியேட்டர் கதவு மூடும்போது அவர்கள் ஆர்ப்பரித்த சத்தத்தை வைத்தே ஒரு வெறித்தனமான ரசிகர்பட்டாளத்துடன் தான் படம்பார்க்கின்றேன் என்ற முடிவுக்கு வந்திருந்தேன்..!

||இந்த காட்சி தான் படத்தில் மிக பிடித்தது..அப்படியே பாட்ஷாவில் பிள்ளையார் சிலைக்கு பின்னாடி இருக்கும் குண்டை கண்டுபிடிக்க ரஜனி கிளம்பி வரும் காட்சி மனசில் வந்து சென்றது.||

இவர்கள் மத்தியில் இருந்து முதலாவது ஷோ பார்த்திருந்தால் எனது விமர்சனம் "துப்பாக்கி-சூப்பர் டூப்பர் ஹிட்"என்கின்ற தலைப்போடு தான் வந்திருக்கும்.காரணம் கொழும்பில் முதல் ஷோ பார்கின்ற போது கூட இந்தளவு ஆக்ரோஷ்யமான ரசிகர்களை காணமுடிந்திருக்கவில்லை.படம் செல்ல செல்ல,வில்லன் வரும்போது கூட எழுந்து நின்று கைதட்டுகிறார்கள்.சரி என்னதான் இருந்தும் கூட "துப்பாக்கி"மீதான எனது அபிப்பிராயத்தில் ஒன்றும் பெரிதளவான மாற்றம் ஏற்பட்டுவிடவில்லை.முதல் தடவை பார்த்துவிட்டு 63 மார்க் கொடுக்கலாம்னு சொல்லியிருந்தேன்.இம்முறை சற்று அதிகமாக ஒரு 69-70 மார்க் கொடுக்கலாம்னு மனசு சொல்லுது.

துப்பாக்கி ஒரு ஹாலிவூட் படமாக இருந்திருந்தால்,இந்த பொண்ணு பார்க்கும் படலம் இருந்திருக்காமல்,ஹீரோ ஆக்சனில் இறங்கும்போது துணைக்கு ஹீரோயின் வருவதாகவும்,கிளைமாக்ஸ்க்கு அருகாமையில் இருவரும் புரிந்துணர்வோடு சேர்வதாகவும் காட்சிகள் அமைந்து,அதன்பின்னர் சாதாரண ஆக்சன் படமாக இருந்தால் ஒரு முத்தத்துடனும்,செம ஆக்சன் படமாக இருந்தால் ஒரு கட்டில் சண்டையுடனும் மேட்டரை முடித்திருப்பார்கள்.தமிழில் துப்பாக்கி வெளிவந்ததால் தேவையில்லாத "இழுவை"காதல் காட்சிகளும் சோர்ந்துபோன சில பாடல்களும் ஒன்றுசேர்ந்து படத்தின் வேகத்தையும் சுவாரசியத்தையும் கெடுத்துவிட்டிருக்கிறது.

"குட்டி புலி கூட்டம்" பாடலும் "கூகிள் கூகிள்"பாடலும் தான் கேட்கவும்,பார்க்கவும் நன்றாக வந்திருக்கின்றது."நிஷா நிஷா" பாடலை நல்ல டூயட்டாக எடுத்திருக்கலாமோன்னு தோன்றியது.வழமையான ஹாரிஸ் டச் மாற்றானை தொடர்ந்து துப்பாக்கியிலும் மிஸ்ஸிங் என்று தான் கூற வேண்டும்.ஒரு படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகணும்னா அனைத்து அம்சங்களும் கச்சிதமாக பொருந்தி வந்திருக்கவேண்டும்.வழமையாக படங்களுக்கு தனது பாடல்களால் ஒரு எக்ஸ்ட்ரா வால்யூ கொடுக்கின்ற ஹாரிஸ்,இம்முறை மாற்றான்,துப்பாக்கி என்று இரு பெரிய படங்கள் ஒரு சமயத்தில் கையில் வந்துவிட ஒரு படத்துக்கு கொடுக்கும் இசையை இரண்டு படங்களுக்கு பகிர்ந்து வழங்கியிருப்பது போல்தான் தோன்றுகிறது. மாற்றானுக்கும் "நாணி கோணி" பாடல் மட்டும் தான் ஹிட் ஆனது;இதுவும் மாற்றான் அவரேஜ் படமாக மாறியிருந்ததற்க்கு ஒரு காரணம்.

 சற்றே இழுபடும் காதல் காட்சிகளும்,பாடல்களும்,அங்காங்கே சில லாஜிக் பிழைகளும் தான் துப்பாக்கியில் சொல்லக்கூடிய எதிர்மறை விமர்சனங்கள்.அதையும் தாண்டி கேரளாவில் ரெக்கோர்ட் கலெக்சன்,தமிழ்நாட்டில் பில்லா,மாற்றானை பின்தள்ளி ஒப்பினிங் கலெக்சன் ரெக்கோர்ட் என்று மீண்டும் தான் ஒரு வசூல் சக்கரவர்த்தி,ஒப்பினிங் கிங் என்று முருகதாஸ் தயவோடு நிரூபித்திருக்கிறார் இளையதளபதி விஜய்.ரஜனி கூட படத்தை இருதடவைகள் பாத்திருப்பதாக முருகதாசிடம் கூறியிருக்கிறார்.கவுதம் மேனனின் படம் கைவிடப்பட்டது விஜய்க்கு ஒரு இழப்பு.இல்லாவிட்டால் அதுவும் ஒரு சூப்பர் ஹிட் என்று இப்போதே கூறியிருக்கலாம்.நடிப்புக்கு தீனி கொடுத்திருப்பார்.அண்டர்ப்ளே பண்ணும் போது தான் விஜய்க்கு நடிப்பு வருமோ என்னமோ. 

விஜய் விமர்சகர்களாலும் விமர்சனங்களாலும் கழுத்துவரை நெரிக்கப்படும் போது,தனக்கும் விஜய்க்கும் எவ்வித சம்பந்தமும் இல்லையென்று காட்டிக்கொண்டவர்கள் பலரும் இப்போது "விஜய் எப்போதுமே என் பேவரிட்" என்ற ரீதியில் கருத்துக்கூற தலைப்பட்டுவிட்டனர்.வெற்றிகளோடு கூட இருப்பது போல தோல்விகளின் போதும் நான் இவர் ரசிகனே என்று உரக்க சொல்பவன் தான் உண்மையான ரசிகன்.அத்தகைய காலங்களில் விமர்சனங்களுக்கு அஞ்சி ஒழிந்திருந்துவிட்டு படங்கள் வெற்றிபெறும் காலங்களில் மட்டும் வெளியே தலைகாட்டுவது ரசிகனுக்கு அழகல்ல.நல்லது,விஜய் தொடர்ச்சியாக நான்கு ஹிட் கொடுத்திருப்பதால் அடுத்து சில வரிசையான ப்ளாப்  படங்களை எதிர்பார்க்கலாம். அப்போது ஓடி ஒளிந்துவிடமாட்டீர்கள் தானே..?

டிசம்பரில் "கும்கி","நீதானே என் பொன்வசந்தம்" வெளிவரலாம்.விஸ்பரூபம் அடுத்த வருடம் தான்.பெரும்பாலும் பொங்கலுக்காவது கமல் ரிலீஸ் பண்ணுவார் என்று எதிர்பார்க்கலாம்.அதனால் துப்பாக்கி தொடர்ந்து சிலகாலம் தியேட்டர்களில் ஓடப்போகிறது. மறுபக்கத்தில் "போடாபோடி" பெரிதாக மக்களை கவரவில்லை.இந்த வருடத்தில் "நண்பன்","வேட்டை","காதலில் சொதப்புவது எப்படி","ஒருகல் ஒருகண்ணாடி", "கலகலப்பு","பிட்சா" போன்ற பத்துக்கும் குறைவான படங்களே வசூல்ரீதியாக வெற்றி பெற்றிருக்கின்றன.இதில் "ஓகே ஓகே"யை தாண்டி துப்பாக்கி "ஆண்டின் மிகச்சிறந்த படம்"ஆக தெரிவுசெய்யப்பட வாய்ப்புகள் பிரகாசமாய் தெரிகின்ற அதேசமயம்,இவ்வருடத்தில் சூர்யா,அஜித் போன்றோர் ஒரே ஒருபடத்தை மட்டுமே ரிலீஸ் செய்திருக்கும் போது,விஜய்  நண்பன்,துப்பாக்கி என்று இரண்டு ஹிட் படங்களை கொடுத்திருப்பது கடந்த நான்குவருட கசப்பான வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைத்திருக்கிறது தற்காலிகமாய்.! 


--------------------------------------------------------------

கமலின் விஸ்பரூபத்தில் கூட ஸ்லீப்பர் செல்ஸ் பற்றிய காட்சிகள்,துப்பாக்கியை ஒத்த காட்சிகள் வருவதால் என்னசெய்வது என்று கமல் குழம்பிப்போய் இருப்பதாக கூறப்படுகிறது.எப்படியோ விஸ்பரூபம் கமலுக்கு "ஆளவந்தான்"வசூல் ரீதியாக தந்த அடியை மீண்டும் தரப்போகிறது என்று ஏலவே எதிர்பார்த்திருக்கிறேன்.என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம். அத்துடன் துப்பாக்கிக்கே முஸ்லிம்கள் எதிர்ப்பால் பிரச்சனை ஆகியிருக்கிறது. விஸ்பரூபத்தையும் இது கட்டாயம் பாதிக்கத்தான் போகிறது.

               அடுத்ததாக அஜித்துடன் முருகதாஸ் இணைந்து பணியாற்றக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாய் தென்படுகின்றன."தீனா" போன்று அஜித்க்கு அடுத்த மைல்கல்லாக அப்படம் அமையலாம் என்று எதிர்பார்க்கலாம்.இந்த சமயத்தில முருகதாஸ்ஸிடம் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கான பதிலை இங்கு தருவது பொருத்தமாக இருக்கும்."அஜித் விஜய்னு இரண்டு பேரையும் வைச்சு படம் பண்ணி இருக்கீங்க,ஒரு டைரக்டரா இரண்டு போரையும் எப்படி பார்க்கிறீங்க?".இது தான் கேள்வி.அதற்க்கு முருகதாஸ் சொல்லியிருக்கும் பதில்:

"இப்பகூட என்னை பாலிவூட்ல பார்த்தா "என்னது...நீங்க டைரக்டரா?"னு நம்பாம அதிர்ச்சியாகிறாங்க.இப்பவே இப்பிடின்னா பத்து வருஷத்துக்கு முன்னாடி நான் எப்படி இருந்திருப்பேன்..ஆனா,அப்பவே என்ன நம்பி "தீனா"வாய்ப்பு கொடுத்தவர் அஜித்.அவர் எனக்கு வாழ்க்கை கொடுத்தவர்.அவர் மேல எனக்கு ரொம்ப மரியாதை இருக்கு.ஆனா நான் வளர்ந்து இந்திப்படம் வரைக்கும் இயக்கிய பிறகு,இப்போ ஏழாவதாகப் பண்ணிய படம் தான் துப்பாக்கி.விஜய் இப்போ என் நண்பர்.அவர் யார்கிட்டயும் சினிமாவை தாண்டி எதுவும் பேசமாட்டார்னு சொல்வாங்க.ஆனா அதை எல்லாம் தாண்டி நாங்க ரொம்ப அட்டாச் ஆகிட்டோம்.இப்பவும் அஜித் விசை ரெண்டு பேரையும் சந்திச்சிட்டு தான் இருக்கேன்.எங்கே சான்ஸ் கிடைச்சாலும் ரெண்டு தரப்பு ரசிகர்களும் கிண்டல் அடிச்சிக்கிறாங்க.ஆனால் அவங்க ரெண்டு பெரும் ஒருத்தர் இன்னொருத்தர பத்தி தப்பா கமென்ட் அடிச்சு நான் பார்த்ததே இல்லை.ஒருத்தரை பற்றி இன்னொருத்தர் பேசும்போது ரொம்ப மரியாதையா பேசிப்பாங்க.இரண்டு பேருக்குள்ளேயும் நல்ல நட்பு இருக்கு.அந்த நட்பு அவங்க ரசிகர்களிடமும் பரவணும்"  

ரஜனியை விடுத்து பார்த்தால்,ஒப்பினிங் கலெக்சன் போட்டி அஜித் விஜய் இருவருக்கும் மாறி மாறி நடந்து வருவது வழக்கமாகி இருக்கிறது.ஒருவர் படம் ஹிட் ஆகையில் அடுத்தவரை இவர் ஓவர்டேக் செய்கிறார்.அடுத்த தடவை அடுத்தவர் ஓவர்டேக் செய்கிறார்.இது நிலையாக ஒருவரிடம் இருக்கப்போவதில்லை.மாறிக்கொண்டே இருக்கப்போகிறது.அதற்காக ஒவ்வொரு படம் வரும்போதும் அடிச்சிக்கனுமா தல!தல தளபதி ரசிகர்கள் தனியே உக்கார்ந்து,ஏன் வேணும்னா கும்பலா கூட உக்கார்ந்து ரூம் போட்டு ஜோசிக்கவேண்டிய விடயமிது.வேண்டுமென்றால் தலையின் அடுத்த படத்துக்கு நாங்களே திரண்டு வருகிறோம் முதல் காட்சிக்கு.நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்று தான்..

                      

விஜய்யோட வில்லங்கம் அந்த எஸ் எ சந்திரசேகரை போட்டு தள்ளிடுங்கப்பா......!!! ஏற்கனவே காவலன் வெளியீட்டில் தகராறு ஆகியதற்கு இவர் தான் முக்கிய காரணம்.முருகதாஸ் துப்பாக்கி தொடங்கும் போது கூட தொல்லை கொடுத்தவர்.துப்பாக்கியில் தேவையில்லாத காட்சிகளை நீக்குவதோடு நிறுத்தி இருக்கலாம்.இப்போது விஜய் ஒரு படத்தில் முஸ்லிமாக வேறு நடிப்பார்னு அறிக்கை விட்டிருக்கான் இந்த பய.(எங்க அரசியலுக்கு வரும்போது முஸ்லீம்களின் ஓட்டுக்கள் மிஸ் ஆகிடுமேங்கிற பயம் தான்.)வழமையாகவே விஜய்யிடம் கதை சொல்லவரும் இயக்குனர்களுக்கு இடைஞ்சல் கொடுத்து படத்தை கெடுக்கும் இந்த எஸ் எ,இனி சொன்ன வாக்கை காப்பாற்ற எந்த டைரெக்டர் தலையை பிடிச்சு இழுக்க போறானோ...! ஐ ஆம் வெயிட்டிங்..!

Post Comment

9 comments:

Suren2002 said...

அசத்தலான பதிவு...

பனித்துளி சங்கர் said...

படம் நல்ல இருந்தது . உங்களின் பதிவு வெளிப்பாடும் சிறப்பு

Unknown said...

This comment has been removed by the author.

Aish Chan said...

அனைத்து பாடல்களும் ரசிக்க கூடிய வகையில் வந்திருப்பதாகவே தோன்றுகிறது. 'வெண்ணிலவே..', 'போய் வரவா...' அற்புதமான மெலடி. இன்னும் துப்பாக்கி பார்க்கவில்லை என்று வெளியில் சொல்லிக் கொள்ள கொஞ்சம் சங்கடம் தான். உங்கள் பதிவுகள் ஆவலை தூண்டுகின்றன. ஐ ஆம் வெயிட்டிங்........டூ வோட்ச்

K.s.s.Rajh said...

////த எஸ் எ,இனி சொன்ன வாக்கை காப்பாற்ற எந்த டைரெக்டர் தலையை பிடிச்சு இழுக்க போறானோ...! ஐ ஆம் வெயிட்டிங்..!////
நானும் வெயிட்டிங்

Thava said...

சுவாரஸ்யமான பதிவு..விடாம வாசிச்சேன்..அசத்தல்..நன்றிங்க.

Unknown said...

ngothaaaa dei baadu nee ajith fan-ah daaaaa, theriyuthu,, rajinikku apparam opening vijay and ajith maari maari varuvaangalaaa, dei poda baadu,, modhalla continues-ah 2 padam hit kodukka solludaaa unga tharudhalayaa..

Anonymous said...

பாஸ் ..கிளைமாக்ஸ் தவிர வேற எங்கையும் லாஜிக் மீறல் அவளவா இருந்ததா தெரியல யே ......:நீங்க எங்க லாஜிக் மீறல் இருக்கு எண்டு சொல்லுறீங்க

Anonymous said...

neegallam irukkira varaikum inthe rendu perode mokke padangal hit than, ivangalode rajini, kamal enum maaperum kalaijarhalai compare panne venam.......

Related Posts Plugin for WordPress, Blogger...