Friday, August 9, 2013

'தலைவா'-விஜய்க்கு இன்னொரு ஹிட்டு..!

                          


விஸ்வரூபத்துக்கு அடுத்து அதிக பிரச்சனைகளை சந்தித்த தமிழ் படம் அப்பிடிங்கிற பெருமையுடன் வெளிவந்திருந்தது 'தலைவா'.அரசியல் கதைகளம் கொண்ட படம்,படத்தில் விஜய் சி.எம் ஆகின்ற மாதிரியான காட்சிகள் இருக்கின்றன அதனால் தான் ஆளும் தரப்பிலிருந்து ஏகப்பட்ட குடைச்சல்கள் என்று அரசல் புரசலாக பேசப்பட்டன.தமிழகத்தில் இப்படி என்றால்,இலங்கையில் விஜய்,கமல்,ரஜனி படங்களை திரையிடவிட மாட்டோம் என்று கொழும்பில் சிங்கள அமைப்பொன்றின் எச்சரிக்கையால் வி.ஐ.பி ஷோக்கள் ரத்து செய்யப்பட்டன.இறுதி தருணம் வரையில் படம் வெளியாகுமா என்கின்ற டென்ஷன் ரசிகர்கள் மத்தியில் ஏகத்துக்கும் பரவிப்போயிருந்தது.2.8மில்லியன் ஹிட்ஸ் அடித்திருந்த தலைவா ட்ரெய்லர்லேயே படம் எப்படிப்பட்டது என்பது ஓரளவுக்கு புரிந்திருந்தது.சரி இயக்குனர் விஜய் புதிதாக ஏதாவது செய்திருப்பார் என்கின்ற நம்பிக்கையுடன் தியேட்டருக்கு போனோம்.

ஆரம்பமே சரபரன்னு பாம்பாயில் 1988இல் கலவரம் ஒன்னு காட்டுறாங்க. ஏற்கனவே இருந்த டான் மாதிரியான தலைவர் ஒருவரை போட்டுத்தள்ளி விட்டார்கள் என்று கதை ஆரம்பித்து மீண்டும் பாம்பாயில் வந்து முடிகிறது கதை.சத்யராஜ் மகனாக வரும் விஜய்யை சிறுவயது முதலே தன்னை விட்டு தள்ளி தூரத்தில் வளர்ட்த்துவருகிறார் 'அண்ணா'என்றழைக்கப்படும் சத்தியராஜ்.காரணம் தன்னுடைய பிரச்சனைக்குள் மனைவியை இழந்தது போல மகனையும் இழக்கக்கூடாது என்பதனால் தான் பிசினெஸ் செய்கிறேன் என்று கூறி வளர்த்துவருகிறார்.அப்படியாக அவுஸ்திரேலியாவில் டான்சராக இருந்துகொண்டு வாட்டர் சப்ளை பிசினெஸும் பார்த்து வரும் விஜய் பாம்பாய் வந்து சத்தியராஜின் இடத்தை எப்படி அடைகிறார் என்பது தான் கதை. அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த கதை தான்.ஆனால் அது சொல்லப்பட்ட விதத்தில் இயக்குனர் விஜய் தனித்து தெரிகிறார்.

பம்பாய் என்றாலே தமிழ் ரசிகர்களுக்கு 'பாட்ஷா'வும் நாயகனும் கட்டாயம் ஞாபகம் வந்து தொலைக்கும்.ஆனால் துணிந்து அந்த கதைக்களத்தை தெரிவுசெய்து தன்னால் சுவாரசியமாக படத்தை கொடுக்க முடியும் என்பதை விஜய் நிரூபித்திருக்கிறார்.

முதல் பாதி தான் படத்தை தூக்கி நிறுத்தியது எனலாம்.காரணம் இடைவேளைக்கு பின்பு வரும் காட்சிகள் எவ்வளவு முயன்றாலும் வேறுபடுத்தி கொடுப்பது மிக கடினம் தான்.முதல் பாதி முழுவதும் அவுஸ்திரேலியாவில் படமாக்கப்பட்டிருக்கிறது.மிக மிக அழகான காட்சிகள். ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா கண்ணுக்கு விருந்து படைத்திருக்கிறார்.பாடல் காட்சிகளில் அவுஸ்திரேலிய அழகை கண்முன் நிறுத்திவிடுகிறார். சந்தானத்தின் காமெடி,அழகான பாடல்கள்,அபாரமான நடனம் என்று இடைவேளை வரை 'அடடா'போடவைத்தது படம்!நிச்சயமாக விஜய்யினதும் அமலாபாலினதும் வேறுபட்ட நடிப்பை தலைவாவில் காணக்கூடியதாக இருக்கும்.  

அங்காங்கே வைக்கப்பட்ட ட்விஸ்ட்டுகள் படத்தை சுவாரசியமாக்குகின்றன. திரைக்கதையை நம்பி இயக்குனர் விஜய் களமிறங்கியிருக்கிறார்.ஆரம்ப காட்சிகளில் வரும் சத்தியராஜ் செம அழகாக தெரிகிறார்.கிட்டத்தட்ட எண்பது தொண்ணூறுகளின் சத்தியராஜை காணமுடிந்தது.கருந்தாடி வைத்து கருப்பு தலைமுடியுடன் சண்டையிடுவார் பாருங்கள் அப்படி அபாரமாக இருக்கும்!

இது நம்ம அமலாபாலா என்று கேட்கின்ற மாதிரி அழகை மெருகேற்றி வந்திருக்கிறார்.இன்னொரு சுற்று ஆடுவதற்கு தயாராகிவிட்டது போல் தெரிகிறது.சந்தானம் விஜய்யை இமிட்டேட் செய்து கலாய்ப்பதையே தொழிலாக செய்திருக்கிறார் படத்தில்.பெரிய ஹீரோக்கள் காமெடியங்களால் கலாய்க்கப்படுவதை விரும்புவதில்லை.ஆனால் விஜய் இடம் கொடுத்திருக்கிறார் என்று சந்தானம் ஒருபேட்டியில் கூறியிருந்தார்.அது படத்தில் உண்மை என்று தெரிகிறது.அந்தளவு ஓட்டியிருக்கிறார்.சாம் அண்டர்சன் கூட இடையே வந்து கலகலப்பாக்கி செல்கிறார்.  

பாடல்களில் 'வாங்கண்ணா வணக்கங்கண்ணா'பாடல் ஏற்கனவே ஹிட் ஆகியிருந்தாலும்,'தலைவா'பாடலும்,'யார் இந்த சாலையோரம்','தமிழ் பசங்க' பாடல்களும் நன்றாக வந்திருக்கின்றன.தமிழ் ஹீரோக்களில் நடனத்தில் தான் தான் பெஸ்ட் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் விஜய்.முதல் பாதியில் நடனம் தூள் பறக்கிறது.தமிழ் பசங்க பாடலில் அது உச்சம்!ஜி வி பிரகாஷ்குமார் கூட ஒரு பாடலில் வந்து நடனமாடி செல்கிறார்.மானாட மயிலாட க்ரூப்பில் இருந்து பலரும் களமிறங்கியிருக்கின்றனர்.

படத்தின் குறைகள் என்றால்,படத்தின் நீளம்.மூன்று மணி நேர படத்தை என்னதான் விறுவிறுப்பாக வைத்திருக்க முயற்சித்தாலும் ஏதாவது சில சந்தர்ப்பங்களில் நீளத்தை உணரவைத்துவிடும்.கதையை விளக்குவதில் மெதுவான காட்சிகள் சற்றே போர்.

இரண்டாம் பாதியில் வரும் கதை நமக்கு தேவர்மகன்,நாயகனில் பழக்கப்பட்ட கதை என்பதால் அது படத்துக்கு ஒரு வீக்னெஸ்.இரண்டாம் பாதியை ஹரியிடம் கொடுத்திருந்தால் படம் இன்னமும் நன்றாக வந்திருக்கும்.

இடைவேளை வரை எந்த ரசிகர்களும் ரசித்து பார்க்கக்கூடிய படம். இடைவேளைக்கு பின்பதாக விஜய்யை விரும்பாதோர் விரும்பாமல் விடுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கின்றன.ஆனால் ஏ.எல்.விஜய் தன்னால் முடிந்ததை இரண்டாம்பாதியில் செய்திருக்கிறார்.தமிழக அரசுக்கு இந்த படத்தால் என்ன பிரச்சனை என்று இன்னமும் தான் புரியவில்லை.விஜய் ரசிகர்களுக்கு படம் விருந்து..!தெரிந்த கதை-தெரிந்த கதைக்களம்-மிக மிக ரிஸ்கான பாத்திரம்-நூல் இழை பிசகினால் கூட முழுதாக கவிழ்ந்து விடக்கூடிய படம்ன்னு ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்தும் படத்தை இந்தளவுக்கு மெருகேற்றியிருப்பது ஏ.எல்.விஜயின் சாமர்த்தியம்!ஹாட்ஸ் ஆப்!

மொத்தத்தில்,பெரும்பாலானோர் எதிர்பார்த்ததை போல படம் தோல்வி கிடையாது. விஜய்க்கு இன்னொரு ஹிட்டு நிச்சயம்.அது எத்தகைய வெற்றி என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.இதற்கு முதல் படமான துப்பாக்கி ப்ளக்பஸ்டர் ஹிட் என்பதால் அதனுடன் ஒப்பிட்டு பார்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன.என்னுடைய மார்க் 67/100.
(brit tamil இணையத்துக்காக.)

Post Comment

10 comments:

ராஜ் said...

நீங்க ஒரு அதி தீவிர விஜய் ரசிகர், நீங்களே அப்படிக்கா இப்படிக்கான்னு இழுத்து இழுத்து இரண்டாம் பாதி ஹரி கிட்ட குடுத்து இருக்கலாமுன்னு எழுதி இருக்கிறதை பார்க்கும் போது படம் மரண மொக்கை என்பது உறுதியாகிறது. :):):) விடுங்க பாஸ்.. அடுத்த படத்துல பார்த்துக்கலாம்... :):)

Unknown said...

பாஸ் என்ன பாஸ் இப்படி கவுத்துட்டீங்களே.. ரூம் மெட் மூன்று பேர் முதல் காட்சிக்கு போய்டுவந்து புலம்பிட்டு இருகாங்கள்.

Unknown said...

படு மொக்கையான பில்லா 2 படத்தையே ஆஹா ஓஹோன்னு விமர்சனம் பண்ணவருதான் நீங்க.. அஜித் ரசிகர் உங்களுக்கு அந்த படம் நல்ல படம் னா இந்த படம் எங்களுக்கும் ஹிட் படம் தான்..

ஆத்மா said...

அப்போ அரைச்ச மாவுதானா...
தேவர்மகன், நாயகன்....

pragash said...

Good Review Mynthan...:):)

Unknown said...

சோழ முத்தா போச்சா

Venu said...

http://venpu.blogspot.com/2013/08/blog-post.html

Anonymous said...

படம் ரீலிஸ் ஆகாததில் எனக்கு வருத்தமே நான் விஜய் ரசிகன் அல்ல ஆனால் ஜனநாயக உரிமை
எல்லோருக்கும் உண்டு எதிரிக்கும் கூட . இந்த படம் நல்ல இருக்குதோ இல்லையோ விஜய் ரசிகர்களின் இன்றைய கொண்டாட்டம் இல்லாமல் போய் விட்டது அவர் ரசிகர்களுக்கு எனது வருத்தத்தை தெரிவிக்கிறேன்.

"ராஜா" said...

its time to comment moderation...
enna thambi pochchaa?

Unknown said...

Awesome review.

Related Posts Plugin for WordPress, Blogger...