இது கடந்த வியாழன் மற்றும் சனிக்கிழமை பேஸ்புக் இல் பகிர்ந்துகொண்ட என்னுடைய நிலைத்தகவல்கள்;இரண்டுமே திருட்டை பற்றியது..!
||ஒருவரின் உழைப்பை திருடுவதென்பது பெரும்பாலும் அனைத்து துறைகளிலும் நடந்தேறிவரும் ஒரு விடயம்.ஒருவரின் உழைப்புக்கு மதிப்பு கொடுத்து அதற்கேற்ற வெகுமதியோ,இல்லை 'இதற்கு சொந்தக்காரர் இவர்தான்"என்று கிரெடிட் கொடுப்பதையோ பலர் விரும்புவதில்லை.பேஸ்புக்கில் ஒருவருடைய நிலைத்தகவலை திருடி,உரியவரின் பெயர் குறிப்பிடாது தமது எண்ணம்போல பகிர்வதில் ஆரம்பித்து கீச்சுக்கள், வலைப்பதிவுகள்,பத்திரிகை முதல்கொண்டு ஊடகத்துறையிலும் இது சாதாரணமாக நடந்தேறிக்கொண்டே வருகிறது.உணர்ந்தே செய்கிறார்களா இல்லை தெரியாமல் செய்கிறார்களா என்று கூட ஜோசிக்கமுடிவதில்லை.வயதுக்கு வந்தோர் என்று மார்தட்டிகொள்வதை விடுத்து, அந்த வயதுக்கேற்ற செயல்களை செய்கிறோமா என்று இவர்கள் சிந்திக்கவேண்டும்.
உங்களது சொந்த ஆக்கமில்லாமல் வேறு யாராவது எழுதிய ஆக்கங்களையோ,பார்த்ததில் பிடித்தவற்றையோ பகிர தோன்றினால் அவற்றுக்கு சொந்தமானவரின் பெயரை ஒருமூலையிலேனும் குறிப்பிடுங்கள்.உங்களுடையதை,உங்கள் அனுமதியில்லாமல்,உங்கள் பெயர் குறிப்பிடாமல் வேறு எங்கையாவது பார்க்கும் கணத்தில் தான் அந்த வலியை உங்களால் உணரமுடியும்.||
||||"சமீபத்தில் தங்களின் blog பார்க்க நேர்ந்தது. தங்களின் கீழ்க்கண்ட post - ல் உபயோகபடுத்தபட்டிருக்கும் படங்கள் அனைத்தும் சென்னை ******* ***** மற்றும் சென்னை **** நண்பர்கள் மதுரை பேரணியில் கலந்துகொண்டபோது எடுக்கபட்டது, இவை அனைத்தும் அவர்களின் அனுமதியின்றி தாங்கள் blog - ல் உபயோகபடுத்தபட்டிருப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இந்த படங்களை உடனடியாக நீக்குமாறு கேட்டுகொள்கிறோம். இல்லையென்றால் நாங்கள் நடவடிக்கை எடுக்க நேரிடும். தங்களின் இந்த தவறான செயலால் அப்படங்களில் இடம்பெற்ற பெண்கள், ஆண்களின் வாழ்கையில் பாதிப்பு ஏற்படுவதை தாங்கள் உணர வேண்டும்
"இணைய தேடியந்திரத்தில் பரவிக்கிடக்கும் படங்களை உபயோகிப்பதில் கூட சில பிரச்சனைகள் இருப்பதை இப்போது தான் உணர்கிறேன். ஓரினச்செயற்க்கையாளர்கள் பற்றிய பதிவில் நான் இணையத்தில் எடுத்து உபயோகித்த படங்கள் சம்பந்தமாக சென்னையிலிருக்கும் ஒரு "நிறுவனத்தின்"இயக்குனர் எனக்கு அனுப்பியிருந்த மெயிலின் ஒருபகுதி தான் இது.இனிமேல் இவற்றிலும் அவதானமாய் இருக்கவேண்டும் நான்.கொய்யாலே இனி என்னோட விஷயங்களை ஆட்டயப்போட்டு போடுற ஒவ்வொருத்தருக்கும் நானும் மெயில் அனுப்பலாம்னு இருக்கேன் ;)||||
--------------------------------------
இது நேற்று நான் பவர் ஸ்டார் பற்றி பகிர்ந்துகொண்டது:
தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும்,விமர்சனங்களை எல்லாம் மெல்லிய புன்சிரிப்புடன் கடந்து செல்லும் நிதானமும் இருந்தால் யாராக இருந்தாலும்,அவர்கள் நினைத்ததை ஒருநாள் அடைந்துவிட முடியும் என்பதற்கு மிக சரியான நடைமுறை உதாரணம் பவர்ஸ்டார்.
ஆரம்பத்தில் ஒரு கோமாளியாக பார்க்கப்பட்டு பின்னர் சிலகாலம் செல்ல,காமெடியனாக பார்க்கப்பட்டு இன்று நிஜமாகவே ரசிகர்கள் மத்தியில் ஒரு ஸ்டார் ஆக உருவெடுத்திருக்கிறார் என்றால் மேலே கூறிய பண்புகள் தான் காரணம்.கோமாளியாக பார்த்த சக நடிகர்கள் தொடக்கம் அவரை "நீயாநானா"நிகழ்வுக்கு அழைத்து இன்னமும் கோமாளியாக்க முயன்ற கோபிநாத் வரையில் எவருமே பவர்ஸ்டார் இந்த இடத்தை பிடிப்பார்,இத்தனை ரசிகர்களை பெறுவார் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள்.
2011 இல் பவர்ஸ்டார் என்றால்,அவர் யார் என்று கெட்டவர்கள் தான் அனைவரும்.ஆனால் இன்று இவரை தெரியாதவர்கள் எவரும் இருக்கமுடியாது.ஜெயா டிவி,சன் டிவி, விஜய் டிவி என்று அனைத்து தொலைக்காட்சிகளும் தங்களது நிகழ்ச்சிகளின் ரேட்டிங்கை உயர்த்திக்க பவர்ஸ்டாரை சிறப்பு அதிதியாக அழைத்துக்கொண்டிருக்கின்றனர். மறுபக்கம் ஷங்கரின் கடல் படத்தில் ஒப்பந்தமான பவர், நேற்று வெளியான "கண்ணா லட்டு திங்க ஆசையா" படத்தில் சந்தானத்துடன் இணைந்து காமெடியில் பட்டை கிளப்பியிருக்கிறார்.இந்த படத்தின் மூலம் இவருக்கு மேலும் பல ரசிகர்கள் கிடைத்திருப்பது கண்கூடு.
எச்சந்தர்ப்பத்திலும் மாறாதது அவரது புன்சிரிப்பு தான்.(அது தான் எனக்கு பிடித்ததும் கூட.(Mister Cool !)) நிகழ்வுகளில் வந்து "என் இனிய ரசிகப்பெருமக்களே" என்று கூறும்போதோ,முகத்துக்கு நேரே இழிவாக எவராவது பேசும் போதோ,மாறாதது என்னமோ அந்த வசீகர புன்னகை தான்.தனக்கு ஐம்பது லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று அன்று கூறியது கேட்டு சிரித்தவர்களில் பலர் இன்று இவர் ரசிகர்களாகி இருக்கிறார்கள்.ஐம்பது லட்சம் ரசிகர்களை பெறுவேன் என்கின்ற தன்னம்பிக்கையை நிகழ்த்தி காட்டியிருக்கும் பவர் ஸ்டாரின் அந்த துணிச்சல் எத்தனைபேருக்கு வரும்??
சினிமாவுக்குள் வந்ததற்கு காரணம் என்ன என்பதற்கு "புகழ்" என்பதே அவரின் பதிலாக இருந்தது.நினைத்ததை இருவருடங்களுக்குள் சாதித்துவிட்டார் பவர் ஸ்டார்.ஒவ்வொருத்தரிலிருந்தும் கற்றுக்கொள்ள ஏதாவது ஒரு விடயம் இருக்கும்.பவர் ஸ்டாரிடம் இருந்து கற்றுக்கொள்ள பலவிடயங்கள் இருக்கின்றன.அவற்றை எடுத்துக்கொள்ளுங்கள். தேவையற்றதை விட்டுவிடுங்களேன்!!
#பவர்ஸ்டார்-நிகழ மறுத்த அற்புதம் இல்லை-நிகழ்ந்த சரித்திரம்!!
------------------------------------------------
இதை அப்படியே காப்பி பண்ணி என்னுடைய பெயரை எங்கும் குறிப்பிடாமல் "அவ்ளோ பெரிய காமெடி இல்லை இது" என்கின்ற பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றனர்,நான் பகிர்ந்த மறு கணமே.ஷங்கரின் கடல் படத்தில் என்று தவறுதலாக எழுதியிருந்தேன்.அது ஷங்கரின் "ஐ" படம்.அந்த தவறையும் அப்படியே ஒப்புவித்திருக்கிறார்கள்.
எத்தனை லைக்ஸ் எத்தனை ஷேர்ஸ் என்று பாருங்கள். எனது நண்பர்கள் பட்டியலில் இருக்கும் சிலர் கூட அங்கு லைக் செய்திருக்கின்றனர்.யாரை சொல்லி நொந்துகொள்வது?
இந்த பேஜ் அட்மின் பெயர் "சிம்பு ரசிகன் டிஷாந்தன்".
நானும் எனது நண்பர்கள் புவிகரன்,ஜீவதர்ஷன்,அஹ்மத் ஷாஜ் போன்றோரும் அவர்களின் பதிவுக்கு சென்று உரிமை கோரி போர்க்கொடி தூக்கிய பின் சில மணி நேரங்களின் பின்னராக எனது பெயர் "via மைந்தன் சிவா" என்று இணைக்கப்பட்டிருக்கிறது. சாதாரணமாக எமது எக்கவுண்ட் மூலம் நிலைத்தகவல் பதிந்தால் எடிட் செய்ய வசதி கிடையாது.ஆனால் பேஜ் அட்மின்களுக்கு அந்த வசதி இருக்கிறது.அதன் மூலம் என் பெயர் சேர்க்கப்பட்டிருக்கிறது.
என்னுடையதை அவர் களவாடிவிட்டார் என்று அடிபடுவதற்க்காகவோ,என்புகழ் பரப்பவோ இதனை கூறவில்லை.என்ன தான் எடுத்து கூறினாலும் இவர்கள் திருந்துவது போன்று தெரியவில்லை.காப்பிரைட்ஸ் என்பது சமூக வலைத்தளங்களில் முக்கியமாக பேஸ்புகில் சாத்தியமில்லாதது.எவ்வித பாதுகாப்பும் கிடையாது.ட்விட்டரில் கூட ட்வீட்களை ப்ரொடெக்ட் பண்ணி வைக்கும் வசதி இருக்கிறது என்று நினைக்கிறேன்.அதனால் பதிவின் சொந்தக்காரருக்கு தெரிவிக்காமலும்,அவருடைய பெயரை குறிப்பிடாமலும் காப்பி பேஸ்ட் பண்ணும் நடவடிக்கைகள் தாராளமாக இடம்பெற்று வருகின்றன.சொந்தமாக சிந்தித்து பதிவு போட தெரியாத,சுயபுத்தி இல்லாத,கற்பனை வளம் இல்லாத,வெட்கம் மானம் ரோஷம் எதுவுமற்ற,சொல்புத்தி கேட்காத,சுயபுத்தி கூட இல்லாத "நாய்கள்"தான் இப்படியான காரியத்தை செய்வார்கள் என நம்புகிறேன்.ஆயிரம் பிரச்சனைகளை தாண்டி கல்யாணம் செய்பவன் ஒருவன்,முதலிரவுக்கு செல்பவன் இன்னொருவன் என்பது போல எழுதுவது ஒருவன் ஆனால் காப்பி பண்ணி பகிர்ந்து அதன் க்ரெடிட்ஸ் முழுவதையும் பெற்றுக்கொள்வது இன்னொருவனாக இருக்கும்.நாம் எழுதிய பதிவு இன்னொருவனால் ஷேர் செய்யப்பட்டு(அனுமதி இன்றி,நமது பெயர் கூட இன்றி) அங்கு இருநூறு ஷேர் நானூறு லைக்ஸ் வாங்குவதை பார்க்கையில் உங்களுக்கு புரியக்கூடும் அந்த வேதனை.
பொங்கல் வாழ்த்துக்கள் நண்பர்களே...இது என்னுடைய இருநூற்றி ஐம்பதாவது பதிவு :)
தேவையில்லாமல் டாக் செய்யவேண்டாம் என்று எத்தனையோ தடவை கூறியும் டாக் பண்ணுபவர்களை போன்றவர்கள் தான் இவர்களும்.இரு தரப்பையும் திருத்த முடியாது.ஒரு சமயம் டாக் பண்ண வேண்டாம் என்று நிலைத்தகவல் பகிர்ந்திருந்த அன்றே சிலர் டாக் பண்ணியிருந்தார்கள்.இவர்களை நினைத்து சந்தோசம் தான் கொள்ளமுடியும்!!வெட்கம்கெட்ட ஜென்மங்கள்.பேஸ்புக் பதிவுகளுக்கும் காப்பிரைட்ஸ் அல்லது ப்ரோடேக்சன் சக்கர்பெர்க் கொண்டுவந்தால் தான் இவர்கள் தொல்லையை நிறுத்த முடியும்.
13 comments:
இருநூற்றி ஐம்பதாவது பதிவு /////
வாழ்த்துகள் நண்பா.....
அப்படியே பொங்கல் வாழ்த்துக்கள்....
வாழ்த்துகக்கள் தலைவா.. 250 பதிவுல்லாம் எட்ட முடியாத சாதனை தான்!! (எனக்கு)
காப்பி சமாச்சசாரம் பற்றிய உங்கள் கருத்தில் வரிக்கு வரி ஒத்துப்போகிறேன். ஆனால் பவர் ஸ்டார் பற்றிய கருத்துக்களில் எனக்கு உறுதியான மாறுபாடு உண்டு.. ஆனா அதைப் பேசி ஏன் நேரத்தை வேஸ்ட் பண்ணனும? :)
மறுறுபடியும், வாழ்த்துக்கள்!!!!!!
படம் கலக்கலா வந்திருப்பதாக சொல்கிறார்கள் பார்ப்போம்...!
மிஸ்டர் கூல் பட்டம் சூப்பர் தல
250 பதிவு//வாழ்த்துக்கள் பாஸ்
இவர்கள் இப்படியே தான் இருப்பார்கள் திருத்தவும் முடியாது திருந்தவும் மாட்டார்கள்..... //இது என்னுடைய இருநூற்றி ஐம்பதாவது பதிவு// வாழ்த்துக்கள் நண்பா....
இருநூற்றி ஐம்பதாவது பதிவுக்கு வாழ்த்துகள்.
பொங்கல் திருநாள் & 250 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் .
250 க்கு வாழ்த்துக்கள். நான் இன்றுதான் 200 ஐ தொட்டேன்.
இருநூற்று ஐம்பது பதிவு கண்ட மைந்தருக்கு வாழ்த்துக்கள்!கூடவே தைத் திருநாள் வாழ்த்துக்களும்!!!
250 பதிவுக்கு வாழ்த்துக்கள் பாஸ்.இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
சீனிவாசனைப் பற்றிய எனது கருத்தும் மாறுபட்டதுதான். எனினும், உங்கள் அறிவுசார் சொத்துரிமை ஆதங்கம் எனக்குப் புரிகிறது. ஆனால் ஒரு படைப்பு எழுதி முடிக்கப்பட்டவுடனேயே அதைப் படைத்தவனுக்கு சொந்தமில்லாததாகி விடுகிறது என்கிற அமைப்பியல்வாதக் கருத்து சமூக வலைத்தளங்களுக்கோ, வலைப்பூக்களுக்கோதான் மிகவும் பொருந்தும் என்கிற உண்மையை ஏற்றுக்கொண்டால் வேதனைகள் இருக்காது.
One day you will become a very good writer. when people like jockey, wire, keychain brass can become writers. (they themselves they think, they are).wishing you All the best.
Post a Comment