Wednesday, April 20, 2011

ஒசாமா பின்லேடன் என்னுடைய போலோவரா??நேத்து வேலை முடிஞ்சு பஸ்'ல ரொம்ப tired'ஆ வந்திட்டிருந்தேன்..
மழை வேற ஒரு பக்கம்..

ச்டாமினாமினா யெஹ் யெஹ்
வக்கா வக்கா யெஹ் யெஹ்...
ஒண்ணுமில்ல என்னுடைய தொலை பேசி ஒலித்தது.
பாத்தா புது நம்பர்..
"ஹலோ யாரு?"
டமார் டமார் டுமீல் டுமீல் டும் டம்"....

ஒரே வெடி சத்தம்..
"அட யாருப்பா இது"?
வருஷம் முடிஞ்சு வெடி சுடுறது?"

'நான் தான் ஒசாமா பின் லாடன்"

"என்னது ஒசாமாவா?"
"ஆமா ஒசாமா தான்"!

'என்ன விஷயம்?"

"இல்ல நான் உங்க நீண்ட நாள் வாசகன்..
எப்ப உங்கட ப்ளாக்'க வாசிக்க தொடங்கினேனோ
அண்டைக்கே குண்டு போடுறத நிறுத்திட்டன்...
வாழ்க்கை வெறுத்திட்டு..
பேசாம அல்கெய்டா'வ விட்டிட்டு உங்க ப்ளோக்ல சேர்ந்திடலாம்னு இருக்கேன்..
பேசாமல் நானும் அமெரிக்காவுக்கு குண்டு போடாம மொக்கை போட்டே சாவடிக்கலாம்னு இருக்கேன் பாஸ்"."

அப்பிடியா?அப்பிடீன்னா ஒரு கண்டிசன்..
நான் சொல்ற சில ப்லோக்கேர்ஸ்'ஐ போட்டு தள்ளுங்க..
உங்கள சேர்த்துக்கிறேன்..எண்டேன்..

ஓகே லிஸ்ட் அனுப்புங்க ஒரேடியா பாம் வைச்சுடுறேன் எண்டார்..
அனுப்பி இருக்கேன் பாப்பம்...
அவரு ஒசாமாவா இல்ல ஓட்டவடையா எண்டு!!
இது தான் லிஸ்ட்:
சி பி (முக்கிய புள்ளி)
நல்ல நேரம் சதீஷ் குமார்
தக்காளி விக்கி
நாஞ்சில் மனோ
கந்தசாமி
கவிதை வீதி சவுந்தர்
ரஹீம் ஹசாலி
ஜனா
நிருபன்
ஓடையிலிருக்கும் சுதா

ஓட்ட வடையை சேர்த்துக்கல..ஆல்ரெடி ஒரு ஓட்டையோட அலையுறாரு பாவம்
இன்னொரு ஓட்டைய அவரு உடம்பு தாங்குமான்னு தான்..!!

பட்டியல் நம்பர் ரெண்டு அப்புறமா குடுக்கலாம்னு இருக்கேன்...

இது தானுங்க மேட்டர்...போலோவேர்ஸ் ஆயிரத்தி ஐநூறு..இல்ல இல்ல .. நூத்தி அம்பது ஆகுது..
நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!!தொடர்ந்து தொடர்பில் இருங்கள்..
தொடர்புக்கு அழையுங்கள் #123456789*


ஆமா யாரு அந்த நூத்தி அம்பதாவது பாவப்பட்ட போலோவர்??
ஆமா அந்த படம் யாரோடது??கண்டு பிடியுங்க...அவங்க போட்டிருக்கிற சட்டை பரிசாக தரப்படும்!!
(சட்டை மட்டும் தான்!!!ஐ மீன் பின்னால இருக்கிற பானை எல்லாம் கேக்கப்பிடாது!!)

Post Comment

12 comments:

sothilingam said...

"பேசாமல் நானும் அமெரிக்காவுக்கு குண்டு போடாம மொக்கை போட்டே சாவடிக்கலாம்னு இருக்கேன் பாஸ்".

மேற்கூறிய வசனம் சற்று சிந்திக்கபடவேண்டியது....

விக்கி உலகம் said...

ஐ ஜாலி ஜாலி ஹிஹி!

shanmugavel said...

ஆஹா! இப்படியும் யோசிப்பீங்களோ !

நிரூபன் said...

இது தான் லிஸ்ட்:
சி பி (முக்கிய புள்ளி)
நல்ல நேரம் சதீஷ் குமார்
தக்காளி விக்கி
நாஞ்சில் மனோ
கந்தசாமி
கவிதை வீதி சவுந்தர்
ரஹீம் ஹசாலி
ஜனா
நிருபன்
ஓடையிலிருக்கும் சுதா//

இன்னைக்கு பெட்டா பஸ்ஸிலை இருந்து இறக்கி சங்கு ஊதிடுறம்.. ஜாக்கிரதை..;-))

நிரூபன் said...

ஒசாமா பின்லேடன் என்னுடைய போலோவரா??//

ஆட்டுப்பட்டித் தெரு முருகா. நீ தான் இந்தப் பாசக்காரப் புள்ளைக்கு அருள் பாலிக்கனும்.

நிரூபன் said...

கலாய்ப்பு அருமை... ஆனால் அந்த போன் நம்பர் மட்டும் எங்கேயோ திருடின சிம் கார்ட்டின் போன் நம்பர் போலத் தெரியுதே;-))

நாங்களும் வைப்பமில்ல ஆப்பு....அவ்......

MANO நாஞ்சில் மனோ said...

சக்சஸ் சக்சஸ்..........
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா தமிழ்மணத்தில் ஓட்டு போட்டுட்டேம்லேய் மக்கா...ஹா ஹா ஹா......சக்சஸ் சக்சஸ்....
இன்னைக்கு எல்லா மக்காவுக்கும் தமிழ்மணத்துல ஓட்டு போடுரதுதான் என் வேலை ஹே ஹே ஹே ஹே...

Anonymous said...

பார்த்து பாஸ், பில்லேடன் பார்சல்ல ஏதாவது அனுப்பி வைக்க போறாரு....

MANO நாஞ்சில் மனோ said...

கொலைவெறி ஆரம்பம்.....

MANO நாஞ்சில் மனோ said...

நான் என்ன அநியாயம் செஞ்சேன்...ஒசாமா'கிட்டே போட்டு கொடுத்துட்டீங்க....

பாலா said...

நல்லவேளை லிஸ்டில் நான் இல்லை. நாம எல்லாம் லேடனுக்கு தூரத்து சொந்தம்.

தொடருங்கள். வாழ்த்துக்கள்

ரஹீம் கஸாலி said...

யோவ்....நான் உனக்கு என்னய்யா பாவம் செஞ்சம் இப்படி பின் லேடன் வரை பஞ்சாயத்து கொண்டு போயிருக்கே,,,,

Related Posts Plugin for WordPress, Blogger...