Sunday, June 17, 2012

நண்பிக்கு ஓர் கடிதம்(மனதளவில் + )...!!

அன்புள்ள நண்பிக்கு,
ஆண்கள் எளிமையானவர்கள்,பெரும்பாலும் பெண்களை போன்று சிக்கல் இல்லாத பொதுப்படையான நடத்தையை கொண்டவர்கள்.ஆண்களை நாம் கவர்வதற்கு சில தந்திரோபாயங்களை கையாளுதல் அவசியம் என்றுநீ நினைக்கலாம் .உன் நினைப்பு சரியானதே. எனது அப்பா கூறுவார், "தான் எப்போதும் தன் நிலையிலிருந்து மாறமாட்டான் என்ற நினைப்பிலேயே ஒரு ஆண் திருமணம் செயக்கிறான் ஆனால் ஆண்களை தங்களால் மாற்றமுடியும் என்ற நினைப்பிலேயே பெண்கள் திருமணம் செய்கின்றனர்." ஆனால் இந்த இரண்டுமே தவறாகிறது.



ஆண்கள் தாங்கள் விரும்பும் பெண்களிடம் இருந்து சிலவற்றை எதிர்பார்க்கிறார்கள்.அவற்றை கொண்டிருக்கும் பெண் இலகுவாக ஆண்களை கவர்ந்துவிடுகிறாள்.அவற்றில் சிலவற்றை உனக்கு தருகிறேன்:
1 .விளையாட்டுக்களில்,பொது விடயங்களில் ஆர்வம்.
உனக்கு விளையாட்டு பிடிக்கவில்லையா?பரவாயில்லை.யாருக்கு தேவை!நீ தினசரி உன் வாழ்வில் நடப்பவற்றை உன் கணவன்/காதலனோடு பகிர்ந்துக்க ஆசைப்படுகிறாய் அல்லவா,அதே போலத்தான் விளையாட்டு அவர்களுக்கு.முழுமையான விளையாட்டு அறிவு இல்லாவிட்டாலும் கூட,ஓரளவுக்கேனும் தெரிந்து வைத்திரு.அதை போல தான் பொது விடயங்களும்.ஆணின் எதிர்பார்ப்புக்கு இல்லாவிட்டாலும் கூட உன்னை அறிவுடையவளாக,பலதும் தெரிந்தவளாக வைத்திரு.
2 .காதலனின் நண்பர்களை வெறுக்காதே.
ஒரு ஆணை பொறுத்த வரையில் அவனது நண்பர்களை அவன் பெரிதாக கொண்டாடுவான்.எடுத்த எடுப்பிலேயே அவன் நண்பர்களை வெறுத்து பேசுவதை தவிர்த்துவிடு.ஆரம்பத்தில் நண்பர்களை பற்றி நன்றாக பேசு உன் கணவன்/காதலனிடம்.சிறிது காலம் செல்கையில் கணவன் உன்னை சுற்றி வர ஆரம்பிப்பான்.கணவனை முந்தானையில் முடிந்து வைத்திருக்க சொல்லுவார்கள்?அது உந்தன் திறமை.கணவனுக்கு எது அதிகம் பிடிக்கிறதென்பதை அறிந்து அதற்க்கேற்ப்ப அவனை திருப்திப்படுத்தி உன்னை சுற்றி வர வை.அப்புறமாக மெது மெதுவாக தீய நண்பர்களின் சகவாசம் பற்றி எடுத்துக்கூறு.உன்னை தன் வாழ்க்கையில் பெறுமதிமிக்கவளாக கருதும் எந்த ஒரு ஆணும் உன் பேச்சை கேட்பான்.

3 .அவனது நகைச்சுவையை ரசிக்க பழகு.
உனக்கு நகைச்சுவை பிடிக்காதா?பரவாயில்லை..உன் கணவன்/காதலன் பீட்சா சாப்பிடுகையில் முழுவதையும் உண்ண நினைப்பானா?இல்லை ஆனால் நாம் நினைக்கிறோம் அல்லவா? அதை போல தான்.பொய்கள் பெண்களுக்கு பிடிக்காது.ஆனால் அவன் சொல்லும் சில ஜோக்ஸ்'க்கு சிரிப்பதால் ஒன்றும் குறைந்து விடாது தானே!நீ நினைப்பவை உன் ஆணிடம் இருந்து கிடைப்பது அவசியம் என்றால் இந்த வகையான வேலைகள் நீ செய்து தான் ஆகவேண்டும்.
4 .காதல்,ரொமான்ஸ்,செக்ஸ்
முக்கியமாக நீ பெற்றோர்கள் பேசிவைத்த ஆணை திருமணம் செய்கிறாய் என்றால்,மேல்கூறிய மூன்று விடயங்களிலும் கொஞ்சமாவது பாண்டித்தியம் பெற்றிருத்தல் அவசியம்.முக்கியமான பரீட்சை ஒன்றுக்கு எதுவித தயார்ப்படுத்தல்களும் இன்றி செல்ல முடியுமா?நேர்முகப்பரீட்சை ஒன்றுக்கு தயார்ப்படுத்தல் இல்லாமல் முகம்கொடுக்க முடியுமா?இல்லை அல்லவா?அதே போல தான் வாழ்க்கையும்.குறித்த வயதுகளில் அறியவேண்டியவற்றை அறிந்து வைத்திருப்பது உன் பொறுப்பு ஆகிறது.இந்த விடயத்தில் ஆண்களின் பார்வைகள் வேறுபாடும்.உனது ஆண் எந்த வகையறா என்று தெரியும் முன்னர் நீ தெரியவேண்டியத்தை தெரிந்து வைத்திருந்தால் உனது பக்கம் இருக்கின்ற ஆபத்து தவிர்க்கப்படுகிறது.

5 .உடனடி முடிவுகள் எடுத்தல்.
அனேக பெண்களுக்கு இருக்கின்ற பிரச்சனை இது.ஒன்றையும் ஆராய்ந்து பார்க்காமல் மேலோட்டமாக ஒரு முடிவு எடுத்து அதன் பால் இயங்குவது.இது பல சமயம் பிரச்சனைகளில் தான் முற்றுப்பெறுகிறது.ஒரு பத்திரிகை/இணைய செய்தியின் தலைப்பை பார்த்து செய்தியை ஊகித்தல் போன்றது இது.தலைப்பு உன்னை திசைதிருப்பலாம்.உள்கிடக்கை வேறாக இருக்கலாம்.உடனே தவறான முடிவெடுப்பதை விடுத்து ஆராய்ந்து முடிவெடுக்கும் பெண்கள் ஆண்களை கவருகிறார்கள்.
6 .மேக் அப்,அலங்காரங்கள்
பெரும்பாலான ஆண்கள் அதிகப்படியான மேக் அப் பண்ணும்,அலங்காரம் பண்ணும் பெண்களை வெறுக்கிறான்.தனக்கு எது அழகாய் இருக்கும் என்று உனக்கு நன்றாக தெரிய வேண்டும்.மேக் அப் ரசனை இல்லாத பல பெண்கள் இலகுவாக ஆண்களின் வெறுப்பை சம்பாதிக்கிறார்கள்.அளவான,எளிமையான அழகூட்டல் பெரும்பாலான ஆண்களை கவருகிறது.
7 .உறவுகள்,அயலவர்கள் பற்றி எப்போதும் கதைக்காதே
பெரும்பாலான தொலைகாட்சி நாடகங்கள் பார்த்தோ,அல்லது இயல்பாகவோ,இந்த குணம் பெரும்பாலான பெண்களில் காணப்படுகிறது.எப்போதும் பிறரை பற்றி குறை பேசும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்காது.அதுவும் இன்று போன்ற மிகவும் பிசி'யான காலங்களில் இத்தகைய "பெறுமதி சேர்க்காத கதைகள்"ஐ ஆண் வெறுக்கிறான்.அதே போல் அதிகமான அலட்டல் கதைகளும் ஒரு ஆண் உன்னை வெறுப்பதற்கு காரணமாகலாம்.
8 .தனிப்பட்ட உறவுகளை ஆயுதமாக்காதே.
பெரும்பாலான திருமணம் முடித்த பெண்கள் பற்றி அதிக நகைச்சுவை துணுக்குகள் வாசித்திருப்பாய்.தினசரிநடக்கும் சம்பவங்களை வைத்து இரவில் பெண்கள் பழிவாங்குவார்கள். இது போன்ற உத்திகள் சிறிது நாட்கள் உபயோகப்பட கூடும்.பின்னர் அதுவே உன் மீதான ஈர்ப்பை கொலை செய்துவிடவும் கூடும்.
9.ரூல்ஸ் பேசுவது கூடாது

வேலைக்கு போகும் பெண்ணாக இருந்தால் கணவரிடம் பாதிவேலைகளை செய்ய சொல்லி கட்டாயப்படுத்தி ரூல்ஸ் பேசுவது எந்த ஆணுக்குமே பிடிக்காதது.கறாராக சொல்லுவதை விடுத்து அன்பாக உங்கள் கணவன் கேட்கும் வகையில் உக்திகளை பாவித்து வேலை வாங்கலாம். ஆணவத்தின் நீலாம்பரி கேரக்டரை விட அன்பான கேரக்டர் தான் அடிபணியச் செய்யும் என்பதை உணர்ந்துகொள்.


10.பொய்சொல்லவைக்காதே
ஆண்கள் உண்மைகளை மறைப்பதால் தான் பெண்கள் கேள்விகேட்கிறார்கள்..அல்லது பெண்கள் கேள்வி கேட்பதால் தான் ஆண்கள் உண்மையை மறைக்கிறார்கள் என்று இருபக்கமாகவும் விவாதிக்கலாம்.ஆனால் அனுமதிக்ககூடிய உண்மை இருந்தும் உன் கேள்வியால் ஆண் பொய் சொல்கிரானாயின் அது ஆபத்திலே முடியும்.புதிதாக ஒரு புடவை கட்டினால் இந்த புடவை நல்லாயிருக்கா என்று கேட்பது வேறு. ஆனால் எப்போது பார்த்தாலும் நான் அழகா இருக்கேனா? இல்லையா? என்று கேட்டு கணவரை நச்சரிப்பது. கணவர் தர்ம சங்கடத்தில் நெளிந்து பொய் சொல்ல வேண்டிருக்கும். எனவே இந்த மாதிரியான கேள்விகளை தவிர்த்து விடு.



இவையனைத்தும் உன்வாழ்வை பிரகாசமாக்கவே அன்றி வேறெதுக்குமல்ல.கருத்தில்கொள்வதும் கொள்ளாமல் விடுவதும் உன்னுடைய இஷ்டம்..மீண்டும் அடுத்த கடிதத்துடன் சந்திக்கும்வரை...
-Friend .



சரி என்னமோ எனக்கு தோன்றியதையும்,பலரின் கருத்துக்களையும் கொண்டே இப்பதிவை உருவாக்கினேன்.இது ஆணாதிக்கத்தின் ஒரு அங்கம் என்று கூப்பாடு போடும் பெண்களாய் இருந்தால்,கூப்பாடு போடுவதை விடுத்து,உங்கள் பார்வையில் ஆண்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்று கூறுங்கள்..என்ன தான் இருக்கிறதென்று பார்ப்போமே!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வலைப்பூ அறிமுகம்


நான் இதுவரையில் எந்த பதிவர் அறிமுகமும் தந்ததில்லை எனது வலைப்பூவில்.இன்று ஒரு அறிமுகம் தருகிறேன்.இவர் ஒரு புதிய பதிவர் என்று கூற முடியாவிட்டாலும் கூட,ஒரு பொது அறிமுகம் ஏற்படுத்திக்கொடுக்கவேண்டிய ஒரு இளைய பதிவர்.இவரின் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஆழமானவை.சிந்திக்கத்தூண்டுபவை.எடுத்து எழுதும் ஒவ்வொரு தலைப்புக்கும் அவர் பதிவினூடு செய்யும் வாதம் மிக அருமையாக இருக்கும்.நன்றாக எழுதுகிறார்.சீரியசாக எழுதுகிறார்.வரைட்டியான பதிவுகள் தருகிறார்.அவர் தான்"கிஷோகர் IN பக்கங்கள்" என்னும் வலைப்பூவை எழுதிவரும் கிஷோகர்.அவரின் வலைப்பூ இதோ:

"கிஷோகர் IN பக்கங்கள்"
சிறந்த எழுத்துக்கு வரவேற்ப்பு கொடுப்பது இன்றியமையாதது.எதோ என்னால் முடிந்த பணி.

வாரம் ஒரு பதிவு என்றளவில் சுருங்கி இருக்கிறேன்..பார்க்கலாம் வாரம் எதுவரையில் என்று! :)

Post Comment

12 comments:

கிஷோகர் said...

தலைவா யூ ஆர் கிரேட்! ரொம்ப நன்றி நண்பா! முதல் முதலாக நீங்கள் தரும் ஒரு பதிவரின் அறிமுகம் நானா? ஐம் த ஹப்பியஸ்ட் மேன் இன் த வேர்ல்ட்!

பதிவை படிச்சிட்டு வாறேன்.

கிஷோகர் said...

////பெரும்பாலான ஆண்கள் அதிகப்படியான மேக் அப் பண்ணும்,அலங்காரம் பண்ணும் பெண்களை வெறுக்கிறான்./////

வேறு ஆண்கள் எப்படியோ தெரியாது, எனக்கு இந்த வகை பெண்களை சுத்தமாக பிடிக்காது, சிலர் மேக் - அப் என்ற பெயரில் ஏதேதோ எல்லாம் போட்டு வருவார்கள் ஆள் அடையாளமே தெரியாமல் அருவருப்பாக இருக்கும் # பல்கலைகழக அனுபவம்.

தனிமரம் said...

அனுபவம் எல்லாம் பேசுது போல பாஸ்!ஹீ நல்ல பலவிடயங்கள் அதுவும் ரூல்ஸ் போடும் செயல் பிடிக்காது என்பது நிஜம் தான் .

தனிமரம் said...

கிசோர் இனித்தான் பார்க்க வேண்டும் வலையை!ம்ம் தொடருங்க நல்ல அறிமுகம்களை நிச்சயம் தேவையான பணி!

Prem said...

என் மன ஓடையில் தோன்றிய ஒரு எண்ணம் இது! எழுத நினைக்ககையில்! நீ எழுதிவிட்டாய் இனி தேவையில்லை... :)

வாழ்த்துக்கள் நண்பா... :)

சித்தாரா மகேஷ். said...

பயனுள்ள பதிவு.நீங்க சொல்வதில் 100% உண்மையானதுதான் அண்ணா.அருமை.
எனக்கும் ஓர் காதல் வேண்டும்.

சித்தாரா மகேஷ். said...

//இது ஆணாதிக்கத்தின் ஒரு அங்கம் என்று கூப்பாடு போடும் பெண்களாய் இருந்தால்,கூப்பாடு போடுவதை விடுத்து,உங்கள் பார்வையில் ஆண்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்று கூறுங்கள்..//

உண்மைகளை சொன்னால் நாமேன் கூப்பாடு போடப் போகிறோம் அண்ணா?

சித்தாரா மகேஷ். said...

//உங்கள் பார்வையில் ஆண்கள் எவ்வாறு இருக்கவேண்டும் என்று கூறுங்கள்..என்ன தான் இருக்கிறதென்று பார்ப்போமே!//

ஓகே.சொன்னால் போச்சு.

கவி அழகன் said...

நல்வாழ்த்து.

MANO நாஞ்சில் மனோ said...

ஆண்கள் உண்மைகளை மறைப்பதால் தான் பெண்கள் கேள்விகேட்கிறார்கள்..அல்லது பெண்கள் கேள்வி கேட்பதால் தான் ஆண்கள் உண்மையை மறைக்கிறார்கள்//

ஓ இப்பிடியும் ஒரு ஆங்கிள் இருக்கோ...?!

Anonymous said...

இது என்ன புது பட்டியல்...
அட்வான்ஸ் பிந்த நாள் வாழ்த்துக்கள் சிவா...

ஹாலிவுட்ரசிகன் said...

வணக்கம் பாஸ் ... இன்னிக்கு தான் வலைப்பக்கம் வாறேன். அருமையா சொல்லியிருக்கீங்க.

அதிலும் அந்த மேக்கப் பற்றி சொல்லியது 100க்கு 100 சரி பாஸ். சாதாரணமாக அழகாக சிம்பிளாக சுடிதாருடன் இருக்கும் பெண், ஏதாவது கல்யாணத்திற்கு திடீரென சேலை, மேக்கப், ஹேர்ஸ்டைல், லிப்ஸ்டிக் என அடையாளம் தெரியாதவாறு மாறி வருவது வெறுப்பைத் தான் உண்டாக்குகிறது.

Related Posts Plugin for WordPress, Blogger...