Monday, May 30, 2011

மாப்புள்ளே நீ அடிமையா இல்லை ஆம்பிளையா??

பெண்ணுரிமை பற்றிய கோஷம் குறைவடைந்து தற்போது ஆணுரிமை பற்றி பேச உலகம் தலைப்பட்டுள்ளது..பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது போல இனி ஆண்கள் தினமும் கொண்டாடப்படும். எனினும் இந்தக் கூச்சல் இன்னமும் பல ஆண்களின் காதுகளை சென்றடையவில்லை..அதைப்பற்றிய விழிப்பு இல்லாமலேயே காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்..நீங்களும் அவ்வாறாக இருக்க கூடும்..!!

ஆணுரிமை!!
பெண்ணுரிமை பற்றிப்
பேசிப் பேசியே
ஆணுரிமையை தொலைத்துவிட்டு..
தொலைத்துக்கொண்டு இருக்கும்
ஆண்களின்
எதிர்காலத்துக்கு
ஒரு அலாரம்!!
உரிமைக்காக ஏங்கியவர்களிடம்
தம்முரிமைக்காக
கையேந்த வேண்டிய கையாலாகாத்தனம்..
முதலாளிகள் முதலாளித்துவத்தை
இழந்து போகும் தருணம்..
எந்த சம்பாத்தியத்தை காட்டி
கட்டி ஆண்டானோ
அந்த சம்பாத்தியத்தாலேயே
கட்டுப்பட்ட...
கட்டுப்பட வைத்த
பெண்களின் சாமர்த்தியம்!!
குடும்பத்தலைவன்
இனி தலைவியாவான்
தலைவி இனி தலைவனாவாள்!!
தலைவன் தலை குனிவான்!!
அணுகுண்டால் தாக்குண்டு
வீறுகொண்டெழுந்த
ஜப்பானை போல்
அடக்குப்பட்ட சமுதாயத்தின்
வெற்றி விடியல் போல்
பெண்ணுரிமை பேசிய
பெண்மை இன்று
பெருமை கொள்கிறது
ஆணுரிமை பற்றிய
கேள்விக்கு விதை போட்டுள்ளது!!
ஆண் மகனே..
உனக்கு
அணி சேர்த்த அத்தனையும்
இன்று அவள் கையில்!
உன்னிடம் எதிர்பார்த்த
பெண்ணிடம்
இனி நீ எதிர்பார்ப்பாய்..
அன்பை
ஆதரவை
பணம் முதல்கொண்டு
பால் வரை அத்தனையையும்
இனி அவள் மனம் வைத்தால் தான்
உண்டு என்ற நிலைமை !!
நடப்பு தெரியாமல்
நடமாடும்
ஆண் வர்க்கமே
விழித்தெழு!!
ஆணுரிமைக்கு
குரல்கொடு!!
ஆரம்பத்திலே அறிந்து கொள்
அல்லாவிடில்
அடுத்த நூற்றாண்டு
பெண்நூற்றாண்டாக
மாறும்
நாளை உந்தன்
விடியல் கூட
பெண்ணியம் பற்றி தான்
பேசப்போகின்றது மனிதா!!
யாதுமில்லாமல்
சமத்துவம் நோக்கி
உந்தன் பாதங்கள் செல்லட்டும்!!
காலம் தான் பதில் சொல்லும்!!!

டிஸ்கி:இது பெண்கள் மீதான காழ்ப்புணர்ச்சியில் எழுதப்பட்டதல்ல.மாறாக தூங்கிக்கொண்டிருக்கும் ஆண்களை தட்டி எழுப்புவதற்காக மட்டுமே!!
இருபது ஒட்டு கிடைச்சாலும் இன்ட்லில பிரபலமாக்குறான்கள் இல்லையப்பா..ஆக்சுவலி இது ஒரு மீள் பதிவாக்கும்!

Post Comment

26 comments:

கார்த்தி said...

இத்தால் அறிவிப்பது யாதெனில் பெண்களுக்கு எதிராக கிளம்பியுள்ள மைந்தனை பெண்களே மதியாதீர்கள்!!! lol

கார்த்தி said...

ஏன் இதை இண்டிலியில் இணைக்கவில்லை? ஓட்டளிக்போக இணைக்க சொல்லி கேக்குது!

சி.பி.செந்தில்குமார் said...

இப்பவெல்லாம் பதிவர்கள் பதிவு போடறப்பவே என்ன மாதிரி பிரச்சனை வரும்னு தெரிஞ்சுக்கிட்டு டிஸ்கி போட்டு எஸ்கேப் ஆகிடறாங்க.. ம் ம்

Unknown said...

பாதிப்புக்கு நன்றி அடச்சே பகிர்வுக்கு நன்றி!

நிரூபன் said...

பெண்ணுரிமை பற்றிய கோஷம் குறைவடைந்து தற்போது ஆணுரிமை பற்றி பேச உலகம் தலைப்பட்டுள்ளது..பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது போல இனி ஆண்கள் தினமும் கொண்டாடப்படும். எனினும் இந்தக் கூச்சல் இன்னமும் பல ஆண்களின் காதுகளை சென்றடையவில்லை..அதைப்பற்றிய விழிப்பு இல்லாமலேயே காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்..நீங்களும் அவ்வாறாக இருக்க கூடும்..!//

மாப்பிளை, ஆஹா...ஆண்களுக்காக குரல் கொடுக்கப் புறப்படும் இளவலே!
நீங்கள் வாழ்க!

நிரூபன் said...

அந்த சம்பாத்தியத்தாலேயே
கட்டுப்பட்ட...
கட்டுப்பட வைத்த
பெண்களின் சாமர்த்தியம்!!//

மகளிர் அணி போர்க் கொடி தூக்காதா மாப்பு.

நிரூபன் said...

அடக்குப்பட்ட சமுதாயத்தின்
வெற்றி விடியல் போல்
பெண்ணுரிமை பேசிய//

மாப்பு, இந்த உவமையைக் கொஞ்சம் மீள் பரிசீலனை செய்யலாமே;-))

நாம ஓசியிலை விளம்பரம் கொடுப்பது போல இவ் வரிகள் வராது.

நிரூபன் said...

பெருமை கொள்கிறது
ஆணுரிமை பற்றிய
கேள்விக்கு விதை போட்டுள்ளது!!//

சபாஷ் மாப்பு, இது பாயிண்ட்...

நிரூபன் said...

பெருமை கொள்கிறது
ஆணுரிமை பற்றிய
கேள்விக்கு விதை போட்டுள்ளது!!//

சபாஷ் மாப்பு, இது பாயிண்ட்...

நிரூபன் said...

தமிழிஷ் இல் பசக் பசக் குத்த முடியலை.

நிரூபன் said...

இக் கால கட்டத்தில் ஆண்கள் அனைவரும் சிந்திக்க வேண்டிய விடயம். எமது உரிமைகள் பறி போகிறது எனும் நோக்கில் எல்லா உரிமைகளையும் பெண்களுக்கு விட்டுக் கொடுப்பதால், எமது எதிர்காலம் என்பது கேள்விக்குறியாகவே போகும் என்பதில் ஐயமில்லை.

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

இது பெண்கள் மீதான காழ்ப்புணர்ச்சியில் எழுதப்பட்டதல்ல.மாறாக தூங்கிக்கொண்டிருக்கும் ஆண்களை தட்டி எழுப்புவதற்காக மட்டுமே!!

தூங்கிக்கொண்டிருக்கும் ஆண்களை எழுப்ப அலாம் செட் பண்ணி வைத்தால் போதாதா? எதுக்கு கவிதை எழுதணும்? - டவுட் நம்பர் 23569985 -

NKS.ஹாஜா மைதீன் said...

ஆணுரிமையை பாதுகாக்க வந்த மாவீரன் வாழ்க வாழ்க...

Anonymous said...

///அணுகுண்டால் தாக்குண்டு
வீறுகொண்டெழுந்த
ஜப்பானை போல்
அடக்குப்பட்ட சமுதாயத்தின்
வெற்றி விடியல் போல்
பெண்ணுரிமை பேசிய
பெண்மை இன்று
பெருமை கொள்கிறது
ஆணுரிமை பற்றிய
கேள்விக்கு விதை போட்டுள்ளது!!/// என்ன ஒரு உவமை சூப்பர் பாஸ், ஆனா இனி பெண்களிடம் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க ஹிஹிஹி

ம.தி.சுதா said...

/////பணம் முதல்கொண்டு
பால் வரை அத்தனையையும்
இனி அவள் மனம் வைத்தால் தான்
உண்டு என்ற நிலைமை !!/////

ஆண்களுக்காய் குரல் கொடுக்கும் ஆணே நீ வாழி உன் கொற்றம் வாழி... உன் அடுப்படி வாழி..

அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
பிளக்பெறி போனும் வில்லண்ட பிரச்சனைகளும் (blackberry phone problems)

ம.தி.சுதா said...

அடுப்படி வாழி என்பது அங்கே தண்ணி அள்ளி வைத்திருப்பதை சொன்னேன்பா தப்பா நினைக்காதை...

MANO நாஞ்சில் மனோ said...

நல்ல ஒரு பகிர்வு மக்கா....!

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் ஏழாவது ஓட்டு போட்டாசு, இன்ட்லி என்னய்யா ஆச்சு..??

Anonymous said...

நீங்க டிஸ்கி போடாம இருந்திருந்தா...பின்னுட்டங்கள் கன்னாபின்னான்னு எகிறி இருக்கும்:(

தனிமரம் said...

பதிவு உலகில் ஜொல்லுவிட்ட மைந்தன் புதுக்கட்சி தொடங்கிறார் ஆண்கள் உரிமைக்கு குரல் கொடுக்க வந்து இனையுங்கள்

Jana said...

ரைட்டு எனக்கிருந்த டவுட்டு ஒன்று இந்த பதிவில் கிளியராகுது மைந்தா... ஹி..ஹி..ஹி..

shanmugavel said...

//பெண்ணுரிமை பற்றிய கோஷம் குறைவடைந்து தற்போது ஆணுரிமை பற்றி பேச உலகம் தலைப்பட்டுள்ளது..//

சிவா எப்போ? எப்போ ?

செங்கோவி said...

ச்சே..ஒரு மைனஸ் ஓட்டு கூட இல்லையே..

உணவு உலகம் said...

சிவா, இது உங்கள் ஆதங்கமா?

உணவு உலகம் said...

மிக அருமையாக உங்கள் கருத்துக்களை பதிவு செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.என் முதல் கருத்தைக் கண்டு, வெறுப்படைந்து விடாதீர்கள். அது சும்மா ஜோக்.:-)

ஹேமா said...

நிறையப் பாதிக்கப்பட்டமாதிரி இருக்கு சிவா !

Related Posts Plugin for WordPress, Blogger...