Wednesday, May 25, 2011

"காதல் கவிதை"அப்பிடீன்னு தலைப்பு போடவா??

தலைப்பு தான் பாஸ் அப்பிடி..ஆனால் உள்ளே
காதல் எங்கடா கவிதை எங்கடா
நாசமாய் போன உன் பதிவினிலே'ன்னு கேட்டு அடிக்கப்பிடாது ஆமா!

ல்தோன்றி மண் தோன்றா
காலத்தில்
முன் தோன்றிய
முதலுணர்வு
காதலென்பேன்!

காலத்தால் மூத்து
ஆதாம் ஏவாள்
மனங்களில் பூத்து
பிரபஞ்ச இயக்கத்தின்
மூத்த சக்தி
காதலென்பேன்!

ழு கடல் போதாதென்று
கண்ணீர் கடல்
தோற்றுவித்த
இயற்கையில் நுழைந்த
செயற்கை
காதல் என்பேன்!

ழுதாத விரல்களையும்
இறைவன் தலைஎழுத்தை
மீறி
எழுதவைக்கும் கவி
அது காதலென்பேன்!!
தானாய் வரும்
நித்திரையையும்
நிறுத்தி வைக்கும்...
வற்புறுத்தி கேட்டாலும்
தூக்கம் வராமல் வைக்கும்
விந்தை அது
காதலென்பேன்!!

ளிங்கு கல்லை
காதல் சின்னமாக்கி
சாஜகான் பேர் பெற்றதும்
சிறை வாழ்க்கை
அடையப்பெற்றதும்-காரணம்
காதலென்பேன்!

டவுள் படைத்தது
இருவராயினும்
இன்றுவரை உலக சனத்தொகை
காமம் முதல்கொண்டு
சாதல் கொலை வரை
தீர்மானிக்கும் கடவுள்
காதலென்பேன்!!
காற்றினை தென்றலாக்கிய
சந்திரனை நிலாவாக்கிய
வேதனையை சுகமாக்கிய
மனிதனை கவிஞனாக்கிய
மனங்களை ஆப்பிள் பழமாக்கிய...
சிலர் இறப்புக்கும்
பலர் பிறப்புக்கும்
இவ்வுலக நடப்பிற்கும்
இன்னும் பற்பல பலதுக்கும்
பலம் சேர்க்கும் ஒரே
வார்த்தை...வாழ்க்கை...வாழ்வோம்
காதலுடன்!!

டிஸ்கி:இதனால் சகலருக்கும் அறியத்தருவது என்னவெனில் சுஜாதாவின் தலைப்பு போல் "ஆதலினால் காதல் செய்வீர்"!!
அப்பா அடிச்சா வலிக்கும்

அம்மா அடிச்சா வலிக்கும்

ஆனால் சைட் அடிச்சா வலிக்காது...
நாம சொல்லித்தான் நீங்க எல்லாம் பண்ணுவீங்க எண்டு தெரியும்...ஆல்ரெடி எத்தினைக்கு ஆட்டைய போட்டீங்களோ!!கடவுளே காப்பாத்து!!

Post Comment

46 comments:

Unknown said...

பய புள்ள தொல்ல தாங்க முடியல!

Unknown said...

/விக்கி உலகம் said...
பய புள்ள தொல்ல தாங்க முடியல!//

ஆமா இவரு விவசாயம் பண்ணேக்க,நாம இதைப்பண்ண கூடாதா!!

செங்கோவி said...

தம்பி என்னத்தை எழுதி இருக்கப் போறாருன்னு வந்தேன்..ஆனா இந்த வரிகளில் கலக்கிட்டீங்க :

அப்பா அடிச்சா வலிக்கும்

அம்மா அடிச்சா வலிக்கும்

ஆனால் சைட் அடிச்சா வலிக்காது...!
என்ன தான் நீங்க மூடி மறைச்சாலும் உங்களுக்குள்ள இருக்குற கவிதைச் சிங்கம் இந்த வரிகள்ல சீறிக் கிளம்பிடுச்சு. பாராட்டுகள்.

Unknown said...

/செங்கோவி said...
என்ன தான் நீங்க மூடி மறைச்சாலும் உங்களுக்குள்ள இருக்குற கவிதைச் சிங்கம் இந்த வரிகள்ல சீறிக் கிளம்பிடுச்சு. பாராட்டுகள்.//
ஹிஹி ஆக்சுவலி அது நகைச்சுவைக்கு பாஸ்!!

Unknown said...

"மைந்தன் சிவா said...

/விக்கி உலகம் said...
பய புள்ள தொல்ல தாங்க முடியல!//

ஆமா இவரு விவசாயம் பண்ணேக்க,நாம இதைப்பண்ண கூடாதா!! "

>>>>>>>>>>>

யோவ் மாப்ள பண்ணுய்யா....
நல்லாத்தான் இருக்கு நான் காமடிக்கு சொன்னேன்யா...
கோச்சிக்காத!

Unknown said...

//பாலகுமாரனின் தலைப்பு போல் "ஆதலினால் காதல் செய்வீர்"!//
அது சுஜாதாவோடது! பாஸ்!

Unknown said...

//விக்கி உலகம் said...
"மைந்தன் சிவா said...

/விக்கி உலகம் said...
பய புள்ள தொல்ல தாங்க முடியல!//

ஆமா இவரு விவசாயம் பண்ணேக்க,நாம இதைப்பண்ண கூடாதா!! "

>>>>>>>>>>>

யோவ் மாப்ள பண்ணுய்யா....
நல்லாத்தான் இருக்கு நான் காமடிக்கு சொன்னேன்யா...
கோச்சிக்காத!//

அதே அதே..நானும் கமேடிக்கே பாஸ் !!

Unknown said...

பார்ரா! பயபுள்ள கவித எல்லாம் எழுதுது! இந்தப் புள்ளக்குள்ளையும் என்னமோ இருந்திருக்கு பாரேன்!
:-)

Unknown said...

//ஜீ... said...
//பாலகுமாரனின் தலைப்பு போல் "ஆதலினால் காதல் செய்வீர்"!//
அது சுஜாதாவோடது! பாஸ்!//

நன்றி ஜி..மாற்றிவிட்டேன்..

இரண்டாம் மூன்றாம் ஆண்டில் அந்தப் புத்தகம் என் கண்ணில் பட்டது..
அதனால் தான் சரியாக ஞாபகமில்லை...

Unknown said...

//ஜீ... said...
பார்ரா! பயபுள்ள கவித எல்லாம் எழுதுது! இந்தப் புள்ளக்குள்ளையும் என்னமோ இருந்திருக்கு பாரேன்!
:-)//

இருந்திருக்கா?யோவ் எனகென்ன அம்பது வயசா??

இருந்திருக்குன்னு சொல்ல??

எழுத வேண்டிய வயசு தானே!!

உங்களுக்கு அங்கிள் வயசானால் நமக்குமா??ஹிஹி

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

தலைப்பு தான் பாஸ் அப்பிடி..ஆனால் உள்ளே
காதல் எங்கடா கவிதை எங்கடா
நாசமாய் போன உன் பதிவினிலே'ன்னு கேட்டு அடிக்கப்பிடாது ஆமா!//

இந்த வாக்கியத்த, " அண்ணன் என்னடா தம்பி என்னடா " டியூனில பாடலாம் போல இருக்கே!

Unknown said...

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
தலைப்பு தான் பாஸ் அப்பிடி..ஆனால் உள்ளே
காதல் எங்கடா கவிதை எங்கடா
நாசமாய் போன உன் பதிவினிலே'ன்னு கேட்டு அடிக்கப்பிடாது ஆமா!//

இந்த வாக்கியத்த, " அண்ணன் என்னடா தம்பி என்னடா " டியூனில பாடலாம் போல இருக்கே!//

அதே அதே!!நீங்கள் ஒரு நடமாடும் ஜீனியஸ் பாஸ்!!

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

மச்சி கலக்கல் கவிதை!! ஒவ்வொரு வரி முடிவிலும் ' என்பேன் ' அப்டீன்னு போட்டிருக்கீங்களே! இது எதிர்காலம் தானே ( இலக்கணத்தில் ) அப்டீன்னா நீ இன்னும் சொல்லலியா? அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்!! ( எனக்கும் கொஞ்சாம் கொஞ்சாம் தமிழ் தெரியும் ஹிஹிஹிஹி )

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

அப்பா அடிச்சா வலிக்கும்

அம்மா அடிச்சா வலிக்கும்

ஆனால் சைட் அடிச்சா வலிக்காது...

ஒத்துக்கறேன்!!

Unknown said...

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
மச்சி கலக்கல் கவிதை!! ஒவ்வொரு வரி முடிவிலும் ' என்பேன் ' அப்டீன்னு போட்டிருக்கீங்களே! இது எதிர்காலம் தானே ( இலக்கணத்தில் ) அப்டீன்னா நீ இன்னும் சொல்லலியா? அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்!! ( எனக்கும் கொஞ்சாம் கொஞ்சாம் தமிழ் தெரியும் ஹிஹிஹிஹி )//

என்பேன் என்பேன் என்றுகொண்டே இருப்பேன்...!!!

Unknown said...

//ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...
அப்பா அடிச்சா வலிக்கும்

அம்மா அடிச்சா வலிக்கும்

ஆனால் சைட் அடிச்சா வலிக்காது...

ஒத்துக்கறேன்!!//
ஒத்துக்கிறீங்களா??ம்ம் அது!!

நிரூபன் said...

காலத்தால் மூத்து
ஆதாம் ஏவாள்
மனங்களில் பூத்து
பிரபஞ்ச இயக்கத்தின்
மூத்த சக்தி
காதலென்பேன்!//

கற்பனையின் உச்சம் இங்கே தான் இருக்கு சகோ.
அருமையான கவிதை.

மொக்கைப் பதிவர்களால் எதுவும் முடியும் என்பதற்கு இதுவும் ஓர் சான்று.

நிரூபன் said...

தானாய் வரும்
நித்திரையையும்
நிறுத்தி வைக்கும்...
வற்புறுத்தி கேட்டாலும்
தூக்கம் வராமல் வைக்கும்
விந்தை அது
காதலென்பேன்!!//

அவ்........அப்போ இராத்திரிப் பூராத் நீங்க தூங்காமல் இருப்பதன் விந்தை இது தானோ.

நிரூபன் said...

காதலிற்குரிய உணர்வுகளின் வெளிப்பாடாகவும், காதல் எனும் சொல்லின் அர்த்தங்களையும் உங்களின் கவிதை வெளிப்படுத்தி நிற்கிறது.

Unknown said...

//நிரூபன் said...
காலத்தால் மூத்து
ஆதாம் ஏவாள்
மனங்களில் பூத்து
பிரபஞ்ச இயக்கத்தின்
மூத்த சக்தி
காதலென்பேன்!//

கற்பனையின் உச்சம் இங்கே தான் இருக்கு சகோ.
அருமையான கவிதை.

மொக்கைப் பதிவர்களால் எதுவும் முடியும் என்பதற்கு இதுவும் ஓர் சான்று.//

அதை ஏன் மறுபடியும் கிளறிகிட்டு பாஸ்..

Unknown said...

//நிரூபன் said...
தானாய் வரும்
நித்திரையையும்
நிறுத்தி வைக்கும்...
வற்புறுத்தி கேட்டாலும்
தூக்கம் வராமல் வைக்கும்
விந்தை அது
காதலென்பேன்!!//

அவ்........அப்போ இராத்திரிப் பூராத் நீங்க தூங்காமல் இருப்பதன் விந்தை இது தானோ.//
நான் இரவு எழு மணிக்கே படுத்திடுவனே...தெரியாதா??

Unknown said...

/நிரூபன் said...
காதலிற்குரிய உணர்வுகளின் வெளிப்பாடாகவும், காதல் எனும் சொல்லின் அர்த்தங்களையும் உங்களின் கவிதை வெளிப்படுத்தி நிற்கிறது./

நிக்குதா???கொஞ்சம் இருங்க படுக்க சொல்லிடுறேன்..பாவம் தானே..

NKS.ஹாஜா மைதீன் said...

#தானாய் வரும்
நித்திரையையும்
நிறுத்தி வைக்கும்...
வற்புறுத்தி கேட்டாலும்
தூக்கம் வராமல் வைக்கும்
விந்தை அது
காதலென்பேன்!!#


அருமையான வரிகள்...அனுபவமோ?

Chitra said...

காற்றினை தென்றலாக்கிய
சந்திரனை நிலாவாக்கிய
வேதனையை சுகமாக்கிய
மனிதனை கவிஞனாக்கிய
மனங்களை ஆப்பிள் பழமாக்கிய...
சிலர் இறப்புக்கும்
பலர் பிறப்புக்கும்
இவ்வுலக நடப்பிற்கும்
இன்னும் பற்பல பலதுக்கும்
பலம் சேர்க்கும் ஒரே
வார்த்தை...வாழ்க்கை...வாழ்வோம்
காதலுடன்!!


....very nice. :-)

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நல்லாதான் இருக்குங்க...
கவிதை.. கவிதை....

சைட் அடித்து வலிக்காது ஆனால் நம்ம சைட் அடித்தால் வலிக்கும்...

தத்துவம்..

Anonymous said...

////எழுதாத விரல்களையும்
இறைவன் தலைஎழுத்தை
மீறி
எழுதவைக்கும் கவி
அது காதலென்பேன்!! /// கொன்னுப்புட்டிங்க போங்க...

Anonymous said...

////காற்றினை தென்றலாக்கிய
சந்திரனை நிலாவாக்கிய
வேதனையை சுகமாக்கிய
மனிதனை கவிஞனாக்கிய
மனங்களை ஆப்பிள் பழமாக்கிய...
சிலர் இறப்புக்கும்
பலர் பிறப்புக்கும்
இவ்வுலக நடப்பிற்கும்
இன்னும் பற்பல பலதுக்கும்
பலம் சேர்க்கும் ஒரே
வார்த்தை...வாழ்க்கை...வாழ்வோம்
காதலுடன்!!//// உண்மையான வரிகள்..மிக நன்றாக இருக்கு காதல் கவிதை. தொடர்ந்து எழுதுங்க பாஸ்

கார்த்தி said...

இது ஓவர் மொக்கை இல்ல. என்றதால மட்டும் ஓட்டு!அதுசரி என் சில லெட்டரை மட்டும் சிவப்பாக்கி விட்டிருக்கீங்க. காதல் கவிதை என்றதாலா?

Unknown said...

//கார்த்தி said...
இது ஓவர் மொக்கை இல்ல. என்றதால மட்டும் ஓட்டு!அதுசரி என் சில லெட்டரை மட்டும் சிவப்பாக்கி விட்டிருக்கீங்க. காதல் கவிதை என்றதாலா?//

ஹிஹி அப்பிடியே வைத்துக்கொள்ளுங்களேன்!!

arasan said...

ரைட்டு ...
முடிவு பண்ணிட்டு வந்திருக்கிங்க போல ...

Unknown said...

ஹி ஹி ஹி கவிதையா ?

Unknown said...

/அரசன் said...
ரைட்டு ...
முடிவு பண்ணிட்டு வந்திருக்கிங்க போல ...//

ஆமா ஆமா

Unknown said...

//நா.மணிவண்ணன் said...
ஹி ஹி ஹி கவிதையா ?//
அப்பிடீன்னு நா சொல்றேன்...நீங்க என்ன பீலிங்க்ல இருக்கீங்களோ!!

Unknown said...

//கந்தசாமி. said...
உண்மையான வரிகள்..மிக நன்றாக இருக்கு காதல் கவிதை. தொடர்ந்து எழுதுங்க பாஸ்//
நன்றி நன்றி

தனிமரம் said...

என்னாச்சு பாஸ் காதல் கவிதைகளை எழுத தொடங்கிவிட்டீர்கள் என்பேனை திரிவு படுத்தினால் தொக்கி நிக்கிறது காதல்  இப்போது நல்ல மாதம் போய்காதலைச் சொல்லி galle face இல் வோல்ஸ் ஐஸ்கிரீம் சாப்பிட வழி செய்யுங்கோ!

ஹேமா said...

சிந்தனை வரிகள் நல்லாவேயிருக்கு.உங்களுக்குக் காதல் எண்டாப் பயம்போல.அதான் எல்லாரையும் பயமுறுத்திறீங்கள்.காதல் மனசில இருந்து எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்தால் அது நிச்சயம் வாழ்க்கையா மாறும் சிவா !

சுதா SJ said...

ஹாஹா 
கவிதை சூப்பர்,
இதுல ரெண்டை சுட்டு என் ஆளுக்கு அனுப்பலாம் எண்டு இருக்கன்,
அனுமதி ப்ளிஸ் பாஸ் ^_^

Unknown said...

//துஷ்யந்தனின் பக்கங்கள் said...
ஹாஹா
கவிதை சூப்பர்,
இதுல ரெண்டை சுட்டு என் ஆளுக்கு அனுப்பலாம் எண்டு இருக்கன்,
அனுமதி ப்ளிஸ் பாஸ் ^_^//

ஹிஹி உங்களுக்கில்லாததா!

Jana said...

கடவுள் படைத்தது
இருவராயினும்
இன்றுவரை உலக சனத்தொகை
காமம் முதல்கொண்டு
சாதல் கொலை வரை
தீர்மானிக்கும் கடவுள்
காதலென்பேன்!!

அட நல்லாயிருக்கே...
அசத்துறாங்கப்பா...
என்ன தம்பி..சைட்டால ஏதும் ட்ரக் ஓடுதோ?

Mathuran said...

இதனால் சகலருக்கும் அறியத்தருவது யாதெனில் மைந்தன் அண்ணா திருந்திவிட்டார்.......

Mathuran said...

//தலைப்பு தான் பாஸ் அப்பிடி..ஆனால் உள்ளே
காதல் எங்கடா கவிதை எங்கடா
நாசமாய் போன உன் பதிவினிலே'ன்னு கேட்டு அடிக்கப்பிடாது ஆமா!//

க.க.க.போ

shanmugavel said...

கலக்கல் சிவா !கவிதையேல்லாம் எழுதுவீங்களோ!

உணவு உலகம் said...

//காற்றினை தென்றலாக்கிய
சந்திரனை நிலாவாக்கிய
வேதனையை சுகமாக்கிய
மனிதனை கவிஞனாக்கிய
மனங்களை ஆப்பிள் பழமாக்கிய...//
அய்யா, நீர் கவிஞர்.

உணவு உலகம் said...

வாழ்த்துக்கள், நண்பரே!

கவி அழகன் said...

அட இவ்வக்ளவு நாள் பிந்திட்டுதே கருத்து போடா
எண்டா ராசா னே எங்கயு போயிட்டாய் நீ இப்படியே தொடர்ந்து எழுதினா உனக்கு சிலை வச்சு கும்பிடுவன்

அம்பாளடியாள் said...

வாழ்த்துக்கள் சகோ அருமையான காதல்க் கவிதைக்கு .வாருங்கள் என் தளத்தில் இதன் இன்னொரு வகை
காத்திருக்கின்றது .உங்கள் பொன்னான கருத்தையும் ஆக்கம் பிடித்திருந்தால் ஓட்டுக்களையும் இட்டுச் செல்லுங்கள் .
மிக்க நன்றி இப் பகிர்வுக்கு ...........

Related Posts Plugin for WordPress, Blogger...