கிராமத்துச் சூழலில் அமைந்த இக்கதையில் கமலஹாசன் சப்பாணி என்னும் கைவிளங்காதவன் வேடமேற்று வெள்ளந்தியான குணசித்திரப் பாத்திரத்தில் நடித்திருந்தார். கிராமத்திலேயே மிக அதிகம் படித்தவளாக, 'பத்தாம் வகுப்பு தேர்ச்சி'யாகி விட்ட மயிலிடம் (ஸ்ரீதேவி) ஒரு தலைக் காதல் கொண்டிருக்கிறார். அவளோ கிராமத்திற்கு வரும் மருத்துவ இளைஞனிடம் மனதை பறிகொடுத்திருக்கிறாள். ஒரு கட்டத்தில் அந்த மருத்துவன் காதலிப்பது தன்னையல்ல, தனது பதினாறு வயதையே என்று அவள் உணர்கையில், அவளது தாய் இறக்கிறாள். அனாதையாக நிற்கும் மயிலுக்கு தானே ஆதரவாக சப்பாணி துணை நிற்கிறான்.
ஒரு முறை மயிலிடம் அவமானப்படுகிற பரட்டை (ரஜனிகாந்த்) அவளது பெண்மையைச் சூறையாட முயல்கையில், ஓணானைக் கூட கொல்வதைப் பார்க்கச் சகிக்காத சப்பாணி, ஆத்திரமிகுதியில் பரட்டையைக் கொலை செய்ய, கைதாகிச் செல்லும் அவனுக்காக காத்திருக்கிறாள் மயில்.
கிராமத்துக் கதைகள் எத்தனையோ முன்னர் இந்திய, குறிப்பாக தமிழ்த் திரையில், வந்திருப்பினும், முதன் முதலாக கிராமத்திற்கே சென்று படம் பிடிக்கப்பட்டது "பதினாறு வயதினிலே". படப்பிடிப்பு அரங்குகளில், கிராமத்துச் சூழலை அமைத்துப் படம் பிடிக்கப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் முதன் முறையாக, இயற்கையான வெளிப்புறச் சூழலிலேயே அநேகமாக முழுப்படமும் எடுக்கப்பட்டது அக்கால கட்டத்தில் புதுமையான ஒன்றாகவும், ஒரு புத்துணர்வு சூழலை உருவாக்குவதாகவும் அமைந்தது. இத்திரைப்படத்தை ஒட்டி, கிராமத்துக் கதைகள் வெளிப்புறப்படப்படப்பிடிப்பில் எடுக்கப்படுவதான ஒரு சகாப்தமே உருவாகி விட்டது எனலாம்.
படத்தின் நடிகர்கள் முன்பே பெயர் பெற்றிருப்பினும் அவர்களை இப்படம் பெரும் புகழுக்கு உரித்தவர்களாக்கியது. வில்லனாக அறிமுகமாகி கதாநாயகனாக மாறிக் கொண்டிருந்த கமலஹாசன் இத்திரைப்படத்தில் கவர்ச்சியற்ற ஒரு பாத்திரத்தில் நடித்ததன் மூலம், எத்தகைய குணச்சித்திரத்தையும் தாம் ஏற்று நடிக்க வல்லவர் என நிரூபித்தார். கமலஹாசனின் நடிப்பாற்றல் விசுவரூபம் எடுத்தமைக்கு இப்படமே அடிக்கல் நாட்டியது என்றால் மிகையாகாது. இதில் அவர் ஏற்ற பாத்திரம் வெளிபார்வைக்கு பாகப்பிரிவினை என்னும் திரைப்படத்தில் சிவாஜி கணேஷன் ஏற்று நடித்த பாத்திரத்தை ஒத்திருப்பினும், அதன் பல்வேறு பரிமாணங்களை தனது நடிப்பில் வெளிப்படுத்திய கமலஹாசன் சிவாஜி கணேசனின் கலை வாரிசு என்று ஏற்கப்படத் துவங்கியதற்கு பதினாறு வயதினிலே திரைப்படம் பிள்ளையார் சுழியிட்டது.
புகழ் பெற்ற செந்தூரப்பூவே செந்தூரப்பூவே பாடல்
இதைப் போலவே, கதாநாயகியாக முன்னரே மூன்று முடிச்சு போன்றவற்றில் அறிமுகமாகி விட்டாலும், பாத்திரத்தின் தன்மைக்கேற்ற நடிப்பாற்றலை வழங்குவதில் தனக்குள்ள ஆற்றலை நிரூபிக்க ஸ்ரீதேவிக்கு இது மிக அருமையான ஒரு வாய்ப்பாக அமைந்திருந்தது. வில்லன் நடிப்பில் ரஜினிகாந்திற்கு மிகுந்த புகழ் ஈட்டித்தந்தது இப்படமேயாகும். இதில் அவர் பேசும் ஒரு வசனமாகிய "இது எப்பிடி இருக்கு?" என்பது பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகிப் பலராலும் பேசப்பட்டது. பின்னர், இப்பெயரில் ஒரு திரைப்படமே வெளிவந்தது.
கிராமியக் கதை கொண்ட படங்களில் தன் ஆளுமையை இளையராஜா வெளிக்கொணர்ந்த முதன்மையான படங்களில் இதுவும் ஒன்று. அன்னக்கிளி படத்திற்குப் பிறகு, முழுவதும் கிராமிய இசையில் அமைந்த "ஆட்டுக்குட்டி முட்டையிட்டு", "மஞ்சக்குளிச்சு" போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமாயின.
பல காலமாகத் திரைப்படங்களில் பாடிவந்த எஸ் ஜானகி சிறந்த பாடகிக்கான தேசிய விருதினைப் பெற்றது, இத்திரைப்படத்தில் அவர் பாடிய "செந்தூரப் பூவே" என்னும் பாடலின் மூலம்தான்.
மலேசியா வாசுதேவன் ஒரு முன்னணி (பின்னணி) பாடகராக பரிணாமம் பெற்றது இத்திரைப்படப் பாடல்களைப் பாடிய பிறகுதான்.
28 comments:
ஞாயித்து கிழமை பதிவு போட்டது என்னுடைய தப்பு தான் பாஸ்..
எல்லா பயபுள்ளைகளும் மூடிட்டு குப்பற படுத்திருக்காங்க போல...அவ்வ்வ்வ்
நினைப்புத் தான் நினைப்பு, தனக்கும் இன்னும் பதினாறு வயது என்று நினைப்பாம்,
ஹி...ஹி....
மாப்பிளை
’நான் உன்ரை வயதைத் தான் காதலித்தேன்,
மனசை அல்ல!
இது படத்தின் கதை....
ஹி...
பதினாறு வயதில் பெண்கள் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது எனும் புரிதலை விளக்கும் படம்,
கமல், மலேசியவாசுதேன், எஸ்.ஜானகி ஆகியோரின் சினிமா வாழ்வின் திருப்பு முனைக்கு இப் படம் உறுதுணையாக இருந்திருக்கிறது என்பதை உங்கள் பதிவின் வாயிலாகத் தான் அறிந்தேன்.
காலங் கடந்தாலும், அருமையாக அலசியுள்ளீர்கள்.
நான் இருக்கேன் நண்பா...தமிழ் திரையுலகை திருப்பி போட்ட படமல்லவா?படம் பார்க்கும்போது நாம் அந்த கிராமத்தில் இருப்பதுபோல உணர்வோமே....
பழைய படம் இனிமை தான்
மைந்தனுக்கு காமண்டு போட ஆக்கள் காணாதாம். எல்லாரும் போடுங்க போடுங்க!! அதான் சாரே முதலாவது காமெண்டு போட்டு ஏக்கம் தெரிவிக்கிறார்!
சிறிதேவின்ர ஒரு படம்தான் போட்டிருக்கீங்க! 3 நால போட்டா ஓட்டு கூட விழுந்திருக்கும்!
கமலகாசன் வில்லன் மாதிரியான வேடங்களில் ஆரம்பகால படங்கள் தெரிந்தால் தரமுடியுமா?
ம்ம்ம்...16 வயதினிலே இயக்குனர் இமயத்தின், ஒரு இமாலய படம்தான்.
அடுத்து ஒரு முக்கிமான விடயம் இந்தப்படத்திற்கு விகடனின் 60, 1/2 மார்க் கிடைத்தது முதன் முதலில், பின்னர் நாயகன் படத்திற்கும் இதே மார்க் கிடைத்தது இந்த இரண்டையும் இதுவரை எந்த படமும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
//நிரூபன் said...
நினைப்புத் தான் நினைப்பு, தனக்கும் இன்னும் பதினாறு வயது என்று நினைப்பாம்,
ஹி...ஹி....//
ஹிஹி பின்னே!!
//நிரூபன் said...
மாப்பிளை
’நான் உன்ரை வயதைத் தான் காதலித்தேன்,
மனசை அல்ல!
இது படத்தின் கதை....
ஹி...
பதினாறு வயதில் பெண்கள் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது எனும் புரிதலை விளக்கும் படம்,//
ஆமா ஆமா
//நிரூபன் said...
கமல், மலேசியவாசுதேன், எஸ்.ஜானகி ஆகியோரின் சினிமா வாழ்வின் திருப்பு முனைக்கு இப் படம் உறுதுணையாக இருந்திருக்கிறது என்பதை உங்கள் பதிவின் வாயிலாகத் தான் அறிந்தேன்.
காலங் கடந்தாலும், அருமையாக அலசியுள்ளீர்கள்.//
நன்றி நன்றி
//NKS.ஹாஜா மைதீன் said...
நான் இருக்கேன் நண்பா...தமிழ் திரையுலகை திருப்பி போட்ட படமல்லவா?படம் பார்க்கும்போது நாம் அந்த கிராமத்தில் இருப்பதுபோல உணர்வோமே....//
ஆமா ஆமா
//யாதவன் said...
பழைய படம் இனிமை தான்//
ஆமா ஆமா..
அப்போ புதிய படம்??கசப்பா??
//கார்த்தி said...
மைந்தனுக்கு காமண்டு போட ஆக்கள் காணாதாம். எல்லாரும் போடுங்க போடுங்க!! அதான் சாரே முதலாவது காமெண்டு போட்டு ஏக்கம் தெரிவிக்கிறார்!
சிறிதேவின்ர ஒரு படம்தான் போட்டிருக்கீங்க! 3 நால போட்டா ஓட்டு கூட விழுந்திருக்கும்!//
ஹிஹி அத பத்தி தனி பதிவு வருது பாஸ்
//கார்த்தி said...
கமலகாசன் வில்லன் மாதிரியான வேடங்களில் ஆரம்பகால படங்கள் தெரிந்தால் தரமுடியுமா?//
கூகிளாண்டவரை கேட்டுப் பார்க்கிறேன்
//Jana said...
ம்ம்ம்...16 வயதினிலே இயக்குனர் இமயத்தின், ஒரு இமாலய படம்தான்.
அடுத்து ஒரு முக்கிமான விடயம் இந்தப்படத்திற்கு விகடனின் 60, 1/2 மார்க் கிடைத்தது முதன் முதலில், பின்னர் நாயகன் படத்திற்கும் இதே மார்க் கிடைத்தது இந்த இரண்டையும் இதுவரை எந்த படமும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.//
அப்படியா??புதிய தகவல்!!!
ulam kanintha parattukal
///வில்லனாக அறிமுகமாகி கதாநாயகனாக மாறிக் கொண்டிருந்த கமலஹாசன் இத்திரைப்படத்தில் கவர்ச்சியற்ற ஒரு பாத்திரத்தில் நடித்ததன் மூலம், எத்தகைய குணச்சித்திரத்தையும் தாம் ஏற்று நடிக்க வல்லவர் என நிரூபித்தார். ////ம்ம்ம் சூப்பர் படம் அது ...
இந்த படத்தை இன்னும் நான் பாக்கவே இல்லை,
உங்க விமர்சனம் பாத்ததும் இப்போ பாக்கணும் போலே இருக்கு
இன்று இரவே பாக்கணும்
ஸ்ரீதேவி!!
வாவ் என்ன கண்ணு
//ஒரு முறை மயிலிடம் அவமானப்படுகிற பரட்டை (ரஜனிகாந்த்) அவளது பெண்மையைச் சூறையாட முயல்கையில், ஓணானைக் கூட கொல்வதைப் பார்க்கச் சகிக்காத சப்பாணி, ஆத்திரமிகுதியில் பரட்டையைக் கொலை செய்ய, கைதாகிச் செல்லும் அவனுக்காக காத்திருக்கிறாள் மயில்.//
அவ்வ கதைய சொல்லிட்டிங்களே பாஸ்
மாப்ள சூப்பரு ஹிஹி ஹோஹோ டும் டும் டுக் டுக்!
ஹி ஹி ஸ்ரீதேவி
ஆரோ எழுதினத கொப்பியடிச்சு..................................ச்சீ!அதுக்கு(அரசாங்கம்)இது பறுவாயில்லை!வல்லரசு போட்டிருந்தா......................................................................!?
//Yoga.s.FR said...
ஆரோ எழுதினத கொப்பியடிச்சு..................................ச்சீ!அதுக்கு(அரசாங்கம்)இது பறுவாயில்லை!வல்லரசு போட்டிருந்தா......................................................................!?//
அது தான் டிஸ்கியில சொல்லி இருக்கேனே பாஸ்..
ஆமா உங்களுக்கு வல்லரசு விமர்சனம் போட்டால் தான் அடங்குவீங்க போல..போட்டிட்டால் போச்சு ஹிஹி
நாளைக்கு அதை விட விசேட விமர்சனம் வருது பாருங்க...
செத்திடுவீங்க!!
பதினாறு வயதிநிலே பதிநேளு குழந்தையம்மா! என்கிறாரே ஸ்ரீ தேவி அதுதான் எப்பிடி?
http://nirujans.blogspot.com/
///மைந்தன் சிவா said..
நாளைக்கு அதை விட விசேட விமர்சனம் வருது பாருங்க...
செத்திடுவீங்க!!///ஐயோ!தெரியாம வாயக் குடுத்துட்டனோ?பிளீஸ் அது மாதிரி எதுவும் செய்து போடாத மகனே!மூண்டு பிள்ளையள்!
Post a Comment