Tuesday, July 12, 2011

நான் "மலரோடு' தனியாக என்ன செய்தேன்???

பழைய பாடல்களை கேட்கும் போது சில பழைய பாடல்கள் தரும் சுகத்துக்கு அளவே இல்லைங்க..
நம்மள மாதிரி சின்ன பசங்க கேட்டாலும் ஒரு உன்னதமான சுகத்தை தரும் பாடல்கள்,குறிப்பிட்ட பாடல் வெளிவந்த காலப்பகுதியில் வாழ்ந்தவர்கள் இப்போது அதனை கேட்டால் எத்தனை சுகம்!அத்தனை ஞாபகங்களும் மீட்டப்படுமல்லவா?அந்த வகையில் நான் பகிரப்போகின்ற பாடல் கூட அத்தனை இனிமையானது!

பாடல்:நான் மலரோடு தனியாக
படம்:இரு வல்லவர்கள்
பாடியவர்கள்-டி எம் சௌந்தரராஜன் மற்றும் பி சுசீலா
வரிகள்-கண்ணதாசன்
இசை-வேதா
வெளிவந்த ஆண்டு-1966
தயாரிப்பு-ராமசுந்தரம்
இயக்கம்-கே வி ஸ்ரீனிவாஸ்
வசனம்-கே தேவராஜன்
நடித்தவர்-ஜெய்சங்கர்,விஜயலக்ஸ்மி


நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்?
உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன்

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்? - என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்


பாடலே ஒரு கவிதைக் களஞ்சியம் தான்!!!அதிலும் நான் தடித்துக் காட்டியுள்ள வரிகளை பாருங்கள்..கண்ணதாசன் ரியலி கிரேட்!!!


விவேக சிந்தாமணியின் பத்தொன்பதாவது பாடலை ஆதாரமாக கொண்டு கண்ணதாசன் இந்த பாடலை படைத்ததாக அவரே கூறி இருக்கிறார்..

அழகிய பூஞ்சோலை. அருகில் சில மரங்கள். பக்கத்திலேயே ஓர் அழகிய பொய்கை. மாலை மயங்கும் நேரம். பூஞ்சோலையைச் சுற்றி வந்தாள், நிலவாய் ஒளிர்ந்து கொண்டிருந்த முகத்தினளான பேரழகுப் பெண் ஒருத்தி.

பூஞ்சோலையில் மிகுதியாகத் தேன் குடித்துவிட்டதால் மயக்கமுற்ற ஒரு கருவண்டு நாவல் மரத்தடியில் அசைவின்றிக் கிடந்தது. பூஞ்சோலையைச் சுற்றி வந்த பேரழகி, ஒரு நல்ல நாவற்பழம் அடிபடாமல் இருக்கிறதென்று எண்ணி மகிழ்வோடு அந்த வண்டைக் கையில் எடுத்துப் பார்க்க முனைந்தாள்.

அவள் கையில் எடுத்ததால் சற்றே விழிப்புற்ற அவ் வண்டு அவள் முகத்தை நிலவு என மயங்கி, ‘இது என்ன, நிலவு இவ்வளவு ஒளி வீசுகிறதே!’ என்று எண்ணமிட்டது; அரைகுறையாக நினைவு பெற்ற நிலையில், தான் தாமரை மலரில் இருப்பதாக உணர்ந்தது.

ஆம்! அப்பேரழகியின் கை, அவ் வண்டிற்குத் தாமரை மலர்போல் இருந்ததாம். திடீரென்று, அந்த வண்டிற்கு நினைவு வந்தது. ‘ இரவு தொடங்கிவிட்டதே, நிலவைப் பார்த்ததும் தாமரை மூடிக்கொள்ளுமே’ என்று எண்ணி அஞ்சிய வண்டு தாமரை மூடுவதற்குள் தப்பிக்க எண்ணிப் பறந்து சென்று விட்டதாம்!

அப்பேரழகிக்கு அதிர்ச்சி! ‘இது என்ன, நாவற்பழம் பறக்குமா?
பறந்தது பழமா, இல்லை வண்டா? என்ன புதுமை இது’ என்று வியப்பில் ஆழ்ந்து விட்டாளாம்!


பத்தொன்பதாவது பாடல் இவ்வாறு வருகிறது,

"தேன்நுகர் வண்டு மதுவினை உண்டு

தியங்கியே கிடந்ததைக் கண்டு

தான்அதைச் சம்புவின் கனி என்று

தடங்கையால் எடுத்துமுன் பார்த்தாள்

வானுறு மதியம் வந்ததென்று எண்ணி

மலர்க்கரம் குவியும் என்று அஞ்சிப்

போனது வண்டோ? பறந்ததோ பழந்தான்?

புதுமையோ இது?எனப் புகன்றாள்."


இதை தான் கவிஞர் கண்ணதாசன்,

"பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற"


என்று வடித்திருப்பார்...!

சிறுவயதில் எனது தந்தையார் இந்த பாடலை அடிக்கடி முணு முணுத்து பாடுவார்.அதனை கேட்டு கேட்டு எனக்கு இந்தப் பாடல் ஆறு எழு வயதிலேயே பிடித்துவிட்டது..பின்னர் அதன் ஞாபகம் மறந்து,பாடல் இசை மட்டும் முணுமுணுப்பேன்.பாடலை எனது பதினெட்டு வயதில் தான் ஒரு வழியாக தேடிபிடித்தேன்.

கேட்க கேட்க சலிக்காத பாடல்...கண்ணதாசனின் கவித்துவமான வரிகளுக்காகவும்,வேதாவின் இசைக்காகவும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்!!!

நீங்களும் திரும்ப கேளுங்க...உங்களை எங்கேயோ கூட்டிச்செல்லும்!!!

Post Comment

42 comments:

கடம்பவன குயில் said...

//நம்மள மாதிரி சின்ன பசங்க கேட்டாலும் ஒரு உன்னதமான சுகத்தை தரும் பாடல்கள்,//

மைந்தா....இது கொஞ்சம் ஓவரப்பா....யாரு சின்னப்பிள்ளை? சின்னப்பசங்க எழுதற பதிவ பார்ரா....

எப்படியிருந்தாலும் பாடல் இன்றும் இனிமை தரக்கூடிய எவர்கிரீன் பாடல் என்பதில் சந்தேகமில்லை.

Admin said...

இது ஒரு சூப்பர் பாடல்..... எப்போது கேட்டாலும் மனதில் இனிமையாய் தங்கும்

கடம்பவன குயில் said...

வல்லவனுக்கு வல்லவனில் ”ஓராயிரம் பார்வையிலே ....உன் பார்வையை நான் அறிவேன்...உன் காலடி ஓசையிலே ....” இந்தப் பாடலையும் கொஞ்சம் தேடிப்பிடித்து கேட்டுப்பாரும் பிள்ளாய்...

கவி அழகன் said...

மைந்தா இந்த பாடலை நாங்க கம்பசில பாடுவோம்
மீண்டும் யாபகம் வந்துவிட்டது
நன்றி

Unknown said...

பழைய பாடல்களின் வீரியம் பகிர்ந்ததற்கு நன்றி மாப்ள!

சக்தி கல்வி மையம் said...

super song..
Thanks 4 sharing..

உலக சினிமா ரசிகன் said...

இந்த பாடலின் இசை மூல வடிவம் ஹிந்தி படப்பாடல்.
காப்பியாக இருந்தாலும் கண்ணதாசன் வரிகளால் இப்பாடலுக்கு இலக்கியத்தன்மை வந்து விட்டது.

தனிமரம் said...

அழகான அமைதியான பாடல் இப்படலில் நாயகன் நாயகி மீது சந்தேகம் கொள்வதாகவும் பின் அது ஊடல் கூடலாகமாறுவதாகவும் அன்நாளில் இலங்கை பண்பலையில் பணியாற்றிய அன்பு அறிவிப்பாளர் வேதா என்கின்ற வேதநாயகம் இரவின் மடியில் இதை எடுத்து வந்து எனக்கும் பிடிக்கவைத்த பாடல் .
மைந்தனின் ஆர்வத்திற்கும் திறமைக்கும் இந்தப் பதிவும் ஒரு உதாரணம்.

A.R.ராஜகோபாலன் said...

ரசனையான பதிவு இலக்கியத்தின் துணை கொண்டு அருமையாக படைத்திருக்கிங்க தலைவா

கூடல் பாலா said...

எனக்கு இந்த பாடலை கேட்டவுடன் கவுண்டமணி நியாபகம்தான் வருகிறது

maruthamooran said...

அடடா..........!

இந்தப் பயலிட்டயும் என்னமோ இருந்திருக்கு......!

சூப்பர் பாஸ்.

arasan said...

நல்ல பாடல் பகிர்ந்த மைந்தருக்கு வாழ்த்துக்கள்

Yoga.s.FR said...

மருதமூரான். said...அடடா..........!
இந்தப் பயலிட்டயும் என்னமோ இருந்திருக்கு......!///"அது" இல்லாமல் எப்படி "சைட் அடிப்பது எப்படி?"ன்னெல்லாம் பதிவு போட முடியும்?(உங்க கிட்டயும் "அது"இருக்கு!)

Yoga.s.FR said...

கவி அழகன் said...
மைந்தா இந்த பாடலை நாங்க கம்பசில பாடுவோம்
மீண்டும் யாபகம் வந்துவிட்டது
நன்றி!////"கம்பசில"எப்பிடிப் பாடுறது?எல்லாரும் "மைக்கில"(MIKE) எல்லோ பாடுறவை?

Yoga.s.FR said...

நீங்களும் திரும்ப கேளுங்க...உங்களை எங்கேயோ கூட்டிச்செல்லும்!!!////எங்கை? "அங்கையோ"?(அங்கொடைக்கு)

Yoga.s.FR said...

பாடலை எனது பதினெட்டு வயதில் தான் ஒரு வழியாக தேடிபிடித்தேன்.////அப்பாடி!ஒரு வழியா பிறந்த பலனை அடைஞ்சிட்டார்!(பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்....................................................)

Yoga.s.FR said...

பாடலே ஒரு கவிதைக் களஞ்சியம் தான்!!!அதிலும் நான் தடித்துக் காட்டியுள்ள வரிகளை பாருங்கள்..கண்ணதாசன் ரியலி கிரேட்!!!/////முதல் வாசிக்கைக்குள்ள "தடித்து" எண்டிருக்கிறது எனக்கு "நடித்து" எண்ட மாதிரிக் கிடந்துது!இவர் எப்ப நடிச்சவர் எண்டு யோசிச்சுப் போட்டு திருப்பி வாசிக்கைக்க தான் அது "தடித்த" எண்டு எழுதியிருந்திச்சு!அதுக்குப் பிறகு தான் நிம்மதிப் பெருமூச்சொண்டு விட்டன்!மனுசி என்னப்பா எண்டு கேட்டுது.நான் ஒண்டும் சொல்லயில்ல!!!!??????

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரைட்டு...

Anonymous said...

////நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?/// என்னே அருமையான வரிகள் ...)

ஷர்புதீன் said...

அட நீங்களும் என்னை மாதிரிதானா இந்த விசயத்தில் !!

பாலா said...

அருமையான பாடல்தான். நன்றாக ஆராய்ச்சி செய்திருக்கிறீர்கள். நன்றி நண்பரே...

Yoga.s.FR said...

ஷர்புதீன் said...
அட நீங்களும் என்னை மாதிரிதானா இந்த விசயத்தில் !!////எந்த விஷயத்தில்?எதைச் சொன்னாலும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க சார்!

Yoga.s.FR said...

பாலா said...
அருமையான பாடல்தான். நன்றாக ஆராய்ச்சி செய்திருக்கிறீர்கள். நன்றி நண்பரே...//////????????????!!!!):):):):)

Yoga.s.FR said...

கடம்பவன குயில் said...
வல்லவனுக்கு வல்லவனில் ”ஓராயிரம் பார்வையிலே ....உன் பார்வையை நான் அறிவேன்...உன் காலடி ஓசையிலே ....” இந்தப் பாடலையும் கொஞ்சம் தேடிப்பிடித்து கேட்டுப்பாரும் பிள்ளாய்...////கரெக்டான பாட்டத் தான் செலக்ட் பண்ணி சொல்லியிருக்கிறீங்க!):):):):):):):):):):):):):)

செங்கோவி said...

அருமையான பாடல் சிவா..நல்ல பகிர்வு.

shanmugavel said...

இந்த மாதிரி பாட்டக்கூட ரசிப்பீங்களா? சிவா,இந்த சின்ன வயசுல? அருமையான எனக்கு பிடித்த பாடல்

சுதா SJ said...

தலை சூப்பர் பாடல்
எனக்கும் இந்த பாடல் ரெம்ப புடிக்கும்

vidivelli said...

நல்ல பாடல்....
எனக்கும் பிடிக்கும்...
வாழ்த்துக்கள் பதிவிற்கு..

காட்டான் said...

நன்றி மாப்பிள இந்தபாடலும் எனக்கும் பிடிக்கும்..இதை நீங்க விளக்கியவிதம் அருமை..!

காட்டானுக்கு பிடித்த பாட்டு ஆடி மாத காத்தடிக்க வாடி பிள்ள சேர்த்தனைக்க..!எவ்வளவு அருமையான வரிகள் மாப்பிள இத நீ ஒருக்கா பதிவுல போட்டு தாக்கு இந்த பாடலுக்கான வரிகளை சேக்ஸ்பியரும் பெர்னாட்ஷாவும் சேர்து எழுதிய ராமாயணத்தில இருந்து உருவினதாம் நிசமா மாப்பிள..!!??

Yoga.s.FR said...

///நான் "மலரோடு" தனியாக என்ன செய்தேன்?/////நீங்கள் "மலரோ"டு தனியாக என்ன "செய்தனீங்க"ளெண்டு எங்களுக்குத் தெரியாது!

நிரூபன் said...

இந்தப் பாடல் என்ன யோகா ஐயாவிற்கான ஸ்பெஷல் டெடிக்கேசனே...


மச்சி, கோவிச்சுக்காதே, நைட் பதிவு பற்றிய கருத்துக்களோடு வருகிறேன்.

கார்த்தி said...

நல்ல ஒரு பழைய பாடல்!

நிரூபன் said...

பழைய பாடல்களை கேட்கும் போது சில பழைய பாடல்கள் தரும் சுகத்துக்கு அளவே இல்லைங்க..
நம்மள மாதிரி சின்ன பசங்க கேட்டாலும் ஒரு உன்னதமான சுகத்தை தரும் பாடல்கள்,//

மக்களே, மகா ஜனங்களே, இது நியாயமா. ஆளே நைண்டி மாதிரி இருந்து கொண்டு பழைய பாடல் கேட்கிற இளசு என்று ஒரு குண்டைத் தூக்கிப் போடுறாரே, இந்த அண்ணாச்சி.....
நாடு தாங்காதில்லே.

நிரூபன் said...

பாடல் வெளிவந்த காலப்பகுதியில் வாழ்ந்தவர்கள் இப்போது அதனை கேட்டால் எத்தனை சுகம்!அத்தனை ஞாபகங்களும் மீட்டப்படுமல்லவா//

இதாருக்கு மச்சி, நம்ம யோகா ஐயாவிற்குத் தானே;-))

ஐயா...இவன் சைட் கப்பிங்கில் உங்களை கடிக்கிறான்.

நிரூபன் said...

பாடல்:நான் மலரோடு தனியாக//

எங்கே, கோல் பேசிற்கா போனீங்க...

நிரூபன் said...

பாடலே ஒரு கவிதைக் களஞ்சியம் தான்!!!அதிலும் நான் தடித்துக் காட்டியுள்ள வரிகளை பாருங்கள்..கண்ணதாசன் ரியலி கிரேட்!!!//

ஆமாம் பாஸ், கண்ணதாசனுக்கு நிகர், கண்ணதாசனே.

நிரூபன் said...

விவேக சிந்தாமணியின் பத்தொன்பதாவது பாடலை ஆதாரமாக கொண்டு கண்ணதாசன் இந்த பாடலை படைத்ததாக அவரே கூறி இருக்கிறார்.//

ஆகா...நம்ம மச்சானுக்கு இலக்கியமும் அத்துப்படி என்று நிரூபிச்சிட்டாரே.

சூப்பர் மேற்கோள் மச்சி.

நிரூபன் said...

Yoga.s.FR said...
பாடலே ஒரு கவிதைக் களஞ்சியம் தான்!!!அதிலும் நான் தடித்துக் காட்டியுள்ள வரிகளை பாருங்கள்..கண்ணதாசன் ரியலி கிரேட்!!!/////முதல் வாசிக்கைக்குள்ள "தடித்து" எண்டிருக்கிறது எனக்கு "நடித்து" எண்ட மாதிரிக் கிடந்துது!இவர் எப்ப நடிச்சவர் எண்டு யோசிச்சுப் போட்டு திருப்பி வாசிக்கைக்க தான் அது "தடித்த" எண்டு எழுதியிருந்திச்சு!அதுக்குப் பிறகு தான் நிம்மதிப் பெருமூச்சொண்டு விட்டன்!மனுசி என்னப்பா எண்டு கேட்டுது.நான் ஒண்டும் சொல்லயில்ல!!!!??????//

அவ்...ஐயாவுக்கு இப்பவும் ஆசையப் பாருங்கோ.
ஹி...ஹி....

ஹேமா said...

பழைய பாடல்கள் வரிசையில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது சிவா.விவேகசிந்தாமணியா இந்தப்பாடலின் பிறப்பிடம்.விளக்கம் அற்புதம்.2-3 முறை பாடல் கேட்டுவிட்டேன்.நன்றி சிவா !

Riyas said...

பாடல் சூப்பர்

எஸ் சக்திவேல் said...

ஐயோ ஐயோ, நான் நீங்கள் "இளைஞன்" எண்டெல்லோ நினைச்சன். அப்ப நீங்களும் நம்போல் 40 + ஆ?

test said...

ஆமா... அதுக்கு அப்புறம் ஒன்னுமே செய்யலையா?
இல்ல பதிவு ஒண்ணையும் காணோம் அதான்! :-)

Related Posts Plugin for WordPress, Blogger...