Sunday, July 24, 2011

மாற்றான் சூர்யா-மாறுபட்ட பார்வை!


பார்ட்டி, டிஸ்கோதெ, டிரிங்ஸ், சிகரெட் எந்தப் பழக்கமும் இல்லாதவர் சூர்யா. சூட்டிங் முடிந்தால் அப்பா, அம்மா, மனைவி என செட்டில் ஆவதையே விரும்புவார். கேட்டால், 'அப்பாவும் இப்படித்தானே இருந்தார்!' என்பார்.

முருக பக்தர் சூர்யா. எழுந்தவுடன் குளித்துவிடுவார். நெற்றியில் கொஞ்ச நேரமேனும் திருநீறு துலங்கும். திருவண்ணாமலைக்குச் சென்று, செருப்பு போடாமல் கிரிவலம் வந்திருக்கிறார்! தொழில் மீது இருக்கும் அளவுக்கு கடவுளிடமும் பக்தி உண்டு!

காலையில் ஹெல்த் டிரிங்ஸ், கொஞ்சம் உலர்ந்த பழங்கள். மதியம் மூன்று சிக்கன் பீஸ், சப்பாத்தி, வேகவைத்த காய்கறிகள். மாலை ஜுஸ், இரவு சப்பாத்தி. இதுதான் அவருடைய மெனு. ஸ்வீட்டுக்கு எப்பவும் தடா!

துணி ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்த காரணத்தால், சூட்டிங்கில் அவருக்கான ஆடைகளை அவரே கட்டிங் செய்து டிசைன் செய்கிறார்!

அவரது புதுப் படம் வெளியாகும்போதெல்லாம், அவர் படித்த லயோலா கல்லூரியின் பேராசிரியர்களுக்கு ஸ்க்ரீன் செய்து அபிப்பிராயம் கேட்பார்!

சூர்யாவின் பக்கத்துப் பக்கத்து வீட்டுக்காரர்கள் இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் ஷங்கர். ஆனாலும், இவர்கள் இருவரின் படத்திலும் நடித்தது இல்லை சூர்யா!

தங்கை பிருந்தா மீது சூர்யாவுக்கு அலாதி பாசம். வாரத்துக்கு ஒரு முறையேனும் பிருந்தாவை அவர் பார்த்துவிட வேண்டும். நாட்கள் கடந்தால் இவரே தன் குழந்தை தியாவைத் தூக்கிக் கொண்டு தங்கையைப் பார்க்க ஓடிவிடுவார்!

உலக சினிமாக்களில் இரானியப் படங்கள்தான் சூர்யா சாய்ஸ். சூட்டிங் கேன்சல் ஆனால் அந்தப் படங்கள்தான் சூர்யாவின் ஹோம் தியேட்டரில் கதை பேசும்!

வீட்டிலேயே ஜிம் இருக்கிறது. ஹிந்தி 'கஜினி'யில் அமீருக்கு உடற்பயிற்சியாளராக இருந்த அல்காஸ்தான் இப்போ சூர்யாவுக்கும் கைடு!

தன்னுடன் கல்லூரியில் படித்த நண்பர்களின் வீடுகளுக்கு திடீர் விசிட் அடிப்பது, கிறிஸ்துமஸ், தீபாவளி, ரம்ஜானின்போது வாழ்த்து அனுப்புவது சூர்யா பழக்கம். 'சினிமா ஸ்டார் ஆயிட்டோம்னு நண்பர்களை மறக்க முடியாதுல்ல!' என்பார்!

சினிமாவில் கமல்தான் சூர்யாவின் குரு. 'தேவர் மகன்' படம் வந்த சமயம் கமல் போலவே ஃபங்க் தலைமுடி வைத்துக் கொண்டு திரிந்தவர் சூர்யா!



சூர்யா கௌரவ நடிகராக நடித்த ஒரே படம் 'ஜூன் ஆர்'. ஜோவின் அன்புக்காக அது. ரஜினிக்காக ஒரே ஒரு காட்சியில் நடித்த படம் 'குசேலன்'. கமலுக்காக ஒரே ஒரு பாடலில் நடித்த படம் மன்மதன் அம்பு. பாலாவுக்காக ஒரே ஒரு காட்சியில் நடித்த படம் அவன் இவன்.

எல்லோரையும் 'ஜி' என்றுதான் அழைப்பார் சூர்யா. வயதில் மூத்தவர்களை 'அண்ணே' என்பார். மிகவும் நெருக்கமானவர்களைத்தான் பெயர் சொல்லி அழைப்பார்!

எம்.ஜி.ஆருக்குப் பிறகு அம்மா சென்ட்டிமென்ட்டில் இவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை எனலாம். அந்தளவுக்கு அம்மா வார்த்தைக்கு மறு பேச்சு பேசாமல் நடந்துகொள்வார்!

தேசியக் கட்சி நடத்திய சர்வேயில் முதல் இடத்தில் வந்தவர் சூர்யா தானாம். ஆனால், அவர்கள் விடுத்த அழைப்புக்கு, 'ஆளை விடுங்க சாமி' என்று கையெடுத்துக் கும்பிட்டு வழியனுப்பி இருக்கிறார்!

சூர்யா சம்பந்தப்பட்ட குடும்ப விழாக்களில் நண்பர்கள், உறவினர்கள் தவிர கட்டாயமாக அழைப்பு அனுப்பப்படும் இரண்டு நண்பர்கள் விஜய், அஜீத்!.

வாரணம் ஆயிரம், அயன், ஆதவன், சிங்கம் என இவர் நடித்த அனைத்து படங்களும் பாக்ஸ் ஆபிஸில் வசூலில் கொடி கட்டிப் பறந்தன. இவர் நடித்த சிங்கம் படம் இந்தி ரீமேக் 22 ஜூலை வெளியாகி இருக்கிறது.

நன்றி -சினி விகடன்

பல நண்பர்களின் தளங்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக வரமுடியவில்லை..ஒன்று நேரம் இல்லாமை..மற்றையது ஹிஹி வீட்டிலே விருந்தாளிகள்..நொய் நொய்ன்னு நொங்கெடுக்கிறாங்க பாஸ்..என்னெண்டு கொஞ்சம் கேளுங்க!

Post Comment

41 comments:

நிரூபன் said...

சூர்யாவின் குணங்களை சூப்பராகப் பகிர்ந்திருக்கிறீங்க.

நன்றி பாஸ்.

Mathuran said...

சூர்யா பற்றிய சூப்பரான தகவல்கள் பாஸ்

Unknown said...

//பார்ட்டி, டிஸ்கோதெ, டிரிங்ஸ், சிகரெட் எந்தப் பழக்கமும் இல்லாதவர் சூர்யா//
அது தப்பாச்சே!

Unknown said...

//எழுந்தவுடன் குளித்துவிடுவார்//
பல்லு வெளக்கமாட்டாரா?

Unknown said...

//அவர் படித்த லயோலா கல்லூரியின் பேராசிரியர்களுக்கு ஸ்க்ரீன் செய்து அபிப்பிராயம் கேட்பார்!//
பாவம்ல அவிய்ங்க எல்லாம்!

Unknown said...

//உலக சினிமாக்களில் இரானியப் படங்கள்தான் சூர்யா சாய்ஸ்//
சூப்பர்! :-)

//எல்லோரையும் 'ஜி' என்றுதான் அழைப்பார் சூர்யா//
பார்ரா! இது படுசூப்பர்!! :-)

கார்த்தி said...

சூர்யாவின் ரசிகனா இருப்பதில் பெருமையடைகிறேன்...

Unknown said...

தமிழ்சினிமாவின் அட்டகாசமான நடிகர் சூர்யா! இயக்குனர்களின் நடிகர் – மேலும் நல்ல படங்களை எங்களுக்கு வழங்கட்டும்! காத்திருக்கிறேன் ஏழாம் அறிவுக்காக!!! :-)

கூடல் பாலா said...

மாப்ள சூர்யா ரசிகரா ஓய்....

MANO நாஞ்சில் மனோ said...

ஹே ஹே ஹே ஹே அருமை அருமை, தந்தையை போல பிள்ளை...!!!

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் ஓட்டும் போட்ட்ச்சு பாஸ்....

Unknown said...

மாப்ள அப்போ நெறைய பிகருங்கன்னு சொல்லு!...என்னமோ நல்ல புள்ளைய போல பம்முற ஹிஹி!

ஆகுலன் said...

நான் சூர்யாவை அவ்வளவாக ரசிக்காவிட்டாலும்.....இந்த விடயங்களை ரசித்தேன்..

மைக்ரோசொப்க்கு ஒரு நேரடி விசிட்...(பகுதி2)

செங்கோவி said...

//ஜீ... said...
//எழுந்தவுடன் குளித்துவிடுவார்//
பல்லு வெளக்கமாட்டாரா? //

ஹா..ஹா..எப்படில்லாம் யோசிக்காங்க!

தமிழ்வாசி பிரகாஷ் said...

thanks 4 sharing

கவி அழகன் said...

சூப்பரான தகவல்

Yoga.s.FR said...

Blogger நிரூபன் said...

சூர்யாவின் குணங்களை சூப்பராகப் பகிர்ந்திருக்கிறீங்க.///யோவ்,டப்பிங்குயா,டப்பிங்கு!மாப்பிளகிட்ட சரக்கு தீந்து போச்சு!

Yoga.s.FR said...

ஜீ... said...
//உலக சினிமாக்களில் இரானியப் படங்கள்தான் சூர்யா சாய்ஸ்//
சூப்பர்! :-)
//எல்லோரையும் 'ஜி' என்றுதான் அழைப்பார் சூர்யா//
பார்ரா! இது படுசூப்பர்!! :-)///ஆச! தோச!!ஒங்களக் கூப்புட மாட்டரே!!!!!!!ஐ...........!

Yoga.s.FR said...

Blogger செங்கோவி said...

//ஜீ... said...
//எழுந்தவுடன் குளித்துவிடுவார்//
பல்லு வெளக்கமாட்டாரா? //

ஹா..ஹா..எப்படில்லாம் யோசிக்காங்க?////§§§§§(அவங்கவங்க)பழக்கத்த மாத்த முடியுங்களா???

Yoga.s.FR said...

MANO நாஞ்சில் மனோ said...

ஹே ஹே ஹே ஹே அருமை அருமை, தந்தையை போல பிள்ளை...!!!/////சூர்யா காலை எழுந்தவுடன் குளித்துவிடுவார்?!?!?!?!

shanmugavel said...

உண்மையில் மாறுபட்ட பார்வைதான் சிவா!

Anonymous said...

நல்ல பகிர்வு பாஸ் ..

பேசாம விருந்தாளிங்க நைட்டில தூங்கேக்க கல்லை தூக்கி மண்டையில போட்டுடுங்கோ ஹிஹிஹி ...

ஹேமா said...

எனக்கு சூர்யாவை நிறையவே பிடிக்கும்.மதிக்கவைக்கிற
ஒரு அமைதி முகத்தில் !

maruthamooran said...

:-)

Yoga.s.FR said...

Blogger கந்தசாமி. said...

நல்ல பகிர்வு பாஸ் ..

பேசாம விருந்தாளிங்க நைட்டில தூங்கேக்க கல்லை தூக்கி மண்டையில போட்டுடுங்கோ ஹி!ஹி!ஹி!...///ஆஹா,இப்புடித் தான் இருக்கணுங்க!

Yoga.s.FR said...

ஜீ... said...

//பார்ட்டி, டிஸ்கோதெ, டிரிங்ஸ், சிகரெட் எந்தப் பழக்கமும் இல்லாதவர் சூர்யா//
அது தப்பாச்சே!/// அதான நம்பள மாதிரி குடியும்,குடித்தனமுமா இருக்க வேணாம்?

காட்டான் said...

நல்ல காலம் குறும்பாடு வந்திட்டு போட்டுது.. !!! 
இப்ப காட்டான் குழ போட்டான்...

எப்பூடி.. said...

இதில் நான் நோட் பண்ணின விடயம் என்னவென்றால்; சூரியா கௌரவ வேடத்தில் நடித்த அத்தனை படங்களுமே ஊத்திக்கொண்டவை. (குசேலன், மன்மதன் அம்பு, ஜூன் 6, அவன் இவன் )

KANA VARO said...

எப்பூடி.. said...
இதில் நான் நோட் பண்ணின விடயம் என்னவென்றால்;//

பயபுள்ளைங்க என்னமா நோட் பண்ணுதுகள்..

Anonymous said...

//இதில் நான் நோட் பண்ணின விடயம் என்னவென்றால்; சூரியா கௌரவ வேடத்தில் நடித்த அத்தனை படங்களுமே ஊத்திக்கொண்டவை. (குசேலன், மன்மதன் அம்பு, ஜூன் 6, அவன் இவன்)//

கோ ??????????

தனிமரம் said...

வரும் விருந்தாளிகளை முதலில் கவனியுங்கள் பாஸ் இல்லை நம்பாடு ???

தனிமரம் said...

ஒரு பால்கோப்பி கிடைக்குமா? குளித்தவுடன் சூர்யாவிற்கு!

"ராஜா" said...

சூரியாகிட்ட எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயமே அவர் ஜோதிகாவின் கணவர் என்பதுதான் ... கொடுத்து வச்ச பயபுள்ள ....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வந்தேன்.... கொஞ்சம் பிஸி பாஸ்....

ம.தி.சுதா said...

/////அந்தளவுக்கு அம்மா வார்த்தைக்கு மறு பேச்சு பேசாமல் நடந்துகொள்வார்!/////

தாயை மதிப்பவன் தரணியை ஆள்வானல்லவா ? அது நியம் தானே..

உணவு உலகம் said...

நல்ல பகிர்வு.

Anonymous said...

சூர்யாவின் ரசிகரோ...


என் முதல் விசிட்...வாழ்த்துக்கள்...

vidivelli said...

ஆமா ,சூர்யா அப்படியா,,
சூர்யாவின் குடும்பமே நல்லமென்றுதானே சொல்லுறாங்க..
அப்ப சூர்யாவும் சுப்பர்...
பதிவிற்கு வாழ்த்துக்கள் சகோ

Karthikeyan Rajendran said...

எங்க ஊருக்காரருங்க இவரு,,,,,,,,,, சிங்கமுல்ல
,,,,,,,,,

Anonymous said...

வணக்கம். எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனாலும் கொஞ்சம் அதிகமாகவே இந்திய சினிமாத் தமிழின் தாக்கம் எழுத்தில். இலங்கைத் தமி இனிமேல் மெல்லச் சாகிருமோ? சொல்லுங்கோ...

bala said...

my roll model . jiiiiii...

Related Posts Plugin for WordPress, Blogger...