Monday, May 16, 2011

விளாடிமிர் லெனின்

விளாடிமிர் இலீச் லெனின் (Vladimir Ilyich Lenin, ரஷ்ய மொழி: Влади́мир Ильи́ч Ле́нин, ஏப்ரல் 22 [யூ.நா. ஏப்ரல் 10] 1870ஜனவரி 21, 1924), ஒரு ரஷ்யப் புரட்சியாளரும், போல்செவிக் கட்சியின் தலைவரும், சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபரும், மற்றும் பின்னாளில் ஜோசஃப் ஸ்டாலினால் மார்க்சியம்-லெனினியம் என்று விரிவுபடுத்தப்பட்ட லெனினியம் என்ற கோட்பாட்டின் நிறுவுனரும் ஆவார்.

"லெனின்" என்பது் ரஷ்யப் புரட்சிக்காக அவர் கொண்டிருந்த புனைபெயர்களில் ஒன்று. பின்னாளில் தன்னுடைய உண்மையான "விளாடிமிர் உலியனொவ்" என்கிற பெயரை "விளாடிமிர் லெனின்" என்று மாற்றிக்கொண்டார். சில சமயங்களில் அவரை நிக்கலாய் லெனின் (Nikolai Lenin) என்று மேற்கத்திய கம்யூனிச எதிர்ப்பாளர்களும் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களும் வர்ணித்தார்கள். ஆனால், சோவியத் யூனியனில் அவர் இப்பெயரினால் அறியப்படவில்லை.

லெனின் என்கிற அவருடைய பெயரின் மூலக்காரணம் பற்றி பல கருத்துக்கள் உள்ளன. மேலும், அந்தப் பெயரினை எதற்காகத் தேர்வு செய்தார் என்று அவர் சொன்னதாக அறியப்படவில்லை. இப்பெயருக்கு லேனா என்கிற நதியின் பெயரோடு தொடர்பிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதே காலகட்டத்தில் முன்னணி ரஷ்ய மார்க்சியவாதியான ஜார்ஜி பிளிகானொவ் (Georgi Plekhanov) என்பவர் வோல்கா நதியோடு தொடர்புடைய வோல்ஜின் என்கிற புனைபெயரினைக் கொண்டிருந்தார். லேனா நதி வோல்கா நதியை விட நீண்ட தூரம் ஓடுவதாலும் எதிர்த் திசையில் ஓடுவதாலும் லெனின் என்கிற பெயரினை லெனின் தேர்வு செய்வதற்கு காரணம் என்று ஒரு கருத்தும் கூறப்படுகிறது. ஆனால், அந்தக் காலகட்டத்தில் லெனின் பிளிகானொவின் எதிப்பாளர் அல்ல. மேலும், லேனா படுகொலைக்கு முன்னரே இப்பெயர் வழங்கப்படுவதால் அதற்கும் இப்பெயருக்கும் தொடர்பில்லை என அறியப்படுகிறது.

லெனின் 1870-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி சிம்பிர்ஸ்க் என்ற நகரில் பிறந்தார். அவருடைய தந்தை இல்யா உல்யனாவ் மாவட்டக் கல்வி அதிகாரியாகப் பணி புரிந்தார். தாயார் மரியா உல்யானவ். லெனினுடைய இயற்பெயர் விளாடிமிர் உல்யானவ். அவருடன் உடன்பிறந்தவர்கள் ஐந்துபேர். இரண்டு சகோதர்கள், மூன்று சகோதரிகள். லெனினுடைய குடும்பம் கலப்பு இனத்தன்மை கொண்டது.

1887 மே மாதத்தில் லெனினுக்குப் 17 வயதாக இருக்கும்போது, ரஷ்யாவின் ஜார் மன்னனைக் கொல்வதற்கான சதிமுயற்சியில் பங்கு கொண்டார் என்ற குற்றச்சாட்டில் அலெக்சாண்டருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அலெக்சாண்டர் கைதானபோது அவருடன் இருந்த சகோதரி கிசானிலிருந்து 40 கிமீ தொலைவிலிருந்த கொக்குஷ்கினோ என்னும் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டார். இந்த நிகழ்வுகள் லெனினைத் தீவிரவாதி ஆக்கின. இவரது வரலாறுகள், லெனினது வாழ்க்கையில் அவர் கடைப்பிடித்த தீவிரவாதப் போக்குக்கு இதையே அடிப்படையாகக் கூறுகின்றன. பிற்காலத்தில் கோடிக்கணக்கான ரஷ்யப் பாடநூல்களில் இடம்பெற்ற, நாங்கள் வேறு பாதையைப் பின்பற்றுவோம் என்னும் தலைப்பிட்டு, பியோட்டர் பெலூசோவ் என்னும் ஓவியர் வரைந்த புகழ் பெற்ற ஓவியத்தில் லெனினும் அவரது தாயாரும் அலெக்சாண்டரின் இழப்புக்காகத் துயரப்படுவது காட்டப்பட்டுள்ளது. அலெக்சாண்டருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய நாளில் லெனினுக்குப் பள்ளியில் இறுதித் தேர்வுகள் நடைபெற்றது. அந்தக் கொடூரமான துக்கத்தினால் லெனின் துவண்டு போகவில்லை. தேர்வு முடிவுகளில் மாவட்டத்தில் முதல் மாணவனாகத் தேறினார். இது அவருடைய உருக்கு போன்ற மனவலிமைக்கு ஒரு சான்று.

லெனின் பெத்ரோகிராடில் ஏழைத் தொழிலாளர்களுக்கான வழக்குகளையே நடத்தினார். பெரும்பாலும் அவை இலவசமாகவே இருந்தன. ஏனெனில் தொழிலாளர்கள் மிக வறியச் சூழலில் வாழ்ந்தனர். ஜார் ஆட்சிக்கு முடிவு கட்டினால்தான் தொழிலாளர்களுக்கு விடுதலை என்பதை உணர்ந்து கொண்டார் லெனின். அது குறித்து தீவிரமாகச் சிந்தித்தார். ஏராளமாகப் படித்தார். அப்படித் தான் அவர் கார்ல் மார்க்ஸ்என்பவர் எழுதிய மூலதனம் என்ற நூலைப் படிக்க நேர்ந்தது. லெனினை அந்தப் புத்தகம் வெகுவாக ஈர்த்தது.

அடுத்ததாக கார்ல் மார்க்சும் அவருடைய நண்பர்ஏங்கெல்சும் எழுதிய அனைத்து நூல்களையும் படித்து முடித்தார். அதிலிருந்து ஒடுக்குமுறைகளுக்கு முடிவுகட்ட தொழிலாளர்களின் புரட்சி ஒன்றுதான் வழி என்று தீர்மானித்தார். அந்தப் புரட்சிக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க முடிவு செய்தார். அதிலிருந்து கம்யூனிஸ்டாக மாறினார்.

1917-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் நாள் உலக வரலாற்றில் என்றுமே நிலைத்து நிற்கும் நாள். முதன் முதலாகச் சுரண்டல் ஒழிக்கப்பட்டது அந்த நாளில் தான். கஞ்சிக்கு வழியில்லாமல் வயிறு காய்ந்து கிடந்த உழைப்பாளிகள் தன்மானத்துடன் நிமிர்ந்து நின்றது அந்த நாளில்தான். அன்றுதான் உலகின் முதல் பாட்டாளி வருக்க அரசு அமைக்கப்பட்டது. அன்று காலை முதல் பெத்ரோகிராடு வீதிகளில் தொழிலாளர்கள் ஆயுதங்களுடன் அணிவகுக்கத் தொடங்கினர். அரசு அலுவலகங்கள். தொடர்வண்டி நிலையங்கள், காவல் நிலையங்கள், வானொலி நிலையம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. அரசின் தலைமையகமான கிரெம்ளின் மாளிகை இறுதியாக வீழ்ந்தது. முதலாளிகள் அலறி அடித்துக் கொண்டு ஊரை விட்டு ஓடினர். இப்படியாக உலகின் முதல் பாட்டாளி வருக்க அரசு அமைக்கப்பட்டது. இரசியா சோசலிச நாடு என அறிவிக்கப்பட்டது. லெனின் அதனுடைய அரசுத் தலைவரானார்.ஆட்சியில் அமர்ந்த அடுத்த கணமே நாடுகளுடனும் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்வதாக லெனின் அறிவித்தார். போரினால் நீண்ட காலமாக அமைதி இழந்திருந்த மக்கள் நிம்மதி அடைந்தனர். இரசியாவின் அனைத்து நிலங்களும் வளங்களும் தேசிய உடைமை ஆக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வளைத்துப் போட்டிருந்த பண்ணையார்களின் நிலங்கள் ஏழை உழவர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டன. உழவர்களின் வறுமை இருந்த இடம் தெரியாமல் மறைந்தது.

படிமம்:Lenin.gif

லெனின் உயிருடன் இருக்கும் வரை சோவியத் யூனியனைப் போரில் வீழ்த்த முடியாது என்பதை எதிரிகள் புரிந்து கொண்டனர். அமெரிக்காவின் கூலிப்படைகள் தலைநகருக்குள் ஊடுருவின. பல முன்னணி கம்யூனிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.ஒருநாள் லெனின் தொழிலாளர் கூட்டம் ஒன்றில் பேசி முடித்த பின் அரங்கத்தை விட்டு வெளியேறி வந்தார். அப்போது அவர்மீது துப்பாக்கியால் சுட்டனர். மூன்று குண்டுகள் லெனினுடைய உடலைத் துளைத்தன. சுட்டவனை மக்கள் வளைத்துப் பிடித்தனர். ஆனால், லெனினுடைய நிலைதான் மிகவும் மோசமாக இருந்தது. கழுத்தில் இருந்தும், நெஞ்சில் இருந்தும் ஏராளமான இரத்தம் வெளியேறிக் கொண்டு இருந்தது. சுற்றி இருந்தவர்கள் பதறிப் போனார்கள். லெனின் பதற்றப்படாமல் தானே நடந்து சென்று வண்டியில் உட்கார்ந்தார். அவருடைய உடல் நிலை நிமிடத்திற்கு நிமிடம் மோசமாகிக் கொண்டு இருந்தது. மருத்துவர்கள் ஆலோசனை நடத்தினர். அறுவை சிகிச்சை செய்வது அவசியம். ஆனால் அறுவையின் போது உயிர் போய்விடக்கூடிய ஆபத்துக் குறித்துமருத்துவர்கள் பயந்தார்கள். உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருந்த லெனின் மருத்துவர்களுக்கு தைரியம் கூறினார். அறுவை சிகிச்சை நன்கு முடிந்தது. இரண்டு குண்டுகள் அகற்றப்பட்டன. ஒரு குண்டு உள்ளேயே தங்கிவிட்டது. தங்கள் வாழ்க்கையில் விடியலை ஏற்படுத்திய சோசலித்தை வீழ்த்தவே லெனின் சுடப்பட்டார் என்ற உண்மை மக்களுக்குப் புரிந்தது. லெனின் மீதான தாக்குதலுக்கு பழி வாங்க மக்கள் சபதம் ஏற்றனர். சோசலிசத்தை வெற்றி பெறச் செய்வதன் மூலம் தான் எதிரிகளைப் பழிவாங்க முடியும். ஒரு வருடத்தில் உற்பத்தி செய்ய வேண்டிய பொருட்களை ஆறு மாதத்தில் உற்பத்தி செய்யப் போவதாக தொழிலாளர்கள் உறுதி பூண்டனர். எட்டு மணி நேர வேலை நேரத்திற்கு பிறகு மேலும் நான்கு மணி நேரம் இலவசமாக, சம்பளம் வாங்காமல் வேலை செய்தனர்.

எதிரிப் படைகளை முறியடிக்கச் செம்படை உறுதி பூண்டது. மேலும் அதிக வீரத்துடன் போரிட்டது. லெனின் சுடப்பட்ட அடுத்த நாள் அவருடைய சொந்த ஊரான சிம்பிர்ஸ்க் நகரம் மீட்கப்பட்டது. செம்படையின் வெற்றி தொடங்கியது.

விளாடிமிர் இலீச் லெனின்
Vladimir Ilyich Lenin
Владимир Ильич Ленин

பதவியில்
8 நவம்பர் 1917 – 21 ஜனவரி 1924
முன்னவர்அலெக்சாண்டர் கெரென்ஸ்கி
(ரஷ்ய இடைக்கல அரசுத் தலைவாராக)
பின்வந்தவர்அலெக்சி ரீக்கொவ்
(ஜோசப் ஸ்டாலின் (கட்சித் தலைவர்)
அரசியல் கட்சிபோல்செவிக் கட்சி

பிறப்புஏப்ரல் 22 1870
சிம்பீர்ஸ்க், ரஷ்யப் பேரரசு
இறப்புசனவரி 21 1924(அகவை 53)
கோர்க்கி, சோவியத் ஒன்றியம்
தேசியம்உருசியர்
வாழ்க்கைத்
துணை
நதேஷ்தா குரூப்ஸ்கயா
துறைஅரசியல்வாதி, புரட்சியாளர்
சமயம்மத மறுப்பாளர்
கையொப்பம்விளாடிமிர் லெனின்'s signature

தகவல் மூலம்-விக்கிப்பீடியா

இன்றைய அரசியல்வாதிகளில் யார் லெனின் போல் இருக்கிறார்கள்??

Post Comment

9 comments:

கவி அழகன் said...

நல்ல வரலாற்று குறிப்ப்பு
நான் பார்த்த பிடல் காஸ்ட்ரோ மற்றும் சேகுவரா போராட்ட வரலாற்று வீடியோ பகிர ஆசைப்படுகிறேன் இதையும் பார்க்கவும்

http://www.newlankasri.com/ta/link.php?33e6M232JS

MANO நாஞ்சில் மனோ said...

சரித்திரம்....

Mathuran said...

என்னாச்சு மைந்தன் அண்ணா?

Mathuran said...

வரலாற்று குறிப்புகளெல்லாம் எழுதுறீங்க‌

Mathuran said...

திருந்திட்டிங்களா

Mathuran said...

நல்லாத்தான் இருக்கு

Unknown said...

மாப்ள உன்னோட பதிவு அருமை பகிர்வுக்கு நன்றி!

Chitra said...

தகவல்கள் பகிர்வுக்கு நன்றி. good post.

நிரூபன் said...

17வது வயதிலே சதி முயற்சிக்கு உடந்தையாக இருந்தவர் தான்...பின்னாளில் ரஷ்யப் புரட்சியின் தந்தையானா.

வரலாற்றுப் பதிவி, பகிர்விற்கு நன்றிகள் சகோ.

Related Posts Plugin for WordPress, Blogger...