இணையத்தை விட்டு விலகியிருத்தல் சாத்தியமா என்கின்ற பதில் இல்லாத கேள்வியை
கேட்டுக்கொண்டே இணையத்தினுள் கூடுகட்டி குடும்பம்
நடத்திக்கொண்டிருக்கின்றார்கள் என்னைப்போன்ற பலர்.இதுவும் ஒருவகை
அடிமைத்தனம் தான்.அடிமையாகியிருத்தல். சிலர் தெரிந்தும்,பலர் தெரியாமலும்.இணையத்தை தவிர்த்து பார்த்தால் வேறு பொழுதுபோக்குகள், நேர-விழுங்கிகள் இல்லாமை ஒரு முக்கிய காரணம் என்னைப்போன்ற பலருக்கு.
என்னுடைய பிரத்தியேக கணணி திடீரென செயல்பாட்டை இழந்துவிட்டது.முதல் நாள் நின்ற போது,வெறுமனே 'பேட்டரியை' கழற்றி,பூட்டி மறுபடி இயக்க்கிப்பார்த்த போது வேலை செய்தது.அடுத்தநாள் மறுபடியும் முருங்கை மரத்தில்.திரும்பவும் அதே போல் பேட்டரியை கழற்றி பூட்டி பார்த்தேன்..அடடா,வேலை செய்தது!அடுத்த நாளான கடந்த வியாழக்கிழமை, இந்த விளையாட்டின் மூன்றாம் நாள்.மறுபடி பேட்டரியை கழற்றி பூட்டி பார்த்தேன். இம்முறை 'அட்டம்ப்ட் பெய்லியர்'!முதன் முறை 'வார்னிங்' கொடுத்தபோதே சுதாகரித்திருக்க வேண்டும்.தண்ணீர் கூட இரண்டு முறை தான் பொறுக்கும்,மூன்றாம் முறை முழுங்கிவிடும் என்பார்கள்.எனக்கு முழுங்கியேவிட்டது!!
விஷயம் தெரிந்த நண்பனை கொண்டு என்னவென்று பார்ப்போம் என்றால்,'இந்தா வருகிறேன்..அந்தா வருகிறேன்'என்று மூன்று நாட்கள் அலைக்கழித்து நேற்று வந்து பார்த்தான்.அவனுக்கும் அவனது வேலை ஒருபக்கம்.ஐந்து மணிக்கு வருகிறேன் என்றவன் இறுதியாக ஏழரை மணிக்கு வந்து சேர்ந்தான்.கவிழ்த்து வைத்து,கழற்றிவிட்டு பிரித்து மேய்ந்ததில்,அவனால் சரிப்படுத்த முடியாத சாபம் ஒன்று தான் எனது லாப்டாப்பை பிடித்து வாட்டுகிறது என்று தெரியவந்தது.யாரும் செய்வினை வைத்திருக்கிறார்களா என்று பார்ப்பதற்கு கள்ளச்சாமியார் ஒருவரை தேடிக்கொண்டிருக்கிறேன்!

இறுதியாக இன்று ஒரு கடையில் கொடுத்து பார்த்தேன்.'அம்மாத்தகடு'(Mother
Board) போய்விட்டது,மாற்றுவதானால் எப்படியும் இருபதாயிரம் முடியும்
என்றார்.!மூன்று வருடங்களுக்கு முன்பதாக எண்பதாயிரத்துக்கு வாங்கிய
லாப்டாப்,இன்றைய பெறுமதியின் அடிப்படையில் பார்க்கையில்,இருபதாயிரம் என்னவோ
லாப்டாப் விலையில் வெறும் 50% தான்!இணையம் இல்லாததால் ஏராளமான நேரம் விஞ்சி
கிடக்கின்றது.. கூடவே,எத்தனையோ விடயங்களை,உலக நடப்புகளை
விட்டுவிட்டு,ஒன்றுமே இல்லாத வெறுமையாய் இருப்பது போன்ற எண்ணமும் வாட்டி
வதைக்கிறது.
என் காதலி என்னிடம் மறுபடி வந்து சேர இன்னமும் இரண்டு நாட்கள் ஆகும் என்றார் அந்த கடைக்காரர்.அதுவரையில் எப்போதோ லைப்ரரியில் எடுத்து,இன்னமும் தொடப்படாதிருக்கும் பாலாவின் 'நான் கடவுள்' படத்தின் மூலவடிவம் என்று கூறப்படும்,ஜெமோவின் முக்கிய படைப்புகளில் ஒன்றான 'ஏழாம் உலகம்' மற்றும் சுஜாதாவின் சிறுகதை தொகுப்புகளடங்கிய புஸ்தகமொன்றும் தான் கைகளில் தவழப்போகின்றன.!
எங்கேயோ ஒரு 'இன்டர்நெட் கபே'யிலிருந்து,

7 comments:
படிப்பதற்கு நேரம் கிடைத்திருக்கிறது...
செயல்படுத்துங்கள்....
வாழ்த்துக்கள் உங்கள் வலைப்பூ வளர
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வணக்கம் சகோ..
தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..
அருமை.. தெளிவான பதிவு.. பகிர்வினிற்கு நன்றி..
Happy Friendship Day 2014 Images
வாழ்த்துகள் சார்...

Post a Comment