L.R.ஈஸ்வரி ...தனது கணீரென்ற வசீகரிக்கும் குரலால் தமிழ் திரையுலகின் ஆரம்ப கால கட்டத்தில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்த,தற்போதும் வைத்துக்கொண்டிருக்கும் பாடகி ஆவார்.
1960 ,70 காலப்பகுதியில் தமிழ் தெலுங்கு கன்னடம் ஹிந்தி மலையாளம் என அத்தனை மொழிகளிலும் தனது வசீகர குரலால் கட்டிப்போட்டிருந்தார் L.R.ஈஸ்வரி.தமிழ் திரையுலகின் முதலாம் தலைமுறை பாடகிகளில் இவரும் ஒருவர்.
MSV யின் இசையில் அந்தக்காலத்தில் இவர் பாடிய பாடல்கள் இவரை புகளின் உச்சிக்கே கொண்டு சென்றது.MSV 'யே மனம் திறந்தது ஈஸ்வரியை பாராட்டியுள்ளார்.அதில் அவர் அடிக்கடி குறிப்பிடும் பாடல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் "சிவந்த மண்" படத்தில் ஈஸ்வரி பாடிய "பட்டத்து ராணி பார்க்கும் பார்வை வெற்றிக்கு தான் என எண்ண வேண்டும்".
அந்த பாடலில் ஈஸ்வரி கொடுத்த expressions ஆனது,முக்கியமாக சிவாஜி நடிகையை சாட்டையால் அடிக்கும் போது அதற்கு ஈஸ்வரி கொடுத்த expressions அதே பாடலை ஹிந்தியில் பாடிய பாடகியால் கொடுக்க முடியாமல் போனதை MSV சுட்டிக்காட்டி இருந்தார்.
பட்டத்து ராணி பாடல் பார்க்கதவர்களுக்காக..
ஈஸ்வரிக்கு அதிகமான பாடல் பாட சந்தர்ப்பம் கிடைக்க காரணமாக அமைந்தது MSV 'க்கும் T.கே.ராமமூர்த்திக்குமிடையேயான பிரிவாகும்.
அதுவரையில் ராஜேஸ்வரி,சுசீலா,ஜானகி,ஜமுனா ராணி,LRE ,சீர்காழி,TMS ,A .m .ராஜா ஆகியோருக்கு சுழற்ச்சி முறையிலேயே வாய்ப்பு கிடைத்தது.ஆனால் அந்த முறிவுக்கு பிறகு விஸ்வநாதன் TMS ,p .சுசீலா மற்றும் LRE ஆகியோருக்கே வாய்ப்புகள் வழங்கினார்.
இவர் பாடிய முதல் தமிழ் பாடல் "வாராயோ தோழி" என்று பாசமலர் திரைப்படத்திலமைந்த பாடலாகும்.
இவரது முதல் தெலுங்கு பாடல் "நா பேரு செலயேறு..நன்நீவரோ ஆபலேறு" என்ற பாடலாகும்.
கர்னாடக சங்கீதத்தில் மிகுந்த பரீட்சியம் இல்லாத போதும் இவர் பாடிய பாடல்கள் சிகரத்தை தொட்டன!அதற்கு இவருக்கு கிடைத்த தேசிய விருதும் நந்தி விருதுமே சான்று பகர்கின்றன!S .P .பாலசுப்ரமணித்தின் முதலாவது தமிழ் திரை இசைப்பாடல் "ஹோட்டல் ரம்பா" படத்துக்காக பாடிய "அத்தானுக்கு எப்படி இருக்கு மனசுக்குள்ளே"என்ற பாடலாகும்.இப்பாடலை L.R.ஈஸ்வரியுடன் இணைந்தே பாலு பாடினார்.ஆனால் துரதிஷ்டவசமாக பாடலும் படமும் வெளிவரவில்லை.
L.R.ஈஸ்வரியின் குறிப்பிடத்தக்க தமிழ் திரைப்பட பாடல்களில் சில..
முத்துக்குளிக்க வாரீகளா-அனுபவி ராஜா அனுபவி
ஆடவரெல்லாம் ஆடவரலாம்-கருப்பு பணம்
நானொரு காதல்-தவப்புதல்வன்
அடி என்னடி-அவள் ஒரு தொடர்கதை
துள்ளுவதோ-குடியிருந்த கோயில்
அத்துடன் ஈழத்தின் புகழ்பூத்த கலைஞரான A .E .மனோகரனுடன் இணைந்து "பட்டு மாமியே "என்ற பொப் பாடலையும் பாடியவர் ஈஸ்வரி அவர்களே!!இன்றும் இசை போட்டிகளிலும் மேடைகளிலும் பலர் L.R.ஈஸ்வரியின் பாடல்களை பாடிக்கொண்டிருக்கின்றனர்.அத்துணை பிரபலமானவை அவருடைய பாடல்கள். Airtel சுப்பர் சிங்கர் ஜூனியர் 3 'இல் சிறுமி நித்தியஸ்ரீ L.R.ஈஸ்வரியின் பாடல்களை பாடி அசத்தியது ஞாபகமிருக்கலாம்!
டிஸ்கி:பதிவுலகில் மூன்று வருடங்களை கடந்த சக பதிவர் ஜனாவுக்கு வாழ்த்துக்கள்... டிஸ்கி ரெண்டு:வலைச்சரத்தில் எனது வரலாற்று பதிவை அறிமுகம் செய்துவைத்த தம்பி கூர்மதியனுக்கு நன்றிகள்... ஹைலைட்டு-இந்த மாதம் தான் நான் அதிக பதிவுகள் போட்ட மாதம்!!!கூட யோசிக்க வேண்டாம்.. வெறுமனே இருபத்தெட்டு தான்.. |
21 comments:
செல்லாத்தா எங்க மாரியாத்தா!
நல்லத் தொகுப்பு
இசையோடு மாதம் தொடங்கியுள்ளது.. சூப்பர்..
இலந்தபலம் ??
எனக்கு நித்திய ஸ்ரீ இப்பவும் கண்ணுக்குள்ள நிக்கிறா! என்ன டான்ஸ் ? என்ன பாட்டு ?
இனிமை நிறைந்த உலகம்....., முத்துக்குளிக்க வாறீகளா....
இந்தப்பாட்டெல்லாம் எத்தனையோ தடவை கேட்டிருக்கேன் நித்யாவின் குரலில்!
எல்லாப் பெருமைகளும் எல் ஆர் ஈஸ்வரிக்கே!
செல்லாத்தா செல்ல மாரியாத்தா
கோவில் திருவிழா என்றால் அவங்க குரலை கேட்க்காமா சாமியே நகராது அப்படிப்பட்ட குரல்வளம் ...
காதோடுதான்..........ஈஸ்வரி அம்மாவிற்கு நிகர் அவர்தான் ...
அந்த குரலை மறக்க முடியுமா?
இளநி வாங்கலையோ இளநி....
தமிழ்மணம் ஏழாவது ஓட்டு ஹி ஹி போட்டாச்சி..
ஆம், ஈஸ்வரி அம்மா பற்றிய நினைவு மீட்டலை உங்கள் பதிவின் மூலம் தந்திருக்கிறீர்கள் சகோ. பக்தி பாடல்களைப் பாடுவதிலும் எல்.ஆர் ஈஸ்வரி அவர்கள் வல்லவராக இருந்தார்கள்.
தங்கள் சேவை தொடர்க ,
பட்டு மாமியே மறக்க முடியாத பாடல்...
இவரின் பாடல்களில் உச்சஸ்தாயில் அழகாப்பாடும் ஈஸ்வரியின் காதோடுதான் நான் பாடுவேன் தேன்நிலவுப் பாடல் பிடிக்கும் இன்னொரு கொசுறு தகவல் அம்மணி சகோதரமொழிப் பாடல்களும் பாடக்கூடியவர் சிங்களத்திரைப் படத்திலும் மாலினிக்கு குரல் கொடுத்துப் பாடியதாக அன்நாளில் ஒரு மேடை நிகழ்ச்சியில் கொழும்பில் நேரில் பார்த்த போது ஹமித் அவர்களின் அறிவிப்பில் கேட்டுத்தெரிந்து கொண்டேன்!
அருமையான பதிவு
நல்லா எழுதிரிங்க பாஸ்
தமிழர்களை தனது குரல் வளத்தால் கொள்ளை கொண்டவரின் நினைஊட்டல் அருமை சிவா.
என்ன சார் நீங்க ஓவரா மாற முயற்சிக்கறீங்க போல. ஐ ஜஸ்ட் கிடிங்.
L.R.ஈஸ்வரி அந்தக்கால குத்துப்பாட்டு Specialist அல்லவா? அந்தக்கால பழைய பாடகியாக இருப்பினும் இன்னும் முதுமை அவரை தாக்கவில்லை!
ஈஸ்வரி பற்றிய அருமையான அலசல் பாஸ்..
காதோடுதான் நான் பாடுவேன்...வித்தியாசமான பாடலொன்று இவரது !
வாழ்த்துக்கள். இந்த மாதிரி, நிறைய 'அழுத்தமான' பதிவுகளை எதிர்பார்க்கின்றேன் :-)
Post a Comment