கடந்த இரண்டு கிழமை(அதுதான் எழு நாட்களாக) சார்(நான் தாங்க) ரொம்ப பிசி.
பலருக்கு சந்திப்பில வெட்டுக்குத்து,கொலை எல்லாம் நடக்காததில கவலைன்னு அவங்க பதிவுகள வாசிக்கும் போதே தெரிஞ்சது..
அதனால பதிவுகளின் தரம் அது கேள்விக்குறியாக இருந்தது(ஆமா வழமையா எதோ தரமாய் தானே எழுதி கிழிச்சவன்).
நண்பர்களின் தளங்களுக்கும் செல்ல முடியவில்லை..
இடைக்கிடையில் சென்று பார்த்தால் அவர்கள் பெரும்பாலானோர் "தொடரும்"
பதிவுகளை போட்டு வந்திருக்கிறார்கள் என்பது புரிந்தது.
ஆனால் முடிந்தளவுக்கு அனைவர் தளங்களுக்கும் சென்று கமெண்டிட்டு வாக்கிட்டு வந்திருந்தேன்..ஹன்சிகா பத்தி ஓட்டவடை போட்ட மாபெரும் சமைஞ்ச பதிவுக்கு தான் என்னால் பதிலளிக்க முடியவில்லை ஹிஹி
இந்தியாவில் நடைபெற்ற பதிவர் சந்திப்பு தொடர்பான பதிவுகளும்,அதன் போட்டோக்களும்
இடைக்கிடையே எனக்கு சிரிப்பை வாரி வழங்கி இருந்தன...
அந்த வகையில்,சிபி,மனோ,மணிவண்ணன்,சங்கரலிங்கம் சார்,சீனா ஐயா,ஷர்புதீன் போன்றோருக்கு நன்றிகள்..
கோமாளி செல்வா,மற்றும் சிபி அண்ணே
போட்டோக்களை பார்த்தவுடன் எனக்கு என்ன தோணிச்சு தெரியுமா??
ஹிஹி சொல்லமாட்டேனே...
வம்பை விலைக்கு வாங்குபவரை இப்போ கூலிங் க்ளாஸ்'னு தான்அழைக்கிறார்களாம்..இனிமேல் பதிவுலகில் பெயர்கள் எவ்வாறு இருக்கும் கூறுங்கள் ?
தக்காளி...
வெங்காயம்..
லாப்டாப்...
கூலிங் க்ளாஸ்..
கில்மா...
அருவா..
வடை...
கோமாளி...
சிரிப்பு போலீஸ்
பன்னிகுட்டி
ஆட்டுக்குட்டி
முக்கியமா பிளையிட் பிடிச்சு போன மனோ அட்லீஸ்ட் ஒரு கொலையாச்சும் பண்ணுவார்னு எல்லாரும் பரவலா
நேரடி ஒளிபரப்பை பார்க்க ஆவலா இருந்திருக்காங்க...ஆனா நேரடி ஒலிபரப்பு சில பல காரணங்களால் தடைப்பட
அவங்க குழு குளுகுளுப்பு இல்லாம போச்சு..அவ்வ்வ்வ்
ம்ம்ம் அது இருக்கட்டும்...
அப்புறம் சூடாக அலசப்படும் விஷயம் "சாரு"பற்றியது..
இதை பற்றி எத்தனையோ ஆக்கங்கள் அலசல்களை வாசித்தும் இன்னமும் ஒரு முடிவுக்கு வரமுடியாதவனாய்
இருக்கிறேன்..அவ்வாறு நடந்திருக்கலாமோ இல்லை திட்டமிடப்பட்ட வேலையோ என்று தெரியவில்லை..
தமிழச்சி தனது தளத்தில் கிழித்திருக்கிறார் சாரு பற்றி..
சாரு நிவேதிதா வாசகர் வட்டம்னு ஒரு வட்டம் இருக்கு பேஸ்புக்கில..அதில இணைந்து இருக்கிறேன் நான்
கடந்த சில மாதங்களாக..இன்று அதனை பார்க்கும் போது ஆக்ரோஷமும் எதிர்ப்புகளும் மாறி மாறி விழுவதை
காண முடிந்தது...இணையத்தள வாசிகளும் தங்கள் ஊகங்களை மாறி மாறி வெளியிடுகிறனர்.
ஆனால் எனக்கென்னமோ அந்த பெண்ணின் உரையாடல் போலியானதோன்னு தான் தோணுது..
அப்புறம் விஜய்..
சிலரின் போக்கு என்னவெனில் சமூகத்தில் பலர் ஒரு விடயத்தை எதிர்த்து நிற்கும் போது தாங்களும் அதனை
எதிர்ப்பதன் மூலம் பெரும்பாலான ஆதரவை சம்பாதித்து கொள்வது..
பெரும்பாலும் திரைவிமர்சனங்களை பாருங்கள்..படம் வந்த உடனே இருவர் படம் சொதப்பல் என்று
விமர்சனம் இட்டால்,அடுத்து விமர்சனம் போடுபவர்கள் பெரும்பாலும் அதே கருத்திலேயே விமர்சனம்
செய்துவிடுவார்கள்..இது வழமையாக இங்கு நாம் காணும் காட்சிகள்..
அது போலவே விஜய்'யை எதிர்த்து பேசுதல் மற்றும் அவரது ஆதரவாளர்களை நக்கலடித்தல்,மட்டம் தட்டுதல் போன்ற செயல்பாடுகளை
மேற்கொள்வதன் மூலம் தங்களது அங்கீகாரத்தை அந்தஸ்தை பெருக்கலாம்னு நினைப்பது.
இப்போ கலைஞர் ஆட்சியை விட்டு இறங்கியவுடன் சும்மா இருந்தவர்களும் எழும்பி நின்னு கலைஞரை
அடிக்கவில்லையா...இவர்கள் அடுத்த முறை அம்மா தோற்றால் கூட இதே மாதிரி அம்மாக்கு எதிராக எழுதி
பட்டியலிடுவார்கள்..
இதை தான் காற்றுள்ள போது தூற்றிக்கொள்ளல் என்பதா??அல்லது எரிகிற வீட்டில் என்னவோ பிடுங்கிறது
என்பார்களே...அந்த மாதிரியா??
ஒவ்வொரு நடிகர்களுக்கும் ஒவ்வொரு ரசிகர்கள் இருக்கிறார்கள்..ஆனால் விஜய் மற்றும் அவரது ரசிகர்களே
பெரும்பாலும் தாக்கப்படும் ரசிகர்களாகி இருக்கிறார்கள் ஏனெனில் அவ்வாறு விஜய்'யை அல்லது அவர்களை சார்ந்தோரை
தாக்கி பேசுவதன் மூலம் தாங்கள் பிரபல்யம் பெறலாம் என்ற நினைப்புத்தான் வேறொன்றும் இல்லை..
இதே கோஷங்கள்,அஜித்,கமல்,ரஜனி,தனுஷ்,சிம்பு போன்றோரின் பிறந்த தினங்கள் வரும்போதோ அல்லது சாதாரணமாகவோ
எழுப்பபடுவதில்லை...
அப்புறம் ஏன்??நாங்க உங்களுக்கு பைட்ஸ்'ஸா??ஏன் தொட்டுக்க ஊறுகாய் இல்லையா??
38 comments:
கருத்துகளை வந்து போடுறேன்....
"ஆனா சி பி பயலை போட்டு தாளிச்சிருக்காங்கன்னு மட்டும் புரியுது.."
>>>
தம்பி கொஞ்சம் மரியாதை கொடுத்து எழுதினீங்கன்னா நல்லது...!
...............................
"விஜய்'யை அல்லது அவர்களை சார்ந்தோரை
தாக்கி பேசுவதன் மூலம் தாங்கள் பிரபல்யம் பெறலாம் என்ற நினைப்புத்தான் வேறொன்றும் இல்லை.."
>>>>>>>>>>>
ஒன்னு சொல்லிக்கறேன்...
காமடி லூசுகளை அப்படித்தான் சொல்லுவாங்க...
அதுக்கு பல்லக்கு தூக்குபவர்களை..
கிண்டலடிப்பது சாதரணமாக நடப்பது.......முதல்ல ஒழுங்கா ஒரு பதிவு போடு...போடுறது எல்லாம் மொக்க இதுல நக்கல் வேற!
நான் சொல்லியவற்றில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும்...
இல்லை நேரடி கருத்து யுத்ததிட்க்கு தயாராகவும்!
நானும் கடந்த 2நாளா கனக்க பேரின்ர பதிவுகளை வாசிக்க முடியல!
அடுத்தது ரஜினியின் கண்மூடிதனமான ஆதரவாளர்கள் விஜயை சகட்டு மேனிக்கு போட்டு தாக்குவது விஜய் ரசிகன் இல்லாத என்னாலே தாங்க முடியவில்லை!!
விக்கியுலகம் said...
கிண்டலடிப்பது சாதரணமாக நடப்பது.......முதல்ல ஒழுங்கா ஒரு பதிவு போடு...போடுறது எல்லாம் மொக்க இதுல நக்கல் வேற!
நான் சொல்லியவற்றில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும்...
இல்லை நேரடி கருத்து யுத்ததிட்க்கு தயாராகவும்!
அப்பாடா.. சண்ட சண்ட.. விக்கி - சிவா மோதல் ஹா ஹா
சுறாவை தாக்கு தாக்குன்னு தாக்குன பதிவர்கள் தான் காவலனைப் பாராட்டுனாங்க..நல்லா இருந்தா நல்லா இருக்குன்னு தான் சொல்வாங்க..கொடுக்கிற படம் எல்லாம் கேவலமா இருந்தா விஜய்க்கு ஆதரவு எப்படி வரும்?...ரஜினியாவே இருந்தாலும் அதான் நிலைமை தம்பி!
//ஆனா சி பி பயலை போட்டு தாளிச்சிருக்காங்கன்னு மட்டும் புரியுது..// என்ன தான் நட்பா பழகுனாலும், எழுதும்போது கவனம் தேவை தம்பி.
//ஆனா சி பி பயலை போட்டு தாளிச்சிருக்காங்கன்னு மட்டும் புரியுது..//
அவரின் நேற்றைய நெல்லை சந்திப்பு பதிவை படித்து விட்டு எழுதவும்.
நீ சொல்வதை பார்த்தால் ஏதோ வாக்குவாதம் நடந்தது போல இருக்கிறது. நக்கல் பண்ணலாம்... ஆனா ஓவர் நக்கல் கூடாது.
அதுவும் கடைசி மட்டும் இருவரும் சட்டை கழட்டாமலே குளியல் பண்ணி இருக்காங்க பயலுக..
எழுதுகிற எழுத்தில் கொஞ்சம் மரியாதை கொடுங்க சிவா...
இத்தனை விசயங்களை ஒரே பதிவாகப் போட்டு ஒருவாரத்தை நிறைவாக்குவதோ?
பாவன் மனோ சார் குற்றாலக்குளியல் இன்னும் மீளமுடியவில்லையாம் !
விஜய் விடயத்தில் என்ன சொல்வது ???
சாரு விடயத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசிக்கிறேன் குழப்பமாக இருக்கிறது!
சாரு மேட்டர் நல்ல டைம் பாஸ்!!
கதம்பம் மணக்கிறது!
///வம்பை விலைக்கு வாங்குபவரை இப்போ கூலிங் க்ளாஸ்'னு தான்அழைக்கிறார்களாம்..///
அடங்கப்பா அன்னைக்கு நா கூலிங் கிளாசே போடவே இல்லையே ,
மொக்கையாக இருந்தாலும்,கொஞ்சம் வார்த்தைப் பிரயோகங்களில் நிதானம் தேவை.விளையாட்டுத் தனமாக எழுதினாலும் கூட!
நகைச்சுவை அல்வா...
ஹன்சிகா பத்தி ஓட்டவடை போட்ட மாபெரும் சமைஞ்ச பதிவுக்கு தான் என்னால் பதிலளிக்க முடியவில்லை ஹி!ஹி!!///வட போச்சே!!!!!!!!!!!!!!!!(அவருக்கு ஒண்ணுமில்ல).நீங்க அணில் ஏற விட்ட ...........................................................ஆயிட்டீங்க!
கடந்த இரண்டு கிழமை(அதுதான் எழு நாட்களாக) சார்(நான் தாங்க) ரொம்ப பிசி.!?ஐய்!!!!!!!!ரெண்டு கிழமை=ஏழு நாள்!(கண்டு புடிச்சேன்!கண்டு புடிச்சேன் ................நோயக் கண்டு புடிச்சேன்!)
ஓரே பதிவில் பல விஷயங்கள்.. சாரு மேட்டர் கேள்விப்பட்டதுதான்
தக்காளி என்ன பெரிய கமென்ட் போட்டிருக்கு..
மிகவும் சுவாரசியமான படைப்பு
நன்றி வாழ்த்துக்கள்
சாரு மேட்டரு இன்னும் ரெண்டு வாரத்துக்கு தாங்கும்னு நினைக்கிறேன்
///ஏன் தொட்டுக்க ஊறுகாய் இல்லையா?///நாங்க டாஸ்மாக்குக்கா போயிட்டு வரோம்?
சாரு விஷயம் என்னவோ திட்டமிட்ட ஒன்று போலவே இருக்கு!
//ஹன்சிகா பத்தி ஓட்டவடை போட்ட மாபெரும் சமைஞ்ச பதிவுக்கு தான் என்னால் பதிலளிக்க முடியவில்லை ஹிஹி//
பொறாமை !பொறாமை!
//சிலரின் போக்கு என்னவெனில் சமூகத்தில் பலர் ஒரு விடயத்தை எதிர்த்து நிற்கும் போது தாங்களும் அதனை
எதிர்ப்பதன் மூலம் பெரும்பாலான ஆதரவை சம்பாதித்து கொள்வது..//
kalakkal siva
தேவையான திருத்தங்களை செய்துவிட்டேன்...
கொஞ்சம் ஓவர் உரிமையுடன் நடந்துவிட்டேன்..ஹிஹி ஆக்சுவலி காமெடியாக தான் எழுதினேன்..
ஓகே ஓகே அந்த வரிகளை நீக்கிவிட்டேன் சகோதரங்களே...
//விக்கியுலகம் said...///
ஆமா தாள நீங்க சொல்லுறது கரெக்ட்டு தான்...
நீக்கிவிட்டேன் பாஸ்..
//சி.பி.செந்தில்குமார் said...//
பாஸ் உங்களுக்காக தான் போராடுறாங்க ...நீங்க என்னண்டா...
//FOOD said.../
ஆமா ஐயா...அந்த கருத்தை நீக்கி விட்டேன்...பாருங்கள் சி பி அண்ணே இப்போ கூட காமெடியா தான் கருத்திட்டு சென்றுள்ளார்..அவரின் பாணி அப்படி..
நாங்கள் கொஞ்சம் ஓவராய் நக்கலடிக்கிறோம் போல..ஓகே இனி மாற்றுவோம்!
நண்பா ரஜினி ரசிகர்கள் விஜயை தாக்குவது ஏதோ நானும் உங்கள் கூட்டத்தில் சேர்ந்து கொள்கிறேன் என்ற ரீதியில் அல்ல. ஆரம்பத்தில் அவர் தன்னை ரஜினி ரசிகனாக நிலை நிறுத்தி, பிற்காலத்தில் அவரையே எதிர்க்கும் அளவிற்கு வந்ததால்தான். மேலும் எல்லோரும் அவரை அவர் ரசிகர்களை கிண்டல் செய்வது அவரது காமெடிகளால்தான். அதாவது அவருக்கு அவரது ரசிகர்களுக்கோ ஒரு பழக்கம் உண்டு. படம் கொஞ்சம் நல்லா இருந்தால் கூட ஏதோ விஜய் ஆஸ்கார் அவார்டு வாங்கி விட்டது போல பில்டப் கொடுப்பது.(உதாரணம் காவலன் விமர்சனம்). இப்போது கூட பாருங்கள் அவரை கிண்டல் செய்வதை ஏதோ மாஸ் பைத்தியக்காரத்தனம் என்பது போல பேசுகிறீர்கள். எங்களுக்கென்ன வேண்டுதலா அவரை கிண்டல் செய்ய வேண்டுமென்று. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். அப்புறம் தனுஷ் சிம்பு போன்றவர்கள் எல்லாம் அந்த அளவுக்கு கூட வோர்த் இல்லை.
பதிவர் சந்திப்பு - நினைத்தாலும் போக முடியாத தூரம்..
சாரு- எனக்கென்னமோ அது சாருவின் திருவிளையாடல் போல தான் இருக்கு ..
///அது போலவே விஜய்'யை எதிர்த்து பேசுதல் மற்றும் அவரது ஆதரவாளர்களை நக்கலடித்தல்,மட்டம் தட்டுதல் போன்ற செயல்பாடுகளை
மேற்கொள்வதன் மூலம் தங்களது அங்கீகாரத்தை அந்தஸ்தை பெருக்கலாம்னு நினைப்பது./// ஐயோ அது நான் இல்ல ..)))
மச்சி, வலையுலக சட்டம் 214 வது பிரிவின், ஆ சரத்து என்ன சொல்கிறது என்று கீழே பார்க்கவும்!
“ பதிவர் ஒருவரின் பதிவொன்றுக்கு கருத்துரை வழங்காத சக பதிவரின், புதிய பதிவுக்கு கருத்துரை வழங்காதிருக்க முன்னைய பதிவருக்கு உரிமை உண்டு “
இதே பிரிவின் ஊ சரத்து என்ன சொல்கிறது என்றால்,
“ ஒரு பதிவரின் பதிவுக்கு கருத்துரை போடாத ஒரு பதிவர், ஏனைய பல நண்பர்களுக்கு கருத்துரை வழங்கியிருந்தால், அது பதிவர்களிடையே மனக்கசப்புக்கும் பிரிவினைக்கும் வழிவகுக்கும் “
மேற்படி இரண்டு சரத்துக்களையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்!
பாவம்,அந்தப் பொடியன்.எல்லாரும் விடியக்காலமையிலயிருந்து போட்டு தாக்கு,தாக்கெண்டு தாக்கினது பத்தாதெண்டு உங்கட பங்குக்கு நீங்களுமோ?அவர் தான் ஆரம்பத்திலயே ரெண்டு கிழமை(அதான் எழு நாட்களாக)சரியான பிசி எண்டு சொல்லியிருக்கிறார்.நீங்கள்???????????????
ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
மச்சி, வலையுலக சட்டம் 214 வது பிரிவின்,ஆ சரத்து என்ன சொல்கிறது என்று "கீழே" பார்க்கவும்!////நீங்கள் இப்பிடிச் சொல்ல(கீழே பார்க்கவும்)அவர் "கீழே" பாக்கப் போறார்!(அதான் வெக்கத்தில,மரியாதை கெட்டுப் போச்செண்டு நிலத்தப் பாக்கப் போறார்!)
மாற்றத்துக்கு மகிழ்ச்சி...
சாருவைப்பற்றிய விடயங்கள் திட்டமிட்ட செயலென்றுதான் எண்ணத்தோன்றுகின்றது.
ஹன்சிகா பத்தி ஓட்டவடை போட்ட மாபெரும் சமைஞ்ச பதிவுக்கு தான் என்னால் பதிலளிக்க முடியவில்லை ஹிஹி//
மவனே, நீங்க வரமாலே அவன் 185 கமெண்ட் தேத்தி வைச்சிருக்கிறான், நீங்க வந்தால்....
ஐயோ....ஐயோ.. அந்த ப்ளாக்கே கமெண் குளியலில் நனைஞ்சிருக்கும் பாஸ்.
பதிவர் சந்திப்பு- இணையம் செய்த சதி பாஸ். நானும் எவ்ளோ ஆவலாக இருந்தேன், ஆனால் சந்திப்பினை வலையேற்ற முடியவில்லை...
சாரு மேட்டர்... புரியாத புதிராக இருக்கிறது,
உங்களைப் போலத் தான் நானும் சாருவின் படைப்புக்களை இதுவரை படிக்கவில்லை.
சினிமா பற்றிய ஆர்வம் குறைவு பாஸ்,
ஆதலால் இறுதி விடயத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்கிறேன்.
:))
Vaazhthukkal Thalapathi
Post a Comment