Showing posts with label ஹை கூ. Show all posts
Showing posts with label ஹை கூ. Show all posts

Monday, February 28, 2011

காதல் என்ன அம்புட்டு கஷ்டமா?



"நாணம்" என்ற சொல்லுக்கு
வடிவம் கொடுக்கின்றாய் நீ
நினைத்து வந்தது
நினைவின்றி போக உன்
நிழலாக நான்!


இன்று உனக்கு புரியவில்லை
புன்னகைக்கின்றாய்..
புரிகின்ற பருவத்தில்
உன் புன்னகைக்கு
புரிதல் இல்லாமல்
புதையப்போகிறேனோ தெரியவில்லை!!


உணர்வுகளின்
உள்ளுறுத்தல் அதிகமாகும்போது
உடல்களுக்கிடையேயான
உன்மத்த உத்தம்-காமம்!




மனஸ்தாப மரத்தின்
இரு மனமறியா பிழை தான்
மனம் விட்டுப் பேசா
தவறுகள்!!


நடக்கையில் நிழலை
தேடினேன்...
காணவில்லை..!!
நிஜத்தில் நான்
உன்னுள் இருப்பதாலோ!!

என்னை தனது வலைப்பூவில் அறிமுகம் செய்த "காத்திரப் பதிவர்"ஜனா அண்ணாவுக்கு நன்றிகள்!





இவங்களே இப்பிடி அன்பா இருக்கேக்க நம்மளால இருக்க முடியாதா?
சோ,அன்பாலே பிணைக்கப்பட்டிருங்கள்..அன்பாய் இருங்கள்!!
முடிஞ்சா காதலியுங்க..இல்லாட்டி சிரிப்பு போலீஸ் மாதிரி அப்புறம் நாற்பதிலையும் கல்யாணம் நடக்காது!!

Post Comment

Wednesday, September 22, 2010

விடியல் இன்னும் விடியவில்லை!!



தொலைந்து போன
பசுமைகள்..நினைவில்
இல்லை
கனவுகள் கூட


அன்பே..
அருகில் தள்ளிப்பார்..
சம்பவத்தின் போது
நம் பிள்ளை
அங்கு தான்
நின்றுகொண்டிருந்தது..!!



வாழ்வில் ஒரே
இலட்சியம்..
கல்வி சினிமா கிரிக்கெட்'டா..??
அமைதியான வாழ்வில்
அத்தியாவசிய
உணவு
உடை
உறையுள்!!


உங்ககிட்ட என்ன
உலகத்திட்டயே
புலம்பி ஒண்ணுமாகல..
காயப்பட்ட மனச
புகை போட்டாச்சும்
தேத்துவம்..

இதையெல்லாம் கவிதைஎண்டு நம்பி பாக்க வந்தீங்க பாருங்க..
உங்களையெல்லாம் பாக்க பாவமா இருக்கு...!!
இவற்றைப்பற்றி ஒரு தனிப் பதிவு போடலாம் என்டிருக்கன்..பாப்பம்..என்னுடைய அம்பதாவது பதிவில சொல்லுறேனுங்கோ !

Post Comment

Thursday, August 12, 2010

எந்திரன் எப்ப ரிலீசாம்னே ??


பரீட்சைக்கு கூட
இவ்வளவு ஜோசித்ததில்லை
ரூம் போட்டு
ஜோசிக்கிறேன்
வலையுலகில் பதிவெழுத!!


தோல்வியடைந்தவன்
தோல்வியை
நியாயப்படுத்திக்கொள்ளும்
தாரக மந்திரம்..
விதி!


நீயின்றி நானுமில்லை
நீயன்றேல் நாளும் இல்லை
நீயல்லவோ என்
உற்ற தோழன்
கைத்தொலைபேசி!


வெள்ளப்பெருக்கு...
கவலையில்லை
எண்ணைக்கசிவு...
கவலையே இல்லை!
அன்டேர்சன் கைது??
Who cares??
எந்திரன் எப்ப ரிலீசாம்னே ??

ஒட்டு போடாம இவங்கட காலுக்க சிக்கி சின்னாபின்னமாகாம மரியாதையா ஒட்டு போட்டிடுங்க ஆமா சொல்லிப்புட்டன்!!

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...