Tuesday, November 13, 2012

துப்பாக்கி-எப்படி நிலவரம்?




Thuppaki Movie Latest HD Stills, New Posters and Wallpapers - Image 10 of 23

முருகதாஸ் கூட விஜய்  இணைந்து பணியாற்றிய முதல் படம் என்பதுவே துப்பாக்கி படத்துக்கான எதிர்பார்ப்பை ஆரம்பத்திலிருந்து எகிறவிட்டிருந்தது.கூடவே ஹாரிஸ் ஜெயராஜ் இசை என்று தெரிந்தபோது எதிர்பார்ப்பு இன்னமும் கூடியது..காஜல் நாயகி என்றவுடன் கிளுகிளுப்பும் கூடவே சேர்ந்துகொண்டது.மாற்றானுடன் வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டாலும்,ஆரம்பத்தில் எஸ் எ சி-முருகதாஸ் பிரச்சனையால் தடுமாறி,பின்னர் "கள்ளத்துப்பாக்கி" பிரச்சனையால் இழுபட்டு இழுபட்டு,இறுதியாக "U " செர்டிபிகேட் தகுதி பெற்று தீபாவளி விருந்தாக திரைக்கு வந்திருக்கின்ற துப்பாக்கி வெடித்திருக்கிறதா இல்லை புகை மட்டும் தள்ளியிருக்கிறதா என்று பார்க்கலாம்..

ஒரு சாதாரண கதையை வித்தியாசமாக கையாண்டு "ஆக்சன் திரில்லர்" என்னும் வகையறாவுக்குள் துப்பாக்கியை கொடுக்க முயன்றிருக்கிறார் முருகதாஸ்.இந்தியன் ஆர்மியில் இருக்கும் விஜய் விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கையில் அங்கு இடம்பெறும் குண்டுவெடிப்புகளால் ஈர்க்கப்பட்டு வாலேன்டியராக அதற்குள் தலையை போட்டு தீவிரவாத கும்பலின் தலையை எவ்வாறு தீர்த்துக்கட்டுகிறார் என்பதே படத்தின் கதை.ஆர்மிக்குரிய உடல்வாகு விஜய்க்கு இயல்பாகவே இருப்பதால் அது படத்துக்கு ஒரு ப்ளஸ்.


வழமையான விஜய்யின் மசாலா பட வகையறாவுக்குள் இது இல்லை என்பதால் சில அடிமட்ட விஜய் ரசிகர்களுக்கு படம் பிடிக்காமல் போயிருக்க கூடும்.நகைச்சுவை என்று அதற்காக தனி ட்ராக் இல்லாவிட்டாலும் கூட போலீசாக வரும் சத்தியன் சில இடங்களில் சிரிப்பை வரவைக்கிறார்,மறுபக்கம் விஜய் யின் சீனியர் ஆபீசராக வரும் ஜெயராம்,தான் தோன்றும் அனைத்து காட்சிகளிலும் வயிற்றை புண்ணாக்குகிறார்.அது போக விஜய்யின் வழமையான குறும்புகளும் படத்தில் உண்டு.

கட்டடம் விட்டு கட்டடம் தாவும் சண்டைக்காட்சிகளாக அல்லாமல் துப்பாக்கியில் சண்டை காட்சிகள் அனைத்தும் சூப்பர் ரகம்.படத்தில் ஏகப்பட்ட திருப்பங்கள் ட்விஸ்ட்கள் நாங்கள் எதிர்பாராத நேரங்களில் வருகிறது.பின்னணி இசை கலக்கல்.எழுத்தோட்டத்திலும்,வில்லனுக்கான காட்சிகளிலுயும்,திடீர் திருப்பங்களிலும் பின்னணி இசை பிரமாதப்படுத்துகிறது. 


ஏலவே படத்தின் ஆடியோ வெளிவந்து சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்தன.நீதானே என் பொன்வசந்தம் ஆல்பம் மற்றும் போடா போடி ஆல்பம் போன்றவற்றை பின்தள்ளி ரேட்டிங்கில் முதலிடத்தில் துப்பாக்கி ஆடியோ அல்பம் இருந்துகொண்டிருக்க,"கூகிள் கூகிள் பண்ணி பார்த்தேன்" பாடல் அனைவரது வாயிலும் உச்சரிக்கப்பட்டுக்கொண்டிருந்தது.மாற்றானில் தனது திறமையில் சற்றே சறுக்கி இருந்த ஹாரிஸ் துப்பாக்கியில் அந்த தப்பை செய்திருக்கவில்லை என்று நினைத்தேன்.பாடல்கள் நன்றாக இருந்தாலும் பாடல்களின் காட்சியமைப்பில் முருகதாஸ் சொதப்பியிருக்கிறார் என்று கூறலாம். பாடல்களின் வெற்றிக்கு இணையாக விசுவல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கவில்லை..




வில்லன் படத்துக்கு ஒரு ப்ளஸ்.ஹீரோ போன்ற உடல்வாகுடன் பயமூட்டும் பின்னணி இசையில் வரும் வில்லன் சம்பந்தமான காட்சிகள் அனைத்தும் கலக்கல்.காஜல் அறிமுக காட்சியில் சேலையில் வருகிறார்..கொள்ளை.!!!ஆனால் அதற்க்கு பின்னர் வரும் காட்சிகளில் எல்லாம் ஏனோ பெரிதாக பிடிக்கவில்லை.காஜலுக்கான ஆடை செலேக்சன் சுத்த வேஸ்ட்டு.கொஞ்சம் வயதான மாதிரி தெரிகிறார்.படத்தில் ஒரு சில இடங்களில் வன்முறை காட்சிகள் சற்று அதிகம்.ஒன்று இரண்டு வசனங்களில் கூட..!

"ஸ்லிப்பர் செல்ஸ்" எனப்படும்,நாட்டில் சாதாரண குடிமகனாய் இருந்து உயர்மட்ட கட்டளை கிடைத்தவுடன் அதனை செயல்படுத்த உயிரை கூட கொடுக்க தயாராக இருப்பவர்கள் தான் படத்தில் முக்கிய இடம்பெறுகிறார்கள்.மும்பை குண்டுத்தாக்குதலை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை தான்.விஜய் உட்பட பன்னிரண்டு பேர் வில்லனின் குழுவினரை பின்தொடர்ந்து தாக்கும் காட்சி க்ளாஸ்.அதை போன்றது தான் தன் தங்கையை பணயம் வைத்து தனது நாயின் உதவியுடன் தீவிரவாதிகளின் இடத்தை கண்டுபிடித்து ரணகளம் பண்ணும் காட்சி கூட!

ஏழாம் அறிவில் தமிழர் பெருமை பேசிய முருகதாஸ் துப்பாக்கியில் "இந்தியன்"என்கின்ற நாமத்தை கையில் எடுத்திருப்பது தெரிகிறது.படம் சற்றே நீண்ட மாதிரி தோன்றினாலும் இரண்டரை மணி நேர படம் தான்.கொஞ்சம் மெதுவாக நகர்கிறது துப்பாக்கி,அதனாலோ என்னமோ படம் கொஞ்சம் நீளமாக தோன்றலாம்.நல்ல கதையை வைத்து ஆக்சன் திரில்லர் என்று கூறி படைத்திருக்கும் துப்பாக்கியில் சற்றே வேகத்தை  இருக்கலாமோ என்று தோன்றியது. முருகதாஸ் இயக்கத்தினாலோ என்னமோ விஜய் இப்படத்தில் நடித்திருக்கிறார்!!பாடல்காட்சிகளில் வாயை திறந்து பாடுகிறார். 

படம் முடிந்து வெளியில் வந்தால் பலருக்கு படம் சூப்பரா சொதப்பலா என்று சொல்லத்தெரியாத நிலையிலேயே வீடு சென்றதை காண முடிந்தது.சிம்புவின் "போடா போடி" துப்பாக்கிக்கு சமனான போட்டியை தராது என்கின்ற காரணத்தாலும், வேறு பெரிய படங்கள் இப்போது வராது என்ற அனுகூலத்தாலும் துப்பாக்கி ஓடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. துப்பாக்கி "ஹிட்"தான். ஆனால் அடுத்த கில்லி என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்..எதிர்பார்ப்புகள் உச்சத்தில் இருந்ததாலோ என்னமோ எனக்கு தோன்றியதை எழுதினேன்.எதிர்பார்ப்பு இல்லாமல் சென்றோர் பலருக்கு படம் நன்றாக பிடித்திருக்கிறது.பார்க்கலாம் என்ன ரிசல்ட் வரப்போகிறது என்பதை.
எனது மார்க் 63/100
ஒருதடவை பார்க்கலாம் கட்டாயமாக.

ரேட்டிங் ஒப்பீடு:     Behindwoods      Moviecrow
பில்லா 2                             2.0                      44%
தாண்டவம்                       2.5                       58%
மாற்றான்                          3.0                       65%
துப்பாக்கி                         3.5                       74%

இன்னமும் ஒரு எதிர்மறை விமர்சனம் வெளிவரவில்லை.விஜய்  ரசிகரல்லாதோர் கூட படம் பாருங்க என்று விமர்சனம் செய்யுமளவுக்கு கவர்ந்திருக்கிறது.இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் படமாக அமையலாம் என்று எதிர்பார்க்கிறேன்.

குறிப்பு:துப்பாக்கிக்கு தொடர்ந்து  நல்ல விமர்சனங்களே வந்தவண்ணமுள்ளன.எது எவ்வாறு இருந்தாலும்,இது என்மனதில் தோன்றிய விமர்சனம்.இரண்டாவது தடவை பார்க்கலாம்னு இருக்கிறேன்..!


Post Comment

15 comments:

கோசுபா said...

ஆர்மிக்குரிய உடல்வாகு விஜய்க்கு இயல்பாகவே இருப்பதால் அது படத்துக்கு ஒரு ப்ளஸ்./// enakku ithu vilangalai vijaykku irukkurathu army udampu enraar vikram arjun suryakku irukkurathu ellam enna annae???

கோசுபா said...

சிம்புவின் "போடா போடி" துப்பாக்கிக்கு சமனான போட்டியை தராது என்கின்ற காரணத்தாலும்/// innum poda podi paarkalai paarththathum solluraen...apdi neenka epdi solla mudiyum???

Unknown said...

/கோசுபா said...
ஆர்மிக்குரிய உடல்வாகு விஜய்க்கு இயல்பாகவே இருப்பதால் அது படத்துக்கு ஒரு ப்ளஸ்./// enakku ithu vilangalai vijaykku irukkurathu army udampu enraar vikram arjun suryakku irukkurathu ellam enna annae???///
விஜய்க்கு மட்டும் தான் இருக்கிறது என்று கூறி இருக்கிறேனா ??

/கோசுபா said...
சிம்புவின் "போடா போடி" துப்பாக்கிக்கு சமனான போட்டியை தராது என்கின்ற காரணத்தாலும்/// innum poda podi paarkalai paarththathum solluraen...apdi neenka epdi solla mudiyum???///



சிம்புவின் வரலாறுகளை வைத்து தான்..!

திண்டுக்கல் தனபாலன் said...

அதற்குள் விமர்சனம்...! எப்படியோ விஜய்க்கு மேலும் ஒரு ஹிட்... விமர்சனத்திற்கு நன்றி...

King Viswa said...

சூடான துப்பாக்கி விமர்சனத்திற்கு நன்றி மைந்தன் சிவா அவர்களே.

ஹாலிவுட்ரசிகன் said...

அப்போ இன்னிக்கு வாங்கின டிக்கெட்டு வேஸ்ட்டாகாதுன்னு நம்புறேன்.... :)

மாதேவி said...

நன்றி.

இனிய தீபாவளி வாழ்த்துகள்.

Unknown said...

''ஆனால் அடுத்த கில்லி என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்.'' முற்றிலும் உண்மை,///
> விஜயின் அடிமட்ட ரசிகர்களுக்கு இப்படம் பிடிக்காமல் போகலாம் என்று சொன்னீர்கள் அப்போதே தோன்றியது படம் நிச்சயமாக பார்க்கலாம் என்று/// ஏன் என்றால் இந்த சிவகாசி, குருவி,வில்லு ,ஆதி, சுறா இப்பிடியான படங்கள் தான் அவைக்கு பிடிக்குமாம். :D

Anonymous said...

Padam romba slow. Oru pattu, oru fightu and Oru loosu ponnu...Padam hit aharathu konjam kastamthan..

முத்தரசு said...

சரிங்....பாத்துடுவோம்

அம்பலத்தார் said...

நம்ம இடத்தில துப்பாக்கி எப்ப ரிலீஸ் என்று தேடவைத்துவிட்டது உங்க விமர்சனம்.

Anonymous said...

/* ஒரு சாதாரண கதையை வித்தியாசமாக கையாண்டு "ஆக்சன் திரில்லர்" என்னும் வகையறாவுக்குள் துப்பாக்கியை கொடுக்க முயன்றிருக்கிறார் முருகதாஸ்.இந்தியன் ஆர்மியில் இருக்கும் விஜய் விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கையில் அங்கு இடம்பெறும் குண்டுவெடிப்புகளால் ஈர்க்கப்பட்டு வாலேன்டியராக அதற்குள் தலையை போட்டு தீவிரவாத கும்பலின் தலையை எவ்வாறு தீர்த்துக்கட்டுகிறார் என்பதே படத்தின் கதை. */

are you writing the review of the film or writing all story?

priyan said...

i think you are suffered by "THALA"mania.. lot of thala in your review... by the way thuppakki is just above average in my point of view... ARM doesn't satisfies his fans...

Aish Chan said...

இணைய உலகில் முதலாவது விமர்சனம் என்று கேள்விப்பட்டேன். வாழ்த்துக்கள் நண்பரே........!!!

Aish Chan said...

இணைய உலகில் முதலாவது விமர்சனம் என்று கேள்விப்பட்டேன். வாழ்த்துக்கள் நண்பரே........!!!

Related Posts Plugin for WordPress, Blogger...