அதிகம் விமர்சனத்துக்கு ஆளாகின்றாய் என்றாய் நீ நன்றாக சாதிக்கின்றாய் என்று எங்கோ படித்த ஞாபகம்.சாதிக்கிறாயோ இல்லையோ,எதோ ஒருவிதத்தில் நீ மற்றயவர்களால் கவனிக்கப்படுகிறாய் என்பதே உண்மை.அண்மையில் ஒரு நண்பர் சாட்டில் வந்து,பிரபலம் ஆவதற்கு என்ன வழி என்று கேட்டார்.இது வழமையாக பெரும்பாலானோர் பத்தி எழுதுகையில் தமது கருத்துக்களை வலுப்படுத்த "உருவாக்கப்படும்"உதாரணமாக அன்றி,உண்மையாக நடந்த சம்பவம்.எதோ ஒரு வழியில் மற்றையவர்கள் உன்னை கவனிக்க வைத்துவிட்டால் போதுமானது.சமூக வலைத்தளங்கள் தமது வளர்ச்சியின் உச்சங்களை தொட்டுக்கொண்டிருக்கின்ற இன்றைய காலத்தில் ஒரு தொடக்கத்துக்கான ஆரம்ப புள்ளியை மட்டும் திறமையாக எவனால் கண்டுபிடித்து நிலைநிறுத்திக்க முடிகின்றதோ,அவனால் தொடர்ந்து முன்னேற்ற பாதையில் செல்ல முடியும் என்பது சொல்லித்தான் தெரியவேண்டியதல்ல என்றேன்.
அலுவலக நண்பர்களுடன் சென்று நேற்று "ஸ்டெப் அப் 4 " (Step up 4)படம் பார்த்தேன். நடனத்தை மட்டுமே முன்னிறுத்தி எடுக்கப்பட்டிருக்கும் பல படங்கள் தமிழில் பார்த்திருப்போம்.ஆனால் இவர்களின் தளமே வேறு.படம் முடிந்த பின்னர் கூட எங்கள் உடலில் ஆட்டம் விட்டுப்போகவில்லை.படத்தை பற்றி விபரிக்க தேவையில்லை..கட்டாயம் பாருங்கள்.நிச்சயமாய் பிடிக்கும். நான் 3 D 'யில் பார்த்தேன்.ஆங்கில படம் பார்ப்பது அலுவலக நண்பிகளுக்கு இது முதல் முறை போலும் . ரொமான்ஸ் காட்சிகள் வரும்போதெல்லாம் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.பேசாமல் முதலே தீர்மானித்திருந்தபடி மாற்றான் பார்க்கவே கூட்டி சென்றிருக்கலாம் என்று நொந்துகொண்டேன்.
நடனம் பிடிக்காவிடில்,படத்தில் வரும் மியாமி கடல்கரை காட்சிகளையாவது தியேட்டரில் சென்று பாருங்கள்,கொடுத்த பணத்துக்கான வெகுமதி நிச்சயம் உண்டு.படம் பார்க்க முடியாது,அதில் வரும் சிறப்பான நடனங்களை மட்டும் தான் பார்ப்போம் எனில்,இங்கே செல்லுங்கள்.
சரி இறுதியாக கொஞ்சம் முன்னதாக நான் பேஸ்புக்கில் படித்து சிரித்த பிட்டு நியூஸ்...படத்தை பெரிதாக்கி பாருங்கள் எழுத்து புரியாவிடில்.
சாரு அளவுக்கு ஜெமோ'வால் பிரபல்யம் பெற முடியாததற்கு காரணம் இது தான்.சாருவின் எழுத்துக்களை படித்து சாருவை பற்றி தெரிந்து கொண்டவர்களை விட சமூக வலைத்தளங்களில் "சாரு"வை வைத்து நடாத்தப்படுகின்ற அலப்பறைகள் தான் "யார் இவன்" என்ற கேள்வியை பலருக்கு உருவாக்கி தேடவும் வைத்திருக்கும்.சாரு அளவுக்கு சமூக வலைத்தளங்களில் ஜெமோ கண்டுகொள்ளப்படாததால் தான் பலருக்கு இன்று ஜெமோவை விட சாருவை அதிகப்படியாக தெரிந்திருக்கிறது.தமிழ் பொண்ணுடனான அந்த "சாட் ஸ்காண்டால்" வெளிவந்ததற்கு பின்னர் தான் பலருக்கு சாருவை தெரியவந்தது.இதே போல தான் நித்தியானதாவை கூட!அதற்காக இது போன்ற "செக்ஸ் ச்கேண்டால்ஸ்" மட்டும் தான் பிரபலமாக ஒரே வழி என்று இப்போதே வேஷ்டியை முழங்காலுக்கு மேலே தூக்கி கட்டிக்கொண்டு கிளம்பிவிடாதீர்கள். வேண்டுமானால் நீங்களும் அவர்கள் போல் "பிரபலம்"ஆகியதன் பின்னாடி மேலும் உங்கள் புகழை பரப்ப இது போன்ற கைங்காரியங்களில் ஈடுபடுங்கள்.சொன்னது நான் தான் என்று கடைசி வரை கூறிவிடாதீர்கள்;முக்கியமாக உங்கள் மனைவியருக்கு.
இதைப்பற்றி பலர் ஏலவே கூறியிருந்தாலும் கூட,உண்மையானது என்னமோ நம்மவர்கள் மத்தியில் முக்கியமான இரண்டு விடயங்கள் காணப்படாமை தான்.பொதுவாக சொல்வதானால் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது என்பது இதை தான்.இன்னமும் புரியவில்லையா?அரைத்த மாவை அரைப்பது தான்.
1 . Creativity
2 . Variety
ஒரு சினிமாவை எடுத்துக்கொண்டால் கூட,சாதாரண ரசிகன் எதிர்பார்ப்பது படத்தில் புதிதாக ஏதாவது முயர்ச்சித்திருக்கிறார்களா,படம் நல்ல கலவைகளுடன் வந்திருக்கிறதா என்று தான்.எந்த விடயத்திலும் மேல்கூறிய இரண்டு விடயங்களையும் தான் பொதுவாக அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.அந்த இரண்டு விடயங்களையும் பூர்த்தி செய்பவர்கள் இலகுவாக மற்றையோரை கவர்ந்துவிடுகின்றனர்.
இவற்றுடன் முக்கியமான இன்னொரு,எதற்குமே முதல் கால் வைத்தவன் தான் அதிகமாக பேசப்படுவான்.அவன் பெயர் தான் மக்கள் மனதில் நிலைத்திருக்கும்.சிலர் விமர்சனம் செய்வதற்கென்றே பிறந்திருப்பார்கள்.போன ஜென்மத்தில் விமர்சனங்களால் மிகவும் பாதிக்கப்பட்டிருப்பார்கள் போலும்.ஒரு சினிமா படத்தில் ஆயிரம் குறை குற்றம் கண்டுபிடித்து எழுதி கிழிப்பார்கள்.கை நிறைய பணம் இருந்தால் ஸ்பான்சர் செய்து நீ தான் இப்படத்தின் இயக்குனர் என்று அந்த விமர்சகர்களை இயக்குனராக்கி வேடிக்கை பார்க்கவேண்டும் என்பது எனது கனவு.அப்போதாவது அவர்களால் எந்த பிழையும் இல்லாமல் ஒரு காவியத்தை எடுத்து முடிக்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.
சினிமா மட்டுமல்லாது நிஜ வாழ்க்கையிலும் கூட, அடுத்தவர் வாழ்க்கையை விமர்சனம் செய்வதிலிருந்து கண்ணில் தென்படும் அனைத்தையும் விமர்சனம் செய்பவர்களால்,அவர்களின் விமர்சனங்களை போல,அவர்களாலேயே வாழ்ந்துவிட முடிவதில்லை.விமர்சனம் செய்வது என்பது இலகு தான்.ஆனால் ஆரோக்கியமான விமர்சனங்கள் தான் சிறப்பான படைப்புகள் உருவாக வழிவகுக்கும் என்று கூறிக்கொண்டாலும் கூட,பெரும்பாலானோர் தங்களால் முடியாததை இன்னொருவன் தங்கள் கண்முன்னே சாதிக்கையில் அவனை விமர்சனம் என்கின்ற போர்வையில் குழிபறிக்க காத்திருக்கின்றனர்.
--------------------
எதோ பெரிதாக சொல்கிறானே இவன் என்ன பெரிய **************(விரும்பியதை போட்டுக்கொள்ளுங்கள்)என்று நினைக்கலாம்.இவற்றை சொல்வதற்கு பிரபலமாக இருக்கவேண்டிய அவசியம் கிடையாது.உங்களை சூழ நடப்பவற்றை அவதானமாக பார்த்தாலே நடப்பவை புரியும்.எவற்றிலும் முதலில் பார்வையாளனாக இருந்து மாற்றங்களை அவதானிப்பவனே அடுத்த "மாற்றுபவன்" ஆகிறான்(சரி விடுங்க மாற்றான்'னு வைச்சுக்கோங்க).அது தாங்க ஆங்கிலத்தில் கூறுவதாய் இருந்தால் "Trend Setter"...!
அலுவலக நண்பர்களுடன் சென்று நேற்று "ஸ்டெப் அப் 4 " (Step up 4)படம் பார்த்தேன். நடனத்தை மட்டுமே முன்னிறுத்தி எடுக்கப்பட்டிருக்கும் பல படங்கள் தமிழில் பார்த்திருப்போம்.ஆனால் இவர்களின் தளமே வேறு.படம் முடிந்த பின்னர் கூட எங்கள் உடலில் ஆட்டம் விட்டுப்போகவில்லை.படத்தை பற்றி விபரிக்க தேவையில்லை..கட்டாயம் பாருங்கள்.நிச்சயமாய் பிடிக்கும். நான் 3 D 'யில் பார்த்தேன்.ஆங்கில படம் பார்ப்பது அலுவலக நண்பிகளுக்கு இது முதல் முறை போலும் . ரொமான்ஸ் காட்சிகள் வரும்போதெல்லாம் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.பேசாமல் முதலே தீர்மானித்திருந்தபடி மாற்றான் பார்க்கவே கூட்டி சென்றிருக்கலாம் என்று நொந்துகொண்டேன்.
நடனம் பிடிக்காவிடில்,படத்தில் வரும் மியாமி கடல்கரை காட்சிகளையாவது தியேட்டரில் சென்று பாருங்கள்,கொடுத்த பணத்துக்கான வெகுமதி நிச்சயம் உண்டு.படம் பார்க்க முடியாது,அதில் வரும் சிறப்பான நடனங்களை மட்டும் தான் பார்ப்போம் எனில்,இங்கே செல்லுங்கள்.
சரி இறுதியாக கொஞ்சம் முன்னதாக நான் பேஸ்புக்கில் படித்து சிரித்த பிட்டு நியூஸ்...படத்தை பெரிதாக்கி பாருங்கள் எழுத்து புரியாவிடில்.
8 comments:
////ஆங்கில படம் பார்ப்பது அலுவலக நண்பிகளுக்கு இது முதல் முறை போலும் . ரொமான்ஸ் காட்சிகள் வரும்போதெல்லாம் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.பேசாமல் முதலே தீர்மானித்திருந்தபடி மாற்றான் பார்க்கவே கூட்டி சென்றிருக்கலாம் என்று நொந்துகொண்டேன்.////
அப்ப அடுத்த முறை பிக்கப் ஆகிடுவாங்க போல அட காட்சிகளை ரசிப்பதை சொல்ல வந்தேன்
பெரிய **************//
pudunki..
#விமர்சகர்களை இயக்குனராக்கி வேடிக்கை பார்க்கவேண்டும்#
ரைட்டு தல
அப்புறம் சாரு,ஜெமோ மேட்டர் சூப்பர் ரொம்ப factu
"பிரபலம்"ஆகியதன் பின்னாடி மேலும் உங்கள் புகழை பரப்ப இது போன்ற கைங்காரியங்களில் ஈடுபடுங்கள்/// அப்போ இனி நம்ம மைந்ததனை இலங்கை நாளிதழ்களிலும் டிவிகளிலும் தலைப்பு செய்தியாக காணலாம்.... ஹா ஹா....
ஆனாலும் சொன்ன மேட்டருகள் என்னவோ நெஜம் தான்..... உதாரணம் நம்மா சாரு மேட்டர் :)))))
படம் பார்க்கவில்லை பாடல்கள் மட்டும் பார்த்தேன் .... கலக்கல் பாஸ் :)))
எப்படி பாஸ் உங்களால மட்டும் முடியுது .இப்படி ?
சொல்லுங்க அடுத்த முறை நாங்களும் முயற்சிப்போமில்ல
பாதாம் பார்க்க .....
//கை நிறைய பணம் இருந்தால் ஸ்பான்சர் செய்து நீ தான் இப்படத்தின் இயக்குனர் என்று அந்த விமர்சகர்களை இயக்குனராக்கி வேடிக்கை பார்க்கவேண்டும் என்பது எனது கனவு.//
நொந்து நூலாகி இருக்கிறீங்கள் போல .. விமர்சனம் எண்டது இயல்பானது தானே .. அவரவர் தளத்தில் விமர்சிக்கலாம். ஆனால் படம் சுப்பர் ஹிட் என்று தனக்கு பிடிக்குதோ இல்லையோ தயாரிப்பாளர் காசு பார்த்தால் அது நல்ல படம் என்று பலர் நினைப்பது தான சில நேரங்களில் குழப்பமாக இருக்கும். அதையும் கூட அவரவர் சட்டம் சொல்லி ஸ்கிப் ஆகிடலாம் தான்!
Post a Comment