Monday, May 2, 2011

'தல'அஜித் வழியில் பிரபல பதிவர்!!அதிரடி முடிவு!!தனது பிறந்த நாளுக்கு தலை அஜித் தனது அனைத்து ரசிகர் மன்றங்களையும்
கலைக்குமாறு உத்தரவிட்டது அவரது லட்ச்சக்கணக்கான ரசிகர்களை
பெரும் கவலையில் ஆழ்த்தியது அனைவருக்கும் தெரிந்த விடயமே!!

அந்த அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த மக்களுக்கு அடி மேல அடியாக
இன்னொரு அதிர்ச்சி செய்தி ஊடகங்களில் முதன்மைப்படுத்தப்பட்டு வருகிறது..

அது தான் பிரபல மொக்கை பதிவர்(?) மைந்தன் சிவா தனது அனைத்துலக ரசிகர் மன்றங்களையும்
கலைக்குமாறு நேற்று உத்தரவிட்டார் என்ற செய்தி!!

பிரபல அந்த பதிவருக்கு உலகம் பூராகவும் பல ஆயிரம் ரசிகர் மன்றங்கள்
இருக்கின்றமை அனைவரும் அறிந்ததே,உங்களுக்காக அந்த கணக்கு,

இந்தியா-5735
இலங்கை-982
ஐக்கிய ராச்சியம்-794
அமெரிக்கா-658
கனடா-432
அவுஸ்திரேலியா-226
மத்திய கிழக்கு நாடுகள்-199
சீனா-98
உகண்டா-78
கென்யா -68
சூடான்-67
மிகுதி அனைத்து நாடுகள்-957

இந்தக் கணக்கு கூட விஜயகாந்த் வல்லரசு படத்தில்
க்ளைமாக்ஸ் சண்டையின் போது பஞ்ச'சாக கூறிய
கணக்கு தான்..இன்னமும் அப்டேட் பண்ணப்படவில்லை என்றால்
பார்த்துக்கோங்க பாஸ்!

இவ்வாறு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர் மன்றங்களையும் கலைக்குமாறு
பிரபல பதிவர் அறிக்கை விட்டதும்,அத்தனை ரசிகர் மன்றங்களையும் சார்ந்த சுமார் ஏழரைக் கோடி
ரசிகர்கள் மரண அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றனராம்!!
(இங்க தான் நீங்க ஜூம் போயி கவனிக்கணும்,தல அஜித்துக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள்,இவருக்கு கோடிக்கணக்கில்!!)
இந்த அறிவிப்பு பிடிக்காமல் இந்தியாவில் பதினேழு பேரும்,இலங்கையில் எட்டு பேரும்,
உகண்டாவில் இருவரும் தற்கொலை செய்திருக்கிறனர்
மொத்தமாக சேர்த்து ஆயிரத்தி நானூறு பேர் அதிர்ச்சியில் சுய நினைவை இழந்து
வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்!!
அவர்களின் உடல் நிலை கவலைக்கிடமாய் உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கிறன!!

இத்தனை நடந்த போதும்,குறிப்பிட்ட பிரபல பதிவர்,
தனது நாயகிகளான தப்சி மற்றும் ஹன்சிகாவுடன் ஹவாய்
தீவுகளில் உல்லாசமாக இருக்கின்றமை விக்கிலீக்சில்
வெளியான படங்கள் மூலம் தெரியவந்துள்ளது!!

இதனால் ஹன்சிகா நடித்து வரும் வேலாயுதம் படம் வெளி வருவதில்
தடங்கல் ஏற்பட்டுள்ளதாம்!!இதனால் ஆஸ்கார் ரவிச்சந்திரன் குறிப்பிட்ட
பதிவர் மேலே எக்கச்சக்க கடுப்பில் இருக்கிறார் என்பது
உபரித் தகவல்!!


பதிவில் வந்த ஹன்சிகா படங்கள் ஹவாய் தீவில்,பிரபல பதிவருக்கு போஸ் குடுக்கும் போது தங்களால் களவாக எடுக்கப்பட்டதாக விக்கிலீக்ஸ் தங்களது கேபிளில் குறிப்பிட்டுள்ளது!!

கடந்த இரண்டு பதிவுகளுக்கும் இன்ட்லியில் பதினேழு ,பதினைந்து ஓட்டுகள்.
இன்னமும் இரண்டு மூன்று அதிகமாய் போட்டால் பிரபலமாக்குவாங்கள்'லே!
என்ன கஞ்சத்தனம்...போட்டிட்டு தான் போங்களேன்..!!

Post Comment

27 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முத தீக்குளிப்பு

சி.பி.செந்தில்குமார் said...

>>கடந்த இரண்டு பதிவுகளுக்கும் இன்ட்லியில் பதினேழு ,பதினைந்து ஓட்டுகள்.

இதுவே ஜாஸ்த்தி தான்.. ஏன்னா 2 நாளா இண்ட்லில பிராப்ளம்

ம.தி.சுதா said...

ஃஃஃஃபிரபல அந்த பதிவருக்கு உலகம் பூராகவும் பல ஆயிரம் ரசிகர் மன்றங்கள்
இருக்கின்றமை அனைவரும் அறிந்ததே,ஃஃஃஃ

யோவ் மன்றமா அல்லது கள்ள போண்டாட்டியா ?

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
அளவுக்கதிகமான பரசிட்டமோல் என்ன செய்யும்.. (Paracetamol Poisoning)

ம.தி.சுதா said...

பொறும் பொறும் வாறன்..

Unknown said...

கற்பனை மழை கடும் வெள்ளம்.

சூப்பர்

நிரூபன் said...

என்னம்மா யோசிக்கிறாங்க...
ஒத்துக்கிறோம், நேற்றைக்கு உங்க கனவிலை வந்த மேட்டர் தானே இது;-))

பாட்டு ரசிகன் said...

இதை கண்டித்து இங்கே பந்த் நடந்துக் கொண்டிருக்கிறது..

உடனே முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்...

பாட்டு ரசிகன் said...

உங்களுக்காக...
அத்திக்காய் ஆலங்காய் வெண்ணிலவே.....

http://tamilpaatu.blogspot.com/2011/05/blog-post.html

Anonymous said...

கென்யாவை விட உகாண்டாவில் அதிக மன்றம் இருக்கு போலா!!! ஹிஹிஹி

கவி அழகன் said...

ஐயோ

பாலா said...

நீங்களே இப்படி முடிவெடுத்துட்டா நாங்க எங்க போறது? சரி உங்க மன்றத்தை வேணா கலைச்சிடுறோம். ஆனா ஹன்ஸிகா மன்றத்தை கலைக்க போவதில்லை.

FARHAN said...

தங்களின் மன்றத்தினை கலைக்கும் முடிவை மறுபரிசீலினை செய்யவும்
இல்லாவிடில் தங்களின் கண்முன்னே தீக்குளிப்போம்
இப்படிக்கு
அகில உலக
கொள்கை பரப்பு செயலாளர்
மண்ணின் மைந்தன் மொக்கை மன்றம்

தனிமரம் said...

இப்படி எத்தனை பேர் வலையில் கிளம்பி இருக்கிறீர்கள்

Jana said...

This is Too Much...!
இது பற்றி எங்க கம்ளைண்ட் பண்ணவேண்டுமோ நான் அங்க பண்ணிக்கிறேன்.
hi..hi..hi... :)

shanmugavel said...

இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா?நடத்துங்க !நடத்துங்க!

Unknown said...

ஓட்டுகள் மறுபடியும் பதினைந்தில்!
எனக்கு நெல்சன் நம்பர் இது தான்!!

suthan said...

இத்தனை நடந்த போதும்,குறிப்பிட்ட பிரபல பதிவர்,
தனது நாயகிகளான தப்சி மற்றும் ஹன்சிகாவுடன் ஹவாய்
தீவுகளில் உல்லாசமாக இருக்கின்றமை விக்கிலீக்சில்
வெளியான படங்கள் மூலம் தெரியவந்துள்ளது!!
anatha padangalai aduththa pathivil podunga.............

ரஹீம் கஸ்ஸாலி said...

எப்பா உன் மொக்கைக்கு ஒரு அளவே இல்லையா?

Mathuran said...

பாஸ்.. பிந்தி கிடைத்த தகவலின் படி இந்த பதிவை படித்த ரசிகர்கள் சுவரில் முட்டிமோதி தற்கொலை செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்( நான் உள்ளடங்கலாக)

Unknown said...

//Mathuran said...
பாஸ்.. பிந்தி கிடைத்த தகவலின் படி இந்த பதிவை படித்த ரசிகர்கள் சுவரில் முட்டிமோதி தற்கொலை செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்( நான் உள்ளடங்கலாக)//

நோ நோ...இன்னும் எத்தனையோ இருக்கு...

Unknown said...

நண்பர்களே,இன்ட்லி வேலை செய்யுதா??

MANO நாஞ்சில் மனோ said...

//
அது தான் பிரபல மொக்கை பதிவர்(?) மைந்தன் சிவா தனது அனைத்துலக ரசிகர் மன்றங்களையும்
கலைக்குமாறு நேற்று உத்தரவிட்டார் என்ற செய்தி!!///

கொண்டேபுடுவேன்....

MANO நாஞ்சில் மனோ said...

//இந்தியா-5735
இலங்கை-982
ஐக்கிய ராச்சியம்-794
அமெரிக்கா-658
கனடா-432
அவுஸ்திரேலியா-226
மத்திய கிழக்கு நாடுகள்-199
சீனா-98
உகண்டா-78
கென்யா -68
சூடான்-67
மிகுதி அனைத்து நாடுகள்-957//

இத்தனை ஆஸ்பத்திரியா......????
நம்ம பதிவை படிக்கிறவங்க அங்கே போயி அட்மிட் ஆக வசதியா போச்சி....

MANO நாஞ்சில் மனோ said...

//இதனால் ஆஸ்கார் ரவிச்சந்திரன் குறிப்பிட்ட
பதிவர் மேலே எக்கச்சக்க கடுப்பில் இருக்கிறார் என்பது
உபரித் தகவல்!!//


இது சிபி பயல்தான் சந்தேகமே இல்லை...

MANO நாஞ்சில் மனோ said...

என்ன மக்கா உனக்கும் எவனோ மைனஸ் ஓட்டு போட்டுருக்கான்....

Unknown said...

//MANO நாஞ்சில் மனோ said...
//இந்தியா-5735
இலங்கை-982
ஐக்கிய ராச்சியம்-794
அமெரிக்கா-658
கனடா-432
அவுஸ்திரேலியா-226
மத்திய கிழக்கு நாடுகள்-199
சீனா-98
உகண்டா-78
கென்யா -68
சூடான்-67
மிகுதி அனைத்து நாடுகள்-957//

இத்தனை ஆஸ்பத்திரியா......????

நம்ம பதிவை படிக்கிறவங்க அங்கே போயி அட்மிட் ஆக வசதியா போச்சி....//
ஏன் ஐயா ஏன்??
அம்புட்டு கொலை வெறி???

Unknown said...

MANO நாஞ்சில் மனோ said...
என்ன மக்கா உனக்கும் எவனோ மைனஸ் ஓட்டு போட்டுருக்கான்....//

ஆமா பாஸ்..அவன தான் நானும் தேடிக்கிட்டு இருக்கேன்...

Related Posts Plugin for WordPress, Blogger...