படத்தையே பார்த்து பயந்தா எப்பிடி??
பலர் மறந்திருக்கலாம்..ஆகையால் மீண்டும் நான் உங்களை நுனிக்கதிரையில் சூ போற அளவுக்கு ஒரு திரைப்பட விமர்சனம் சொல்லப்போகிறேன்..
பெருசா பயந்திடாதீங்க,அது வல்லரசு பட விமர்சனம் இல்லை,அரசாங்கம் பட விமர்சனம் தான்..தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் கப்டனின் கஜேந்திரா,வல்லரசு,வாஞ்சிநாதன் வரிசையில் வெளிவந்த சக்கை போடு(?) போட்ட படம் தான் அரசாங்கம்!!
அதன் பிறகு வழக்கம்போல அதிகாரிகளின் ஆலோசனை. தீவிரவாதிகளை ஒடுக்க களமிறக்கப்படுகிறார் கேப்டன். கிரிமினாலஜியில் நிபுணத்துவம் பெற்ற விஜயகாந்த் தீவிரவாதிகளை அழிக்க திட்டம் வகுக்கிறார். இந்திய நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டமிடுவதை கண்டு பிடிக்கிறார். தீவிரவாதிகள் தங்கள் திட்டத்தை நிறைவேற்ற இந்திய நாட்டின் தலைச்சிறந்த விஞ்ஞானிகள், பொருளாதார நிபுணர்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் என பெரிய மனிதர்களையெல்லாம் குறி வைக்கிறார்கள். அவர்களையும், நாட்டையும் விஜயகாந்த் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் மீதி கதை.
வழக்கமான விஜயகாந்த் படம் பார்க்க போனால் கண்டிப்பாக ஏமாந்துவிடுவீர்கள். பட தொடக்கத்தில் ஹீரோவின் பில்டப், பஞ்ச் டயலாக், க்ளைமாக்சில் புள்ளி விவரம், அரசியல் மறைமுக தாக்குதல் போன்ற அம்சங்கள் எதுவும் அரசாங்கத்தில் இல்லை. படத்தின் முதல் பாதி எக்ஸ்பிரஸ் வேகத்திலும், இரண்டாவது பாதி சிட்டி பஸ் வேகத்திலும் செல்கிறது.
கொளுகொளு உடற்கட்டுடன் இருக்கும் நாயகி நவ்நீத்கவுர் அழகு பதுமையாக வந்து செல்கிறார். அவருக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சண்டை காட்சிகளும் விஜயகாந்த் படம் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தவில்லை. ஒளிப்பதிவாளர் வெங்கடேஷின் கேமரா பதிவு, கண்களுக்கு குளிர்ச்சியூட்டுகின்றன. ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் சின்ட்ரல்லா பாடல் ரசிக்க வைக்கிறது.
தமிழ்ப்பட ஹீரோக்களுக்குத் தங்கள் தேசபக்தியைக் காட்டத் தெரிந்த ஒரே வழி, தெருச்சண்டை போடுபவனையெல்லாம் தீவிரவாதியாகக் காட்டி அவனைத் துரத்தித் துரத்தி அடிப்பது மட்டும்தான். அரசாங்கத்தில் 150வது முறையாக மீண்டும் அதைச் செய்திருக்கிறார் விஜயகாந்த். விஜயகாந்த் வீறுகொண்டு எழும் இடத்தில் இன்னொரு ட்விஸ்ட். இறுதியில் இந்தியாவை விஜயகாந்த் காப்பாற்றும் வழக்கமான க்ளைமாக்ஸ்.
கேப்டன் இருந்தும் துளி அரசியல் இல்லை. படம் துவங்கி பதினைந்து நிமிடங்கள் கழித்து சாதாரண பில்ட்- அப் கூட இல்லாமல் அறிமுகம் ஆகிறார் விஜயகாந்த். அடுத்தடுத்த காட்சிகளிலும் இன்றைய அகல்விளக்கே ! நாளைய பவர் விளக்கே ! போன்ற வசனக்குத்துகள் இல்லை. காதலியிடம் வெட்கத்துடன் நாணிக்கோணுகிறார். காமெடி செய்கிறார். அதிசயமாக வில்லன்களைப் பேசவிட்டு வேடிக்கைப் பார்க்கிறார். ரமணாவுக்குப் பிறகு விஜயகாந்த்தை இத்தனை ஃப்ரெஷ்ஷாகக் காட்டியதிலேயே ஸ்கோர் செய்கிறார் இயக்குனர் மாதேஷ்.
கொளுகொளு உடற்கட்டுடன் இருக்கும் நாயகி நவ்நீத்கவுர் அழகு பதுமையாக வந்து செல்கிறார். அவருக்கு நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சண்டை காட்சிகளும் விஜயகாந்த் படம் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தவில்லை. ஒளிப்பதிவாளர் வெங்கடேஷின் கேமரா பதிவு, கண்களுக்கு குளிர்ச்சியூட்டுகின்றன. ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் சின்ட்ரல்லா பாடல் ரசிக்க வைக்கிறது.
நாளைக்கு வல்லரசு விமர்சனம் போடலாம்னு இருக்கேன்...என்ன சொல்றீங்க?? |
26 comments:
படத்தையே பார்த்து பயந்தா எப்பிடி??//
காலங் காத்தால ஒரு நோக்கத்தோடு தான் கிளம்பியிருக்கிறீங்க.
இல்லே.
வழக்கமான விஜயகாந்த் படம் பார்க்க போனால் கண்டிப்பாக ஏமாந்துவிடுவீர்கள்.//
பாஸ்..நீங்க விஜயகாந்த் படத்திற்கெல்லாம் போவீங்களா...சொல்லவேயில்லை.
பாஸ், நான் எதிர்பார்த்து வந்தது, விஜயகாந்தை வைத்து காமெடி விமர்சனம் எழுதுவீங்க என்று, ஆனால் நடந்தது...
அருமையான சுருக்கமான விமர்சனம் பகிர்ந்திருக்கிறீங்க.
இந்தப்படம் எப்ப ரிலீஸ் ஆகுதுங்க...
அரசாங்கம் விமர்சனம் ஒரே பரபரப்பு
மாப்ள நேரா போ கடல் வரும் பாத்துட்டு வந்துடு அது தான் வல்லரசு விமர்சனம் ஹிஹி!
ஏலே என்னாச்சு உமக்கு?விஜயகாந்துக்கே தான் அப்படி ஒரு படம் நடித்தது மறந்து போயிருக்கும்..ஆனாலும் இது 1990 ல் வந்திருந்தால் மெகா ஹிட் தான்...
மவனே மாட்டினா கொலை பண்ணிடுவன்
//////தமிழ்ப்பட ஹீரோக்களுக்குத் தங்கள் தேசபக்தியைக் காட்டத் தெரிந்த ஒரே வழி, தெருச்சண்டை போடுபவனையெல்லாம் தீவிரவாதியாகக் காட்டி அவனைத் துரத்தித் துரத்தி அடிப்பது மட்டும்தான்.//// இந்தவரிகளில் வயிறு குலுங்க சிரிக்க வச்சிட்டிங்க பாஸ்...)))
இவர் தானே ஒசாமா பில்லேடனை பிடித்ததாக கதை பரவலாக அடிபடுகிறது ..)
இந்திய நாட்டின் தலைச்சிறந்த "குடிமகன்கள்" ஒவ்வொருவராக கொல்லப்படுகிறார்கள்.அப்போ இவரு???????????????(விசயகாந்து)
கந்தசாமி. said...
இவர் தானே ஒசாமா பில்லேடனை பிடித்ததாக கதை பரவலாக அடிபடுகிறது ..)
எங்கேய்யா புடிச்சாங்க?போட்டுத் தள்ளிட்டாங்களே ஓய்!
இந்தப் படம் ரிலீசாயிடிச்சா?சொல்லவேயில்ல?(அம்மாடி,தப்பிச்சேன்!)
///கப்டனின் கஜேந்திரா,வல்லரசு,வாஞ்சிநாதன் வரிசையில் வெளிவந்த படம் தான் அரசாங்கம்!////வரிசையா வந்ததா?ஓகே,ஓகே!!!!!!!!!
எல்லாம் ஓ.கே மாப்பிள!கப்டன்,கப்டன்னு எல்லாரும் எழுதுறீங்க!எந்தக் கப்பலுக்கு இவரு கப்டனா இருந்தாரு?நூறு ஆண்டுகளுக்கு முன்னால முழுகிப் போச்சே,அது பேரு என்னா........................................................................ஆங்!..... டைட்டானிக்கு,அதுக்கா?இல்ல இப்ப அஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடி பிரான்சில கட்டினாங்களே,"சார்ள்ஸ் டி கொல்"அதுக்கா?இல்ல சமீபத்தில இனிமே ஓட்ட மாட்டோம்னு பேரீச்சம்பழத்துக்கு போட்டாங்களே இங்கிலாந்துப் பயணிகள் கப்பல் அதுக்கா?(டவுட்டு)
////Yoga.s.FR said...

June 4, 2011 3:07 பம்//
இப்பிடி கேள்வி கேப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா,.,...............
அடோ என்ன மப்பா? எப்ப வந்த படத்துக்கு எப்ப விமர்சனம் எழுதுறீங்க? ஆனா இந்தபடம் கொஞ்சம் பறுவாயில்லை!!
என்னாது அரசாங்கம் ரிலீஸ் ஆயிடிச்சா?? சொல்லவே இல்ல
இப்பிடி கேள்வி கேப்பீங்கன்னு தெரிஞ்சிருந்தா,.,..................இப்பிடி ஒண்டை எழுதாமலே விட்டிருக்கலாம்!(டூ லேட்)
இந்த மொக்க படங்களுக்குள் சூப்பர் ஹிட் படமான வல்லரசை சேத்ததுக்காக தேவயாணி ரசிகனாக இருந்து உங்களை வன்மையாக கண்டிக்குறேன்,
இன்று ஒரு பத்திரிகையில் பார்த்தேன்,
விஜயகாந்தின் மகனும் சினிமாவில் நடிக்க போறாராம்
எப்புடி வசதி.......
ஒருவகையில் மைந்தன் விஜயகாந்தின் இரசிகன்போல தெரியுது??? நெசமாவா??
இப்படத்திற்குப் பின் விருதகிரி என்ற படம் வந்திச்சு மாப்பூ இப்படி வந்து போன படங்களை விட்டுட்டு நம்ம ஹீரோவை உள்குத்து செய்வதில் கடுப்பாகி விஜயகாந்திடம் மனுக்கொடுக்கப் போறன் எங்கள் ஹீரோ கால்ச்சண்டையில் யாரும் கிட்ட நெருங்கமுடியாது படங்கள் வரிசை வேனுமா?

சிவா....இந்தப் பதிவு ஒரு கொடுமை !
//தமிழ்ப்பட ஹீரோக்களுக்குத் தங்கள் தேசபக்தியைக் காட்டத் தெரிந்த ஒரே வழி, தெருச்சண்டை போடுபவனையெல்லாம் தீவிரவாதியாகக் காட்டி அவனைத் துரத்தித் துரத்தி அடிப்பது மட்டும்தான். அரசாங்கத்தில் 150வது முறையாக மீண்டும் அதைச் செய்திருக்கிறார் விஜயகாந்த். //
:-)
அருமையான விமர்சனம்! பார்த்துவிடுகிறேன்! :-)
Post a Comment