Tuesday, May 17, 2011

அமலா பால்-உங்களுக்கும் இப்பிடியா??


விடியாத காலைகள்..
முடியாத இரவுகள்..
தொடரும் ஒரே பயணம்
இன்பங்களை ஏறி நின்று உழக்கும்
துன்பங்களின் உறவு..
சுய நலனுக்காய் சில மணி தூக்கங்கள்..
பரீட்சை மண்டப நேரம் போலே,
மணி அடிக்கையில் கலைகின்றன கனவுகள்!!

உறவுகளுடன் உறவில்லை
உணர்ச்சிகளற்ற ஜடமாய்!!
ஜன நடமாட்டம் தெரிகிறது..
அடடா கண்கள் வேலை செய்கின்றன!!
பாவம் அதுகளுக்கு இரவு பகல் ஏது!!

தடித்த பத்திரிகை
நினைவுறுத்துகிறது
இன்று ஞாயிறு அன்றோ??
நாளை மறுபடி மரதன் ஓட்டமாம்!!
அடுத்த ஐந்து நாள் நினைவில்
கரைந்துவிடுகின்றது அந்த விடுமுறை கூட!!

பட்டி அவிழ்த்த மாடுகளாய் காலையில்..
பசியோடு மீண்டும் இரவில் தொழுவம் நோக்கி!!
நாளுக்குள் எத்தனை நிமிடங்கள்..
அத்தனை விதமாய் மனிதர்கள்...
நாளுக்குள் எத்தனை செக்கன்கள்??
அத்தனை விதமாய் அவர் மனங்கள்!!

வலைக்குள் சிக்குண்ட இரையாய்...
இருட்டுக்குள் சிறைப்பட்ட
எரியாத மெழுகுவர்த்தி...!!!

------------------------------------------------------------------

அமலா பால் பற்றி ஆவலாக வந்த மக்களே...உங்க ஆவலை கெடுக்க விரும்பவில்லை..
அமலா பால் பற்றிய பதிவுக்கு இங்கே கிளிக்குங்கள்!
பதிவுலக நண்பர்களுக்கு,உங்கள் தளத்துக்கு சில நாட்களுக்கு வரமுடியாத நிலைமை...அடுத்த வியாழன்'னுக்கப்புரம் தினசரி வருகிறேன்(ஆமா பெரீய அம்பாசிடர் வேலை பாக்கிறாரு..).. !!

Post Comment

8 comments:

Unknown said...

ரைட்டு! மவனே உனக்கு இனிமே இதுதான் கமண்ட்ஸ்!

சி.பி.செந்தில்குமார் said...

அடங்க மாட்டே.. மைன்ஸ் கன்ஃபர்,ம் ஹி ஹி

கவி அழகன் said...

தடித்த பத்திரிகை
நினைவுறுத்துகிறது
இன்று ஞாயிறு அன்றோ??
நாளை மறுபடி மரதன் ஓட்டமாம்!!
அடுத்த ஐந்து நாள் நினைவில்
கரைந்துவிடுகின்றது அந்த விடுமுறை கூட!!

உண்மை தான் மகிந்தன்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உன்னை கேட்கறதற்கு ஆளே இல்லையா....

ம்.. சூப்பர்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வலைச்சரத்தில் இன்று..

மாற்றான் தோட்டத்தில் மனம் வீசும் மலர்கள்...

http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_17.html

ASHOK said...

ADI KONNE PUDUVEN MAVANE , ITHE ROTHANAYAA POCHCHU

பாலா said...

சத்தியமா என்ன எழுதி இருக்கீங்கன்னு படிக்கவே இல்லை. படத்தை விட்டு கண் அகலவே மறுக்குது.

Sivaloganathan Nirooch said...

"விடியாத காலைகள்..
முடியாத இரவுகள்..
தொடரும் ஒரே பயணம்
இன்பங்களை ஏறி நின்று உழக்கும்
துன்பங்களின் உறவு..
சுய நலனுக்காய் சில மணி தூக்கங்கள்..
பரீட்சை மண்டப நேரம் போலே,
மணி அடிக்கையில் கலைகின்றன கனவுகள்!!"


அருமையான வரிகள்...

Related Posts Plugin for WordPress, Blogger...