ஹிஹி ஹிஹி விஷயத்தை சொல்ல முதலே சிரிக்கிறேன்'னு சொன்னா விசயம் அந்தளவு காமெடியானது தான்..
இரு நாட்களுக்கு முன்னர் இலங்கை பாராளுமன்ற எம்பி அஸ்வர் அவர்கள் பிரபாகரனின் மனைவி பிள்ளைகள்
சனாதிபதியால் பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாகவும்,பிள்ளைகளுக்கு கல்வியறிவு ஊட்டப்படுவதாகவும்
தெரிவித்திருந்தார்...இந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது மட்டுமல்லாது,அவர்கள் இலங்கை ராணுவத்தின் பிடியில் உள்ளனரா என்ற கேள்வி
பரவலாக எழுப்பப்பட்ட இந்த சந்தர்ப்பத்தில்,அஸ்வர் எம்பி நேற்று பல்டி அடித்து அது தமிழ்செல்வனின் மனைவி என்று கூறி,
அந்த உரை நிகழ்த்தும் போது தான் உணர்ச்சி வசப்பட்டு விட்டதாகவும்,அதனால் இந்த தவறு நிகழ்ந்து விட்டது என்றும் கூறி மன்னிப்பு கேட்டிருக்கிறார்
பாராளுமன்றத்தில் நேற்று..
அந்தளவுக்கு இந்த வயசில் என்ன உணர்ச்சிவசப்படுதல் வேண்டி கிடக்கு மாண்பிமிகு எம்பிக்கு அதுவும் இந்த விசயத்தில்??
சனாதிபதி கூட இந்த கருத்தால் ஆடிப்போய்விட்டாராம்!!!
ஸ்விட்சலாந்தில் உள்ள "ப்ரெசிடென்ட் வில்சன்"(President Vilson)ஹோட்டல் தான் உலகில் அதிகளவான
கட்டணங்களை கொண்ட ஹோட்டலாக பதிவாகி உள்ளது..
ஒரு இரவுக்கான கட்டணமாக 65000 $ தொகையை அறவிடுகிறது.
இதனுள் அடங்கும் வசதிகள் என்ன தெரியுமா??
பன்னிரண்டு அறைகள்,பன்னிரண்டு குளியலறைகள்,ஒரு பில்லியேட்ஸ்
மேஜை,அப்புறம் ஒரு ஜிம்,தனிப்பட்ட பாரம்தூக்கி(லிப்ட்) என படு சொகுசான
இடம் தான் இந்த விலைக்கு அதுவும் ஒரு நாள் இரவுக்கான தொகையாகும்.
ஸ்விஸ் நாட்டின் ஜெனீவா நகரில் இந்த ஹோட்டல் அமைந்திருக்கிறது.
படமாக பில்லா-2 இல் நடிக்க இருக்கிறார் அல்டிமேட் ஸ்டார் அஜித்.
இந்த படத்தில் இருபது வயது பையனாக நடிக்க இருக்கிறாராம் அஜித்.இதற்காக உடம்பை குறைக்கும் வேளையில் மும்மரமாக ஈடுபடுகிறாராம்.
முதலில் விஷ்ணுவர்த்தன் இயக்குவதாக இருந்த பில்லா -2 பின்னர் சக்ரி டோல்டி இயக்கத்துக்கு மாறியிருந்தது தெரிந்ததே...
ஆல்ரெடி மங்க்காத்தாவில் நரைத்த தலை முடியுடன் நடித்திருக்கும் அஜித் ,பில்லாவில் இன்னும் மாறுபட்ட தோற்றத்தில் தோன்றப்போவது அவரது ரசிகர்களுக்கு அல்வா தான்!!
கிங்க்ச்டனில் நடைபெற்ற இந்திய மற்றும் மேற்கிந்திய தீவுகள் பங்குபற்றிய முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது...
பெரிய வெற்றி என்று சொல்ல முடியாவிட்டாலும் ,குறைந்தளவு ஓட்டங்கள் குவிக்கப்பட்ட போட்டியாக மாறி இருந்தது..
63 ஓட்டங்களால் இந்தியா வெற்றி பெற ராகுல் திராவிட் ஆட்டனாயகனாய் தெரிவுசெய்யப்பட்டார். முதல் இனிங்க்சில் ரைனா,மற்றும் பாஜியின் இணைப்பாட்டம் தான் இந்தியா வெற்றி பெற முக்கிய காரணமாய் அமைந்தது என்றாலும்,இரண்டாம் இனிங்க்சில் திராவிட் சதமடித்திருந்தார்.
ஆரம்ப வீரர்களான முகுந்த் மற்றும் முரளி விஜய் பெரிதாக சோபிக்கவில்லை..
முறை விஜய்க்கு பல வாய்ப்புகள் வழங்கப்பட்டுக்கொண்டு இருக்கின்ற போதிலும் சர்வதேச கிரிக்கட்டில் தனக்கொரு இமேஜ்'ஜை பதிக்க தவறிவருகிறார் என்றே கூறலாம்..
இன்று வாழ்வில் ஒரு படி கடக்கிறேன்...ம்ம் |
21 comments:
மாப்ள கலந்து கட்டி அடிச்சிருக்க!
நண்பா நல்ல அசத்தல் தான்...
சுப்பர்..........
கலக்குங்க
வாழ்த்துக்கள்.......
நண்பா எனது பக்கம் லெப்.கேணல் புரட்சிநிலாவின் தொடர் 3 ஓடிக்கொண்டிருக்கிறது
யோவ், எப்பவும் போல ஜாலியா பேசறதா இருந்தா பேசு.. அண்னன், அய்யா அப்டின்னு கூப்பிட்டா உதை விழும் ராஸ்கல் ஹா ஹா
பிறந்தநாள் வாழ்த்துக்கள் மைந்தன்! :-)
மசாலா கலக்கல்....
சி.பி.செந்தில்குமார் said...
யோவ், எப்பவும் போல ஜாலியா பேசறதா இருந்தா பேசு.. அண்னன், அய்யா அப்டின்னு கூப்பிட்டா உதை விழும் ராஸ்கல் ஹா ஹா>>>>
அவரு அப்படிதான் சொல்வாரு. நீ அப்படியே கூப்பிடு. ஹி...ஹி...
//இருபது வயது பையனாக நடிக்க இருக்கிறாராம் அஜித்.இதற்காக உடம்பை குறைக்கும் வேளையில் மும்மரமாக ஈடுபடுகிறாராம்.//
உடம்பை கூட்டிக்குறைச்சு என்னங்க பண்றது? கதை, திரைக்கதையமைப்பு இதெல்லாம் ஒழுங்கா இல்லன்னா..
என் மண்ணின் மைந்தனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நவரசமாக பதிவிட்டு உள்ளீர்கள் , ரகளை
பலதையும் ஒரே கோணத்தில் ஆராய்ந்து இருக்கிறீர்கள் அஸ்வர்கதை அலுப்படிக்கிறது நாளிதள்களில் .
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
மச்சி ஹன்சிக்ஹா பொக்கை அனுப்பினாவா? சண்டே பார்ட்டி சீஹாவுஸ்சிலா பம்பலப்பிட்டி ஒமெக்காவிலா ஒரு கை பார்க்கலாம் கூத்தை சொன்னேன்!
வாழ்த்துக்கள் நண்பா..
இனிய தமிழ் பிறந்த நாள் வாழ்த்தக்கள் மைந்து...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
குழந்தைகளுக்கான நுண் அறிவு வளர்க்கும்(fine movement) இலகு கருவி (உள்ளுர் கண்டுபிடிப்பு)
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் சிவா.
23 வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இன்றைக்கு பிறந்த நாளா?சொல்லவேயில்லை?பரவாயில்லை,லேட்டானாலும் லேட்டஸ்டான பிறந்த நாள் வாழ்த்துகள்,மகனே!!!!!!!!!!!!!!!!!!!
இங்கே "பிரான்சில்" இருப்போருக்கு தெரியவில்லை போலிருக்கிறது!அவர்களுக்காக மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்கள்!
நல்ல கலவை.கலக்குங்க!
//இன்று வாழ்வில் ஒரு படி கடக்கிறேன்...ம்ம் //
வாழ்த்துக்கள்
தொடர்ந்து அசத்துங்க
வணக்கம் மச்சி!
முதலில் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ரொம்பவே தாமதமா வந்துட்டேன்! சாரி மச்சி!
முன்னணி நகைச்சுவை நடிகர்களின் தொகுப்பிலிருந்து ஒரு துளியினைத் தாங்கி வந்திருக்கிறது,
முதலாவது நகைச்சுவை,
அரசியல் காமெடி, ஆடம்பர ஹோட்டல்,
விளையாட்டு எனச் சுவாரஸ்யமான ஒரு பதிவினைத் தந்திருக்கிறீங்க.
தகவல்கள் அனைத்துமே கலக்கல்,
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இதே தேதியில் பிறந்த கவியரசர் கண்ணதாசன் பற்றி பதிவு எழுதி உள்ளேன்.
படிக்க வாங்க..
Post a Comment