விளாடிமிர் இலீச் லெனின் (Vladimir Ilyich Lenin, ரஷ்ய மொழி: Влади́мир Ильи́ч Ле́нин, ஏப்ரல் 22 [யூ.நா. ஏப்ரல் 10] 1870 –ஜனவரி 21, 1924), ஒரு ரஷ்யப் புரட்சியாளரும், போல்செவிக் கட்சியின் தலைவரும், சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபரும், மற்றும் பின்னாளில் ஜோசஃப் ஸ்டாலினால் மார்க்சியம்-லெனினியம் என்று விரிவுபடுத்தப்பட்ட லெனினியம் என்ற கோட்பாட்டின் நிறுவுனரும் ஆவார்.
"லெனின்" என்பது் ரஷ்யப் புரட்சிக்காக அவர் கொண்டிருந்த புனைபெயர்களில் ஒன்று. பின்னாளில் தன்னுடைய உண்மையான "விளாடிமிர் உலியனொவ்" என்கிற பெயரை "விளாடிமிர் லெனின்" என்று மாற்றிக்கொண்டார். சில சமயங்களில் அவரை நிக்கலாய் லெனின் (Nikolai Lenin) என்று மேற்கத்திய கம்யூனிச எதிர்ப்பாளர்களும் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களும் வர்ணித்தார்கள். ஆனால், சோவியத் யூனியனில் அவர் இப்பெயரினால் அறியப்படவில்லை.
லெனின் என்கிற அவருடைய பெயரின் மூலக்காரணம் பற்றி பல கருத்துக்கள் உள்ளன. மேலும், அந்தப் பெயரினை எதற்காகத் தேர்வு செய்தார் என்று அவர் சொன்னதாக அறியப்படவில்லை. இப்பெயருக்கு லேனா என்கிற நதியின் பெயரோடு தொடர்பிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதே காலகட்டத்தில் முன்னணி ரஷ்ய மார்க்சியவாதியான ஜார்ஜி பிளிகானொவ் (Georgi Plekhanov) என்பவர் வோல்கா நதியோடு தொடர்புடைய வோல்ஜின் என்கிற புனைபெயரினைக் கொண்டிருந்தார். லேனா நதி வோல்கா நதியை விட நீண்ட தூரம் ஓடுவதாலும் எதிர்த் திசையில் ஓடுவதாலும் லெனின் என்கிற பெயரினை லெனின் தேர்வு செய்வதற்கு காரணம் என்று ஒரு கருத்தும் கூறப்படுகிறது. ஆனால், அந்தக் காலகட்டத்தில் லெனின் பிளிகானொவின் எதிப்பாளர் அல்ல. மேலும், லேனா படுகொலைக்கு முன்னரே இப்பெயர் வழங்கப்படுவதால் அதற்கும் இப்பெயருக்கும் தொடர்பில்லை என அறியப்படுகிறது.
லெனின் உயிருடன் இருக்கும் வரை சோவியத் யூனியனைப் போரில் வீழ்த்த முடியாது என்பதை எதிரிகள் புரிந்து கொண்டனர். அமெரிக்காவின் கூலிப்படைகள் தலைநகருக்குள் ஊடுருவின. பல முன்னணி கம்யூனிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.ஒருநாள் லெனின் தொழிலாளர் கூட்டம் ஒன்றில் பேசி முடித்த பின் அரங்கத்தை விட்டு வெளியேறி வந்தார். அப்போது அவர்மீது துப்பாக்கியால் சுட்டனர். மூன்று குண்டுகள் லெனினுடைய உடலைத் துளைத்தன. சுட்டவனை மக்கள் வளைத்துப் பிடித்தனர். ஆனால், லெனினுடைய நிலைதான் மிகவும் மோசமாக இருந்தது. கழுத்தில் இருந்தும், நெஞ்சில் இருந்தும் ஏராளமான இரத்தம் வெளியேறிக் கொண்டு இருந்தது. சுற்றி இருந்தவர்கள் பதறிப் போனார்கள். லெனின் பதற்றப்படாமல் தானே நடந்து சென்று வண்டியில் உட்கார்ந்தார். அவருடைய உடல் நிலை நிமிடத்திற்கு நிமிடம் மோசமாகிக் கொண்டு இருந்தது. மருத்துவர்கள் ஆலோசனை நடத்தினர். அறுவை சிகிச்சை செய்வது அவசியம். ஆனால் அறுவையின் போது உயிர் போய்விடக்கூடிய ஆபத்துக் குறித்துமருத்துவர்கள் பயந்தார்கள். உயிருக்கு ஊசலாடிக் கொண்டிருந்த லெனின் மருத்துவர்களுக்கு தைரியம் கூறினார். அறுவை சிகிச்சை நன்கு முடிந்தது. இரண்டு குண்டுகள் அகற்றப்பட்டன. ஒரு குண்டு உள்ளேயே தங்கிவிட்டது. தங்கள் வாழ்க்கையில் விடியலை ஏற்படுத்திய சோசலித்தை வீழ்த்தவே லெனின் சுடப்பட்டார் என்ற உண்மை மக்களுக்குப் புரிந்தது. லெனின் மீதான தாக்குதலுக்கு பழி வாங்க மக்கள் சபதம் ஏற்றனர். சோசலிசத்தை வெற்றி பெறச் செய்வதன் மூலம் தான் எதிரிகளைப் பழிவாங்க முடியும். ஒரு வருடத்தில் உற்பத்தி செய்ய வேண்டிய பொருட்களை ஆறு மாதத்தில் உற்பத்தி செய்யப் போவதாக தொழிலாளர்கள் உறுதி பூண்டனர். எட்டு மணி நேர வேலை நேரத்திற்கு பிறகு மேலும் நான்கு மணி நேரம் இலவசமாக, சம்பளம் வாங்காமல் வேலை செய்தனர்.
எதிரிப் படைகளை முறியடிக்கச் செம்படை உறுதி பூண்டது. மேலும் அதிக வீரத்துடன் போரிட்டது. லெனின் சுடப்பட்ட அடுத்த நாள் அவருடைய சொந்த ஊரான சிம்பிர்ஸ்க் நகரம் மீட்கப்பட்டது. செம்படையின் வெற்றி தொடங்கியது.

விளாடிமிர் இலீச் லெனின் Vladimir Ilyich Lenin Владимир Ильич Ленин | |
பதவியில் 8 நவம்பர் 1917 – 21 ஜனவரி 1924 | |
முன்னவர் | அலெக்சாண்டர் கெரென்ஸ்கி (ரஷ்ய இடைக்கல அரசுத் தலைவாராக) |
பின்வந்தவர் | அலெக்சி ரீக்கொவ் (ஜோசப் ஸ்டாலின் (கட்சித் தலைவர்) |
அரசியல் கட்சி | போல்செவிக் கட்சி |
பிறப்பு | ஏப்ரல் 22 1870 சிம்பீர்ஸ்க், ரஷ்யப் பேரரசு |
இறப்பு | சனவரி 21 1924(அகவை 53) கோர்க்கி, சோவியத் ஒன்றியம் |
தேசியம் | உருசியர் |
வாழ்க்கைத் துணை | நதேஷ்தா குரூப்ஸ்கயா |
துறை | அரசியல்வாதி, புரட்சியாளர் |
சமயம் | மத மறுப்பாளர் |
கையொப்பம் |
9 comments:
நல்ல வரலாற்று குறிப்ப்பு
நான் பார்த்த பிடல் காஸ்ட்ரோ மற்றும் சேகுவரா போராட்ட வரலாற்று வீடியோ பகிர ஆசைப்படுகிறேன் இதையும் பார்க்கவும்
http://www.newlankasri.com/ta/link.php?33e6M232JS
சரித்திரம்....
என்னாச்சு மைந்தன் அண்ணா?
வரலாற்று குறிப்புகளெல்லாம் எழுதுறீங்க
திருந்திட்டிங்களா
நல்லாத்தான் இருக்கு
மாப்ள உன்னோட பதிவு அருமை பகிர்வுக்கு நன்றி!
தகவல்கள் பகிர்வுக்கு நன்றி. good post.
17வது வயதிலே சதி முயற்சிக்கு உடந்தையாக இருந்தவர் தான்...பின்னாளில் ரஷ்யப் புரட்சியின் தந்தையானா.
வரலாற்றுப் பதிவி, பகிர்விற்கு நன்றிகள் சகோ.
Post a Comment