இது நேற்று இரவு,எனக்கும்,இலங்கையில் இன்னொரு பதிவர் ரமேஷ் சிவா'க்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடல்.
பதிவுலகத்தால் என்ன சாதிக்க முடியும் என்று கேட்பவர்களுக்காக:
யாராவது இவ்வாறு "சட்" பண்ணுவதுண்டா??
பதிவுலகில் இருப்பதால் நாங்கள் பண்ணுகிறோம்!!
தமிழ் திரைப்படங்கள் நம் வாழ்க்கையில் பின்னிப் பிணைந்தவை என்பதால் அவற்றின் தாக்கம்
எப்போதும் இருக்கும் என்பதில் ஐயமில்லை..
ஆனால் சிறந்த தமிழில் பதிவுகளை இடுவதற்கு நாம் முன்வருவதில் எனக்கு
தயக்கமில்லை..
என்ன,எனது பதிவுகள் பெரும்பாலும் மொக்கை பதிவுகள் என்பதால்,
அவற்றை எழுத்து நடையில் எழுத்துகையில் அந்த மொக்கைக்கான
தாக்கம் இல்லாமல் போய்விடும்...
பார்க்கலாம்..
உங்கள் ஆலோசனைகளையும் கூறுங்கள்..
ஆரோக்கியமான பதிவுகளுக்கு வழிவகுக்கும் நண்பர்களே!!
குறிப்பு:எனது வானம் விமர்சனம் பார்த்து நொந்தவர்களுக்கு ஆதரவாக வடிவேல் அரிவாளோடு!! நான் எஸ்கேப்!! |
22 comments:
போற்றுவோர் போற்றுக தூற்றுவோர் தூற்றுக போய்க்கிட்டு இருங்க போஸ்...
பார்ரா! எவ்வளவு பொறுப்பா இருக்கான் பயபுள்ள!
ரமேஷ் சிவா? சிதறல்கள் ரமேஷா?
ஹி ஹி ஹி
//மொக்கை பதிவுகள் என்பதால்,
அவற்றை எழுத்து நடையில் எழுத்துகையில் அந்த மொக்கைக்கான
தாக்கம் இல்லாமல் போய்விடும்...//
உண்மைதான் பாஸ்
ஆனாலும் சிறிதளவாவது முயற்சி செய்து பார்க்கலாமே?
டேய்.... அடங்கமாட்டிங்களா நீங்க...
புதிய முயற்ச்சி
பாஸ் நீங்க தொடருங்க நாங்க உங்க பின்னாலே தொடருறம்
எழுத எழுதவே எழுத்து வசமாகும். ஏதும் எழுதாமல் மற்றவர்களை வசை பாடுபவர்களை விட மொக்கை என்றாவது, ஏதேனும் எழுதுபவர்கள் சிறந்தவர்கள் தான்.
யாரும் இங்கே வானத்திலிருந்து குதித்து விடவில்லை, முதல்முதல் எழுதும்போதே சாகித்திய அகடமி அளவில் எழுத, தொடர்ந்து எழுதுங்கள் சகோ உங்களுக்கு என்று ஒரு பாணியை உருவாக்குங்கள்...
மற்றபடி முதல் பின்னூட்டத்தில் றமேஷ் சொன்னது போல தான் போற்றுவோர் போற்றுக தூற்றுவோர் தூற்றுக போய்க்கிட்டு இருங்க போஸ்...
ம்ம்ம்..நடத்துங்க..நடத்துங்க.. :)
continue boss continue
நல்லா எழுதுங்க பாஸ்....
தமிழ்மணம் ஏழாவது ஓட்டு என்னுது ஹி ஹி ஹி ஹி....
ஹி ஹி!
என்னய்யா எல்லாரும் சிரிச்சிட்டே போறீங்க??
என்னான்னு சொல்லிட்டு போங்கையா..
கஷ்டப்பட்டு மொக்க பதிவு போட்டா சிரிக்கமாட்டானுகள்..
சீரியஸா ஒரு பதிவு போட்டால் சிரிக்கிரானுகள்!
ஜீ... said...
ரமேஷ் சிவா? சிதறல்கள் ரமேஷா? //
ஆமா அவரே தான்!!
//பாரத்... பாரதி... said... எழுத எழுதவே எழுத்து வசமாகும். ஏதும் எழுதாமல் மற்றவர்களை வசை பாடுபவர்களை விட மொக்கை என்றாவது, ஏதேனும் எழுதுபவர்கள் சிறந்தவர்கள் தான்.
யாரும் இங்கே வானத்திலிருந்து குதித்து விடவில்லை, முதல்முதல் எழுதும்போதே சாகித்திய அகடமி அளவில் எழுத, தொடர்ந்து எழுதுங்கள் சகோ உங்களுக்கு என்று ஒரு பாணியை உருவாக்குங்கள்...
மற்றபடி முதல் பின்னூட்டத்தில் றமேஷ் சொன்னது போல தான் போற்றுவோர் போற்றுக தூற்றுவோர் தூற்றுக போய்க்கிட்டு இருங்க போஸ்...//
ஊக்கங்களுக்கு நன்றிகள் நண்பரே!!
பதிவுலகத்தால் என்ன சாதிக்க முடியும் என்று கேட்பவர்களுக்காக:
யாராவது இவ்வாறு "சட்" பண்ணுவதுண்டா??
பதிவுலகில் இருப்பதால் நாங்கள் பண்ணுகிறோம்!!//
நல்லாத் தானே போய்கிட்டிருக்குது, ஏன் ஏன் இந்தக் கொல வெறி.
சகோ, நகைச்சுவைகளையோ, ஒரு சம்பவத்தையோ எழுத்து தமிழில்/ இலக்கணத் தமிழில் இலகுவாக சொல்ல முடியாது.
இவற்றினை பேச்சுத் தமிழில், ஊர் வட்டார வழக்குடன் சொல்லும் போது தான் அந்தச் சம்பவங்களுடன் உள்ளார்ந்து நாமும் படிப்பது போன்ற உணர்வு ஏற்படும்,
மொக்கைப் பதிவுகளுக்கோ, சம்பாஷணைகளுக்கோ, வட்டார வழக்கினையும், பேச்சுத் தமிழையும் பயன்ப்டுத்துவது தவறில்லை எனும் உங்கள் கருத்தினை நானும் ஏற்கிறேன்.
நீங்கள் எழுதுங்கள் நான் படிக்கிறேன் பிறகு பின்னுட்டம் இடுகிறேன் எப்படி என்று மாப்பூ வைக்காதீங்க கடுப்பேத்தி வானம் வந்தாச்சு !
எடுத்துக்கொண்ட விடையத்தைப்பற்றி எழுதுவது என்பது எல்லோராலும் முடியாது அந்த வகையில் உங்கள் திறமைகளை பலபதிவுகள் நிருபித்துள்ளன நண்பரே. தொடர்ந்து எழுதுங்கள்.
அத்தோடு விரைவில் உங்கள் தளத்துக்கு எனது தளத்தில் இணைப்புக்கொடுக்கவுள்ளேன் .
வாழ்க வழமுடன்
Post a Comment