இப்படியான ஒரு படத்தை எடுப்பதற்கு பதிலாக 'அமெரிக்கன் பை' போன்ற செக்ஸி+காமெடி படங்களை எடுத்து ரிலீஸ் செய்தாலாவது ரசிகர்களின் ஏகப்பட்ட வரவேற்பால் செமையாக இலாபம் பார்க்கலாம்.சென்சார் குழு படத்தை முழுமையாக பார்த்து தான் சர்டிபிகேட் கொடுக்கிறார்களா இல்லை சட்டத்திலிருக்கும் ஓட்டைகள் போல இங்கும் ஏகப்பட்ட ஓட்டைகள் இருக்கின்றதா என்று ஜோசிக்க வைக்கிறது 'சேட்டை'.
ஏகத்துக்கும் இரட்டை அர்த்த வசனங்களும்,பொதுவில் கதைக்க கூச்சப்படும் சொற்களின் பாவனையும் என்று,ரசிகர்களை கலகலப்பாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளை நிறைவேற்ற இப்போதைய இயக்குனர்கள் முதல்கொண்டு காமெடியன் சந்தானம் வரை எத்தகைய அடிமட்டம் வரைக்கும் சென்று நக்கி வைக்க தயாராகவே இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
சீரியசாக கதை சொல்லபோய் அதில் இந்த லாஜிக் ஓட்டை அந்த லாஜிக் ஓட்டை என்று எதிர்மறை விமர்சனங்களால் அடிபட்டு தோல்வி படம் கொடுப்பதை விட,சிம்பிளாக 'மொக்கை'என்கின்ற பேஸ்மென்ட்டில் கொஞ்சம் மசாலா தடவி ஒப்பேற்றிவிட்டால், கதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை,லாஜிக் மற்றும் இன்னபிற தவறுகள், வீக்னெஸ்கள் பற்றியும் கவலைப்பட தேவை இல்லை என்று பல இயக்குனர்கள் கிளம்பியிருக்கிறார்கள்.
ப்றாத்தல்,கக்கூஸ்,ஆயி போறது,கக்கா,ஜட்டி,கூமுட்டை,கு.... என்று இதை படிக்கும் போதே,என்ன கறுமத்தை எழுதி வைத்திருக்கிறான் என்று நீங்கள் முகம் சுளிக்கிறீர்கள். ஆனால் படம் முழுவதுமாக இந்த சொற்கள் தான் நிரம்பி வழிகின்றன.இவற்றுக்கு தான் தியேட்டரில் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். எத்தனையோ வருடங்களாக காமெடி கிங்காக இருந்த வடிவேல் கூட,இப்படி கீழ்த்தரமான நிலைக்கு என்றைக்கும் போனதில்லை. சந்தானத்திடம் சரக்கு தீர்ந்து போய்விட்டதோ தெரியவில்லை.'டெல்லி பெல்லி' கதை என்றாலும்,தமிழுக்கேற்ற வகையில் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.அல்லது முழுமையாக முதலில் கூறியது போல அமெரிக்கன் பை போன்று கொடுத்திருக்கலாம்!'டெல்லி பெல்லி'யில் இதனைவிட அதிக அஜால் குஜால் இருந்திருந்தது.சரி அவற்றை அப்படியே போட்டிருந்தாலும் ஒரு பிட்டு படம் பார்த்த திருப்தியில் விமர்சனங்கள் ஆகா ஓகோன்னு வந்திருக்கும்.அதுவும் இல்லை.
இந்த படத்துடன் பெண்கள் மத்தியில் ஆர்யாவின் டிமாண்ட் சற்றே குறைந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.ஹன்சிகாகூட திருமணம் நிச்சயமாகி இருக்கும் சமயத்தில் ஹன்சிகாவுடன் கிஸ் அடிக்கிறார்.அப்படியே அஞ்சலியை உதடையும் வஞ்சகமில்லாமல் அடிக்கடி கடித்து வைக்கிறார்.ஆர்யா வரைட்டியான படங்கள் தேடவேண்டியது அவசியம்.அனைத்து படங்களிலுமே ஆர்யாவின் பாத்திரம் என்னமோ ஒரே மாதிரியாக தான் இருக்கிறது.கடைசி வரைக்கும் என்னை குழப்பிய விஷயம் என்னன்னா,பவர்ஸ்டாருக்கா பிறேம்ஜிக்கா நடிப்பு கொஞ்சமாவது வரும் என்பது தான்.அவனோட வாயும் முடியும்..அவனோட வாயிலேயே தேங்காய் துருவி,வாய்க்குள்ளே அம்பது பேருக்கு சம்பல் இடிக்க முடியும்.ம்ம்ம் எல்லாம் செல்வாக்கு..!
அஞ்சலி,ஹன்சிகான்னு இரண்டு பப்பாளி பழங்கள் படத்தில்.ஹன்சிகா நன்றாக மெலிந்திருக்கிறார்.முகம் மட்டும் அப்படியே ஊதிப்பருத்த பப்பாளி மாதிரி இருக்கிறது. காலிலிருந்து கமெரா மேலே தாராளமாக ஊடுருவி செல்ல இடம் கொடுத்திருக்கிறார்.ஆனால் மெலிந்திருந்தமையால் முகம் சுளிக்க வைக்கவில்லை.ஓகே ஓகே படத்தில் இருந்த சைஸில் இருந்திருந்தால் வாந்தி தான்.ஆனால் அந்த குறையை அஞ்சலி தீர்த்து வைக்கிறார்.முப்பது வயது தானே கை காலை மூடிக்கொண்டு நடிக்கலாம்.அடிக்கடி கையை தூக்கி காட்டி கடுப்பேத்துறார்.
தமனின் இசையில் பாடல்கள் பெரிதாக இல்லாவிட்டாலும்,படத்துடன் ரசிக்க கூடியதாக இருக்கிறது.'அகலாதே அகலாதே.." பாடல் தான் ரொம்ப பிடித்திருக்கிறது பலருக்கு.சந்தானத்தை ஹீரோவாக்கி ஹீரோவை சப்போர்ட் நடிகராக்கி எத்தனை படங்கள் தான் வெளிவர போகின்றனவோ!சந்தானம் கவுண்டர் காமெடி பண்றதுக்காகவே கூட ஒட்டிக்கிட்டு இருக்க பிரேம்ஜி.வில்லனாக நாசர்.கூடவே காமெடி வில்லனுக பட்டாளம்.பல இடங்களில் 'கலகலப்பு' கதையை ஞாபகப்படுத்தி சென்றது.அங்காங்கே கிடைக்கும் காமெடிக்காக,பரவாயில்லை ஒரு தடவை பார்க்கலாம்.இந்தியில் 'சூப்பர் ஹிட்டாக' டிக்ளேர் செய்யப்பட்ட படம் இது,தமிழில் ஓரளவுக்கேனும் முதலுக்கு நட்டமில்லாமல் ஹிட் ஆகும் என்று நம்பலாம்.ஒஸ்தி மாதிரி இல்லாத வரையில் ஏனோ சந்தோஷம் !
டவுட்டு டோங்கிரி: ஏம்பா, இந்த படத்திலயும் கிலோ என்ன விலை என்று கேட்ககூடிய அளவுக்கு ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் இருக்கே, இந்த ஓலக இலக்கியவாதிகள், ப்ராப்ள சினிமா விமர்சகர்களெல்லாம் பக்கம் பக்கமா எழுதி கிழிகிழின்னு கிழிப்பாங்கள்லே?
9 comments:
உவ்வே . . தியேட்டரே வாந்தில நிரம்புதாம்ல . . மைந்தன்
/Thinagaran Renuga said...
உவ்வே . . தியேட்டரே வாந்தில நிரம்புதாம்ல . . மைந்தன்//
வாந்தி மட்டுமா..ஆயி கூட போறாங்களாம்!
:-)
இந்தப்படத்துக்கெல்லாம் விமர்சனம் எழுதின ஒமக்கு சுத்தித்தான் போடணும் மச்சி..;)
ஹாய் மைந்தரே!ஹொவ் ஆர் யூ? ///இது நல்ல 'சேட்டை' யாவெல்லோ இருக்கு?ஹ!ஹ!ஹா!!!
பாஸ் நாம தான் இப்படி பேசுறோம் தியேட்டர்ல செம்ம க்லப்ஸ்
ivvlo risk eduththu padangalai paarkkira rasikarkalukkaaka oru thesiya viruthu pirivu arivikkonum baas.
இந்த படத்தின் ஹிந்தி மூலமான DELHI BELLY பாருங்க பாஸ் ,,,,,,அதுல எல்லாமே அப்படியே வரும்
நன்றி
நாடி கவிதைகள்
Post a Comment