Saturday, March 26, 2011

தபசி'னு பெயர் வரக் காரணம் என்ன??ஏன் முதலிலேயே தப்சி பெயர் வர காரணம் எதுன்னு தேடுறீங்க...
மொதல்'ல மத்தவங்க கந்தையா சுப்பையா பெயருகள் வர காரணம் என்னன்னு பாப்பம்....

நடராசா
ன்னு பெயர் வைச்சா அவரு பைக்,கார் எல்லாம் வாங்க முடியாதா??
சாகும் மட்டும் நடை நடையா நடக்க வேண்டியது தானா??

மணிவண்ணன்'னு பெயரு வைச்சா மணி அடிச்சுக்கிட்டே இருக்கனுமா??அப்ப கோயிலுக்கு ஒரு மணிவண்ணன் பிடிக்க எங்க தேடி போவாங்க??

கந்தசாமி'ன்னு பெயரு வைச்சா எல்லாரும் அவரையே கும்புடுவாங்களா??
இல்லை அவர இருக்க வைச்சி தேர் தான் இழுப்பாங்களா??

விக்கி உலகம்னு பெயரு வைச்சா மாம்பழ சண்டை'ல பிள்ளையாரு இவர சுத்தி வந்து மாம்பலத்த ஆட்டைய போட்டிடுவாரா??

நாஞ்சில் மனோ'னு பெயரு வைச்சிக்கிட்டா நாஞ்சில் எக்ஸ்பிரஸ் அவர்ட வீட்டு வாசலுக்காலேயே போகுமா புக்கு புக்குனு சத்தம் போட்டுக்கிட்டு??

ஓட்டவடை நாராயணன் எண்டு பெயரு வைச்சிக்கிட்டா பழைய வடை சுட்ட பாட்டிக்கும் இவருக்கும் கிசு கிசுன்னு பத்திரிகைல போட்டிடுவான்களா என்ன!!

தப்சின்னு பெயரு வைச்சிக்கிட்டா அவங்க பக்கத்தில போனா கப்சி அடிக்காதுன்னு சொல்ல வர்றாங்களா?
தினசரி குளிப்பாங்களோ??

மதி சுதா'னு பெயரு வைச்சிகிட்டா சந்திரன் அவங்க வீட்டுக்கு மேல தான் தினசரி வட்டம் போடுவாரோ??
அல்லது பக்கத்தி வீட்டு சுதா'வ வளைக்க போட்டுகிட்ட திட்டமோ???


பன்னிக்குட்டி ராமசாமி கைவசம் தான் உலகம் பூரா நடக்குற பன்னி பிசினஸ் இருக்குதோ??
பெரிய பன்னி என்ன விலை??குட்டிப் பன்னி என்ன விலை??
மாசத்துக்கொரு தடவையாவது தண்ணி காட்டுவீங்கள்ளே??

சியேர்ஸ் வித் ஜனா எண்டு பெயர் வைச்சிக்கிட்டா நம்ம பசங்க ஒவ்வொரு நயிட்டும் போடுற குவாட்டர் கட்டிங் பார்ட்டிக்கெல்லாம் இவர ஓசில சரக்கடிக்க கூப்பிடுவாங்களோ??

கோமாளி செல்வானு சொன்னா எல்லாரும் இவர் படத்தையே வீட்டுக்கு முன்னால பிரேம் போட்டு மாட்டிடுவாங்களோ??
வீடு உருப்படும்னு சொல்றீங்க??

சிரிப்பு போலீஸ்னு பெயரு வைச்சிக்கிட்டா லைசன்ஸ் இல்லாம ட்ராபிக் போலீஸ்கிட்ட மாட்டினா லஞ்சம் ஒன்னும் கொடுக்க தேவலையோ??
ஹிஹி இல்ல பாடி சைஸ்'ச பாத்து பிழைச்சு போ'னு விட்டிடுவாங்களோ??

சி பி அப்பிடின்னா எல்லாரும் இவரு "சின்னப் பிள்ளை"ன்னு தூக்கி வைச்சு தாலாட்டுவாங்களோ??
மனுசர் ஐடியாவா தான் பெயரு வைச்சிருக்கார்லே!!டிஸ்கி 1 : இந்த மாதம் தப்சி மாதமானு நீங்க கேக்குறது புரியுது...
அத்தின பதிவு தப்சி பத்தி போட்டாச்சு...
நெக்ஸ்டு யாராச்சும் சிக்காம போயிடுவாங்களா என்ன!!

டிஸ்கி 2 :இந்தப் பதிவில் வரும் பெயர்கள் யாவும் கற்பனையே..யாரையும் குறிப்பிடுவனவோ மனதை புண்படுத்தவோ இல்லை.அப்புறம் ஆயிரம் கோடி ரூபா நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தாக்கல் பண்ணீடாதீங்க..என்னட்ட கொஞ்சம் கம்மியா தான் கைவசம் காசு இருக்கு..

டிஸ்கி 3 :நண்பர்கள் கோவிச்சுக்காதீங்க..என்னால முடிஞ்ச நேரமெல்லாம் உங்க கடைப்பக்கம் வர ட்ரை பண்ணுறன்..
அப்பிடி வர மறந்துட்டேன்னு சொன்னாக்கா ஏன் டா வரேல நாயே....அப்பிடீன்னு பேசாமா ஒரு கமெண்டு போடுங்க..
அடுத்த நிமிஷம் உங்க காலடில கிடப்பேன்...

Post Comment

24 comments:

“நிலவின்” ஜனகன் said...

ஹிஹிஹி........பெயருகள் சூப்பரு...பெயரு வைக்கும் போது சொல்லி அனுப்புறன்..!

பாட்டு ரசிகன் said...

ஓ... இப்படியெல்லாம் கலக்கலாமா...

பாட்டு ரசிகன் said...

அடுத்து யாரைப்பத்திங்க ஆராய்ச்சி..

Chitra said...

டிஸ்கி 2 :இந்தப் பதிவில் வரும் பெயர்கள் யாவும் கற்பனையே..யாரையும் குறிப்பிடுவனவோ மனதை புண்படுத்தவோ இல்லை.அப்புறம் ஆயிரம் கோடி ரூபா நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தாக்கல் பண்ணீடாதீங்க..என்னட்ட கொஞ்சம் கம்மியா தான் கைவசம் காசு இருக்கு..

......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... இதுதான் பெஸ்ட்!

விக்கி உலகம் said...

மாப்ள எனக்கு டிஸுக்கி 3 தான்யா பிடிச்சிருக்கு ஹிஹி!

மைந்தன் சிவா said...

//பாட்டு ரசிகன் said...
ஓ... இப்படியெல்லாம் கலக்கலாமா...//

அப்பிடீன்னு தான் பேசிக்கிறாங்க..ஹிஹி

மைந்தன் சிவா said...

//பாட்டு ரசிகன் said...
அடுத்து யாரைப்பத்திங்க ஆராய்ச்சி.//

சிக்காமலா போயிடுவாங்க??

மைந்தன் சிவா said...

“நிலவின்” ஜனகன் said...
ஹிஹிஹி........பெயருகள் சூப்பரு...பெயரு வைக்கும் போது சொல்லி அனுப்புறன்..//எப்ப பாஸ் கல்யாணம்??

மைந்தன் சிவா said...

//Chitra said...
டிஸ்கி 2 :இந்தப் பதிவில் வரும் பெயர்கள் யாவும் கற்பனையே..யாரையும் குறிப்பிடுவனவோ மனதை புண்படுத்தவோ இல்லை.அப்புறம் ஆயிரம் கோடி ரூபா நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தாக்கல் பண்ணீடாதீங்க..என்னட்ட கொஞ்சம் கம்மியா தான் கைவசம் காசு இருக்கு..

......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... இதுதான் பெஸ்ட்!//அப்ப நீங்க நான் சொல்ற எதையுமே நம்ப போறதில்லை??

மைந்தன் சிவா said...

///விக்கி உலகம் said...
மாப்ள எனக்கு டிஸுக்கி 3 தான்யா பிடிச்சிருக்கு ஹிஹி!//அப்பிடி என்ன இருக்கு அதில??

MANO நாஞ்சில் மனோ said...

//நாஞ்சில் மனோ'னு பெயரு வைச்சிக்கிட்டா நாஞ்சில் எக்ஸ்பிரஸ் அவர்ட வீட்டு வாசலுக்காலேயே போகுமா புக்கு புக்குனு சத்தம் போட்டுக்கிட்டு??//

சரிய்யா வீட்டு வாசலுக்காவது எக்ஸ்பிரஸ்'ச அனுப்புங்க மும்பை போய் வர வசதியா இருக்கும். ஆமா "நாஞ்சில் எக்ஸ்பிரஸ்"ன்னு ஒரு வலை பூ இருக்குய்யா அவரு வந்து கோர்ட்டுக்கு போனாலும் போவார்'ன்னு தினமலர்'ல நியூஸ் வந்துருக்கு....

MANO நாஞ்சில் மனோ said...

// புக்கு புக்குனு சத்தம் போட்டுக்கிட்டு??//


என்னாது புக்கு புக்கா.....?
எந்த புக்கு பொன்னியின் செல்வனா, யவனராணியா, ரோமாபுரியில் பாண்டியனா....

MANO நாஞ்சில் மனோ said...

// புக்கு புக்குனு சத்தம் போட்டுக்கிட்டு??//


இதென்ன நூலகமா புக்கு புக்குன்னு சத்தம் போடுறதுக்கு ஹே ஹே ஹே ஹே...

நா.மணிவண்ணன் said...

///மணிவண்ணன்'னு பெயரு வைச்சா மணி அடிச்சுக்கிட்டே இருக்கனுமா??அப்ப கோயிலுக்கு ஒரு மணிவண்ணன் பிடிக்க எங்க தேடி போவாங்க?///

சரி விடுங்க நண்பா நமக்கு அதலாம் பழகிபோச்சு ,ஹி ஹி ஹி

Anonymous said...

////கந்தசாமி'ன்னு பெயரு வைச்சா எல்லாரும் அவரையே கும்புடுவாங்களா??
இல்லை அவர இருக்க வைச்சி தேர் தான் இழுப்பாங்களா??/// பாஸ் நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஜானி பாஸ்

shanmugavel said...

அசத்தல் ஹா ஹா

சி.பி.செந்தில்குமார் said...

thapsi yr choice our choice

siva said...

your comment asking style is good

http://designersiva.blogspot.com/search/label/links_use%20for%20all*

சேட்டைக்காரன் said...

என்னங்க அநியாயமா இருக்குது? தப்சின்னு பேரு வரக்காரணம் என்னான்னு தலைப்பை வச்சீங்க சரி! அதைத் தெரிஞ்சுக்கிட்டு பிறவிப்பயனை அடையலாமுன்னு வந்தா இப்படி பொசுக்குன்னு முடிச்சிட்டீங்களே? :-)

ரஹீம் கஸாலி said...

அட இன்னுமா தப்சிய கட்டிக்கு அழுகுறே? அடுத்த பிகர் வந்தாச்சுயா....ஹன்சிகா மோத்வானின்னு பேரு....சீக்கிரம் மாறுய்யா

கார்த்தி said...

சார் நீங்க பின்னுறீங்க போங்க!

Mohamed Faaique said...

மைந்தனின் மனதில், மன்மதன் யோசனை எல்லாம் வருதா?

நிரூபன் said...

மைந்தன் சிவா said...

கவிதை அருமையா இருக்கு,

தொடர் கோர்வையாக வந்திருக்கு...
ம்ம் எல்லாத்திலும் கலக்குறீங்க...
அப்பிட்யே என்னுடைய ப்ளாக் வந்து வதந்திகளும் பரப்புறீங்க,

ம்ம் வாழ்க வளமுடன் ஹிஹி//

மேலே உள்ள வசனத்தில் ஏதும் பின் நவீனத்துவம் இல்லையோ?
வாழ்க வளமுடன் என்பது என் காதில் வாழ்க தப்சியுடன் என்று என் காதில் ஒலிக்கிறது.
நண்பனுக்கா, சகோதரனுக்காக ஒரு இனிய உள்ளம் தப்சியை விட்டுக் கொடுத்துப் போவது போன்ற உணர்வினை இது ஏற்படுத்துகிறது;))
(என்ன சகோ அரிவாளைத் தேடுறீங்களா? ஐயாம் எஸ் கேப்பு)

உங்க பிளாக்கிலை வதந்திகளைப் பரப்புறேனா? என்ன சொல்லிப் புட்டீங்க, நான் இலங்கை வானொலி கேட்பதில்லை. இப்போதெல்லாம் தனியார் வானொலிகள் தான் கேட்கிறனான். ஆதலால் வதந்திகளைப் பரப்ப சான்சே இல்லை. ஓ அந்த தப்சி மேட்டரா:))

நிரூபன் said...

எல்லோரின் பெயருக்கான ரகசியங்களையும், பெயர் பிறந்த காரணத்தையும் கருத்துக்களைக் கச்சிதமாகச் சொல்லும் விஞ்ஞானிகள் கூடத்திலிருந்து உட்கார்ந்து யோசித்த எங்க தப்சியின் இலங்கை ரசிசர் மைந்தன் சிவா வாழ்க...
மாப்பு இனிமே நோ தப்சி புராணம். Because நீங்க தப்சி இரசிகர். இன்று முதல் தப்சியின் கடைக்கண் பார்வை எனக்கு நேராக விழுவதாக கனவில் கண்டேன். ஆதலால் இனிமேல் தப்சியின் மெய்ப் பாதுகாவலன், தோழன்........இன்னும் இன்னும் எல்லாமே அட நானில்லைங்கோ என்று சொல்ல வந்தேன்.

Related Posts Plugin for WordPress, Blogger...