Thursday, May 26, 2011

வரலாறு முக்கியம் அமைச்சரே-அசோகப் பேரரசர்!!

வாங்க இன்னிக்கும் வரலாறு படிப்போம் மக்களே...வரலாறு முக்கியம் அமைச்சர்களே...எம் எல் ஏ'க்களே!!

{சாஞ்சி-தொன்மையான பௌத்த தூபி,அசோகச்சக்கரவர்த்தியால் கட்டப்பட்டது.}


அசோகர், பிந்து சாரருக்கும் அவரது பிராமண மனைவிசுமத்திராங்கிஎன்பவருக்கும் பிறந்தவர் , சிலர் அவர் செல்லுகஸ் நிக்கேடர் என்ற கிரேக்க மன்னன் மகள் என்பார்கள்.

அசோகரின் இளம் வயதில் அவந்தி நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பில் இருந்தார் அப்போது தேவி எனப்படும் வணிக குலப்பெண்ணை காதலித்து மணம் புரிந்து கொண்டார் இவர்களுக்கு பிறந்தவர்களே மகேந்திரனும்சங்கமித்தையும்,பின்னாளில் இவர்களை இலங்கைக்கு புத்த மதத்தினை பரப்ப அனுப்பினார்.

கலிங்க போருக்கு முன்னர் அசோகர் கொடுங்கோலராக இருந்துள்ளார், தனது அரண்மனையில் ஒரு சித்திரவதை கூடம் அமைத்து தவறு செய்பவர்களை பல வகையிலும் தண்டித்துள்ளார். அசோகர் கரிய நிறமும் , அழகற்றவராகவும் இருந்துள்ளார் இதனை கிண்டல் செய்த அந்தப்புற பெண்கள் 1000 பேரை கழுவில் ஏற்றி கொன்று உள்ளார்.

சந்திர குப்தர் , பிந்து சாரர் போன்றவர்கள் கலிங்க நாட்டின் மீது படை எடுத்து வென்றுள்ளார்கள் ஆனால் சில கால இடைவெளிக்கு பிறகு அவர்கள் தனித்து இயங்க ஆரம்பித்துள்ளார்கள் , எனவே ஒரே அடியாக கலிங்க நாட்டை அடக்க அசோகர் விரும்பினார்.

கலிங்க நாடு என்பது தற்போதுள்ள ஒரிசா, மகத நாடு தற்போதைய பிகார்.கலிங்க நாட்டை ஆட்சி செய்தது கரவேளர்கள் என்ற அரச வம்சம். கலிங்க மன்னர் இன்னார் தான் எனப் பெயர் குறிப்பிடப்படவில்லை எந்த வரலாற்று நூலிலும்.

கலிங்க நாட்டின் மீது படை எடுத்து அதனை நிர்மூலமாக்கினார் அசோகர். அப்போரில் 1,50000வீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர், சுமார் 10,0000 வீரர்கள் களத்தில் கொல்லப்பட்டனர்.இக்கொடிய போர்க்களக்காட்சியை கண்டு தான் அசோகர் மனம் மாறினார். புத்த சமயத்தை தழுவி ,சமாதானம் தழைக்கப் பாடுபட்டார். ஆனால் உண்மையில் இப்போருக்கு முன்னரே அசோகர் புத்த மதத்திற்கு மாறி விட்டார் என்பார்கள். அசோகரின் காதல் மனைவி தேவி புத்த மதம் சார்ந்தவர் , அவரை மணக்கும் போதே புத்த மதத்தினை தழுவி விட்டார் ஆனால் முழுதாக புத்த மதக்கொள்கையின் மீது ஈடுபாடு கொள்ளாமல் இருந்துள்ளார். போரின் கொடிய விளைவைகண்ட பிறகே முழுதும் மனம் மாறி உயிர்க்கொலை துறந்தார், பின்னர் உலகம் முழுவதும் புத்தம் பரவ வழி செய்தார்.

அசோகருக்கு தேவி என்ற மனைவி தவிர வேறு பல மனைவிகள் உண்டு அந்த வகையில் குணாளன் , ராதா குப்தர் என்ற மகன்கள் உண்டு.இதில் குணாளன் அழகு மிகுந்தவர் எனவே அவர் மீது அசோகரின் மற்றொரு மனைவியான திஷ்யரக்ஷதா என்பவர் ஆசைக்கொண்டார், ஆனால் குணாளன் தனது சிற்றன்னையின் விருப்பதிற்கு இணங்கவிலை. எனவே, வஞ்சகமாக அவரை வெளிநாட்டுக்கு வேலை இருக்கிறது என அனுப்பி அங்கு வைத்து தனது ஆட்களை வைத்து கண்களை குருடாக்கி விட்டார்.

கண் இழந்த குணாளன் எப்படியோ மீண்டும் தலைநகரம் வந்து பாடலிபுத்திரதின் வீதிகளில் பாட்டுப்படி பிச்சை எடுத்தார் அவரது குரலை அடையாளம் கண்டு அசோகர் விசாரித்து உண்மை அறிந்து ,திஷ்யரக்ஷதாவின் தலையை துண்டித்தார்(இப்படி ஒரு கதையம்சம் கொண்ட சிவாஜிகணேசன் நடித்த படம் கூட உண்டு பெயர் சாரங்கதாரா).

தனது சொத்துக்கள் அனைத்தையும் புத்த சங்கத்திற்கு தானம் அளித்து விட்டு கட்டிய உடையுடன் வாழ்ந்தார். அவரது இறுதிக்காலம் மிகவும் துன்பமானதாகவும் தனிமையாவும் அமைந்தது. இருந்த செல்வம் அனைத்தையும் தானம் செய்துவிட்டதால் ஆட்சிக்கு வந்த மற்றொரு மகன் ராதாகுப்தர் என்பவர் அசோகரை புறக்கணித்து கவனிக்காமல் விட்டு விட்டார்.


அசோகரின் ஆட்சிக்குட்பட்ட பிரதேசத்தை பாருங்கள்...ஈரான் வரை சென்றிருக்கிறது!!


தேவனாம்பியாச பிரியதர்ஷன் என்ற பெயரில்யே அசோகர் ஆட்சி புரிந்தார் ,அவர் எழுதிய கல்வெட்டுக்களிலும் இதே பெயர் காணப்பட்டது எனவே அசோகர் தான் அந்த புகழ்பெற்ற கலிங்கப்போர் புரிந்த சக்ரவர்த்தி என்பது நீண்ட நாட்களுக்கு தெரியாமல் இருந்தது , பின்னர் ஒரு வெள்ளைக்கார ஆய்வாளர் தான் இருவரும் ஒருவரே என்பதனை நிரூபித்தார்; இல்லை எனில், இன்று நமக்கு அசோகர் குறித்த விவரங்கள் தெரியாமலே போய் இருக்கும்.

அசோகருக்கு பின்னர் வந்தவர்கள் அவர் அளவுக்கு திறமை பெற்றவர்கள் அல்ல என்பதாலும் ,அசோகர் படைவீரர்களை கலைத்து புத்தமத பிரச்சாரத்திற்கு அனுப்பிவிட்டதாலும் வலிமையின்றி இருந்தார்கள் மேலும் புத்த மதத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால் பிராமண அறிஞர்கள் அரசை கவிழ்க்க நேரம் பார்த்து வந்தனர். இதைப்பயன்படுத்திக்கொண்டு மவுரிய அரசில் தளபதியாக இருந்த புஷ்யமித்திர சுங்கர் எனப்படும் பிராமண தளபதி கடைசி மவுரிய அரசன் ஆன பிருக்ரதா என்பவரை நயவஞ்சகமாக கொன்று சுங்க வம்ச அரசை நிறுவினார் அத்துடன் மாபெரும் மவுரிய சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது.

  • அசோகர் பின்னாளில், இலங்கை அரசன் ஒருவனுக்கு முடியுடன், தேவநம்பிய என்ற பட்டமும் அளித்ததாக மகாவம்சம் கூறுகிறது. அவ்வரசன் பெயர் தேவநம்பியதீசன் என்று பின்னாளில் அறியப்படுவதாயிற்று.


அசோகப் பேரரசர்
மவுரியப் பேரரசர்
Ashoka2.jpg
Modern reconstruction of Ashoka's portrait
ஆட்சிக்காலம்273 BC-232 BC
முழுப்பெயர்அசோக மவுரியன்
பட்டங்கள்தேவனாம்பிரியா பிரியதர்சி, தம்மா
பிறப்பு304 BC
பிறப்பிடம்பாடலிபுத்திரம்(இன்றையபாட்னா)
இறப்பு232 BC
இறந்த இடம்பாடலிபுத்திரம்
புதைக்கப்பட்டதுAshes immersed inGangesRiver, possibly at Varanasi
முன்னிருந்தவர்பிந்துசாரர்
பின்வந்தவர்தசரத மவுரியன்
துணைவிமகாராணி தேவி
மனவிகள்ராணி திசியரக்சா
ராணி பத்மாவதி
ராணி கவுர்வகி
வாரிசுகள்மகிந்ததேரர்,சங்கமித்தை
அரச குடும்பம்மவுரியப் பேரரசு
தந்தைபிந்துசாரர்
தாய்ராணி தர்மா
அசோகரின் இறப்பிற்குப் பிறகு 50 ஆண்டுகளுக்குள் மௌரியப் பேரரசு சிதறுற்றது. அதன்பின்பு அது எழுச்சி பெறவே இல்லை. ஆனாலும், அசோகர் புத்த சமயத்திற்கு ஆதரவளித்ததன் மூலம் உலகத்தின் மீது அவர் பெற்ற நீண்ட காலச் செல்வாக்கு மிகப் பெரியதாகும். அவர் ஆட்சி பீடம் ஏறியபோது புத்தச் சமய்ம் வட இந்தியாவில் ஒரு குறுகியவட்டாரத்திலேயே செல்வாக்குப் பெற்றிருந்தது. அவர் இறக்கும்போது இந்தியா முழுவதும் அது பரவியிருந்ததோடு இந்தியாவின் அண்டை நாடுகளிலும் மிக விரைவாகப் பரவி வந்தது. கௌதம புத்தர் நீங்கலாக புத்த சமயம் ஓர் உலகப் பெரும் சமயமாகவளர்வதற்கு வேறெவரையும் விட முக்கிய காரணமாக இருந்தவர் அசோகரேயாவார்.

என் முன்னோர்கள் நான் பதிவிடுவதர்க்காக எழுதிவைத்த குறிப்புகளல்ல இவை..
விக்கிப்பீடியா போன்ற தகவல் மூலங்களிலிருந்து தான் எடுத்தேன்.
அசோகப் பேரரசர் என்று போய் விக்கிப்பீடியாவில் தேடி வாசிப்பவர்கள் எத்தனை பேராக இருக்கும்??
அதனை நான் தொகுத்து இங்கே தரும் போது
ஒரு முன்னூறு நானூறு பேராவது
பலனடைவார்கள் என்ற எண்ணத்தில் தான்
பகிர்ந்துகொள்கிறேன்..
!!

Post Comment

32 comments:

சார்வாகன் said...

அருமை

தோழி பிரஷா( Tholi Pirasha) said...

அருமை ..
உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

சார்வாகன் said...

அசோகா தமிழ் திரைப்படம்

http://saarmovies.blogspot.com/2011/05/blog-post_25.html

சி.பி.செந்தில்குமார் said...

இப்படி எல்லாரும் திடீர்னு திருந்திட்டா எப்படி?

விக்கி உலகம் said...

மாப்ள உங்க தமிழாக்கம் சூப்பருங்கோ!

செங்கோவி said...

அசோகர் மரம் நட்டார்-னு மட்டும் தான் படிச்சிருக்கேன்..உண்மையில் நல்ல தகவல்கள்.

சுதேசி said...

வரவேற்புக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. முக்கியமாக அந்த பின்குறிப்பு பிடித்து உள்ளது ஏன்எனில் நான் இரு தினங்களின் நண்பருடன் உரையாடிய விடயம்

மைந்தன் சிவா said...

//சார்வாகன் said...
அருமை///

நன்றிகள்

மைந்தன் சிவா said...

//தோழி பிரஷா( Tholi Pirasha) said...
அருமை ..
உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்.//

நன்றி தோழி

மைந்தன் சிவா said...

//சார்வாகன் said...
அசோகா தமிழ் திரைப்படம்//
உங்கள் பக்கம் வந்தேன் சகோ...

மைந்தன் சிவா said...

//சி.பி.செந்தில்குமார் said...
இப்படி எல்லாரும் திடீர்னு திருந்திட்டா எப்படி?//

அது தானே...உலகம் திருந்திடுமா ஹிஹி

மைந்தன் சிவா said...

//விக்கி உலகம் said...
மாப்ள உங்க தமிழாக்கம் சூப்பருங்கோ!//

நான் எங்கே தமிழை ஆக்கி வைத்தேன் பாஸ்??

மைந்தன் சிவா said...

/செங்கோவி said...
அசோகர் மரம் நட்டார்-னு மட்டும் தான் படிச்சிருக்கேன்..உண்மையில் நல்ல தகவல்கள்./

ஹிஹி நன்றி...
மரம் நட்ட விஷயம் ஊருக்கே தெரிஞ்சு போச்சா!!

மைந்தன் சிவா said...

//சுதேசி said...
வரவேற்புக்களும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. முக்கியமாக அந்த பின்குறிப்பு பிடித்து உள்ளது ஏன்எனில் நான் இரு தினங்களின் நண்பருடன் உரையாடிய விடயம்//

அப்படியா!!சேம் ப்ளட்!!

யாதவன் said...

அருமையான வரலாற்று தகவல்

Nesan said...

வரலாற்றிக் கலிங்கத்துப்போர் முடிந்த பிறகுதான் அசோகன் மதம் மாரியதாக நான் படித்தேன் இதுதான் வரலாறுத் தவறுகளோ!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

யோவ் என்னய்யா ஆச்சு திடீருன்னு? வரலாறு எல்லாம் போடுறே! அப்புறம் நேத்திக்கு என்னோட ப்ளாக் பக்கம் வரவே இல்லையே! என்னாச்சு?

கார்த்தி said...

அடங்கொக்கா மக்கா!! வரலாறுக்கு எனக்கு A!!

NKS.ஹாஜா மைதீன் said...

தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்...நன்றி வரலாறு ஆசிரியரே...

மன்னார் அமுதன் said...

சிறப்பான வரலாற்றுத் தகவலைப் பதிந்துள்ளீர்கள். கட்டுரை எழுதும் போது collecting facts சரியான கஸ்டம். நேரத்தை ஒதுக்கி எழுதியதால் பயனடைந்தவர்களில் நானும் ஒருவன்...

நிரூபன் said...

வரலாற்றுத் தகவல்கள் எல்லாம் எழுதுறீங்க சகோ. அருமையாக இருக்கு.

FARHAN said...

என்ன இது திடீர் மற்றம் ? 10 ஆம் கிளாஸ் வரலாறு ஆசிரியர கண்முன் கண்ட பீலிங்சு

Cool Boy கிருத்திகன். said...

ஆகா... வரலாறு ரெம்ப முக்கியம் அமைச்சரே...
அது அந்தக்காலத்தில ஒழுங்கா ஆவணப்படுத்தப்பட்டிருந்தா இப்ப ஏன் இந்த நிலமை...

ஜீ... said...

என்ன இது? ஏன்? எதுக்கு? என்னாச்சு? யார்ல இந்தக் கோபம்?

ஏற்கெனவே வெயில் தாங்க முடியல!
அசோகர் மரம் நட்டார் - மைந்தன் பதிவு போட்டார்? (பயபுள்ள நேற்று வரைக்கும் நல்லாத்தானே இருந்தான்?)
அப்போ என்ன சொல்ல வாறீங்க அசோகர் முன்னாடி செய்த அட்டகாசத்துக்கு பின்னாடி ரொம்பவே கஷ்டப்பட்டார் அப்பிடித்தானே?

பதிவு நல்லா இருக்கு மைந்தன்! அறியாத தகவல்கள்!

Anonymous said...

நல்ல முயற்ச்சி பாஸ் ...

MANO நாஞ்சில் மனோ said...

சூப்பர் வரலாறு, அரிய தகவல்களுடன்...!!!

Speed Master said...

அசோகர் சாலை ஓரங்களில் ஏன் மரம் நட்டார்

லாரிகள் இரவில் இடித்துகொள்ள

=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
முடிஞ்ச பதில் சொல்லுங்க
http://speedsays.blogspot.com/2011/05/talk-me.html

துஷ்யந்தனின் பக்கங்கள் said...

//அசோகப் பேரரசர் என்று போய் விக்கிப்பீடியாவில் தேடி வாசிப்பவர்கள் எத்தனை பேராக இருக்கும்??
அதனை நான் தொகுத்து இங்கே தரும் போது ஒரு முன்னூறு நானூறு பேராவது பலனடைவார்கள் என்ற எண்ணத்தில் தான் பகிர்ந்துகொள்கிறேன்.. !!//


அருமையான பதிவு,
நிறைவான தொகுப்பு,
சின்ன வயசில் வரலாறு வகுப்பில் படித்த  நினைவுகள்,
வரலாறு தொகுப்புக்கள் படிக்கிறதே ஒரு தனி ஆனந்தம் தான் பாஸ்,
இப்புடி பதிவுகள் அடிக்கடி போடுங்க பாஸ் ^_^

# கவிதை வீதி # சௌந்தர் said...

என்ன இந்த சிவா திருந்திட்டானா...

இப்படி வரலாற்று பதிவு போட்டு அசத்துரான்..

shanmugavel said...

சிறப்பான தொகுப்பு சிவா.அசோகரோடு பள்ளி நாட்களும் நினைவுக்கு வருகின்றன.

ஹேமா said...

தேவையான ஆவணப்பதிவு.நல்லது சிவா !

“நிலவின்” ஜனகன் said...

பார்றா..அண்ணரு வரலாறுல எல்லாம் புகுந்து விளயாடுறாரு...

நல்ல விடயங்களை தொகுத்தமைக்கு வாழ்த்துகள் பாஸ்...

Related Posts Plugin for WordPress, Blogger...