ஐ பி எல் கிண்ணத்தை தொடர்ந்து இரண்டாவது முறையும் சுவீகரித்த சென்னை சுப்பர் கிங்க்ஸ்'இற்கு வாழ்த்துக்கள்..
முரளி விஜய்யின் அதிரடியும் ஹசியின் துணையும்,அஷ்வினின் ஆரம்ப விக்கட்டும் வெற்றிக்கு வழிசமைத்தது எனலாம்..
என்ன மாயமோ மந்திரமோ தெரியல டோனியின் தலைமயில் விளையாடும் அணிகள் இறுதிப் போட்டியின் போது எழுச்சி கொண்டு விளையாடுகிறன..ஹிஹி
முரளி விஜய் இதே தன்னம்பிக்கையுடன் சர்வதேச போட்டிகளில் ஆடி இருந்தால் இப்போது எங்கயோ இருந்திருப்பார்..
சர்வதேச வாய்ப்புகள் வரும்போது சொதப்பி விடுகிறார்..ஆனால் ரெய்னா கொஹ்லி சிறப்பாக அதனை பயன்படுத்துகிறனர்.
பிராவோ ஒரு பிடியை பிடிக்க பாய்ந்த காட்சி தான் இது..
இதை தான் உசிரை கொடுத்து விளையாடுறது என்பதோ??ஹிஹி
பணம் இருந்தால்...உயிர் என்ன உயிர்...ம...ம....மனசையும் கொடுப்பார்கள் என்றேன்!!
தொடர் நாயகனாக கிரிஸ் கேயிலும்,போட்டியின் நாயகனாக முரளி விஜய்யும் தெரிவுசெய்யப்பட்டனர்.
சிறந்த பார்வையாளராக மைந்தன் சிவா தெரிவுசெய்யப்பட்டார்..ஹிஹி
ஐரோப்பிய விமான தயாரிப்பு கம்பனி ஒன்று மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஹெலிகொப்டர் ஒன்றை உருவாக்கவுள்ளன..
இரு இன்ஜின்களை கொண்டதாக அமையவுள்ள இந்த கெலிக்கொப்டர் வியாபார தேவைகளுக்காக பயன்படவுள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது..
சாதாரண இந்தமாதிரியான கெலிக்கொப்டர்கள் ( 5 .5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும்,பென்ஸ் இயந்திரம் பொருத்தியது 8 .5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் விற்கப்படவுள்ளது..பணக்காரங்க இப்பவே ஆர்டர் பண்ணிக்குங்க..ஹிஹி
இதில் எட்டுப்பேர்கள் அதிகமாக பயணம் செய்யலாமாம்.
உள்ளே வசதிகளை பாருங்கள்..
அடுத்தது ஒரு குறும்படம் பற்றிய செய்தி,யாழ்ப்பாணத்தில் எடுக்கப்படும் இந்த குறும்படத்தின் பெயர் "இப்படியுமா'என்பதாகும்..
எனது பாடசாலை நண்பன்,ஹரிகரன் இயக்குகிறார்..வெகுசீக்கிரம் வெளிவர இருக்கிறதாக கதைக்கும்போது கூறி இருந்தார்.
என்ன கதை பாஸ்'னு கொஞ்சம் கதைய கேட்பமென்றால்,படம் வந்து முழுக்கதை சொல்லும் என்று ஆப் பண்ணிவிட்டார்.
ப்ளாக்'ல போடமுடியுமான்னு கேட்டான்.இது கூட செய்யக்கூடாதா..
புதிய முயற்ச்சிகளை ஊக்குவிப்போம்,நாங்களும் முயற்ச்சிப்போம் உருப்படியா ஏதாவது பண்ணுவதற்கு.
முற்றுமுழுதாக மாணவர்களால் தயாரிக்கப்படும் குறும்படம்..அதற்காக நீயும் மாணவனான்னு கேக்கப்பிடாது..
நாம எல்லாம்...வேணாம்..
நான்கு வருட அடைப்புக்கு பின்னர்,காசா எல்லையை எகிப்த்து திறந்துவிட்டது நேற்று.
இந்த நடவடிக்கை,பாலஸ்தீனிய மக்களை சுதந்திரமாக(கொஞ்சமாவது)நடமாட வழிசமைத்திருக்கிறது என்கிறார்கள் சம்பந்தப்பட்டோர்..
இஸ்ரேலின் தாக்குதலிலிருந்து தப்புவதற்கு இது உதவலாம்.
முதல் பஸ்'இல் பயணிக்க நூற்றுக்கணக்கானோர் அடிபட்டு திரண்டிருந்ததை காணமுடிந்தது.
கடந்த 2007 'இல் இந்த பாதை மூடப்பட்டது அனைவருக்கும் தெரியும் தானே?எனினும் இப்பகுதியூடாக ஆயுதங்கள் கடத்தப்படுவதை தவிர்க்க பாதுகாப்பு நடவடிக்கையில் தமது படையினர் ஈடுபடுவார்களேன்று எகிப்து கூறியுள்ளது.
அமெரிக்கன் மிச்சூரி மாநிலத்தை கடுமையாக தாக்கிய சூறாவளியின்
கோரமுகங்கள் தான் இவை..கிட்டத்தட்ட நூற்றி அம்பது பேர் உயிர் இழந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன..
ஒரு வைத்தியசாலையும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது..
வாகனங்கள் வீடுகள் என அனைத்தும் தூக்கி எறியப்பட்டிருக்கின்றன..
கார் எப்படி கிடக்கின்றது என்று பாருங்கள்..
வெம்ப்ளி ஸ்டேடியத்தில் உலகின் மிக முக்கியமான இரண்டு கால்ப்பந்தாட்ட கழக அணிகளுக்கிடையில் சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டி நடைபெற்றது நேற்று இரவு..மன்செஸ்டர் யுனைட்டட் மற்றும் பார்சிலோனா அணிகளுக்கிடையில்..
எனது பிடித்தமான அணி மான்செஸ்டர் யுனைட்டட் தான்..ஆனால் லயனல் மெஸ்ஸி பார்சிலோனாவுக்காக விளையாடியதால்,
எந்த அணி வெற்றி பெற்றாலும் சந்தோசம் என்றிருந்தேன்..பார்சிலோனா தான் இந்த வருடத்தின் மிகச்சிறந்த விளையாட்டு அணியாக ஆல்ரெடி தெரிவு செய்யப்பட்டு இருந்தது..
எனிலும்,மான்செஸ்டர் சவால் கொடுக்குமென எதிர்பார்க்கப்பட்டது.
இறுதியில் பார்சிலோனா 3 -1 என்ற அடிப்படையில் சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை கைப்பற்றி வரலாறு படைத்தது..
வில்லா,மெஸ்ஸி என பலமான பார்சிலோனா அணி தான் இவ்வருடத்தின் உலகின் தலைசிறந்த கால்ப்பந்தாட்ட கழக அணி என்பதில் சந்தேகம் இல்லை..
30 comments:
ஹிஹிஹிஹி ஹிஹி ஹிஹி ஹிஹி ஹிஹி ஹிஹி ஹிஹி!!!!!!!!!!!!!!
Oh manchester lost??? Mmm, but i m alwayz manchester supporter.
//விக்கி உலகம் said...
ஹிஹிஹிஹி ஹிஹி ஹிஹி ஹிஹி ஹிஹி ஹிஹி ஹிஹி!!!!!!!!!!!!!!//
என்னய்யா என்னது இது??
ஏதாச்சும் சிரிப்பு போலீஸ் வேஷம் போட்டிருக்கின்களோ இன்னிக்கு??
//Anuthinan S said...
Oh manchester lost??? Mmm, but i m alwayz manchester supporter./
yes men..we lost it!!
பல்சுவை விருந்து படைச்சிட்டீங்க... ஆனா ஒரு வருத்தம் பாயாசம் வைக்கல...
ஃஃஃசிறந்த பார்வையாளராக மைந்தன் சிவா தெரிவுசெய்யப்பட்டார்..ஃஃ
போட்டி பார்வையாளராகவா?? இல்லை போட்டி அரங்கினுள் நடப்பவற்றின் பார்வையாளராகவோ??
கலக்கலான ஒரு பதிவு! அருமை பாஸ்! :-)
ஓ மைந்தன் சிவா! அப்பிடியா சங்கதி! எனக்கு raising star விருது இக்பால் அப்துல்லாக்கு கொடுத்ததில் உடன்பாடு இல்லை அது றாகுல் சர்மாவிற்கு போயிருக்க வேண்டும்!
குறும்பட இயக்குனர் எமது பாடசாலையின் மாணவர் சந்தோசம்!
//.பணக்காரங்க இப்பவே ஆர்டர் பண்ணிக்குங்க.//
அப்ப நீங்க பண்ணீட்டிங்களா?
பாஸ் அந்த குறும்படத்துக்கு நான் தான் எடிட்டிங், விசுவல் எஃபெக்ட், பின்னணி இசை எல்லாம் பண்ணுறன்.. பட் எங்கிட்டயே கதை சொல்லலண்ணா பாத்துக்குங்களேன்....
இப்படியுமா குழுவிற்கு வாழ்த்துகள்!
//ஜீ... said...
கலக்கலான ஒரு பதிவு! அருமை பாஸ்! :-//
நன்றி நன்றி
.//கார்த்தி said...
ஓ மைந்தன் சிவா! அப்பிடியா சங்கதி! எனக்கு raising star விருது இக்பால் அப்துல்லாக்கு கொடுத்ததில் உடன்பாடு இல்லை அது றாகுல் சர்மாவிற்கு போயிருக்க வேண்டும்!
குறும்பட இயக்குனர் எமது பாடசாலையின் மாணவர் சந்தோசம்!/
ராகுல் சர்மா-ம்ம்ம்
//மதுரன் said...
//.பணக்காரங்க இப்பவே ஆர்டர் பண்ணிக்குங்க.//
அப்ப நீங்க பண்ணீட்டிங்களா/
ஹிஹி எனக்கு தான் மோதல் ஆர்டர்!!
..//மதுரன் said...
பாஸ் அந்த குறும்படத்துக்கு நான் தான் எடிட்டிங், விசுவல் எஃபெக்ட், பின்னணி இசை எல்லாம் பண்ணுறன்.. பட் எங்கிட்டயே கதை சொல்லலண்ணா பாத்துக்குங்களேன்.....//
ஆமாம் கேள்விப்பட்டேன் மதுரன் வாழ்த்துக்கள்
எலே புதுசா படம் காட்டுறாங்களாம்லே!!//
தலைப்பே ஒரு டெரர் தனமா இருக்கே பாஸ்,
சிறந்த பார்வையாளராக மைந்தன் சிவா தெரிவுசெய்யப்பட்டார்..ஹிஹி//
ஆஹா... ஏன் வீட்டிலை உட்கார்ந்திருந்து பார்த்ததுக்கும் பரிசா. அவ்........
அதற்காக நீயும் மாணவனான்னு கேக்கப்பிடாது..
நாம எல்லாம்...வேணாம்..//
யோ, நீங்கள் பாலர் வகுப்பில் படிக்கிற ஆள் என்பது நமக்கு எப்பவோ தெரியுமே.
சகோ, பதிவு உள்ளூர் விடயங்கள், விளையாட்டுத் தகவல், உலக அரசியல் அலசல், சூறாவளி மாற்றங்களைத் தாங்கி வந்திருக்கிறது,
குறும்படம் பற்றிய செய்திக்கு மிக்க நன்றிகள், கூடவே வாழ்த்துக்களும்.
இம் முயற்சி வெற்றி பெற வேண்டும்!
உண்மையில் படத் தொகுப்பு மதுரனா.
ஆச்சரியமாக இருக்கே!
ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் ரகசியமாக பூந்து விளையாடுறாரா ஆளு!
வாழ்த்துக்கள் மாப்பு
பாஸ், இரவு 2 மணிவரைக்கும் முழிச்சிருந்து மட்ச் பாத்தன் பொஸ். கடைசி 10 நிமிசத்துக்கயாவது ஒரு கோல் போகும் என்டு. :(
அந்த ஹெலிகாப்டர் இனி ஜெயலலிதாவுக்கு பயன்பட வாய்ப்பு இருக்கிறது..
பய புள்ள திருந்திடுச்சோ?#டவுட்டு
சிறந்த பார்வையாளராக மைந்தன் சிவா தெரிவுசெய்யப்பட்டார்..ஹிஹி
நிஜம்மாவே சிறந்த பார்வையாளர்தான் சிவா
///அப்புறம் மக்களே??இன்னிக்கு சண்டே..லைப்ப என்ஜாய் பண்ணுங்க..மூஞ்சியல உம்முன்னு வைச்சிக்காம///அப்புறம் இன்று மதர்ஸ் டே!மறந்துட்டியளோ?முதல்ல மதர விஷ் பண்ணுங்கோ!
நாட்டு நடப்பு, பல்சுவை..சூப்பர் மக்கா....!!!
நேற்றைய இரண்டு ஆட்டங்களும் நான் பார்த்தேன் நான் நினைத்ததே நடந்தது ஹிஹிஹி...எல்லாம் என்னால தான் ..)
இந்தியாவில இருந்து இஸ்ரேல் வழியாக அமேரிக்கா எல்லாம் சுத்தி வந்திருக்கிறீங்க போல )
அழகாய் பல்சுவை விருது படைத்திருக்கிறீர்கள் குறும்படம் புலம்பெயர் தேசங்களுக்கும் வருமா! இரவு 2 மணிவரையும் கண்முழிக்கும் போது நமக்கும் மின்னஞ்சல் போடுங்கள் நானும் வருகிறேன் கலந்து பதிவுகளில் வடை வேண்ட!
ஹாய்..மைந்தன் அந்த ஹெலியை ஆடர் பண்ணிட்டீங்க தானே ? :)
சிவா...குறும்படம் பார்க்க புலம் பெயர்ந்த தமிழர்களும் பார்க்க ஆவல் என்று சொல்லிவிடுங்கள் உங்கள் நண்பரிடம் !
Post a Comment