Friday, August 13, 2010

தபு ஷங்கரின் வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் ??



தபு ஷங்கரை இளையோர் மத்தியில் பிரபலமாக்கியது அவரின் வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் என்ற கவிதை தொகுப்பாகும்..அதிலே உள்ள அத்தனை கவிதைகளும் இளசுகள் உள்ளத்தை வருடுவன!அந்த வகையில் என்னுள்ளத்தை வருடிய சில கவிதைகளை உங்களுக்காக காட்ச்சிப்படுத்துகிறேன் அந்த கவிதை தொகுப்பிலிருந்து!

முதலாவது கவிதையை நீங்கள் அடிக்கடி கேட்டிருப்பீர்கள்..

அழகான பொருட்ட்கள் எல்லாம்
உன்னை நினைவு படுத்துகின்றன
உன்னை நினைவுபடுத்துகின்ற எல்லாமே
அழகாக தான் இருக்கின்றன!

நான் எது கேட்டாலும்
வெட்கத்தையே தருகிறாயே
வெட்கத்தை கேட்டால்
என்ன தருவாய்?

உன்னை இருட்டில் நிற்க வைத்து
என் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள
வேண்டும்.வெளிச்சம் என்பது
உன்னிடமிருந்து தான் வீசிக்கொண்டிருக்கிறதா
ஆனால் உன்னை அருகில் வைத்துக்கொண்டு நான்
இருட்டை எங்கு தேடுவேன்!

உன் கண்களின் பார்வையிலிருந்து
விரல்களின் அசைவிலிருந்து..கொலுசின்
ஓசையிலிருந்து தான் நான் காதலை கற்றுக்
கொண்டேன் ஆனாலும் உனக்காக நான்
கற்று வைத்திருக்கும் காதலை எல்லாம்
உனக்கு வழங்க ஆரம்பித்தால் தாங்க
முடியாது உன்னால்!

இந்த பரந்த புல் வெளியில்
நடக்க விட்டு வேடிக்கை பார்க்கலாம்
பூக்களிடையே நிற்க வைத்து அழகு பார்க்கலாம்
வேறு என்ன செய்ய முடியும்
உன்னை!

தபு ஷங்கரின் கவிதைகள் டவுன்லோடு செய்து முழுமையாக பார்க்கவேண்டுமெனில் கீழே தரப்பட்ட லிங்கில் கிளிக்குங்கள்!
TABU SANKAR's VETKATHAI KETAL ENNA THARUVAI - Tamil Kavithaigal

தபு ஷங்கரின் கவிதைகள் காணொளி உங்களுக்காக..




பின்னூட்டல்கள் மற்றும் உங்கள் ஓட்டுகளை எதிர்பார்த்து..

Post Comment

9 comments:

Unknown said...

எனது இன்ட்லி கணக்கு திருடப்பட்டு விட்டது என நினைக்கின்றேன்...பதிவை சமர்ப்பிக்க முடியவில்லை...பார்ப்போம் முயன்று.

AnushangR said...

//mynthan said...
எனது இன்ட்லி கணக்கு திருடப்பட்டு விட்டது//

என்ன கொடுமை சார் இது???
எதிலையும் பிரபலமான இப்பிடித்தான்...
அதற்காக தயங்காதீர்! துன்பப்படாதீர்!! தொடர்ந்து முயன்று உமது அடைவை மேலும் பிரசித்தமாக்கும்!!!
இத்தகைய வித்தியாசமான பதிவுகளையும், தகவல்களையுமே உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் உங்களுடைய ரசிகர்களாக/நண்பர்களாக!!!

Mohamed Faaique said...

im great fan of thabu sankar....

Unknown said...

AnushangR said...

//mynthan said...
எனது இன்ட்லி கணக்கு திருடப்பட்டு விட்டது//

என்ன கொடுமை சார் இது???
எதிலையும் பிரபலமான இப்பிடித்தான்...
அதற்காக தயங்காதீர்! துன்பப்படாதீர்!! தொடர்ந்து முயன்று உமது அடைவை மேலும் பிரசித்தமாக்கும்!!!
இத்தகைய வித்தியாசமான பதிவுகளையும், தகவல்களையுமே உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் உங்களுடைய ரசிகர்களாக/நண்பர்களாக!!!//

ஆதரவுக்கு நன்றிகள்!~

Unknown said...

Mohamed Faaique said...

im great fan of thabu sankar....


வருகைக்கு நன்றிகள்

AnushangR said...

அப்பு சிறப்பு வேலை....
எல்லாம் உங்கட TRANSLITERATION LINK ATTACHMENT WITH THE BLOGSITE பற்றித்தான் சொல்றேன்...
பயபுள்ள என்னமா டெவலாப் ஆகிறான் பாருங்க...
பட்டைய கெளப்புங்க...

Unknown said...

பின்னூட்டமிட உதவியாக இருக்குமே என்று தான்..
உதவிய Mohamed Faaique'க்கு நன்றிகள்!

Anonymous said...

பதிவுக்கு நன்றி..இலகுவில் தபு ஷங்கரின் கவிதைகள் அனைத்தையும் பார்க்க முடிகின்றது.

Unknown said...

Anonymous said... //

நன்றி

Related Posts Plugin for WordPress, Blogger...