சிறந்த இயக்குனர் சுந்தர் சி'யின் இருபத்தைந்தாவது படம் கலகலப்பு அண்மையில் வெளியான ஓகே ஓகே படத்தை விட அதிக வரவேற்ப்பை பெற்றிருக்கிறது என்று பரவலாக செய்திகள் வந்தவண்ணமுள்ளன.முதலே இந்தப்படத்தை பார்த்துவிடவேண்டும் என்ற ஆவல் இருந்ததனாலும்,விமர்சனங்கள் அனைத்தும் ஆகா ஓகே என்று வந்திருந்ததனாலும் படத்தை பார்க்கலாம்னு முடிவுபண்ணி பார்த்தாகிவிட்டது.
படத்தின் பழைய பெயரான "மசாலா கபே" என்ற பெயரில் ஒரு ஹோட்டல்..அதற்க்கு பரம்பரை வாரிசுகளாக இருவர்;விமல் மற்றும் சிவா.பாழடைந்துபோயி இருக்கும் ஓட்டலை எவ்வாறு முன்னேற்றுகிறார்கள்,காப்பாற்றுகிறார்கள் தத்தமது காதலில் எவ்வாறு ஜெயிக்கிறார்கள் என்பதை லாஜிக் ஏதும் குறுக்கிட்டிட கூடாது என்பதனாலோ என்னமோ நகைச்சுவையாக சொல்ல முயன்று....அதில் ஒரு பாதியில் வெற்றியும் பெற்றிருக்கிறார் சுந்தர் சி.
ஆமாங்க..ஒருபாதியில் மட்டுமே!!வின்னர்,லண்டன்,உள்ளத்தை அள்ளித்தா போன்ற மரண காமெடி படங்களின் இயக்குனர் சுந்தர் சி'யா கலகலப்பு இயக்குனர்?சொல்லவே இல்ல!
படம் தொடங்கி இடைவேளை மட்டும் படு மொக்கையான திரைக்கதை நகர்வுகள்..விமல் வரும் காட்சிகள் தான் அவ்வாறு எனில் நம்ம தமிழ்பட ஹீரோ சிவா பண்ணும் சேட்டைகளில் கூட பெரிதாக நகைச்சுவை எடுபடவில்லை.சிவாவோடு ஒப்பிடுகையில் விமல் கொஞ்சம் சீரியஸ் கேரக்டர் படத்தில்.சிவாக்கு சுத்தமாக நடிப்பே வராது என்று தெரிந்தும் கூட அவருக்கேற்ற மொக்கை காட்சிகளை வைக்க சுந்தர் சி தவறிவிட்டார் என்றே தோணுகிறது.சிவா இந்த கேரக்டருக்கு தெரிவுசெய்யப்பட்டதே நகைச்சுவையை கூட்ட தான் என்றாலும்,நடந்தது என்னமோ எதிர்பார்க்காதது தான்!
சீரியல்களில் இருக்கும் சுவாரசிய நகர்வுகள் கூட இல்லாதமாதிரி முதல் பாதியை அமைத்திருக்கிறார்கள்.பெரிதான காமெடியோ,பாடல்களோ,உருப்படியான கதையோ எதுவுமே இல்லாத சுத்த போர் தான் முதல் பாதி.பாடல்கள் இரண்டாம் பாதியிலும் சொதப்பல் தான்.எந்தப்பாடலுமே ஹிட் இல்லை.யார் மியூசிக் என்று பார்க்க கூட தோணவில்லை.இடைவேளையோடு எழும்பி போயிருக்கலாம்..அவ்வாறு செய்ய விடாமல் பண்ணியது டிக்கட் காசு அல்ல....சந்தானம் தான்.
இரண்டாம் பாதி ஆரம்பமே பெரும்பாலும் க்ளைமாக்ஸ் ஆரம்பம் போல தான்!அப்போது தொடங்கிய க்ளைமாக்ஸ் சேசிங் படம் முடியும் வரையில் நீடித்தது.இடைவேளைக்கு பின்னர் தான் இது சுந்தர் சியின் படம் என்று கூறலாம்.சேசிங் என்ன பைட்டிங் என்ன...அனைத்திலும் காமெடியை புகுத்தி படுத்தி எடுத்திருக்கின்றனர்.சந்தானம் வருகை தான் படத்தின் சுவாரசியத்தையும்,ஏன் காமெடியையும் தூக்கி நிறுத்தியது எனலாம்!மனோபாலாவும் சந்தானமும் அஞ்சலியை கடத்திய சீனில் ஒரு சேசிங் வைப்பார்கள் பாருங்கள்...முடியல..!படத்தின் டாப் காமெடி அந்த சேசிங்'கும் பைனல் பைட்டும் தான்!அஞ்சுவட்டி அழகேசனாக வரும் இளவரசுவும் அடிக்கடி சிரிக்கவைக்கிறார்.வெறும் கவர்ச்சிக்காகவே அஞ்சலியும் ஓவியாவும்..நன்றாக காட்டி நடித்திருக்கின்றனர்.
நகைச்சுவை படம் என்று கூறி எடுக்கப்பட்ட படத்தில் ஒரு 65 % கொட்டாவி வரவைத்த ஸீன்கள் தான்!சந்தானமும் இல்லாவிடில் படத்தை ஒரு படு மொக்கை படமாகதான் கூறி இருக்கமுடியும்.ஒரு நல்ல நடிகர்கள் கூட்டணியை சுந்தர் சி அவரேஜ்'ஆக பயன்படுத்தியுள்ளார் போல் தான் தெரிகிறது.இடைவேளைக்கு பின்னர் வரும் காமெடியில் ஒரு 30 % ஆவது முதல் பாதியில் வருமாறு கவனம் செலுத்தி இருக்கலாம்.பாடல்களும் சொதப்பல் என்பதால் படு போர்'ரான முதல் பாதி படத்தின் பெரிய வீக்னெஸ்.
சந்தானம் என்ற ஒரே ஒரு துருப்பு சீட்டை கொண்டு ஓகே ஓகே'யில் ராஜேஷ் பண்ணிய படம் முழுதும் வரும் ரணகள காமெடிக்கு முன்னால் கலகலப்பில் இத்தனை பேரை கொண்டு சுந்தர் சி(நகைச்சுவைக்கு புகழ் போன இயக்குனர் )செய்தது வந்து என்னமோ கம்மி தான்.ஓகே ஓகே பாடல்களும் சூப்பர்..ஒளிப்பதிவு சூப்பர்.இதில் அவை எல்லாம் மைனஸ்.ஒரு சில வசனங்களை தவிர வேறு எந்த காமெடி வசனங்களும் மனதில் நிற்கவில்லை.ஓகே ஓகே யில் வந்த பல நகைச்சுவை பன்ச்'கள் இப்போ கூட மனப்பாடம்.
சந்தானமும் இல்லை என்றால் சுந்தர் சி தனது இருபத்தைந்தாவது படத்தை "கலகலப்பு' என்று இல்லாமல் "களோபரம்" என்று தலைப்பு வைத்திருக்கலாம்!!
கட்டாயம் போயி பாருங்கன்னு சொல்லமாட்டேன்...கொஞ்ச நாள் பொறுமையா
இருங்க..படத்தின் இரண்டாம்பாதியில் வரும் நகைச்சுவை காட்சிகள்
தொலைக்காட்சியில் பார்த்து மகிழலாம்!நிச்சயமா சார்..கடுப்பாக்கிட்டார்
சுந்தர் சி..கையில் வேறு படமோ நடிக்கும் வேலையோ இல்லாதவிடத்து இந்த ஒரு
படத்தை வடிவாக கவனித்து ரசிகர்கள் கையில் தந்திருக்கலாம்.
ஓகே ஓகே'க்கு ஒரு 70 மார்க்கு போட்டால் கலகலப்புக்கு ஒரு 55 மார்க்கே
போடலாம்!!என்னமோ தெரியல பதிவுலகில எல்லாரும் சுப்பர் மரண காமடி என்று
புகழ்வதை பார்த்தால் எதற்கோ இலவச விளம்பரம் செய்கிறார்கள் போல் தான்
தோன்றுகிறது!!ஆனால் எதுவுமே இல்லாத சுறா,ராஜபாட்டை படங்களை போயி தியேட்டரில் பார்ப்பதை விட இதை பார்க்கலாம்!
குறிப்பு:அஞ்சலி மேடம் பேசாமல் கல்யாணம் கட்டி செட்டில் ஆவது தான் அவங்களுக்கும் நல்லது பாக்கிற எங்களுக்கும் நல்லது..!சகிக்கல!!
குறிப்பு:அஞ்சலி மேடம் பேசாமல் கல்யாணம் கட்டி செட்டில் ஆவது தான் அவங்களுக்கும் நல்லது பாக்கிற எங்களுக்கும் நல்லது..!சகிக்கல!!
11 comments:
இன்ட்லில யாராச்சும் இணைச்சிடுங்க ப்ளீஸ்.
என்னோட இன்ட்லி மெயில் பாஸ்வோர்ட்,இன்ட்லி பாஸ்வோர்ட் இரண்டுமே தொலைஞ்சிரிச்சு :((
இன்ட்லில உங்கள் பதிவை இணைத்துவிட்டேன்... அருமையான கலக்கல் விமர்சனம், வாழ்த்துக்கள்.....
தெளிவாக படத்தின் பிளஸ் மைனஸ் எல்லாத்தையும் கூறியிருக்கிங்க நன்றி.
ஓகே ஓகே , கலகலப்பு இரண்டிலும் சந்தானம்தான் ஹீரோ .. மற்றவர்கள் ஜீரோ தான்
இன்று
யார் தெய்வம் ?
படம் பார்க்கலாமா? வேண்டாமா?
@shanmugan murugavel:சும்மா பாருங்க..எதிர்பார்ப்புகள் வேண்டாம்!
என்னுடைய எண்ணமும் இதுதான் நண்பரே. கலகலப்பு ஏதோ ஒன்று குறைவது போலவே இருக்கிறது.
வணக்கம் பாஸ்..
விமர்சனம் சுவீ.ட்....அண்ட் சோர்ட் ஆக இருக்கு.
ரசித்தேன்.
எது எப்புடியோ , நீ வெள்ளவத்தைல ஓவரா சுத்தாத
எது எப்புடியோ , நீ வெள்ளவத்தைல ஓவரா சுத்தாத
Post a Comment