மனுஷனுக்கு எந்த நேரத்திலையும் காமெடி வரலாம்னு எனக்கு அப்போ தான் தோணிச்சு..
பரதேசி அது குடு(போதை பொருள்) அடிக்கிற ஆளு...
என்னையே உத்து உத்து பாத்திட்டிருந்தான்..எனக்கு அப்பவும் வடிவேலு காமெடிதான் மனசுக்க ஓடிச்சு..
வெலவெலத்து போயி இருந்த எண்ட மூஞ்சிய பாத்து பரிதாபப்பட்டு பக்கத்து செல்'லுக்க மாத்தி விட்டாங்க..
அங்க ஒரு மூணு பொடியங்க...
போனவுடன என்னை பத்தி கேட்டாங்க..சொன்னேன்,தாங்களும் அப்பிடி தான் பிடிபட்டதாம்..ரெண்டு நாளா இருக்கினமாம் உள்ளே..
அடடா அப்போ நானும் ரெண்டு நாள் இருக்கணுமா...
நேரம் மாலை எழு மணி இருக்கும் செல்'லுக்க போடேக்க...
உள்ள இருந்த மூணு பசங்களும் யாழ்ப்பாணம்..கிட்டத்தட்ட எனது பாடசாலைக்கு அருகாமையில் தான் அவர்களது வீடுகள்..
சோ,கதை நம்ம ஊரு பிகருங்க பத்தி ஆரம்பிச்சுது..
அடே அந்த சுண்டுக்குளில படிச்சா,அத பண்ணினா இதப் பண்ணினா ....இப்போ என்ன பண்றா...அப்பிடி மிகவும் முக்கியமான விடயங்கள்
அலசி ஆராயப்பட்டது...
இடைக்கிடையில் காமெடி கதை வந்தால் பெரிதாக சிரித்தோம்..
எங்க சத்தம் சும்ம்மா இருந்த மாமாவை குழப்பி இருக்கணும்...அடிக்கடி வந்து தன்னுடைய சப்பாத்து
காலை தூக்கி காட்டிட்டு போனார்..அதுக்கும் அசராம கெக்கட்டம் போட்டு சிரித்தானுகள்..
எனக்கு உள்ளுக்க நடுக்கம்..
இப்பிடியே கதை இரவு பத்து மணி வரைக்கும் போக,நித்திரை வருதுன்னு ஒவ்வொருத்தனா தூங்க ஆரம்பிச்சிட்டாங்க..
எனக்கு பழக்கமில்லாத இடம்..எப்பிடி தூக்கம் வரும்,அவங்களுக்கு ரெண்டு நாள் அனுபவம் இருக்கே!!
அதுவும் ஞாபகம் வந்தது...பாவம் மனுஷன் எம்புட்டு கஷ்டப்பட்டிருக்கும்..
எனக்கு தூக்கம் வரவே இல்லை...கம்பிகளை எண்ணி பார்த்தேன்..சரியாக எட்டு கம்பி...
எனது வாழ்க்கையில கம்பி எண்ணினேன் முதல் முறையாக..எத்தினை பேருக்கு அந்த சந்தர்ப்பம் கிடைக்கும்!!
கம்பிகளூடே வெளியில பாத்திட்டிருந்தன்.இரவு நேர கடமைக்கு மூணு பெண் போலீஸ் பிள்ளைங்க வந்திருந்தாங்க..
ரெண்டு பேர் கொஞ்சம் சுமார் தான்..ஒருத்தி கொஞ்சம் எடுப்பாக இருந்தாள் சிங்களத்தி..
ஹிஹி வேறென்ன வேறென்ன வேண்டும்...பாத்திட்டிருந்தால் போதும்...
இரவையும் உந்தன் கால்.........என்று பாட்டு வேறு...
அவளும் என்னை பார்த்தாள்...நான் பார்ப்பது அவளுக்கு தெரிந்திருந்தது..
நல்ல காலம் பெரியவனிடம் சொல்லி குடுக்கவில்லை...இல்லாவிட்டால் நொங்கு எடுத்திருப்ப்பார்கள்..
அன்னிக்குன்னு பாத்து கவிதை கவிதையா கொட்டுதுங்க...மனசுக்க..
ஒரு வருஷம் ப்ளாக்'ல போடுற அளவு கவிதை கிடைத்திருக்கும்!!
அப்பிடி ஒரு நினைவு..கனவு...நேர மேல மணிக்கூடு...ஒவ்வொரு செக்கனும் ஒவ்வொரு யுகங்கள் ஆக
மாறிக்கொண்டிருந்தது..பாவம் ஆயுள் தண்டனை கைதிகள் எல்லாம் எவ்வாறு தான் உயிரோடு இருக்காங்களோ!!!
எதோ போலீஸ்காரி இருந்ததாள்ள கொஞ்சம் கிளு கிளுப்பா போச்சு நையிட்டு...
அன்னிக்கு இரவே என்னுடைய மாமா எல்லாரும் வந்து என்னைய எடுக்க முயற்சி செய்திச்சினம்...ஆனா முடியல..
எப் ஐ ஆர் போட்டிட்டாங்களாம்..அதால காலைல தான் விடலாம்னு அனுப்பிட்டாங்க,.
எதோ ஒரு இரு மணி நேரம் கண் அயர்ந்த ஞாபகம்..
விடிஞ்சிருச்சு...உறவினர் ஒருவர் வந்திருந்தார்..பெரியவன் வரட்டாம்னு கூப்பிட்டான் என்னைய,..
போனேன்..விசாரித்தான் என்ன பண்றீங்க...எங்க இருக்கீங்க..எப்ப பல்கலைக்கழகம் தொடங்குது அப்பிடீன்னு இங்கிலீசில...
அப்பாபி அவனுக்காச்சும் இங்கிலீசு தெரிந்திருந்தது!!!
சரி போயிட்டு வாங்கன்னு அனுப்பி வைச்சாங்க...உள்ளுக்கிருந்த மற்றைய நண்பர்களிடமும் சொல்லாமல் ஓடி வந்துவிட்டேன்...
ஒரு நாள் முதலமைச்சர் மாதிரி ஒரு நாள் நண்பர்கள் ...அதற்க்கு பிறகு ஒரு நாள் வீதியில் கண்டு கதைத்தோம்..
ஹிஹி இது தான் நண்பர்களே நான் ஜெயிலுக்கு போன வரலாறு..வரலாற்று பதிவு!!
அன்னிக்கு நான் பிடிபட்ட நாள் ஜூலை மாதம் ஒரு நாள்..அது விடுதலை புலிகளின் ஒரு முக்கிய நாள்..அதை கவனிக்காம நாம ஏரியா விட்டு ஏரியா போயிருக்கம்...ஹிஹி பிடிச்சாங்க போட்டாங்க விட்டிட்டாங்க..!!!!
ஹிஹி நீங்க ஜோசிக்கிறத பாத்தா,எதோ அவனுகள் என்னைய கும்மின மாதிரியும்,நான் அதை மறைக்கிற மாதிரியுமல்லோ கிடக்குது...நானும் ஜெயிலுக்கு போனான் நானும் ஜெயிலுக்கு போனான்!!! |
64 comments:
////கொண்டு போயி ஒரு செல்'ளுக்க போட்டாங்க.அங்க என்னோட இன்னொரு மனுஷன்,ஒரு முப்பது வயசிருக்கும்,
பரதேசி அது குடு(போதை பொருள்) அடிக்கிற ஆளு...
என்னையே உத்து உத்து பாத்திட்டிருந்தான்.////
பாஸ் அதுதான் கொரில்லா செல்லு
ஃஃஎனக்கு தூக்கம் வரவே இல்லை...கம்பிகளை எண்ணி பார்த்தேன்..சரியாக எட்டு கம்பி...ஃஃஃஃ
பாஸ்.. நீங்க கணக்கில புலி என்று கன்பார்ம் பண்ணிட்டிங்க..!!!!!!!!
ஃஃஃமூணு பெண் போலீஸ் பிள்ளைங்க வந்திருந்தாங்க..
ரெண்டு பேர் கொஞ்சம் சுமார் தான்..ஒருத்தி கொஞ்சம் எடுப்பாக இருந்தாள் சிங்களத்தி.ஃஃஃஃஃ
அந்த ரணகளத்திலயும் ஒரு கிளுகிளுப்பு கேட்குதோ
ஃஃஃநல்ல காலம் பெரியவனிடம் சொல்லி குடுக்கவில்லை...இல்லாவிட்டால் நொங்கு எடுத்திருப்ப்பார்கள்..
அன்னிக்குன்னு பாத்து கவிதை கவிதையா கொட்டுதுங்கஃஃஃஃஃஃ
போட்டுக்கொடுத்திருந்தா கொட்டியிருக்கும், கவிதை இல்ல.... ரத்தம்
ஃஃஃஃஒரு பொஸ்தகமும் பேனாவும் இருந்திருந்தா ஒரு கள்ளிக்காட்டு இதிகாசமே படித்திருப்பேன்!!
ஒரு வருஷம் ப்ளாக்'ல போடுற அளவு கவிதை கிடைத்திருக்கும்!!ஃஃஃஃஃஃஃ
நல்ல வேளை பொஸ்தகமும் பேனாவும் இல்லாதபடியா நாங்க தப்பிச்சோம்
அடச்சீ.... கடைசிவரை என் எதிர்பார்ப்பு நிறைவேறவேயில்லையே........ கூட்டிக்கொண்டுபோய் டங்குவாரு அறுத்திருப்பானுகள் என்று பார்த்தா....... ஹா ஹா
அடுத்தது என்ன கட்சிய ஆரம்பிக்க வேண்டியது தானே
5ல் பிடிபட்ட வருங்கால அரசியல் வாதி வாழ்க.....!!
ச்சே பேசாம அவங்ககிட்டயே பேப்பர் வாங்கி எழுதி இருக்கலாமே...நமக்கும் ஏதோ கிளு கிளு குளு குளு கவிதை படிச்சதாய் போயிக்கும்.. மிஸ் பண்ணிட்டீங்களே..
ஆஹா..கொரில்லா செல் கண்ட சிங்கமே வாழ்க வாழ்க.
கனக்க மாப்பூக்கு மாலை போட்டு மரியாதை செய்திருப்பாங்கள் என்று ஓடிவந்தாள் இப்படி சுருக்கிவிட்டீர்கள் பதிவை என்றாளும் லாக்கப்பில் தொலைக்கும் தூக்கம் வார்த்தையில் விபரிக்க முடியாது குடுராஜாக்களை விட்டுட்டு இப்படி குஜாக்களை குண்டு கட்டாக தூக்கி போவது கொடுமையான விசயம் நண்பா!
மாப்ள முழுசாத்தானே வந்தே!
//மதுரன் said...
////கொண்டு போயி ஒரு செல்'ளுக்க போட்டாங்க.அங்க என்னோட இன்னொரு மனுஷன்,ஒரு முப்பது வயசிருக்கும்,
பரதேசி அது குடு(போதை பொருள்) அடிக்கிற ஆளு...
என்னையே உத்து உத்து பாத்திட்டிருந்தான்.////
பாஸ் அதுதான் கொரில்லா செல்லு//
தெரியாம போச்சே
////மதுரன் said...
////கொண்டு போயி ஒரு செல்'ளுக்க போட்டாங்க.அங்க என்னோட இன்னொரு மனுஷன்,ஒரு முப்பது வயசிருக்கும்,
பரதேசி அது குடு(போதை பொருள்) அடிக்கிற ஆளு...
என்னையே உத்து உத்து பாத்திட்டிருந்தான்.////
பாஸ் அதுதான் கொரில்லா செல்லு//
தெரியாம போச்சே /
ஆமா ஆமா பின்னே...இருந்தது எட்டுக் கம்பி...
//மதுரன் said...
ஃஃஃமூணு பெண் போலீஸ் பிள்ளைங்க வந்திருந்தாங்க..
ரெண்டு பேர் கொஞ்சம் சுமார் தான்..ஒருத்தி கொஞ்சம் எடுப்பாக இருந்தாள் சிங்களத்தி.ஃஃஃஃஃ
அந்த ரணகளத்திலயும் ஒரு கிளுகிளுப்பு கேட்குதோ//
அப்ப தான் வாழ்க்கையை லென்த்தா ஓட்ட முடியும் பாஸ்
//மதுரன் said...
ஃஃஃநல்ல காலம் பெரியவனிடம் சொல்லி குடுக்கவில்லை...இல்லாவிட்டால் நொங்கு எடுத்திருப்ப்பார்கள்..
அன்னிக்குன்னு பாத்து கவிதை கவிதையா கொட்டுதுங்கஃஃஃஃஃஃ
போட்டுக்கொடுத்திருந்தா கொட்டியிருக்கும், கவிதை இல்ல.... ரத்தம்//
ஹிஹி தப்பிச்சன் சாமி
//மதுரன் said...
அடச்சீ.... கடைசிவரை என் எதிர்பார்ப்பு நிறைவேறவேயில்லையே........ கூட்டிக்கொண்டுபோய் டங்குவாரு அறுத்திருப்பானுகள் என்று பார்த்தா....... ஹா ஹா//
ஆசை??mmm
//யாதவன் said...
அடுத்தது என்ன கட்சிய ஆரம்பிக்க வேண்டியது தானே//
ஆரம்பிச்சிடுவோம்!!
//“நிலவின்” ஜனகன் said...
5ல் பிடிபட்ட வருங்கால அரசியல் வாதி வாழ்க.....!!
ச்சே பேசாம அவங்ககிட்டயே பேப்பர் வாங்கி எழுதி இருக்கலாமே...நமக்கும் ஏதோ கிளு கிளு குளு குளு கவிதை படிச்சதாய் போயிக்கும்.. மிஸ் பண்ணிட்டீங்களே..//
கொலை வெறி ம்ம்??
//செங்கோவி said...
ஆஹா..கொரில்லா செல் கண்ட சிங்கமே வாழ்க வாழ்க.//
நன்றி நன்றி ஹிஹி
//Nesan said...
கனக்க மாப்பூக்கு மாலை போட்டு மரியாதை செய்திருப்பாங்கள் என்று ஓடிவந்தாள் இப்படி சுருக்கிவிட்டீர்கள் பதிவை என்றாளும் லாக்கப்பில் தொலைக்கும் தூக்கம் வார்த்தையில் விபரிக்க முடியாது குடுராஜாக்களை விட்டுட்டு இப்படி குஜாக்களை குண்டு கட்டாக தூக்கி போவது கொடுமையான விசயம் நண்பா!//
உண்மை தான் சகோ
//விக்கி உலகம் said...
மாப்ள முழுசாத்தானே வந்தே!//
ஹிஹி ஆள் தான் முழுசு,,,,
குடு அடிச்ச ஆளோட கொஞ்ச நேரம் இருந்ததுக்கே இப்படின்னா கூட நேரம் இருந்திருந்தா! அய்யோ அம்மா!
நாய்ப்பயபுள்ள பொலிச கூட விட்டு வைக்கலயே! அந்த லேடி பொலீசு மைந்தன் இல்லாம இப்ப தற்கொலை செஞ்சுட்டுதோ தெரியேல. :P
\\\மூணு பெண் போலீஸ் பிள்ளைங்க வந்திருந்தாங்க..ரெண்டு பேர் கொஞ்சம் சுமார் தான்..ஒருத்தி கொஞ்சம் எடுப்பாக இருந்தாள் சிங்களத்தி..\\\ ஐயோ அங்கேயுமா ?
///அடே அந்த சுண்டுக்குளில படிச்சா,அத பண்ணினா இதப் பண்ணினா ....இப்போ என்ன பண்றா...அப்பிடி மிகவும் முக்கியமான விடயங்கள்
அலசி ஆராயப்பட்டது...!!!?எனக்கு உள்ளுக்க நடுக்கம்..///ஏன் வெளியில போய் போட்டுக் குடுத்துடுவங்களெண்டோ?
//விக்கி உலகம் said...
மாப்ள முழுசாத்தானே வந்தே!//
ஹிஹி ஆள் தான் முழுசு,BUT......... பேஸ்மெண்ட் வீக்கோ?????????
ஒரு பொஸ்தகமும் பேனாவும் இருந்திருந்தா ஒரு கள்ளிக்காட்டு இதிகாசமே படைத்திருப்பேன்!!
ஏன் "என்னை கைது செய்தவனை திருப்பி அடிப்பேன்" ஏன்னு கோபம் கொண்டு எழுத தொனல்லையா நண்பா
//மதுரன் said...
ஃஃஃமூணு பெண் போலீஸ் "பிள்ளைங்க?!?!" வந்திருந்தாங்க///ஹி!ஹி!!ஹி!!!ஹி!!!!ஹி!!!!!ஹி!!!!!!
ஆஹா வந்திட்டாரு யோகா மாஸ்டர்
2008 ஜூலை 5?
//ஜீ... said...
2008 ஜூலை 5?///
ஆமா ஆமா பலே பலே
//கார்த்தி said...
குடு அடிச்ச ஆளோட கொஞ்ச நேரம் இருந்ததுக்கே இப்படின்னா கூட நேரம் இருந்திருந்தா! அய்யோ அம்மா!
நாய்ப்பயபுள்ள பொலிச கூட விட்டு வைக்கலயே! அந்த லேடி பொலீசு மைந்தன் இல்லாம இப்ப தற்கொலை செஞ்சுட்டுதோ தெரியேல. :P//
அந்த பிள்ளை அடுத்த தானே தற்க்கொலையாம்லே!!நம்ம பவர் அப்பிடி!!
அன்னைக்கு எனக்கும் ஒரு அனுபவம் இருக்கு பாஸ்! வெள்ளவத்த காவல் நிலையத்துக்கு ஒரு மரியாதை நிமித்தமான விஜயம் செய்தேன் அதான்! ;-)
//ஜீ... said...
அன்னைக்கு எனக்கும் ஒரு அனுபவம் இருக்கு பாஸ்! வெள்ளவத்த காவல் நிலையத்துக்கு ஒரு மரியாதை நிமித்தமான விஜயம் செய்தேன் அதான்! ;-)
June 11, 2011 1:25 PM //
ஹிஹிஹி நீங்களுமா பாஸ்!!!
///மைந்தன் சிவா said...
ஆஹா வந்திட்டாரு யோகா மாஸ்டர்///இப்பதான மாப்பிள விடிஞ்சு பத்து மணி.
//ஜீ... said...
அன்னைக்கு எனக்கும் ஒரு அனுபவம் இருக்கு பாஸ்! வெள்ளவத்த காவல் நிலையத்துக்கு ஒரு மரியாதை நிமித்தமான விஜயம் செய்தேன் அதான்!///ஸ்பெசல் கெஸ்ட்டா கூப்பிட்டாங்களோ?லாடம் கட்டயில்லையோ?
//Yoga.s.FR said...
///மைந்தன் சிவா said...
ஆஹா வந்திட்டாரு யோகா மாஸ்டர்///இப்பதான மாப்பிள விடிஞ்சு பத்து மணி.//
கனவெல்லாம் ஹன்சிகாவா??
//பரதேசி அது குடு(போதை பொருள்) அடிக்கிற ஆளு..// என்ன பாஸ் எனக்கு நடந்த சம்பவம் எல்லாம் உங்களுக்கும் நடந்திருக்கு ... நீங்க எந்த ஜெயில் ஹிஹிஹி, நான் தெகிவளை...மொத்தம் பதினேழு பேர், கால் நீட்டி கூட உட்க்கார முடியாது.... மூன்று நாலு சிங்களவர்கள் குடு அடிச்சாங்க, அந்த நாத்தத்துக்கு அன்றோடு வாழ்க்கையே வெறுத்துடிச்சு.. பத்தாதுக்கு போலீஸே உள்ள இருக்கிறவங்களுக்கு சாராயம் வாங்கி கொடுத்தாங்க. அன்று தான் நம்ம நாட்டு போலீசாரை பற்றி நன்றாக அறிஞ்சுக்கிட்டன்...) அதே யூலை மாசம் ஒரு நாளில் தான் வந்து அப்பிக்கிட்டு போனாங்க என்னையும்....அப்புறம் முன்னூறு ரூபா (கேவலம்)லஞ்சம் வாங்கிட்டு தான் என்னை விட்டாங்க, ஆனா ஒரு நல்ல விஷயம் என்னண்னா கைது செய்ததுக்கான ரிசீட்டும் கொடுத்தாங்க, பிற்காலத்தில எனக்கு அது உதவும் ..)))
///.நானும் ஜெயிலுக்கு போனான் நானும் ஜெயிலுக்கு போனான்!!!/// யோ நானும் தான்யா;-)
//ஒரு பொஸ்தகமும் பேனாவும் இருந்திருந்தா ஒரு கள்ளிக்காட்டு இதிகாசமே படைத்திருப்பேன்!!//
ஐய்யஹோ....இன்னொரு வைரமுத்துவை இழந்துவிட்டோமே.
""மூணு பெண் போலீஸ் பிள்ளைங்க வந்திருந்தாங்க..
ரெண்டு பேர் கொஞ்சம் சுமார் தான்..ஒருத்தி கொஞ்சம் எடுப்பாக இருந்தாள் சிங்களத்தி..""
இந்த ரணகளத்திலேயும்
கிளுகிளுப்பு கேக்குதா சிவா உங்களுக்கு
நல்ல
சுவையான பதிவு சகோ
///கடம்பவன குயில்said.ஐய்யஹோ...இன்னொரு வைரமுத்துவை இழந்துவிட்டோமே//நல்ல வேளை! (வைரமுத்து)ஆகியிருந்தால் உங்கள் குரலில்(குயில்)பாட்டுக் கேட்க வேண்டியிருந்திருக்கும்!)தப்பித்தோம்!
யாதவன் said...
அடுத்தது என்ன கட்சிய ஆரம்பிக்க வேண்டியது தானே//
ஆரம்பிச்சிடுவோம்!!இன்னாது,கச்சியா?வெளங்கிடும்!!!!
மைந்தன் சிவா said...
கனவெல்லாம் ஹன்சிகாவா??///நாங்கெல்லாம் அஞ்சலிதேவி,மீனா,லீலா ஆளுங்க!//
//ஜீ... said...
அன்னைக்கு எனக்கும் ஒரு அனுபவம் இருக்கு பாஸ்! ):):);):):(ஆச்சரியம்!)
//வடிவேலுவ வா மாப்பிள கொண்டு போய் வைச்சு வைச்சு அடிக்கிறம் எண்டு கூட்டிட்டு போற மாதிரியே எனக்கு ஒரு பீலிங் அந்த நேரத்திலையும்..
மனுஷனுக்கு எந்த நேரத்திலையும் காமெடி வரலாம்னு எனக்கு அப்போ தான் தோணிச்சு..//
சிவா சரிதான் சூப்பர்.
:-)
மாப்புள நீ எங்கயோ போயிடாய் மாப்புள. நான் உன்ன சும்மா ஆளுன்னு நெனச்சான் இப்போதான் தெரியுது நீ எம்புட்டு பெரிய ஆள் எண்டு. நீ ஒரு புல்லிடா சாரி சிங்கம்டா..
அந்த நேரத்துலயும் நீ பிகார ரசிச்சதால நீ ஒரு கலைஞன் எண்டு நிரூபிச்சிட்டாய். :)))
////இடைக்கிடையில் காமெடி கதை வந்தால் பெரிதாக சிரித்தோம்..
எங்க சத்தம் சும்ம்மா இருந்த மாமாவை குழப்பி இருக்கணும்.////
அடடா இதைத் தான் வீட்டுக்கு விடு வாசற்படி என்பார்களோ...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
சீரியஸ் மனிதனின் நகைச் சுவைப் பக்கங்கள் With vedio
////என்னையே உத்து உத்து பாத்திட்டிருந்தான்./////"அவ"னா நீயி?அச்சச்சோ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
///ஹிஹி நீங்க யோசிக்கிறத பாத்தா,எதோ அவனுகள் என்னைய கும்மின மாதிரியும்,நான் அதை மறைக்கிற மாதிரியுமல்லோ கிடக்குது///சீச்சீ,அப்பிடியெல்லாம் ஒண்டுமில்ல.அந்த "ஆர்பிகோ"ப் பக்கமா இருக்கிற பிரைவேட் கொஸ்பிட்டல்ல ஆரோ கண்டதெண்டு சொன்னவை!மைந்தன் பொய் சொல்லுவாரோ?"அவை"தான் பொய் சொல்லியிருக்கீனம்!
நல்ல அனுபவம்.
சிவா....நீங்க தமிழ் வீரன்தான்.
அதுதான் கவிதை காதல் அழகு எண்டு அட்டகாசமா கம்பியை எண்ணியிருக்கிறீங்க.எங்கட நாட்டைப் பொறுத்தவரை பிடிபட்டால் இனி வீடா காடா எண்ட நிலைமை.நீங்கள் என்னடாவெண்டா சுண்டுக்குளில படிச்ச பெட்டையளை அலசியிருக்கிறீங்களே !
மாதிரியே எனக்கு ஒரு பீலிங் அந்த நேரத்திலையும்..
மனுஷனுக்கு எந்த நேரத்திலையும் காமெடி வரலாம்னு எனக்கு அப்போ தான் தோணிச்சு.//
நிஜமாத் தான் சொல்லுறியா?
இல்லே சும்மா பீலா வுடுறீங்களா?
எனக்கென்னவோ, காற்சட்டைக்குள்ளாலை பயத்தில் மூ...ஒழுனின நிலமை என்று தான் நினைக்கிறேன்.
ஹி...ஹி..
நீயாச்சும் காமெடி நினைக்கிறதாவது.
அவ்...
சோ,கதை நம்ம ஊரு பிகருங்க பத்தி ஆரம்பிச்சுது..//
திருந்தவே மாட்டீங்களா? எங்க போனாலும் பிகருங்க கதையா...
ஜெயிலுக்க போன உடனை, ஏதோ வெள்ளவத்தை எம்சியில் கூலாக படம் பார்க்கிற நினைப்பு மாப்பிளைக்கு..
ஹி...ஹி....
அடிக்கடி வந்து தன்னுடைய சப்பாத்து
காலை தூக்கி காட்டிட்டு போனார்..அதுக்கும் அசராம கெக்கட்டம் போட்டு சிரித்தானுகள்..
எனக்கு உள்ளுக்க நடுக்கம்..//
நீங்கள் எல்லாம் அதிஷ்டக்காரப் பசங்க மாப்ளே,
எனக்கெல்லாம் துவக்குப் பிடியாலை 2001இலை அடிச்சிருக்காங்க...
எனக்கு பழக்கமில்லாத இடம்..எப்பிடி தூக்கம் வரும்,அவங்களுக்கு ரெண்டு நாள் அனுபவம் இருக்கே!//
அடிங்...நல்ல வேளை நீங்க படுக்க பெட் கேட்கல்லை..
அதுவும் ஞாபகம் வந்தது...பாவம் மனுஷன் எம்புட்டு கஷ்டப்பட்டிருக்கும்..//
ஹி...ஹி...
ஐயோ ஐயோ!
எனக்கு தூக்கம் வரவே இல்லை...கம்பிகளை எண்ணி பார்த்தேன்..சரியாக எட்டு கம்பி...
எனது வாழ்க்கையில கம்பி எண்ணினேன் முதல்//
யோ நீ மட்டும் எங்கை மச்சி இருந்தாய்?
எனக்கென்றால் இந்த மாதிரிச் சூழ் நிலையில் பகிடியே வராது,
நான் இருந்த இடத்தில வைரவர், முருகன் சந்தி முருகன், நல்லூரான்,
புதூர் நாகதம்பிரான், வற்றாப்பளை அம்மன், முறிகண்டிப் பிள்ளையார் என எல்லோரையும் கும்பிட வேண்டியதாப் போச்சு, ஏன்னா..அடி அகோரம் அப்பிடி..
ஹி..ஹி..
நீ காமெடியா இருந்து சிரிக்கிறாய்.
அவ்...
ரெண்டு பேர் கொஞ்சம் சுமார் தான்..ஒருத்தி கொஞ்சம் எடுப்பாக இருந்தாள் சிங்களத்தி.//
அடிங்...இருக்க இடங் கொடுத்தா, உங்களுக்கு படுக்கப் பாய் கேட்குதோ((((:
ஹிஹி வேறென்ன வேறென்ன வேண்டும்...பாத்திட்டிருந்தால் போதும்...
இரவையும் உந்தன் கால்.........என்று பாட்டு வேறு...//
நொந்த அனுபவத்தை சீரியஸ்ஸா எழுதுற ஆள் நீ தான் மாப்பு.
எனக்கு அப்பவே தெரியும்,
தமிழ்ப் பட ஹீரோ தான் உன் ரோல் மாடல் என்று ஓட்ட வடை சொல்லும் போதே தெரியும்.
என்ன இரு கொலை வெறி உனக்குள்ள.
அன்னிக்குன்னு பாத்து கவிதை கவிதையா கொட்டுதுங்க...மனசுக்க..
ஒரு பொஸ்தகமும் பேனாவும் இருந்திருந்தா ஒரு கள்ளிக்காட்டு இதிகாசமே படைத்திருப்பேன்!!//
நல்ல வேளை உங்களுக்கு அவங்கள் எஸ்லோன் பைப்பையும், சைக்கிள் செயினையும் காமிக்கலை...
அன்னிக்கு நான் பிடிபட்ட நாள் ஜூலை மாதம் ஒரு நாள்..அது விடுதலை புலிகளின் ஒரு முக்கிய நாள்..அதை கவனிக்காம நாம ஏரியா விட்டு ஏரியா போயிருக்கம்...ஹிஹி பிடிச்சாங்க போட்டாங்க விட்டிட்டாங்க..!!!//
அடப் பாவி, ஏன் பிடிச்சாங்க என்று நீங்க சஸ்பென்ஸ் வைத்ததுக்கு காரணம் இதுவா.
நான் என்னமோ ஏதோ என்று நினைத்தேன்..
எம்மாம் பெரிய பில்டப்பு...
ஹி...ஹி...
எழுத்து நடை கலக்கல். அப்புறம் சுவாரஸ்யத்திற்கு குறைவின்றிப் படிப்போரை உள் இழுத்துப் படிக்க வைக்கிறீங்க...
இன்னும் பல நல்ல படைப்புக்களை நீங்கள் வழங்குவீர்கள் எனும் நம்பிக்கைக்கான ஒளிக் கீற்று கீழ் வானில் வெள்ளவத்தை கடற்கரைக்கு அருகில் தெரிகிறது சகோ.
ஹா ஹா
அந்த கடுப்பான நேரத்திலும் ஒரு கிளுகிளுப்பா ரொமான்ஸ் வருதா??
நீங்க பெரிய மன்மதன் பாஸ்
அப்ப கும்மலயா?
வீணா போச்சு experience கானாது
Post a Comment