Monday, May 16, 2011

தமிழ்மணத்தில்,ப்ளாக்'இல் நீக்கப்பட்ட பதிவுக்கான மன்னிப்பும் விளக்கங்களும்!!!ஒரு தரக்குறைவான பதிவை,எவ்வாறு விரட்டி அடிக்கலாம் என்பதை
பார்த்துக்கொண்டிருக்க நடத்தி முடித்திருக்கின்றனர் எனது வலையுலக
நண்பர்கள்..ஒரு கேவலமான தலைப்புடனும்,பாதி கேவலமான உள்ளடக்கத்துடனும்
வெளிவந்த பதிவை பத்து மைனஸ் ஓட்டுகள் குத்தி தமிழ் மணத்திலிருந்து தூக்க வைத்ததோடு
மட்டுமல்லாமல் எனது ப்ளோகில் இருந்து தூக்க வைக்குமளவுக்கு கேவலமான கொமென்ட்ஸ் போட்டிருந்தனர்.

சந்தோசம் எனக்கு!!இவ்வாறான பதிவுகள் வரும் காலங்களில் யாரிடமிருந்தும் வராது வந்தாலும்
எனது நண்பர்கள் அவர்களை விரட்டி அடித்துவிடுவார்கள் என்று எனக்கு தெரியும்!!

உண்மையை சொல்வதானால்
அந்த பதிவு நான் பேஸ்புக்கில் பார்த்து சிரித்த விடயத்தை பகிரலாமென்று
ஒரு ஐந்து நிமிடத்துக்குள் தயார் செய்து பப்ளிஷ் பண்ணியது.
அந்த ஐந்து நிமிடத்தினுள் எனக்கு எந்த சிந்தனைகளும்,பதிவின் தலைப்பு பிழையென்ற
என்னமோ தோன்றியிருக்கவில்லை..
கிடைத்த ஐந்து நிமிடத்தினுள் பதிவை போட்டு விட்டு காலையில் வகுப்பொன்று இருந்தது
சென்றுவிட்டேன்.

வகுப்பின் இடைவேளை நான் எனது கைத்தொலைபேசியின் மூலம் ப்ளாக்'ஐ பார்த்தபோது
தான் அதிர்ச்சி காத்திருந்தது..ஆமாம்,நான் போட்டிருந்த பதிவு "பத்து" மைனஸ் ஓட்டுகளை
தமிழ்மணத்தில் பெற்றிருந்தது.
தமிழ் மணம் ஆல்ரெடி அலெர்ட் இப்போதெல்லாம்..ஆகவே ஒரு மெயில் அனுப்பி இருந்தது
உங்கள் பதிவை தூக்கிவிட்டோம் என்று.
மறுபடியும் சந்தோசம்...இனிமேல் இவ்வாறான தலைப்புகளில் பதிவுகள் வரமாட்டா
என்பதனால்...
வந்தாலும்
எனது நண்பர்கள் அவர்களை விரட்டி அடித்துவிடுவார்கள் என்று எனக்கு தெரியும்!!

எனக்கு எனது பதிவை மறுபடி பார்த்தபோது பிழை இருப்பதாக தென்பட்டது..
ஆகவே ப்ளோகில் இருந்து நீக்கிவிட்டேன்..
நியாயமாக அறிவுறுத்தி அகற்ற வைத்த நண்பர்களுக்கு நன்றிகள்.
ஆனால் எனது பெற்றோர் சகோதரங்களை இழுத்து வந்து கேவலமாக திட்டியவர்கள்
நிச்சயம் என்னை திருத்துவதாக நினைத்து தாங்களே மீண்டும் அதே பிழையை செய்துள்ளீர்கள்
என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஜாக்கி சேகர் அண்ணன் தன்னுடைய ப்ளோகில் குறிப்பிட்டிருப்பது போல,
எந்தக் கருத்தாக இருந்தாலும் உங்கள் பெயருடன் கூறுங்கள்.
மாறாக அனோனியாக வந்து கீழ்த்தரமான கமென்ட் பண்ணுவதை என்னால்
பொறுக்க முடியாது.ஏன் யாராக இருந்தாலும் பொறுக்கமாட்டார்கள் என்பதே உண்மை!!

எனது பதிவு ஒரு தரக்குறைவான பதிவு என்ற எல்லையை தாண்டி,அது ஒரு
அரசியல் பதிவாக்கப்பட்டது என்பதே உண்மை..
தி மு க'வுக்கு சார்பாக இருப்பவர்கள் என நம்பக்கூடியவர்கள் காட்டமாகவும்,
ஆ தி மு கவுக்கு சார்பானவர்கள் பதிவுக்கு ஆதரவாகவும் கமென்ட் பண்ணிக்கொண்டு
இருந்தனர்..சிலர் தேர்தல் தோல்விகளின் வெறுப்பை என் மீது காட்டினர்..

ஆதரவான கமெண்டுகள் இவ்வாறு வந்தன..(அதற்காக நான் செய்தது சரியானது என்று கூற வரவில்லை-கவனிக்க!)
உதாரணத்துக்கு...

'உண்மையைச் சொன்னால் கோபம் பொத்துக்கின்றதோ மைந்தன் இதனை டிலீட் செய்யவேண்டாம். மணி எனக்கு கனி உனக்கு என பல இடங்களில் எழுதியிருக்கின்றார்கள். சில புல்லுருவிகள் மைனஸ் ஓட்டுப் போட்டால் உண்மை இல்லை என்றாகிவிடுமா? வாழ்த்துக்கள் தலைப்புக்கும் பதிவுக்கும்.
By Anonymous "


"No delete பண்ண கூடாது, அழிக்க சொல்லறவங்க எல்லாம் அறல பேந்த
கருணாநிதியிட வாலுகள்: தொடர்க உண்பணி, தமிழ் பினாமி அரசியல்
வாதிகளை பற்றி மேலும் மொக்கை போட்டால் இதை மேருகூட்டுவதாக
இருக்கும்!

எதிரான கருத்துக்கள் பல...ஆனால் உதாரணம் தர நான் விரும்பவில்லை..அவை கோடிட்டுக் காட்டக்கூடிய
வகையிலான சொல் பிரயோகத்திலும் இல்லை..அவற்றை போட்டவர்களுக்கு தெரியும் தானே.!!

நான் யாருக்கும் ஆதரவாகவோ,எதிராகவோ பதிவு போட்டதில்லை..
கருணாநிதி மேல் கோபம் இருக்கிறது தான்,ஈழத்தமிழர் அல்லலுறும் போது
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த குற்றத்துக்காக.நீலிக்கண்ணீர் வடித்ததர்க்காக.
அதனால் தேர்தலில் தோற்றது ஒரு மன நிம்மதி,எனக்கு மட்டுமல்ல அனைத்து
ஈழத்தமிலர்களுக்கும்!!
அதற்காக ஜெயலலிதா மீது பற்றோ ஆதரவோ இருக்கிறது என்றும் நான்
சொல்லவில்லை.நான் ரசித்த நகைச்சுவையை
பகிரலாமென்று நினைத்தேன்..ஆனால் அது சற்று தரத்துக்கு குறைந்துவிட்டது உண்மை,அந்த உண்மை
முதலே தெரிந்திருந்தால் நான் பகிர்ந்திருக்கமாட்டேன்.

அந்த நகைச்சுவை பதிவை நகைச்சுவையாக டீல் பண்ணியது விக்கி உலகம் மட்டும் தான்..
வடிவேலை வைத்து காமெடி பண்ணப் போயி வம்பிலை சிக்கினது தான் மிச்சம்!!!

இறுதியாக சொல்லுவது என்னவென்றால்,
1 -எனது தலைப்பும் சில உள்ளடக்கங்களும் தவறானவை...அவற்றிற்கு மன்னிப்பு கேட்கிறேன்.
அந்தப் பதிவால் மனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் மன்னிப்பும்,வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
2 -தவறான விடயங்களை நாகரிகமான முறையில் சுட்டிக் காட்டுவது தான் மனிதப் பண்பு.
அதை விடுத்து வாய் கூசாமல் கேவலமாக திட்டுவது யாருக்கும் அழகல்ல.
சகாதேவன்,தமிழானவன்,தொப்பிதொப்பி,ரம்மி,சார்வாகன் போன்றோர் நாகரீகமான
முறையில் அறிவுறுத்தியவர்கள்...நன்றிகள்!!!
3 -இதே பணியை 18 ++தலைப்பு போடும் அனைத்து பதிவர்களுக்கும் எதிராக
தொடருங்கள்...தமிழ்மணம் தனது வேலையை ஆரம்பித்துவிட்டது.
4 - எதிர்க்கும் போது எங்கிருந்து வருகிறீர்கள் என்று கூட தெரியவில்லை உங்களை..
அதே வேகம் நல்ல பதிவுகளை மேலே கொண்டு செல்வதிலும் காணப்படட்டும்!!
5 -அனோனிகளின் கீழ்த்தரமான விமர்சனங்களுக்கு பயந்து நான் பதிவை அகற்றவில்லை..
எனது சுய நினைவுக்கு பிழையென்று பட்டது அதனால் நீக்கிவிட்டேன்.

வழமை போல எனது மொக்கைகள் தொடரும்...!!

Post Comment

16 comments:

Unknown said...

இவ்வளவு மேட்டர் நடந்திருக்கா! அதான் எனக்கு அப்பிடி கமென்ட் பண்ணியிருந்தீர்களா?

Unknown said...

ஆமா ஜி!!

Unknown said...

//எனக்கு எனது பதிவை மறுபடி பார்த்தபோது பிழை இருப்பதாக தென்பட்டது..
ஆகவே ப்ளோகில் இருந்து நீக்கிவிட்டேன்//
உங்க நேர்மை பிடிச்சிருக்கு! :-)

Unknown said...

இப்படி விளக்கம் கொடுப்பது அதை விட கொடுமை!..இந்த விளக்கம் எரிச்சல் தரும்படி உள்ளது உடனே வேறு நல்ல போஸ்ட் போடவும்!உங்கள் நண்பனாக சொல்கிறேன்

Unknown said...

மீண்டும் ராசா கனிமொழி படத்தை ஒன்றாய் போட்டிருப்பது எதிரிகளுக்கு ஆத்திரத்தையே உண்டாக்கும்..குறி வைத்து விடுவார்கள் ஜாக்கிரதை

நிரூபன் said...

சகோ, பதிவினைப் புரிந்து கொள்ளாதவர்களின் செயல் இது என நினைத்து விட்டு விடுங்கள் சகோ.

இவற்றையெல்லாம் தூசாக நினைத்து தட்டி விட்டு, வழமையான உங்கள் எழுத்துக்களைத் தொடருங்கள் சகோ.

நிரூபன் said...

அந்தப் பதிவினைக் கூகிள் ரீடரில் பார்த்தேன், ஒரு சிலர் அப் பதிவினை வேண்டுமென்றே அரசியலாக்க முனைந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

Unknown said...

மாப்ள ஒரு பதிவை போடுறதுக்கு முன்னாடி பல முறை படி......நீ தான் அந்த வரிகளுக்கு சொந்தாக்காரேன்.......
ஆனாலும் நீ அந்த வரிகளுக்கு முதல் விமர்சகனா இருந்தா தான் உன்னால பாதிப்புகளில் இருந்து தப்ப முடியும்.......தவறுன்னா மன்னிப்பு கேக்கலாம்......ஆனா உன்னை மதிப்பவர்களிடம் மட்டுமே....தவறிருந்தால் மன்னிக்கவும் இது என் ஆதங்கமே Advice அல்ல நன்றி!

ராம்ஜி_யாஹூ said...

வேறு விஷயம் குறித்து அடுத்த பதிவு இருந்தால் தான் எதிர்மறை வாக்குகள் குறையும் என நான் எண்ணுகிறேன்

Unknown said...

//ராம்ஜி_யாஹூ said...
வேறு விஷயம் குறித்து அடுத்த பதிவு இருந்தால் தான் எதிர்மறை வாக்குகள் குறையும் என நான் எண்ணுகிறே//

எனக்கு மட்டும் இதை தொடரவா விருப்பம்??
எனது தப்பினால்,வீணாக நபர்களுடன் பகை வளர்த்தது தான் மிச்சம்..

இத்துடன் இந்த விடயத்துக்கு முற்றுப்புள்ளி..
அடுத்த பதிவு நிச்சயம் வேறாக தான் இருக்கும்!!

Unknown said...

//விக்கி உலகம் said...
மாப்ள ஒரு பதிவை போடுறதுக்கு முன்னாடி பல முறை படி......நீ தான் அந்த வரிகளுக்கு சொந்தாக்காரேன்.......
ஆனாலும் நீ அந்த வரிகளுக்கு முதல் விமர்சகனா இருந்தா தான் உன்னால பாதிப்புகளில் இருந்து தப்ப முடியும்.......தவறுன்னா மன்னிப்பு கேக்கலாம்......ஆனா உன்னை மதிப்பவர்களிடம் மட்டுமே....தவறிருந்தால் மன்னிக்கவும் இது என் ஆதங்கமே Advice அல்ல நன்றி!//'நன்றி தல...
அது எனது தப்பு தான் பதிவை வாசிக்காமலே இட்டது...
வெறுமனே ஐந்து நிமிடத்துக்குள் போடப்பட்ட பதிவு அது என்பதை தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன்..
அதனால் தான் என்னால் உடனடியாக உணர்ந்துகொள்ள முடியாமல் போய்விட்டது.

Unknown said...

ஐயையோ இவ்வளவு மேட்டரு நடந்திருக்கா ,நான் அந்த பதிவை படிக்கவே இல்லையே , அந்த பதிவை எனக்கு மெயில் பண்ண முடியுமா ?

தனிமரம் said...

நண்பரே நானும் படிக்கவில்லை முடிந்தாள் மின்னஞ்சல் செய்வீர்களா!

MANO நாஞ்சில் மனோ said...

இம்புட்டு மேட்டர் நடந்துருக்கா, எலேய் மக்கா கவனமாக எழுதுலேய்.....

Anonymous said...

பாஸ் அந்த பதிவை நான் படிக்கவில்லை ஆனாலும் உங்கள் நேர்மை பிடித்திருக்கிறது.

///4 - எதிர்க்கும் போது எங்கிருந்து வருகிறீர்கள் என்று கூட தெரியவில்லை உங்களை..
அதே வேகம் நல்ல பதிவுகளை மேலே கொண்டு செல்வதிலும் காணப்படட்டும்!!/// நீங்கள் சொல்வது உண்மை தான்.

Unknown said...

சாரி நண்பர்களே...அந்தப் பதிவை அழிக்கும் போது டிராப்ட்'டில் இருந்து கூட அழித்துவிட்டேன்.
மெயில் பண்ண முடியாது..

Related Posts Plugin for WordPress, Blogger...