Saturday, May 28, 2011

சித்தார்த் மல்லையாவுக்கு முத்தம் கொடுத்த தீபிகா படுகோனே!!



ஓமந்தை வரைக்கும் இப்போது யாழ்தேவி ரயில் பயணிக்கிறதாம் நேற்று தொடக்கம்!!நேற்று தான் மிகவும் கோலாகலமாக கொழும்பு கோல் பேஸ்'சில்
நடைபெற்றது..அதற்க்கான முன்னோட்ட பயிற்சி ஏற்பாடுகள் வெள்ளவத்தை கடலில் நடைபெற்ற போது பயத்தில் பேஸ் புக்கில் ஸ்டேடஸ் போட்ட நபர் நான்..அது வேறு கதை..
ஓமந்தை வரையில் தான் இப்போது யாழ்தேவி பயணிக்க முடிகிறது எனில்,காங்கேசன்துறை வரை பயணம் செய்ய எத்தனை ஆண்டுகள் வேண்டும்??
யுத்தம் முடிந்து பதினைந்து ஆண்டுகள் பின்னர் தான் யாழ்தேவியில் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்க முடியுமென்று
நான் நினைக்கிறேன்.அதைவிட ஓமந்தை வரையிலான வெள்ளோட்ட நிகழ்வுக்கு அமைச்சர்கள் கலந்துகொண்டனர்...ஓகே,
ஆனால் அவர்கள வரவேற்க அங்கு நடத்தப்பட்டது பாரம்பரிய சிங்கள ஆடல் பாடல்களே!!!அவர்களது கனடியன் டான்ஸ் எனப்படும் முறையிலான
நடனங்கள்.
நடைபெற்றது முற்றும் முழுதாக தமிழர்கள் வாழும் பகுதி....(வாழ்ந்த பகுதி ,இனிமேல் என்ன நடக்குமோ).அங்கு தமிழ் கலாசார முறையிலான
வரவேற்ப்பு தானே நடைபெற்றிருக்க வேண்டும்??எனது கேள்வி நியாயமானதா இல்லையா??
இதே ஒரு சிங்கள கிராமத்தில் நடைபெறும் நிகழ்வுக்கு தமிழ் முறையிலான வரவேற்ப்பு நடைபெற்றால் அவர்கள் பெருமனதோடு வரவேற்ப்பார்களா??
--------------------------------------------------------------------------------------------------

நேற்று இரவு மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சலேன்ஜெர்ஸ் அணிகளுக்கிடையில் இறுதிப்போட்டிக்கு நுழைவதற்கான போட்டி நடைபெற்றிருந்தது.
புள்ளிகள் பட்டியலில் டாப்பில் இருந்த ராயல் சாலேன்ஜெர்ஸ்தான் இறுதிப்போட்டிக்கு போக வேண்டும் என்பது தான் எனது எதிர்பார்ப்பாக இருந்தது,
அதனை கருங்காலிக்கட்டை கிரிஸ் கெயில் அழகாக ஆரம்பித்து முடித்து வைத்திருந்தார்..
முதல் ஓவரிலேயே ஆறு,நான்கு என ஓட்டங்கள் பறந்தன..
இறுதியாக நாற்பத்தேழு பந்துகளில் என்பத்தி ஒன்பது ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார்...ஆட்டநாயகன் விருதும் அவருக்கே!!தொடர்நாயகன் விருதும் அவருக்கே...மலிங்க கடந்த சில போட்டிகளில் விக்கட் விளுத்தாதது,கருங்காலி மனிதர் துடுப்பாட்டம்,பந்துவீசல் என்று இரு துறைகளிலும் பிரகாசிப்பதால்,அவருக்கே வாய்ப்பு பிரகாசம்..
அது இருக்கட்டும் விசயத்துக்கு வருவோம்,

ஆக்சுவலி இந்தப்ப்போட்டி அவ்வளவு நுனிக்கதிரையில் அமர்ந்து பார்க்குமளவுக்கு விறுவிறுப்பை தரவில்லை.
ஆனால் ராயல் சலேன்ஜெர்ஸ் வெற்றி பெற்றவுடன்,சித்தார்த் மல்லையாவை உதட்டு முத்தம் குடுத்து பரவசப்படுத்தினார்
பக்கத்தில் அமர்ந்திருந்த தீபிகா படுகோனே!!
இதெல்லாம் திட்டமிட்டு தான் நடந்திருக்கவேண்டும் என்பது எனது நினைப்பு..ஹிஹி
நீயும் வா நானும் வாறன்..பக்கத்தில வந்து இரு...
வெற்றி கிடைத்தவுடன் நாம இச்சு அடிப்போம்னு கெளம்பி வந்திருப்பாங்க...
சூடானது நாம தானே!!!

மல்லையாவை விளுத்திவிட்டார் போலும் தீபிகா...பணக்கார மாப்பிளை..ம்ம்
குடுத்து வைச்சவன்...என்ன அவன்ட வாய் தான் கொஞ்சம் அப்செட்...அவனையும் போயி கிஸ் பண்ணினாலே இவள்..
மல்லையா -யூ ராஸ்கல்ஸ்....போங்கடா...எத்தின பேர்ட ஆசைல மண்ணள்ளி போட்டுடீங்க!!

யோவ் சும்மா படத்தையே பாத்திட்டு இருக்காம...பழைய போட்டோக்கும் புதிய நியூசுக்கும் கனெக்சன் போடுறதில என்ன இன்பம் ஹிஹி .

Post Comment

25 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அந்த சீன் எங்க டீவியில் போடலையே...

ஒரு வேளை சென்சார் பண்ணியிருப்பாங்களோ....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

முதல் முதலாக பரவசமாக..

நானெ நானா....

Unknown said...

//# கவிதை வீதி # சௌந்தர் said...
அந்த சீன் எங்க டீவியில் போடலையே...

ஒரு வேளை சென்சார் பண்ணியிருப்பாங்களோ..../

ஹிஹி உங்க ஊர்ல இதுக்கெல்லாம் சென்சார் தான்!!!

சி.பி.செந்தில்குமார் said...

வர வர டைட்டில் வைக்கறதுல ஆளாளுக்கு கலக்கறாங்களே?

Unknown said...

ஹிஹி!நாய் வித்த காசு குரைக்கவா போகுது!

நிரூபன் said...

ஓமந்தை வரைக்கும் இப்போது யாழ்தேவி ரயில் பயணிக்கிறதாம் நேற்று தொடக்கம்!!நேற்று தான் மிகவும் கோலாகலமாக கொழும்பு கோல் பேஸ்'சில்//

அவ்..........இது என்ன இன்னும் பதினைந்து வருடங்களின் பின்னர் நடக்கப் போகும் எதிர்காலத் திட்டம் பற்றிய முன்னோட்டமா.

நிரூபன் said...

ஆக்சுவலி/
யூ மீன் The new name of the Village called அச்சுவேலி

நிரூபன் said...

மச்சி, அவசரமா வெளியே கிளம்பனும், அப்புறமா வந்து மீதிக் கருத்துக்களை எழுதுறேன்

Anonymous said...

அப்பனுக்கும் முத்தம் மகனுக்கும் முத்தமா என்ன கொடுமை சரவணா

Anonymous said...

இது பழைய ஃபோட்டோ ஆச்சே

Anonymous said...

சித்தார்த்துக்கு முத்தம் கொடுக்குறது செய்தி இல்ல..மல்லையாவுக்கு முத்தம் கொடுத்தாதான் செய்தி

ஷர்புதீன் said...

மல்லையாவுக்கு முத்தம் கொடுத்தாதான் செய்தி

ATHU

NKS.ஹாஜா மைதீன் said...

அப்பன் பக்கத்தில் இருக்கும்போதே இந்த கூத்தெல்லாம் நடக்கிறதே....

Jana said...

ஆஹா... இப்ப அவங்க கன்டியன்ஸ் டான்ஸை விட்டுபுட்டு கனடியன் டான்ஸா ஆடுறாங்க (ஐ திங்... டைப்பிங் பிழை - நாங்களெல்லாம் நக்கீரர்கள் ஆமா :))
தமிழ்முறையில் ஏன் ஆடலை? இன்னும் புரியாதது உங்கள் தவறே... அவங்க சிம்போலிக்கா பலதை சொல்லுறாங்க :)
அடப்பாவி... அவன் அவன் மச்சிலை படு இன்ரஸ்டாக இருக்கும்போது இந்த ஆள் எங்க இன்ரஸ்டாக இருக்குது பாருங்க :)

கார்த்தி said...

அய்யோ நல்ல சீன் எப்பிடி என்ர கண்ணில படாம போனது? நான் மட்ச புள்ளா பாத்தனானே!!!

தனிமரம் said...

கன்டிய நடனம் ஆடுவதுதானே இப்போது ஒரே கொள்கை என்று  தமிழ் பள்ளியில் அறிவுரை கூறுகிறார் நாட்டின் முதல் குடிமகன்! 

MANO நாஞ்சில் மனோ said...

நல்லாதானே போயிகிட்டு இருந்துச்சி...??

MANO நாஞ்சில் மனோ said...

உங்க கோபம புரியுது பாஸ்....!!

பாலா said...

அவருக்கு திருமணம் செய்வதில் உடன்பாடில்லை எல்லாம் சும்மா டைம்பாசுக்கு என்று எப்போதோ சொன்னாராம். இது எப்படி இருக்கு?

shanmugavel said...

கரெக்டா புடிச்சிட்டீங்க சிவா ! சரிதான்.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

முதலாவது செய்தி - இனிப்பு + கொஞ்சம் கசப்பு

ரெண்டாவது செய்தி - இனிப்போ இனிப்பு

சாரி மைந்தன் தாமதமான வருகைக்கு!!!

Mathuran said...

பாஸ் அந்த கடைசிப்போட்டோ ஹி ஹி

Mathuran said...

//இதே ஒரு சிங்கள கிராமத்தில் நடைபெறும் நிகழ்வுக்கு தமிழ் முறையிலான வரவேற்ப்பு நடைபெற்றால் அவர்கள் பெருமனதோடு வரவேற்ப்பார்களா??/

ம்ம் அப்பிடி கேளுங்க

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

முற்றும் முழுதாக தமிழர்கள் வாழும் பகுதி....(வாழ்ந்த பகுதி ,இனிமேல் என்ன நடக்குமோ).அங்கு தமிழ் கலாசார முறையிலான
வரவேற்ப்பு தானே நடைபெற்றிருக்க வேண்டும்??எனது கேள்வி நியாயமானதா இல்லையா??
..................
மைந்தன் உங்கள் ஆதங்கம் தான் எங்களதும்
ஆனால் நடைமுறையில் நடப்பதையே காணவேண்டிய சூழலுக்குள் தமிழர் தள்ளப்பட்டுள்ளனர்

test said...

//மல்லையா -யூ ராஸ்கல்ஸ்....போங்கடா...எத்தின பேர்ட ஆசைல மண்ணள்ளி போட்டுடீங்க!!//
விடுங்க பாஸ்! தீபிகா போனா யாரோ ஒரு தீபா! மனசத் தளர விடப்படாது! :-)

Related Posts Plugin for WordPress, Blogger...