Sunday, July 31, 2011

தமிழ் சினிமா காமெடி நடிகர்களின் நிஜ முகம்!!!


கிருஷ்ணமூர்த்தி: ''நடிக்கலாம்னு 1983-ல் சென்னை வந்து, முட்டி மோதி முடியாம 'குழந்தை ஏசு’ பட கம்பெனியில ஆபீஸ் பாய் வேலைக்குச் சேர்ந் தேன். ரெண்டு வருஷம் ஷூட்டிங் நடந்த அந்தப் படத்துல ஆபீஸ் பாய், உதவி இயக்குநர், கேஷியர், புரொடக்ஷன் மேனேஜர்னு பல வேலைகள் செய்தேன். 'ராசையா’ படத்துல புரொடக்ஷன் எக்ஸிகியூடிவ்வா இருந்தப்ப பிரபுதேவா, வடிவேலு கூடவே வர்ற மாதிரி ஒரு ரோல்ல நடிக்கவெச்சார். அந்தப் பழக்கத்துலதான் 'தவசி’ படத்துல என்னை நடிக்கவெச்சார் வடிவேலு. 'எக்ஸ்கியூஸ் மீ... ஸாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ். இந்த அட்ரஸ் எங்கேனு சொல்ல முடியுமா?’னு அப்போ ஒசாமா பின்லேடன் அட்ரஸ் விசாரிச்சதுதான் இப்போ வரை என் அடையாளமா இருக்கு. நடிகர், நடிகை களின் கால்ஷீட் வாங்குறது, அவங்க வீட்டுக்குப் போய் சம்பளம் பேசி ஃபிக்ஸ் பண்றதுலாம்தான் புரொடக்ஷன் மேனேஜர் வேலை. அப்படி ஆர்ட்டிஸ்ட் வீடு தேடி அலையும்போது ரோட்ல யார்கிட்டயாவது அட்ரஸ் கேட்டா, 'என்ன சார் நேர்லயும் வந்து கலாய்க்க ஆரம்பிச்சுட்டீங்களா’னு சிரிச்சுட்டே அட்ரஸ் சொல்ல மாட்டேங்குறாங்க.

'நான் கடவுள்’ படத்துக்கு புரொடக்ஷன் வேலை பார்த்துட்டு இருந்தப்ப, பாலா சார் ஒருநாள், புரொடக்ஷன்ல எடுத்துட்டு வந்திருந்த புது சட்டை, வேட்டியை எடுத்து அங்கே வேடிக்கை பார்த்துட்டு இருந்த ஒருத்தர்கிட்ட கொடுத்துட்டு, அவர் போட்டிருந்த அழுக்கு லுங்கியையும், சட்டையையும் வாங்கி என்கிட்ட கொடுத் தார் பாலா. 'கிருஷ்ணமூர்த்தி, படத்துல நீங்களும் நடிக்கிறீங்க. இன்னியில இருந்து இதுதான் உங்க காஸ்ட்யூம். போட்டுக்கங்க’ன்னார். படம் முடியிற வரை அதைத்தான் போட்டுட்டுத் திரிஞ்சேன். அப்படியே மதுரை ரயில்வே ஸ்டேஷன்ல என்னைப் பார்த்த ஆர்ட் டைரக்டர் ஜி.கே. சார், 'யப்பா! என்னப்பா ஆச்சு. ஏன் இப்படி இருக்க? எதுவா இருந்தாலும் மனசைத் தளர விட்ராத. எல்லாம் சரியாப் போயிடும்’னு ஆறுதல் சொல்ல ஆரம்பிச்சிட்டார். இப்படியும் அப்படியுமா 60 படங்களுக்கு மேல் நடிச்சாச்சு. ஒரே ஒரு ஸீன்ல வந்தாலும் தமிழர்களுக்குப் பிடிச்சுப்போச்சுன்னா, ஆயுசுக்கும் நம்மைக் கொண்டாடுவாங்க. இதுதான் சினிமா எனக்கு சொல்லிக் கொடுத்த பாடம்!''

சிசர் மனோகர்: ''நிஜப் பேரு பழனிச்சாமி. திருப்பத்தூர் பக்கம் இளையாத்தங்குடி கிராமம் நமக்கு. படிப்பு பிடிக்காம 15 ரூபாயோட மெட்ராஸ் வந்தேன். ஒரு போட்டோ ஸ்டுடியோவுல வேலைக்குச் சேர்ந்தேன். கடை ஓனர் சேட்டு என்னைப் பிள்ளை மாதிரி பார்த்துக்கிட்டார். நான் நல்லா இருக்கணும்னு ஆசைப்பட்டு 1,500 ரூபாய் கடன்ல துணி வாங்கிக் கொடுத்தார். அக்கம் பக்கம் அலைஞ்சு வித்ததுல லாபம் மட்டும் 600 ரூபாய் நின்னுச்சு. மாச சம்பளமா 40 ரூபாய் வாங்கிட்டு இருந்தவனுக்கு அது அப்ப ரொம்பப் பெரிய தொகை!

அடுத்த தபா 5,000 ரூபாய் மதிப்புக்கு சரக்கு எடுத்துக் கொடுத்தார் சேட்டு. சினிமா ஆளுங்க மொத்த சரக்கையும் விலைக்குக் கேட்டாங்க. 'இப்ப கையில காசு இல்லை’ன்னு சொல்லவும், 'அப்புறம் கொடுங்க’ன்னு நம்பிக் கொடுத்துட்டு வந்தேன். ஆனா, அப்புறம் ரேகை தேய நடந்தும் காசு வசூல் பண்ண முடியலை. பணம் இல்லாம வேலைக்கும் போக முடியலை. வீட்டுப் பக்கமும் ஒதுங்க முடியலை. பொழைப்பு ஓட்ட என்கிட்ட கடன் வாங்குன சினிமாக்காரங்களிடமே ஒட்டிக்கிட்டேன். பாக்யராஜ் சார்தான் 'ஒரு கை ஓசை’யில் என்னை நடிகன் ஆக்கினார்.

அகத்தியன் சாரோட 'கோகுலத்தில் சீதை’ படத்தில் கரணும் சுவலட்சுமியும் பேசிட்டு இருக்கும்போது, 'மனோகரு... மனோகரு... சிசர் மனோகரு’ன்னு லந்தைக் கொடுப்பேன். அந்த கேரக்டர்தான் இந்த பழனிச்சாமியை 'சிசர் மனோகர்’ ஆக்குச்சு.

'தேவர் மகன்’ பட ஷூட்டிங்கில் சிவாஜி சாருக்கு நான்தான் ஹெல்பர். நடுவுல கொஞ்ச நாள் வேற வேலையா பொள்ளாச்சி பக்கம் போயிட்டேன். ஷூட்டிங்ல நான் இல்லாம எரிச்சலான சிவாஜி சார், 'பழனிப் பய வந்தாத்தான் சாப்பிடுவேன்’னு சொல்லி அடம் பிடிச்சிருக்கார். அதுதான் ராசா இந்த சினிமா வாழ்க்கையில நம்ம மனசுக்கு இதமா இருக்குற சங்கதி. இந்தப் படம் திருப்பமா அமையும், அந்தப் படம் திருப்பமா அமையும்கிற எதிர்பார்ப்பிலேயே வாழ்க்கை கடந்து கரைஞ்சு போய்க்கிட்டு இருக்கு. ஆனா, இதுவும் சுவாரஸ்யமாத்தான் இருக்கு!''

'தீப்பெட்டி’ கணேசன்: ''மதுரை ஜெய்ஹிந்த்புரம்ணே நமக்கு. அம்மா, அப்பா, அண்ணன், நான்னுமொத்தம் நாலு பேர் வீட்ல. ஒம்பதாப்புக்கு மேல படிக்கப் புடிக்காம பெயின்ட்டிங் வேலை பார்த்துட்டு இருந்தேன். லோக்கல் சேனல்ல நடிக்க ஆள் தேவைன்னு வந்த விளம்பரம் பார்த்துட்டுப் போனப்பதான் 'ரேணிகுண்டா’ பட வாய்ப்பு கொடுத்தார் பன்னீர்செல்வம் சார். அவர்தான் சாதாரண கணேசனை 'தீப்பெட்டி’ கணேசன் ஆக்கினார். 'நீ எதைச் சொன்னாலும் டக்குனு புடிச்சுக்குற. அதான் இந்தப் பேரு’ன்னு காரணம் சொன்னார். இப்போ அஜீத் சார்கூட 'பில்லா 2’, சிம்பு சார்கூட 'வேட்டை மன்னன்’, விக்ரம் சார்கூட 'ராஜபாட்டை’னு 10 படங்களுக்கு மேல நடிச்சுட்டு இருக்கேன் சார். 24 வயசாகுது சார். அண்ணனுக்கும் இன்னும் கல்யாணம் ஆகலை. ரெண்டு பேருக்கும் நல்ல பொண்ணா இருந்தா சொல்லுங்க சார்!''

சுப்புராஜ்: ''புதுக்கோட்டை மடத்துப்பட்டி கிராமம்தான் சொந்த ஊர். சினிமாவுக்கு வந்து 33 வருஷம் ஆச்சு. விஜயகாந்த் சார் மூலமா, சினிமாவில் நுழைஞ்சேன். பாரதிராஜா, பாக்யராஜ், டி.ராஜேந்தர், மணிவண்ணன், செல்வமணி, சிராஜ், கோகுலகிருஷ்ணன், சி.என்.சண்முகம், கோபாலகிருஷ்ணன், செந்தில்நாதன், ராஜ்கிரண், ராமராஜன்னு கிட்டத்தட்ட 18 டைரக்டர்களிடம் 49 படங்களில் அசோஸியேட்டா வேலை பார்த்தேன். 'ராசாவின் மனசிலே’ படத்துலவடிவேலு அறிமுகமாக நானும் ஒரு காரணம்.

ஆர்.கே.செல்வமணி 'ராஜஸ்தான்’ பட காமெடி டிராக் எழுதவெச்சார். அதில்தான் நானும் வடிவேலுவும் சேர்ந்து நடிச்சோம். 'போடா வாடா’ன்னு பேசி சிரிச்சு என்னால் அவனும், அவனால் நானும் வளர்ந்தோம்னு சொல்லலாம். அவன் காம்பினேஷன்ல மட்டும் கிட்டத்தட்ட 100 படங்கள் நடிச்சேன். ஆனா, இப்போ அவன்கூட பேச்சுவார்த்தை இல்லை. விஜயகாந்த்துக்கும் அவனுக்கும் மனஸ்தாபம் வந்தப்ப, நான் அவன் பக்கம் நிக்கணும்னு நினைச்சான். ஆனா, விஜயகாந்த் எனக்குச் சோறு போட்டவர். நமக்கு வாழ்க்கை கொடுத்தவங்க பக்கம் நிப்போமா? இல்லை... நாம வாழ்க்கைக் கொடுத்தவங்க பக்கம் நிப்போமா?

நாலஞ்சு வருஷம் முன்னாடி ஒரு ஆபரேஷன் நடந்துச்சு. மறு பிழைப்புன்னே சொல்லலாம். கிட்டத்தட்ட 10 லட்சம் செலவு. 5 ஆயிரம், 10 ஆயிரம்னு தெரிஞ்சவங்ககிட்ட கையேந்தி நின்னப்ப, கடவுள் மாதிரி ஆறு லட்சத்தை அள்ளிக் கொடுத்துக் காப்பாத்துன ஜே.கே.ரித்தீஷ§க்கு நன்றி சொல்றேன் தம்பி. இதை மறக்காம சேர்த்துடுங்க!''

நெல்லை சிவா: ''எல! நான் எதைச் சொல்ல... எதை விட? ஊர்ல இருந்து புறப்பட்டு சென்னை வந்து சின்னாபின்னமான கதை சொல்லவா? மத்த காமெடி நடிகருங்க படுற பாட்டைப் பாத்துப் பயந்து, காசு வந்த பிறகு கல்யாணம் பண்ணிக்கிடலாம்னு தள்ளிப் போட்டு தள்ளிப் போட்டு இந்த 52 வயசுல துணை இல்லாமதட்டழிஞ்சு நிக்கிற சோகம் சொல்லவா? தின்னவேலி, வள்ளியூர் பக்கத்துல ஒரு கிராமம். எஸ்.எஸ்.எல்.சி. வரைதான் படிப்பு. ஸ்கூல் பேச்சுப் போட்டியில 'தென்னகத்து பெர்னாட்ஷா அண்ணாதான்வே எனக்குப் பிடிச்ச தலைவன்’னு நான் தின்னவேலி ஸ்லாங்ல அடிச்சு விளாசுனதைக் கேட்டுட்டு, 'யே... நீ இங்க லாத்த வேண்டிய ஆளே இல்லவே’னு உசுப்பி விட்டார் ஒரு வாத்தியார். எஸ்.எஸ்.எல்.சி. லீவுல 'கரன்ட் பில்லு கட்டித் தர்றேன்’னு நாலு வீட்ல காசு வசூல் பண்ணி மெட்ராஸுக்கு வண்டி ஏறிட்டேன். அலையா அலையுறேன். ஏவி.எம். ஸ்டுடியோ உலக உருண்டையைக் காமிச்சே 200 ரூபாய் புடுங்கிட்டார் ஆட்டோக்காரர். 'ஆண் பாவம்’ படத்துல 'இன்னும் பெட்டி வரலை’னு பேசித்தான் சினிமாவுல தலை காட்டினேன்.

'அட! சும்மா இருப்பா. அவன் அப்படி பேசி இருக்க மாட்டான்’கிற வசனத்தைப் பஞ்சாயத்து காட்சிகளில் மட்டுமே 100 படங்களுக்கு மேல நடிச்சிருப்பேன்.

சினிமா நடிகர்கள் அட்ரஸ் வர்ற டைரி புக்குல ஒவ்வொரு வருஷமும் விதவிதமா நான் போஸ் கொடுத்துட்டு நிக்கிறதைப் பாத்துட்டு, இன்கம்டாக்ஸ் ஆட்கள் சம்மன் வுட்டு வரச் சொல்லிப்புட்டாங்க. அரண்டடிச்சிப் போய் என் கதையை நேர்ல சொன்னதும், தேம்பித் தேம்பி அழுதுட்டு ஒரு வா காப்பித் தண்ணி வாங்கிக் கொடுத்து அனுப்பிச்சாவோ. இப்போ இந்த 52 வயசுல கல்யாணத்துக்கு ஒரு பொண்ணு தேடிட்டு இருக்கேன். சுகத்துக்காக இல்லவே. கடைசிக் காலத்துல ஒரு பிடிப்போட வாழுறதுக்கு. 'இம்புட்டு கஷ்டம் சொல்றானே... வெறும் அவத்தப் பயலா இருப்பானோ’ன்னு நினைச்சுப்புடாதீங்க. இப்ப ஓரளவுக்கு வசதியாவே இருக்கேன் தம்பி. நம்பி வரலாம். மவராசியா வெச்சுக் காப்பாத்துவேன்!''

நன்றி-இணையம்

Post Comment

Thursday, July 28, 2011

லார்ட்சில் தோனி பந்து வீசியது தவறா??


லார்ட்ஸ் டெஸ்ட்டில் தோனி பந்துவீசியது தொடர்பில் சர்ச்சைகள் முடிவடைந்தபாடில்லை.அதைப்பற்றியும்,இந்திய அணியின் தோல்வி குறித்தும் பல விமர்சனங்கள் வெளிவந்தவாறு !

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்தியா சவாலின்றி சரணடைந்ததையடுத்து பேடி, வடேகர், கபில்தேவ் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கடுமையாக சாடியுள்ளனர்.இது பற்றி செய்திகளில் வந்த விடயங்கள் யாதெனில்:

"பிஷன் சிங் பேடியிடம் கேட்டபோது, மாட் பிரையர் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் துடுப்பாட்ட வீரர், ஆனால் டோனி பிரையரைக் காட்டிலும் சிறந்த விக்கெட் கீப்பர் மற்றும் பந்துவீச்சாளர் என்று கேலியாகக் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் தோல்வியை கபில்தேவ் வர்ணித்ததாவது, நாம் இந்தப் போட்டியைக் காப்பாற்றியிருக்கலாம், களம் ஒன்றும் மோசமாக இல்லை, ஆனால் இந்திய துடுப்பாட்ட வீரர்கள் பந்து வீச்சாளர்களை ஆதிக்கம் செலுத்த அனுமதித்தனர். இங்கிலாந்தில் ரன் எடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும். தடுப்பாட்டம் விளையாடி நீடிக்க முடியாது.

நாம் தாக்குதல் ஆட்டம் ஆடவேண்டும். லட்சுமணும், டிராவிட்டும் அவர்கள் பாணியில் விளையாடியதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் மற்றவர்கள் தாக்குதல் ஆட்டம் ஆடியிருக்க வேண்டும். நமது பொறுப்பை உணர்ந்து நம் கிரிக்கட் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.

சச்சின் பற்றியும், அவரது 100 வது சதம் பற்றியும் பெரும் ஊதிப் பெருக்கல்கள் நிகழ்ந்தது. இதனால் கவனம் இழக்கப்பட்டது என்றார் கபில்தேவ்.

பேடி தெரிவிக்கையில், துடுப்பாட்டம் தான் நம் அணியின் பலம் எனில் ஏன் டொஸ் வென்று முதலில் அவர்கள் கையில் துடுப்பாட்டத்தை கொடுக்க வேண்டும். அதுவும் திட்டமிடுதல் இல்லாமல் 474 ரன்களை துரத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. எப்போதும் பயிற்சியாளரிடம் விடயத்தை ஒப்படைக்கக் கூடாது. வீரர்கள் தாங்களாகவே சில விடயங்களில் முன்னேற வேண்டும்.

சச்சினைப் பொறுத்தவரையில் நான் வருந்துகிறேன். முதல் இன்னிங்ஸில் நல்ல பந்தில் ஆட்டமிழந்தார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் பதுங்கினார். அவருக்கு அறிவுரை கூறும் அளவுக்கு நான் பெரியவன் அல்ல, ஆனாலும் அவர் ஆதிக்கபூர்வமாக துடுப்பாட்டம் செய்திருக்க வேண்டும். சேவாகும், சச்சினும் இது போன்று விளையாடக்கூடாது. சச்சின் ஆதிக்க வழிக்குத் திரும்ப வேண்டும் என்றார் பேடி.

மேலும், டோனி பந்து வீசியது குறித்து பதிலளித்த பேடி, இது ஒரு பெரிய தர்மசங்கடம், இவ்வாறு செய்வதன் மூலம் எதிராளிக்கு நம் பந்து வீச்சு வறட்சியை வெளிச்சம் போட்டுக் காட்டினார் டோனி.

இது குறித்து வடேகர் கூறுகையில், டோனி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்? ஓய்வு பெற்ற வீரர்களுக்கான நிதி திரட்டல் போட்டி இது என்று நினைக்கிறாரா? அவர் பந்து வீச முடிவு செய்தது முட்டாள் தனமானது.

வெங்சர்க்கார் தன் தரப்பில் கூறுகையில், ஜாகீரும், சச்சினும் உலகக் கோப்பை இறுதிக்குப் பிறகு நேராக லார்ட்ஸ் வருகின்றனர். குறைந்தது இரண்டு பயிற்சி ஆட்டங்கள் தேவை, இந்திய அணி நல்ல முன் பயற்சி செய்யவில்லை என்றார்."

தோனியின் பந்துவீச்சு பெறுமதிகள்
Bowling averages
MatInnsBallsRunsWktsBBIBBMAveEconSR4w5w10
Tests58578580---4.46-000
ODIs1861121411/141/1414.007.0012.0000
T20Is26------------
First-class99108780---4.33-000
List A242393621/141/1418.005.5319.5000
Twenty2095------------

லார்ட்சில் ஜாகீர் கான் காயம் காரணமாக 13.3 ஒவர்கள் மட்டுமே வீசினார். இதுவும் கூட இந்திய அணி 196 ரன் வித்தியாசத்தில் தோற்க காரணமாக அமைந்தது என்று வசீம் அக்ரம் தெரிவித்தார்

தோனி பந்து வீச நேர்ந்தது ஜாகிர் கான் காயமடைந்து வெளியேறியமையே ஆகும்!வெறுமனே 13 .3 ஓவர்கள் பந்துவீசியவுடன் சாகிர் மைதானத்தை விட்டு வெளியேற,தோனிக்கு வேறு வழி தெரியவில்லை!முழங்கை பிரச்சனையால் மேற்கிந்திய தீவுகளுடனான சுற்றுப்போட்டியில் கூட விளையாடாத ஜாகிர் கானை எந்த உடல் தகுதியை பார்த்து இவர்கள் அணிக்குள் தேர்வு செய்தனர் என்பது கேள்விக்குறி!சமர்செட் அணியுடனான பயிற்ச்சிபோட்டியில் விளையாடி இருந்தாலும் அந்த போட்டியில் எந்தவித விக்கட்டையும் ஜாகிர் கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இரண்டாவது டெஸ்ட்டுக்கு ஸ்ரீசாந்தை தெரிவு செய்திருக்கின்றனர்.இதனை முதல் டெஸ்ட்டிலேயே செய்திருக்கலாமே!இந்திய அணியின் பலம் துடுப்பாட்டமே.முதல் டெஸ்ட்டில் துடுப்பாட்டம் சொதப்ப பந்துவீச்சு பக்கம் கவனம் திரும்பி இருக்கிறது!

அணியில் மூன்று வேகப்பந்துவீச்சாளர்களை இணைத்துக்கொண்டு விளையாடியபோது,ஜாஹீரின் வெளியேற்றம் பந்துவீச்சில் ஒரு வறட்சித்தன்மையை ஏற்படுத்தியது தோனிக்கு.பிரவீன் குமார் விக்கட்டுகளை எடுத்தாலும் அவரின் பெரும்பாலான விக்கட்டுகள் ஆட்டத்தின் பின் பகுதியிலேயே எடுக்கப்பட்டன.இஷாந்த் சர்மாவும் ஹர்பஜன் சிங்கும் விக்கட்டுகளை எடுக்க முடியாமல் தடுமாறினார்!வேறு வழி தெரியாமலேயே தோனி தானே பந்து வீச முயன்றிருக்கலாம்!இங்கிலாந்து கூட ஜோனத்தன் ற்றோட்டை பகுதி நேர பந்துவீச்சாளராக சில சமயங்களில் பாவித்திருந்து சில நல்ல இணைப்பாட்டங்களை பிரித்திருக்கிறது.அவ்வாறு தோனி முயன்றிருக்கலாம்.எவ்வளவு நேரம் தான் விக்கட் எடுக்காத இஹாந்த் சர்மாவையும் ஹர்பஜன் சிங்கையும் பயன்படுத்துவது!எட்டு ஓவர்கள் பந்து வீசிய தோனி எந்த விக்கட்டையும் கைப்பற்றவில்லை.மொத்தமாக முதல் தர போட்டிகளில் வெறுமனே மூன்று விக்கட்டுகளை மட்டுமே தோனி கைப்பற்றி இருக்கிறார்.என்ன செய்வது,யாருமே இல்லாத நேரத்தில் பந்து வீசி இருக்கிறார்.யுவராஜ் இருந்திருந்தால் அவரை பாவித்திருக்கலாம்.ஆனால் ரைனாவால் பகுதி நேர பந்துவீச்சை சிறப்பாக செய்ய முடிந்திருக்கவில்லை!

Sreesanth could be in the India playing XI for the Trent Bridge Test with Zaheer Khan being ruled out

தலைவரான பின்னர் தோனி பல விடயங்களை பரீட்சித்து பார்த்து அதில் வெற்றியும் கண்டிருக்கின்றார்!அப்போது அவரை அனைவரும் தூக்கி வைத்து கொண்டானினார்கள்.அன்றைய டோனியின் முயற்சி பிழைத்து போய்விட்டதால் அவரை வரிந்து கட்டி சாடுகின்றனர்!இதே இந்த போட்டியில் இந்தியா வென்றிருந்தாலோ அல்லது தோனி ஒரு விக்கட்டை/பீட்டர்சன் விக்கட்டை கைப்பெற்றி இருந்தால் இதே விமர்சகர்கள் என்ன செய்திருப்பார்கள்???

அதே நேரம் ஆஷஸ் தொடர் போல வாய் ஜாலங்களை தொடங்கி விட்டனர் இங்கிலாந்தின் மூத்த வீரர்கள்.இயன் பொத்தம் இது பற்றி தெரிவிக்கையில் "

சொந்த மண்ணில் அதிக வலுவுடன் உள்ள இங்கிலாந்து அணியை இந்தியா தோற்கடிக்க முடியாது.உலக கிரிக்கட்டின் மன்னராக வலம் வருகிறோம். எங்களை பிளவுப்பட்ட இந்திய கிரிக்கட் அணி தோற்கடிக்க முடியாது "என்று கருத்து வெளியிட்டிருக்கிறார்.

இந்திய கிரிக்கட் அணி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மீண்டுவர முடியாது என இங்கிலாந்தின் முன்னாள் துவக்க ஆட்டக்காரர் ஜெப்ரி பாய்காட் தெரிவித்துள்ளார்.போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணியினர் ஆக்ரோஷமாக உள்ளனர். அவர்கள் இந்திய அணியை வீழ்த்துவோம் எனற உறுதியில் உள்ளனர். உலக டெஸ்ட் அரங்கில் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்ற பசி, இங்கிலாந்து அணியிடம் இருக்கிறது என்றும் பாய்காட் தெரிவித்திருக்கிறார்.


பார்ப்போம் இந்திய அணி இரண்டாவது டெஸ்ட்டில் எழுச்சி பெறுமா என்று!!

Post Comment

Wednesday, July 27, 2011

ஹாரிப்பொட்டரும் மினரல் வோட்டரும்!!"ஹாரிப்பொட்டரும் மினரல் வோட்டரும் " அப்பிடீன்னு ஒரு இங்கிலீசு படம் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளிவந்து சக்கை போடு போட்டிருந்தது!அதன் கதையை மையமாக வைத்து இயக்குனர் ஷங்கர் தமிழில் ஒரு படம் எடுக்கப்போகிராராம் வரும் 2019 ஆம் ஆண்டு!அந்த இங்கிலீஸ் படம் பார்க்காதவங்களுக்காக அதன் கதையை தருகிறேன் நான்..வழமையாக இங்கிலீசு பட விமர்சனம் எழுதும் உலக சினிமா ரசிகன்,ஹாலிவூட் பாலா.ஜீ போன்றோர் கூட இந்த படத்துக்கு விமர்சனம் எழுதவில்லை அதனால நானே எழுதலாம்னு கெளம்பிட்டேன்!
கதை இது தான்!

ஒரு நாள் ஹாரிபோட்டர் ஒரு அற்புதமான மாஜிக் தடி ஒன்றை தேடி அந்தமான் தீவுக்கு போறார்..போறார் போறார் போய்க்கிட்டே இருக்கார்..எப்பிடி போறார்னு அவருக்கே தெரியல...ஏன்'னா அவர் சுய நினைவில இல்லை..ஹரிபோட்டர் முன்னைய பாகமான "ஹாரிப்பொட்டரும் சோடா போத்திலும்"என்ற படத்தின் க்ளைமாக்சில் இடம்பெற்ற சண்டையில் மயக்கமாகிட்டார்..அப்பிடியே ஒரு கட்டிலில போட்டு தூக்கிட்டு போறாங்க அவரை..

காட்டுக்குள்ள போய்க்கிட்டிருக்கேக்க ,ஒரு காக்கா உச்சத்தில இருந்து ஆயி போயிரிச்சு...ஆயி போன காக்கா கரெக்ட்டா ஹரிப்பாட்டார் மூஞ்சில ஆயி போயிரிச்சு..வில்லன் ஆசையா ஆயி போறத்துக்காகவே வளர்த்து வந்த காக்காவாம்!ஆயி பட்ட அதிர்ச்சியில எந்திரிச்ச ஹாரிப்போட்டார் ஒரே சோம்பலா பீல் பண்னறாரு..முதல் படம் வந்து மூணு வருசத்துக்கப்புறம் அடுத்த படம் வந்ததால ஒரே பசி தண்ணி விடாய் என்று அவதிப்படுறார்..

அட்லீஸ்ட் தண்ணியாச்சும் குடிப்பம்னு அவரின் அல்லக்கைகளை அனுப்புறாரு காட்டில தண்ணி எடுத்து வா'ன்னு..அவங்க நாலு நாளா தேடி ஒரு மாதிரி ஒரு ஆத்தில தண்ணி எடுத்து வந்தாங்க..அதை பாத்தா ஹாரிப்பாட்டர் கடுப்பாகி கோபத்தின் உச்சத்தில ஒரு மரத்தின் மேல ஏறிட்டாராம்!அங்க இருந் ஒரு பஞ்சு டயலாக் விடுறார் "தாகமா இருந்தாலும் தண்ணின்னு வந்திட்டா அது மினரல் வாட்டர் தான்" அப்பிடீன்னு விடுறார் பன்ச்..!

பன்ச் டயலாக்'இன் பவரினால அல்லக்கைகள் எல்லாம் ஆப்பாகி ஆயி போயிர்றாங்க..(என்னடா எல்லாரும் ஆயி போறாங்க ஒரே ஆயிப்போற கதையாலே இருக்கு அப்பிடீன்னு ஜோசிக்காதீங்க..கதை முடிவில நீங்களும் ஆயி போக போறீங்க பாருங்களேன்!!)எங்க விட்டேன்..?ஆ அந்த பன்ச்..ம்ம் அப்புறமா அவருக்கு மினரல் வாட்டர் தேடி தேடியே களைச்சு குட்டி சுவர் ஆகிட்டான்களாம் அவங்க...இத எழுநூறு மைல் தொலைவில இருந்து பூதக்கண்ணாடில பாத்துகிட்டிருந்த வயசு போன பாட்டி பாவம் ஹாரிப்பாட்டர்னு ஒரு மினரல் வாட்டரை அனுப்பி வைக்கிறாங்க..
தமிழ் படம் எண்டதால அந்த பாட்டிலை வைச்சு ஒரு பாட்டு பாடுறாங்க...
குத்தாட்டம் போட அந்த காட்டில இருந்து ஒரு பெண் சிங்கத்தை கவர்ச்சியா காட்டுறாங்க ஜூம் பண்ணி..
அந்தப் பாட்டு ஓடிக்கிட்டிருக்கேக்க தான் ஒரு திருப்பம் நடக்குது...அது என்னெண்டு நீங்க திரையிலேயே பாத்துக்குங்க...


கொசுறு செய்தி:
இந்த ஹாரிப்போட்டார் பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் நம்ம பவர் ஸ்டார்!!
பெண் சிங்கமாய் நம்ம டி ஆர்'ஐ நடிக்க கேட்டிருக்காங்கலாம்...அவர் இன்னும் முடிவு சொல்லேலயாம்!!


வந்துட்டாங்க ஓசில விமர்சனம் படிக்க...அதுவும் ஒலக சினிமா!!

Post Comment

Sunday, July 24, 2011

மாற்றான் சூர்யா-மாறுபட்ட பார்வை!


பார்ட்டி, டிஸ்கோதெ, டிரிங்ஸ், சிகரெட் எந்தப் பழக்கமும் இல்லாதவர் சூர்யா. சூட்டிங் முடிந்தால் அப்பா, அம்மா, மனைவி என செட்டில் ஆவதையே விரும்புவார். கேட்டால், 'அப்பாவும் இப்படித்தானே இருந்தார்!' என்பார்.

முருக பக்தர் சூர்யா. எழுந்தவுடன் குளித்துவிடுவார். நெற்றியில் கொஞ்ச நேரமேனும் திருநீறு துலங்கும். திருவண்ணாமலைக்குச் சென்று, செருப்பு போடாமல் கிரிவலம் வந்திருக்கிறார்! தொழில் மீது இருக்கும் அளவுக்கு கடவுளிடமும் பக்தி உண்டு!

காலையில் ஹெல்த் டிரிங்ஸ், கொஞ்சம் உலர்ந்த பழங்கள். மதியம் மூன்று சிக்கன் பீஸ், சப்பாத்தி, வேகவைத்த காய்கறிகள். மாலை ஜுஸ், இரவு சப்பாத்தி. இதுதான் அவருடைய மெனு. ஸ்வீட்டுக்கு எப்பவும் தடா!

துணி ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்த காரணத்தால், சூட்டிங்கில் அவருக்கான ஆடைகளை அவரே கட்டிங் செய்து டிசைன் செய்கிறார்!

அவரது புதுப் படம் வெளியாகும்போதெல்லாம், அவர் படித்த லயோலா கல்லூரியின் பேராசிரியர்களுக்கு ஸ்க்ரீன் செய்து அபிப்பிராயம் கேட்பார்!

சூர்யாவின் பக்கத்துப் பக்கத்து வீட்டுக்காரர்கள் இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் ஷங்கர். ஆனாலும், இவர்கள் இருவரின் படத்திலும் நடித்தது இல்லை சூர்யா!

தங்கை பிருந்தா மீது சூர்யாவுக்கு அலாதி பாசம். வாரத்துக்கு ஒரு முறையேனும் பிருந்தாவை அவர் பார்த்துவிட வேண்டும். நாட்கள் கடந்தால் இவரே தன் குழந்தை தியாவைத் தூக்கிக் கொண்டு தங்கையைப் பார்க்க ஓடிவிடுவார்!

உலக சினிமாக்களில் இரானியப் படங்கள்தான் சூர்யா சாய்ஸ். சூட்டிங் கேன்சல் ஆனால் அந்தப் படங்கள்தான் சூர்யாவின் ஹோம் தியேட்டரில் கதை பேசும்!

வீட்டிலேயே ஜிம் இருக்கிறது. ஹிந்தி 'கஜினி'யில் அமீருக்கு உடற்பயிற்சியாளராக இருந்த அல்காஸ்தான் இப்போ சூர்யாவுக்கும் கைடு!

தன்னுடன் கல்லூரியில் படித்த நண்பர்களின் வீடுகளுக்கு திடீர் விசிட் அடிப்பது, கிறிஸ்துமஸ், தீபாவளி, ரம்ஜானின்போது வாழ்த்து அனுப்புவது சூர்யா பழக்கம். 'சினிமா ஸ்டார் ஆயிட்டோம்னு நண்பர்களை மறக்க முடியாதுல்ல!' என்பார்!

சினிமாவில் கமல்தான் சூர்யாவின் குரு. 'தேவர் மகன்' படம் வந்த சமயம் கமல் போலவே ஃபங்க் தலைமுடி வைத்துக் கொண்டு திரிந்தவர் சூர்யா!சூர்யா கௌரவ நடிகராக நடித்த ஒரே படம் 'ஜூன் ஆர்'. ஜோவின் அன்புக்காக அது. ரஜினிக்காக ஒரே ஒரு காட்சியில் நடித்த படம் 'குசேலன்'. கமலுக்காக ஒரே ஒரு பாடலில் நடித்த படம் மன்மதன் அம்பு. பாலாவுக்காக ஒரே ஒரு காட்சியில் நடித்த படம் அவன் இவன்.

எல்லோரையும் 'ஜி' என்றுதான் அழைப்பார் சூர்யா. வயதில் மூத்தவர்களை 'அண்ணே' என்பார். மிகவும் நெருக்கமானவர்களைத்தான் பெயர் சொல்லி அழைப்பார்!

எம்.ஜி.ஆருக்குப் பிறகு அம்மா சென்ட்டிமென்ட்டில் இவரை அடித்துக்கொள்ள ஆளே இல்லை எனலாம். அந்தளவுக்கு அம்மா வார்த்தைக்கு மறு பேச்சு பேசாமல் நடந்துகொள்வார்!

தேசியக் கட்சி நடத்திய சர்வேயில் முதல் இடத்தில் வந்தவர் சூர்யா தானாம். ஆனால், அவர்கள் விடுத்த அழைப்புக்கு, 'ஆளை விடுங்க சாமி' என்று கையெடுத்துக் கும்பிட்டு வழியனுப்பி இருக்கிறார்!

சூர்யா சம்பந்தப்பட்ட குடும்ப விழாக்களில் நண்பர்கள், உறவினர்கள் தவிர கட்டாயமாக அழைப்பு அனுப்பப்படும் இரண்டு நண்பர்கள் விஜய், அஜீத்!.

வாரணம் ஆயிரம், அயன், ஆதவன், சிங்கம் என இவர் நடித்த அனைத்து படங்களும் பாக்ஸ் ஆபிஸில் வசூலில் கொடி கட்டிப் பறந்தன. இவர் நடித்த சிங்கம் படம் இந்தி ரீமேக் 22 ஜூலை வெளியாகி இருக்கிறது.

நன்றி -சினி விகடன்

பல நண்பர்களின் தளங்களுக்கு கடந்த இரண்டு நாட்களாக வரமுடியவில்லை..ஒன்று நேரம் இல்லாமை..மற்றையது ஹிஹி வீட்டிலே விருந்தாளிகள்..நொய் நொய்ன்னு நொங்கெடுக்கிறாங்க பாஸ்..என்னெண்டு கொஞ்சம் கேளுங்க!

Post Comment

Thursday, July 21, 2011

உண்மைத்தமிழனின் தெரியாத பக்கங்கள்!!


குறிப்பு-விக்கிப்பீடியாவிலிருந்து,மற்றும் பல தளங்களில் இருந்து தொகுக்கப்பட்ட பதிவு தான் இது.என் முன்னோர் நான் பதிவிடுவதர்க்காக தொகுத்து வைத்த ஓலைச்சுவடிகளிளிருந்து தொகுக்கப்பட்டதல்ல.வரலாற்று சம்பவங்களும் கதைகளும் படிக்கும் பொது ஒரு வித ஆவல் கிளர்ச்சி எழும்.அப்படிப்பட்ட ஆளாயின் தொடருங்கள்..சில விசயங்களை பகிர்வதால் நமக்கும் ஒருவித திருப்தி...அதில் இதுவும் ஒன்று.குறைந்தது ஒரு ஐந்து பேராவது வாசித்தால் சந்தோசம்!சில விளக்கம் தேவையான முக்கிய சொற்கள் தடித்த எழுத்தில் காட்டப்பட்டுள்ளன..மேலதிக விளக்கம் தேவைப்படின் அதனை கிளிக்கி சென்று பாருங்கள்!


இவன் கி.பி 957 முதல் கி.பி 973 வரை சோழ நாட்டை ஆண்ட சுந்தர சோழனுடைய இரண்டாவது மகனாவான். சுந்தர சோழனுக்கும் சேர நாட்டு வானவன் மாதேவிக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த இவனது இயற்பெயர் "அருண்மொழிவர்மன்". இராஜகேசரி அருள்மொழிவர்மன் என்ற பெயராலேயே தன் ஆட்சியின் தொடக்க காலத்தில் இம்மன்னன் அழைக்கப்பட்டான். இவன் ஆட்சியின் 3ம் ஆண்டு முதலே ராஜ ராஜ சோழன் எனப்பட்டான் (988) தந்தை இறந்ததும் இவன் உடனடியாகப் பதவிக்கு வரவில்லை. 12 வருடகாலஉத்தம சோழனின் ஆட்சிக்குப் பின்னரே இவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டான். விசயாலய சோழன் நிறுவிய சோழ அரசு இவன் காலத்திலும் இவன் மகன் இராஜேந்திர சோழன் காலத்திலும் மிக உயர்நிலை எய்தியது. இராஜராஜனின் காலம் பிற்காலச் சோழர் வரலாற்றில் மட்டுமன்றித் தென்னிந்திய வரலாற்றிலேயே ஒரு பொற்காலமாகும்.

இராசராச சோழன் சோழர்களின் புகழ் பெற்ற மன்னர்களுள் ஒருவனாவான். 'சோழ மரபினரின் பொற்காலம்' என்று போற்றத்தக்க வகையில் ஆட்சி செய்த இம்மன்னனின் ஆட்சிக்காலம் கி.பி 985 முதல் கி.பி 1012 வரையாகும். இவன் மகன் முதலாம் இராசேந்திரன்காலத்தில் சோழநாடு கடல் கடந்து பரவச் செய்யும் பெருமைக்கு அடிகோலியதும் இம்மன்னனே. இராஜராஜ சோழனின் முப்பதாண்டு ஆட்சிக்காலமே சோழப் பேரரசின் வரலாற்றில் மிக முக்கியமாக விளங்கியது. ஆட்சி முறை, இராணுவம், நுண்கலை, கட்டடக்கலை, சமயம், இலக்கியம் ஆகிய பல்வேறு துறைகளில் புதிய எழுச்சியைக் கண்ட சோழப்பேரரசின் கொள்கைகளை இவனுடைய ஆட்சியில் உருப்பெற்றவையே.

ஈழப் போர்


ஈழம்

இராஜராஜனால் வென்று கைப்பற்றப்பட்ட நாடுகளுள் ஈழமும் ஒன்று என்பதை இம்மன்னனது 'திருமகள் போல' என்று தொடங்கும் கி.பி. 993ம் ஆண்டு மெய்க்கீர்த்தியால் அறியலாம். 'கொடுமை மிக்க சிங்களர்கள் வசமிருந்த ஈழ மண்டலத்தை இம்மன்னன் கைப்பறியதன் மூலம், இவனது புகழ் எண் திசைகளிலும் பரவியது', 'தஞ்சையில் இராஜராஜ சோழன் எடுப்பித்தசிறந்த கோயிலுக்குஈழத்தின் பல கிராமங்களை இவனுடைய 29ம் ஆண்டில் தானமாக அளித்தான்' என்றும் ஈழப்படையெடுப்பைப் பற்றி திருவாலங்காட்டுப் பட்டயங்கள் சிறப்பாகக் குறிப்பிடுகின்றன.

இப்படையெடுப்பின் பொழுது ஈழ மண்டலத்தில் ஆட்சி புரிந்து கொண்டிருந்தவன், கி.பி 981ம் ஆண்டில் பட்டம் பெற்ற ஐந்தாம் மகிந்தன் என்பவனாவான். முதலாம் இராஜேந்திரனின்தலைமையில் சோழப்படை சென்ற பொழுது இம்மன்னனே ஆட்சியில் இருந்தான். ஆனால் இராஜராஜனின் இப்படையெடுப்பைப் பற்றி மகாவமிசம் குறிப்பிடவில்லை. 'மகிந்தன் ஆட்சியில் பத்தாம் ஆண்டிற்குப் பிறகு(கி.பி 991) ஓர் இராணுவப் புரட்சி ஏற்பட்டு அதன் விளைவாகப் பெரும் குழப்பம் விளைந்தது; கேரள கன்னடவீரார்களின் செல்வாக்கு இவன் நாடு முழுவதும் பரவியதே இந்த குறைபாட்டிற்கு காரணமாக இருக்கலாம். இராணுவ புரட்சியின் விளைவாய் மகிந்தன், ஈழ மண்டலத்தின் தென் கிழக்கிலுள்ள ரோகண நாட்டிற்கு தப்பி ஓடிவிட்டான். இதனால் ஈழ மண்டலத்தின் வடபகுதியை இராஜராஜன் எளிதில் கைப்பற்றி மும்முடிச் சோழ மண்டலம் என்று அதற்குப் பெயரிட்டான்.' என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

இராஜராஜ சோழனின் சுவர் ஓவியம் தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் கிடைத்தது.[3]


ஈழப் படையெடுப்பின் விளைவுகள்

சோழப்படையெடுப்பு ஈழநாட்டில் ஒரு நிலையான விளைவை ஏற்படுத்தியது, ஓராயிரம் ஆண்டிற்கு மேலாக ஈழத்தின் தலைநகராக விளங்கிய அநுராதபுரம் இப்போரில் சோழரால் அழிக்கப்பட்டது. இந்நகரில் இராணுவ காவல் நிலையமாக விளைங்கபொலன்னறுவை சோழரது புதிய தலைநகராக்கப்பட்டது. இராஜராஜ சோழனுக்கு முன்னர்ஈழத்தின் மீது படையெடுத்துச் சென்றதமிழ் மன்னர்கள், அதன் வடபகுதியை மட்டும் கைப்பற்றுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். ஆனால் இராஜராஜ சோழன் ஈழ மண்டலம் முழுமையையும் கைப்பற்றித் தன் ஆட்சிக்குட்பட்டதாக எண்ணியதால் பழைய தலைநகரை விடுத்து புதிய தலைநகரை அமைத்துக் கொண்டான்.

பிற்காலத்தில் சிங்கள வேந்தனாகிய முதலாம் விஜயபாகு, அனுராதபுரத்தில் முடிசூட்டப் பெற்றான் என்றாலும் பொலன்னறுவையைத் தொடர்ந்து தன் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தான்.


ஈழத்தில் சோழக் கோயில்கள்

இராஜராஜனின் கல்வெட்டுகள் பல, ஈழத்தில் உள்ளன. ஈழத்தைச் சோழர் கைப்பற்றியதைக் கொண்டாடும் வகையில் பொலன்னறுவையில் இராஜராஜன் சிவனுக்கு ஒரு கற்றளி எடுப்பித்தான். பொலன்னறுவை நகரின் சுவர்களுக்குள் அமைந்துள்ள இந்த அழகிய சிவாலயம் ஈழ நாட்டில் காணப்படும் புராதனச் சின்னங்களில் இன்றளவும் நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. இதன் கட்டட அமைப்பைக் காணும் பொழுது இது கி.பி 10 மூதல் 12ம் நூற்றாண்டுகளுக்குள்ளேயே கட்டப்பட்ட சோழர்காலத்துக் கோயில்கள் போன்றே(தஞ்சை பெரிய கோயில் இவ்வகைக் கோயில்களில் மிகவும் சிறந்தது) அமைந்துள்ளது.


இராணுவம்
கடற்படை, உள்நாட்டின் படை ஆகிய அனைத்திற்கும் அரசரே தலைவர் ஆவார். இப்படை பல பிரிவுகளாக அமைந்து ஒவ்வொரு பிரிவும் தனிப்பெயரால் அழைக்கப்பட்டது. இவை ஒன்றுபட்ட அமைப்பாகவே இயங்கின.
இவன் வலிமை மிக்க
காலால் படை
குதிரைப்படை
யானைப்படை (குஞ்சரமல்லர்)
கடற்படை
வில்லேந்திய வீரர்கள் ( வில் படை )
ஆகிய நான்கையும் கொண்டிருந்தான்.இவற்றின் எண்ணிக்கை தெளிவர தெரியவில்லை. காலால் படையில் ஏறக்குறைய பதினோரு லட்சம் பெரும் , யானைப்படையில் ஏறக்குறைய அறுபது ஆயிரம் போர் யானைகள் இருந்ததாக சீன குறிப்பு ஒன்றில் காணப்படுகிறது.இராஜேந்திர சோழன் பிற்காலத்தில் திறமையாகப் பயன்படுத்திய கப்பற்படை இராஜராஜன் காலத்திலேயே சிறந்த முறையில் உருவாக்கப்பட்டது

தான் கைபற்றிய நாடுகளில் எல்லாம் அரசு இயந்திரங்கள் சரிவர இயங்க ஆளுநர்களையும் ஏனைய அலுவலர்களையும் நியமித்தார்.அதேவேளை ஒவ்வொரு நாட்டிலும் அமைதி காக்கும் படை ஒன்றையும் விட்டுச் சென்றார். ஈழத்தில் அவர் விட்டு வைத்திருந்த வேளைக்காரர் படையின் எண்ணிக்கை 90,000 என்று தெரிகிறது. இப்படி ஒரு மாபெரும் சோழப்பேரரசை நிறுவ அவர் மேற்கொண்ட போர்களில் எல்லாம் அவர் பயன்படுத்திய சேனைகளின் எண்ணிக்கை பதினொரு லட்சத்திற்கும் மேலென்று கணக்கிட்டிருக்கிறார்கள். 31 படை பிரிவுகள் கொண்ட இத்தகைய அளவிலான சேனையைப் பராமரிப்பதற்கும், நிருவகித்து பயன்படுத்துவதற்கும் அசாத்திய திறமையும் நிருவாகத்திட்டமிடல் அறிவும் இருந்திருக்க வேண்டும்

இராசராச சோழன் காலத்தில் சோழ நாடு.1014 C.E.
ஆட்சிக்காலம் கி.பி. 985 - கி.பி. 1012
title இராசகேசரி
தலைநகரம் தஞ்சாவூர்

அரசி உலக மாதேவியார்
வானவன் மாதேவியார்
சோழ மகாதேவியார்
பிள்ளைகள் இராசேந்திர சோழன்
மாதேவடிகள்
குந்தவை
முன்னவன் உத்தம சோழன்
பின்னவன் இராசேந்திர சோழன்
தந்தை சுந்தர சோழன்
பிறப்பு தெரியவில்லை
இறப்பு கி.பி. 1014
ராஜ ராஜ சோழன் பெருமைகளை உரைக்கும் காணொளி ஒன்று..பலர் பாத்திருக்க கிடைத்திருக்காது.பாருங்கள் ஒருவித உணர்ச்சி உங்கள் மனதில் தோன்றும்!
ஆரம்பத்தில் தாஜ்மகால் வந்தாலும்,ஐந்தாவது நிமிடத்தில் இருந்து....வேண்டாம் பாருங்கள் நீங்களே!


தஞ்சை கோவில்

தஞ்சை பெரிய கோவிலின் கோபுரம் அல்லது விமானம் ஒரே கல்லால் கிட்டத்தட்ட 80 டன் எடை கொண்டது.(ஆனால் திருச்சிராப்பள்ளி நகரிலிருக்கும் டாக்டர் மா. இராசமாணிக்கணார் வரலாற்று ஆய்வு மையத்தின் இயக்குநர், வரலாற்று ஆய்வு மேதை டாக்டர் இரா. கலைக்கோவன் அவர்கள் தமது ஆய்வர்களோடும் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத்துறையின் அலுவலர்களின் துணையுடனும் விமானத்தின் உச்சிவரை ஏறி இது ஒரே பாறையால் ஆனது அல்ல, பல கற்களை இணைத்து ஒரே பாறை போன்று தோற்றும் வண்ணம் மிக நேர்த்தியாக இணைக்கப்பட்டிருக்கிறது என்றும் கண்டறிந்திருக்கிறார்.) பக்கத்தில் மலையோ அல்லது பெரிய பாறையோ இல்லாத இடத்தில் எவ்வளவு பெரிய கல் எங்கிருந்து எப்படி கொண்டு வரப்பட்டது என்பது இன்னும் மர்மம் தான்.கோவிலை சுற்றிலும் சாய்வான மணல் மேடுகளை அமைத்து யானைகளின் மூலம் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.பாலகுமாரன் எழுதிய உடையார் புதினத்தில் இதை பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது

.


தஞ்சாவூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கற்பாறைகள் மிகவும் குறைவு. ஆகவே, ஆரம்ப காலத்தில் செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவையைப் பயன்படுத்தியே கோயில்கள் கட்டப்பட்டன. இதை மாற்றியமைத்தவர் கண்டராதித்த சோழரின் (ஆட்சி: கி.பி. 949 -957) மனைவி செம்பியன்மா தேவியார்! பிறகே சோழமண்ணில் அற்புதமான கற்கோயில்களைக் கட்டத் துவங்கினார்கள். பெரியகோயில் மூலம் அதன் உச்சத்தைத் தொட்டான் ராஜராஜசோழன்!
வீரசோழ குஞ்சர மல்லன், நித்த விநோத பெருந்தச்சன் மற்றும் குணவான் மதுராந்தகன் - இந்த மூவரும்தான் பெரிய கோயிலைத் திட்டமிட்டுக் கட்டிய தலைமை அர்க்கிடேக்டோடுகள்! கோபுரத்தின் நிழல் தரையில் விழாது என்ற கூற்று பொய் .கோபுரத்தின் நிழல் தரையில் நன்றாகவே விழும்! .கோயிலுக்குமுன் உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பெரிய நந்தி பிற்பாடு நாயக்கர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டது

கி.பி.1014'ல் கும்பகோணத்துக்கு ஆறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள உடையலூரில் ராஜராஜன் இறந்தார். அங்கே மன்னரைப் புதைத்த இடத்தில் ஒரு பள்ளிப் படைக் கோயில் கட்டப் பட்டது. ( ஒட்டன்தோப்பு கிராமத்தில், வயற்புரத்தில் ஒரு மூலையில் உள்ள மணல் மேடுதான் பள்ளிப்படையின் மிச்சம். அங்கே, புதையுண்டிருக்கும் சோழர் காலத்திய சிவலிங்கத்தையும் நாம் காணலாம்! )

சோழரின் 450 ஆண்டுகால புக்ழபெற்ற வாழ்வு விஜயாலய சோழனின் காலத்தில் தொடங்கியது. ஆயினும் அவர்தம் மகோன்னத காலம் ராஜராஜன் என்ற அந்தப் பெரும் ஆற்றல் அரியணை ஏறியபோதுதான் தொடங்கியது. அந்த ஆற்றல் ஏற்படுத்திய அலையில் சில நூற்றாண்டுகள் பயணம் செய்து, விஜயாலய சோழனின் நேர்வழி வாரிசுகள் 1279ல் அழிந்து போனதோடு சோழரின் இனம் யாருமே நன்றி நினைக்காத ஒரு நிலையில் புவியின் பரப்பிலிருந்தே மரைந்து போனது.ஆயினும் ராஜராஜன் என்ற ஒப்பில்லா மறத்தமிழனின் புகழ் ராஜராஜீஸ்வரம் என்ற அவர் கல்லில் எழுதிய காவியம் இருக்கும்வரை நிலைத்திருக்கும். உலகமும் அவரைக் கைகூப்பித் தொழும்.

தஞ்சை பெரிய கோயிலின் நிழல் பற்றி உங்களுக்கு தெரிந்த உண்மைகளை சொல்லுங்கள் நண்பர்களே...!பதிவு பலரை அடைய விரும்பினால் ஓட்டு போட்டு செல்லுங்கள்!

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...