Sunday, September 4, 2011

ரஹ்மானை தொடர்ந்து ஹாரிஸ் Live Concert!!


தமிழ் சினிமா இசையமைப்பாளர்களில் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா ஆகியோரை தொடர்ந்து ஹாரிஸ் ஜெயராஜும் LIVE CONCERT செய்ய இருக்கிறார்.

இதுவரை இந்தியாவில் நடந்த எந்த ஒரு LIVE CONCERTம் விட இதை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். இந்த CONCERTக்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று (செப் 3) நடைபெற்றது.

விளம்பர படங்கள், திரைப்படங்கள் மட்டுமே இயக்கி வந்த 'மதராசபட்டினம்' இயக்குனர் விஜய் இந்த CONCERT-ஐ இயக்க இருக்கிறார்.

IPL T20, FOOTBALL போன்ற விளையாட்டுகளை நடத்துவதில் பங்கேற்ற Techfront இந்த CONCERTஐ நடந்த முன்வந்துள்ளது.

இவ்விழாவில் TECHFRONT கம்பெனியின் இயக்குனர் முரளீதரன் பேசியது : " இந்த CONCERTக்காக போடப்படும் மைதானம் இந்தியாவில் வேறு எங்கும் போடப்பட்டு இருக்காது. அந்த அளவுக்கு பிரம்மாண்டமாக அமைக்க இருக்கிறோம்.

பார்வையாளர்களுக்கு வசதியாக 270 Degree View மேடை அமைக்க இருக்கிறோம். எங்களுடன் இணைந்து பணியாற்ற முன்வந்த ஹாரிஸ் ஜெயராஜுக்கு இந்த சமயத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சி முதலில் சென்னையில் அக்டோபர் 2ம் தேதி நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து 16ம் தேதி கோயம்புத்தூர், 22ம் தேதி ஹைதராபாத், நவம்பர் 18ம் தேதி துபாய், டிசம்பர் 2ம் தேதி கோலாலம்பூர் ஆகிய இடங்களில் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.
அதனை தொடர்ந்து SOUTH AFRICA, NORTH AMERICA ஆகிய நாடுகளில் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொழில்நுட்பரீயாகவும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு புதுமையான அம்சங்களை கையாள இருக்கிறோம்.

இயக்குனர் விஜய் ஒரு நாள் எனக்கு போன் செய்து "சார் நாங்கள் போட்டோ ஷுட் செய்த போட்டோக்களை பார்த்தேன். அவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கிறது. ஹாரிஸ் சார் ஒரு சினிமா ஹீரோ மாதிரி இருக்கிறார் என்று சொன்னார் "

இயக்குனர் விஜய் : " ஹாரிஸ் ஜெயராஜ் CONCERTக்கு என்னை இயக்குநராக தேர்வு செய்ததை பெருமையாக கருதுகிறேன். இந்நிகழ்ச்சியை நீங்கள் எதிர்ப்பார்க்காத அளவுக்கு பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.

ஹாரிஸ் சாருடன் இரண்டு படங்களில் பணியாற்ற திட்டமிட்டேன், முடியாமல் போய்விட்டது. இந்த நிகழ்ச்சியின் மூலம் அவருடன் இணைந்து பணியாற்ற இருக்கிறேன்.

சீனா போன்ற நாடுகளில் இருந்து வெளிநாட்டு இசை கலைஞர்கள், மற்றும் நடன கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார்கள் "

ஹாரிஸ் ஜெயராஜ் : " எனக்கு இப்போதே டென்ஷனாக இருக்கிறது. இசையமைப்பாளராக அறிமுகமாகி 10 வருடங்கள் ஆகிறது. எனக்கு இதுநாள் வரை ஒத்துழைப்பு அளித்துவரும் அனைவருக்கும் நன்றி.

என்னை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய இயக்குனர் கௌதம் மேனனுக்கு இந்த சமயத்தில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

3 வருடங்களுக்கு முன்பே இது போன்ற நிகழ்ச்சி நடந்த வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் சரியான வாய்ப்பு அமையவில்லை. ஒரு வருடத்திற்கும் முன்பு முரளீதரன் அவர்கள் இந்த மாதிரி ஒரு CONCERT செய்து தர வேண்டும் என்று கேட்டார்.

அவர் சொன்ன ஐடியா எனக்கு பிடித்து இருந்தது. அதனை மெருக்கேற்றி தரும்படி கூறினேன். இப்போது எனக்கு முழுதிருப்தியாக இருக்கிறது அதே சமயம் பயமாகவும் இருக்கிறது.

இயக்குனர் விஜய் இந்த CONCERTக்கு இயக்குனராக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருடைய படங்கள் 'மதராசப்பட்டினம்', 'தெய்வத்திருமகள்' ஆகிய படங்களுக்கு நான் ரசிகன்.

நீங்கள் இதுவரை பார்த்த எந்த மாதிரியான CONCERT ஆகவும் இது இருக்காது என்று உறுதி அளிக்கிறேன். மற்ற CONCERT மாதிரி இதில் நிகழ்ச்சி தொகுப்பாளர் கிடையாது. நிகழ்ச்சியை பார்க்கும் மக்கள் கொஞ்சம் கூட சலிப்படையக் கூடாது என்று அனைத்தையும் யோசித்து யோசித்து செய்து வருகிறோம்.

இரண்டரை மணி நேரம் இந்த CONCERT நடைபெறும். இசை, நடனம், என அனைத்தும் கலந்து இருக்கும்.

இவ்வளவு பிரம்மாண்டமான CONCERT என்கிறார்களே, டிக்கெட் விலை அதிகமாக இருக்கும் என யாரும் பயப்பட வேண்டாம். பாமர மக்களும் பார்க்கும் வண்ணம் தான் இந்த CONCERT-இன் டிக்கெட் விலை இருக்கும்.

சென்னை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் 25 தமிழ் பாடல்கள் தேர்வு செய்து இருக்கிறேன். ஒரு சில பாடல்கள் இரு ஊர்களுக்கும் வேறுபடும். ஹைதராபாத்தில் முழுக்க தெலுங்கு பாடல்கள் இடம் பெரும்.

சினிமாவில் கூட நான் பாடியது கிடையாது. இந்த நிகழ்ச்சியில் முதன் முறையாக நான் பாட இருக்கிறேன்.

இந்த CONCERT-க்கு ஒப்புக் கொண்டு இருப்பதால் கடந்த இரண்டு மாதங்களாக நான் எந்த ஒரு படத்தையும் ஒப்புக்கொள்ள வில்லை. இந்த நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் 4 மாதங்களுக்குப் பிறகு தான் படங்களை ஒப்புக் கொள்ள இருக்கிறேன். "

========================================================================================
ஒவ்வொரு வருடத்தின் துவக்கத்திலும் இந்திய இளைஞர்கள் மத்தியில் கிங்ஃபிஷர் காலண்டர் பிரபலமாக பேசப்படும். காரணம், அந்த காலண்டரை அலங்கரிக்கும் அழகிகள்.

அந்த காலண்டரில் இடம் பெற மாடல் உலக அழகிகள் இடையே பெரும் போட்டி நிலவும். கிங்ஃபிஷர் காலண்டரில் இடம்பெற்றால் அந்த மாடல் இந்திய அளவில் பிரபலமாவார் என்பதால் தான் இந்த போட்டி.

2011 கிங்ஃபிஷர் காலண்டரில் அலங்கரித்த மாடல்களில் ஒருவர் ஏஞ்சலா ஜான்சன். காலண்டரில் அவர் கவர்ச்சி படங்கள் மூலம் இந்திய இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தார். 20 வயதேயான ஏஞ்சலா, சென்னையில் பிறந்தவர். இவரது தந்தை மங்களூர் தொழிலதிபர்.

ஏஞ்சலா தன் லட்சியம் சினிமாவில் ஹீரோயின் ஆவது தான் என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். அதன்படி, இந்தி திரைப்படம் ஒன்றில் நடிக்க பேசியுள்ளனர். ஆனால் படம் தொடங்கும் முன்பே இவருக்கும் ரன்பீர் கபூருக்கும் நெருக்கமான உறவு இருப்பதாகக் கிசுகிசுக்கள் பரவி வந்தன.

ரன்பீர் கபூருடன் கிசுகிசுக்கப்பட்டபோது அதனை வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். தற்போது ஷாகித் கபூருடன் இணைத்து செய்திகள் வலம் வருகின்றன.

இந்நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிக்கும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஏஞ்சலா ஜான்சனை ஒப்பந்தம் செய்யலாம் என்று முடிவு செய்து இருக்கிறார்கள்.

பிரியங்கா சோப்ரா முதலில் விஜய்யுடன் 'தமிழன்' என்ற படத்தில் நடித்தார். பின்னர் பாலிவுட்டில் பரபரப்பான நாயகி ஆனார். எனவே விஜய்யுடன் நடித்தால் ஏஞ்சலாவுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கும் என இப்போதே திரையுலகினர் ஏஞ்சலாவிடம் சொல்லி வருகிறது கோலிவுட் வட்டாரம்.
Thnx Vikadan

Post Comment

39 comments:

Riyas said...

முதல் மழை என்னை நனைத்ததே..

Riyas said...

பகிர்வுக்கு நன்றி பாஸ்,,

ஹாரிஸ் ஜெயராஜ் தொடர்ச்சியாக கேட்க இதமான பாடல்களை கொடுத்துவருகிறார்..

சி.பி.செந்தில்குமார் said...

நடத்து ராசா

கூடல் பாலா said...

இனிமேல் கிங் ஃபிஷர் காலண்டர்தான் வாங்கணும் ...தகவலுக்கு நன்றி மாப்ள 1

நிரூபன் said...

வணக்கம் பாஸ்...

நிரூபன் said...

ஆமா...நீங்களும் ஆனந்த விகடனின் சந்தாதாரரா?

நிரூபன் said...

ஹரீஸ் கலக்கப் போகிறார்.
தகவற் பகிர்விற்கு நன்றி பாஸ்.

செங்கோவி said...

யுவன் மாதிரி ஆகிடாம!

rajamelaiyur said...

Wow. . . I will wait for this lovely program

shanmugavel said...

காலண்டருக்கு இவ்வளவு போட்டியா?

shanmugavel said...

இன்னும் பல பெருமைகளைப்பெற ஹாரிஸ் ஜெயராஜுக்கு வாழ்த்துக்கள்.

சக்தி கல்வி மையம் said...

பிரசென்ட்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நன்றாக நடத்தட்டும...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நிறைய விஷயங்கள் தந்து பதிவு அசத்துகிறது...

MANO நாஞ்சில் மனோ said...

எல்லாரும் சேர்ந்து வாழ்த்துவோம்....

K said...

வணக்கம் ஸார்! கும்புடுறேனுங்க!ஸார், ஹாரிஸ் ஜெயராஜ்ன்னா எனக்கு உயிர் ஸார்! அவர அவ்வளவு புடிக்கும்! அவரோட ப்ரோகிறாம்ஸ் எல்லாமே சகஸசாக வாழ்த்துகிறேன்!

இந்தத் தகவலச் சொன்ன உங்களுக்கு ரொம்ப நன்றி!

K said...

ஸார், ஹாரிஸ் ஜெயரஜ் ஸார், மியூசிக் போட்ட சில பாடல்கள வைச்சு, ஒரு பதிவு போட்டிருக்கேன்த, பதிவுன்னு சொல்ல முடியாது! உணர்ச்சிவசப்பட்டு ரொம்ப லெந்தா எழுதித் தொலைச்சிட்டேன்!

வர்ரவங்க எல்லாம், காவியம் மாதிரி இருக்குது, புராணம் மாதிரி இருக்குதுன்னு ஆளாளுக்கு டவுசர உருவுறாங்க!

அப்புடி என்னதான் பண்ணிவச்சிருக்கேன்னு ஒருவாட்டி எட்டிப் பாருங்க ஸார்!

அப்புறம் உங்க ப்ளாக்குல என்னோட ப்ளாக்க விளம்பரம் செய்யுறேன்னு தப்பா நெனைக்காதீங்க!

நான் ஒரு டம்மி பீஸ் ஸார்! பழகிப் பார்த்தீங்கன்ன வுடவே மாட்டீங்க!

Yoga.s.FR said...

நல்ல தகவல் களஞ்சியம்(டைரக்டர் இல்ல)சிவா,மைந்தன் சிவா!!!கிங் பிஷர் கலண்டரில இடம் புடிக்க உங்கட "ஆள்" முயற்சி பண்ணயில்லயோ?அதுக்கு அவவோட அம்மா விட மாட்டாவாக்கும்?

Yoga.s.FR said...

நல்ல பிள்ளை சிவா!இப்புடி கிங் பிஷர் படமெல்லாம் போடுறியள்,கூசயில்லையோ?

Unknown said...

//Yoga.s.FR said...
நல்ல பிள்ளை சிவா!இப்புடி கிங் பிஷர் படமெல்லாம் போடுறியள்,கூசயில்லையோ?//
அவகாட ஓரளவு நல்ல படமே இது தான் பாஸ்!!

சுதா SJ said...

ஹீ ஹீ , சண்டே சினிமாவா ?? நல்லா இருக்கே, சினிமாதானே எப்பவும் அலுக்காத டாபிக்.

சுதா SJ said...

பொண்ணு அசத்தலா இருக்கு பாஸ்,
அப்போ உங்களுக்கும் கார்த்திகாவுக்கும் எப்போ டிவோர்ஸ்
ஏன் கேக்குறேன் என்றால் அதுதான் உங்களுக்கு இந்த புது
பொண்ணு வந்துட்டுதே...... :)

சுதா SJ said...

//பிரியங்கா சோப்ரா முதலில் விஜய்யுடன் 'தமிழன்' என்ற படத்தில் நடித்தார். பின்னர் பாலிவுட்டில் பரபரப்பான நாயகி ஆனார்//.


விஜயுடன் நடித்து ஹிந்தியில் பிரபலம் ஆனாங்க ஒக்கே, அப்போ ஏன் தமிழில பிரபலம் ஆகல்ல லாஜிக் எங்கையோ உதைக்குதே... ஹீ ஹீ.
நல்லாத்தான் கிளப்புறாங்கையா பீதியை. அவ்வ்

M.R said...

தகவலுக்கு நன்றி. அந்தம்மா ட்ரெஸ் ஏங்க கிழிஞ்சி போச்சு

M.R said...

தமிழ் மணம் 15

முனைவர் இரா.குணசீலன் said...

நல்ல பதிவு நண்பா.

முனைவர் இரா.குணசீலன் said...

அன்பின் நண்பா வேர்களைத்தேடி வந்த தங்களுக்கு

இலக்கியத்தேனீ என்ற விருதினை அன்புடன் வழங்குகிறேன்..


பெற வலைப்பக்கம் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்

http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_04.html

கவி அழகன் said...

வாழ்த்துக்கள்

இலக்கிய தேனி புகழ் மைந்தா

Yoga.s.FR said...

மைந்தன் சிவாsaid...
//Yoga.s.FR said...
நல்ல பிள்ளை சிவா!இப்புடி கிங் பிஷர் படமெல்லாம் போடுறியள்,கூசயில்லையோ?//
அவகாட ஓரளவு நல்ல படமே இது தான் பாஸ்!!////O.K!!!!

K.s.s.Rajh said...

//2011 கிங்ஃபிஷர் காலண்டரில் அலங்கரித்த மாடல்களில் ஒருவர் ஏஞ்சலா ஜான்சன். காலண்டரில் அவர் கவர்ச்சி படங்கள் மூலம் இந்திய இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தார். 20 வயதேயான ஏஞ்சலா, சென்னையில் பிறந்தவர். இவரது தந்தை மங்களூர் தொழிலதிபர்.//

இசை நிகழ்ச்சி நடத்தினா என்ன நடத்தாட்டி நமக்கு என்ன ஏஞ்சலா மேட்டர்தான் ஹைலைட்ஸ்.ஹி.ஹி.ஹி.ஹி

Anonymous said...

ஹரிஸ் கலக்குங்க )))

KANA VARO said...

நேற்று ஆங்கிலத்தில் வாசித்தேன். இன்று தமிழில் வாசிக்கிறேன்.

விஜயுடன் எண்டு கதை வந்ததால அந்த மொடல் அழகியின் படத்தை கூகிளில் தேடிப்பார்த்தேன். ஷ்ஷப்பா... முடியல...

மாய உலகம் said...

ஹாரிஸ் ஜெய்ராஜ் ஜெயிக்கட்டும் வாழ்த்துக்கள்...ஏஞ்சலா பத்தி கூலா சொல்லி ஹாட்டாக்கிட்டீங்க

Anonymous said...

ஹாரிஸ் ஜெயராஜுக்கு வாழ்த்துக்கள்....Calendar hmmmm...

அம்பலத்தார் said...

இனியபாடல்கள் பல தந்த ஹரீஸ் நிச்சயமாக அசத்திடுவார். பதிவு ஒரு தகவல் களஞ்சியமாகமிளிர்கிறது

காட்டான் said...

அட இவரின் பாடல்கள் மனச கட்டிப்போடும்.. இவரின் முயற்சிய வாழ்துகிறேன்...

தனிமரம் said...

நல்ல தகவல் இசைக்கச்சேரியைப்பற்றி !
விஜய்யுடன் நடித்த சங்கவிக்கும் இப்படித்தான் முன்னர் சொன்னாங்களாம் பிரபல்யம் ஆகுவீர்கள் என்று ஆனால் நடந்தது?

kobiraj said...

''பிரியங்கா சோப்ரா முதலில் விஜய்யுடன் 'தமிழன்' என்ற படத்தில் நடித்தார். பின்னர் பாலிவுட்டில் பரபரப்பான நாயகி ஆனார். எனவே விஜய்யுடன் நடித்தால் ஏஞ்சலாவுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கும் என இப்போதே திரையுலகினர் ஏஞ்சலாவிடம் சொல்லி வருகிறது கோலிவுட் வட்டாரம்.''ilike it boss

கார்த்தி said...

ஹாரீஸ் எனக்கு பிடித்த இசையமைப்பாளர்களில் ஒருவர்!!

Related Posts Plugin for WordPress, Blogger...