Saturday, August 27, 2011

விஜய்+ஜீவா=நண்பன்,ஜீவா+சிம்பு=வில்லன்??

'பில்லா-2' படத்தை அடுத்து அஜீத் நடிக்க இருக்கும் படத்தை இயக்குனர் விஜய் தான் இயக்குவார் என்று தகவல்கள் வெளியாகின. இல்லை.. இயக்குனர் விஜய் இயக்க நடிகர் விஜய் நடிப்பார் என்றும் சொல்லப்பட்டது.

இப்போது விஜய்-விஜய் கூட்டணி உறுதியாகியிருக்கிறது.

நடிகர் விஜய் இப்போது நடித்து வரும் 'நண்பன்' படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் படம், அடுத்து கெளதம் மேனன் இயக்கத்தில் 'யோஹன்' ஆகிய படங்களில் நடிக்க இருக்கிறார். இப்படங்களை முடித்தபின் விஜய்-விஜய் கூட்டணியில் படம் துவங்கும் என்கிறது படக்குழு.

'தெய்வத்திருமகள்' படத்தைத் தொடர்ந்து விக்ரம்-இயக்குனர் விஜய் மீண்டும் இணையும் படத்தை எடுக்க இருக்கிறார்கள். அதற்குப் பிறகு விஜய்யை இயக்குவார் விஜய் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த படத்திற்கு இசையமைக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார். ஏற்கனவே இயக்குனர் விஜய்யின் முந்தைய படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்றாலும், நடிகர் விஜய் நடிக்க இருக்கும் படத்திற்கு இசையமைப்பதால் மிகந்த சந்தோஷத்தில் இருக்கிறாராம் ஜிவி பிரகாஷ்.

========================================================================================

கௌதம் மேனன், மிஷ்கின், ஜனநாதன் என்று அடுத்தடுத்து நட்சத்திர இயக்குநர்களின் புராஜெக்ட்டுகளில்... ஜீவா. இதுவரை எந்த சர்ச்சைகளிலும் சிக்காதவர், சமீபத்தில் சிம்பு பற்றி வெளியிட்ட ஸ்டேட்மென்ட் பரபரப்புத் தீயைப் பற்றவைத்தது. ''அப்படி என்னதான் ரௌத்திரம்?'' என்று அறிய விரும்பினேன்.

''எப்படி இருக்கு 'நண்பன்’ அனுபவம்?''

''இது இந்தி ரீ-மேக் படமா இருந்தாலும், ஷங்கர் சார் அதைத் தமிழுக்குத் தகுந்த மாதிரி அழகான அனுபவமா மாத்தி இருக்கார். பல வெற்றிகளுக்குப் பிறகும் எளிமையா இருப்பது, படப்பிடிப்புக்கு முன்தயாரிப்புகளோட வர்றதுனு ஷங்கர் சாரோட வெற்றிக்கு ஏகப் பட்ட காரணங்கள். 'ஷங்கர் சார் ஷூட்டிங் ஸ்பாட்டை இவ்வளவு கலகலப்பா இதுக்கு முன்னே பார்த்ததே இல்லை’னு எல்லோரும் சொல்றாங்க. அப்படி ஸ்ட்ரிக்ட்டான ரூல்ஸ் ரெகுலேஷன் முன்னாடி இருந்ததுபோல. நாங்க போய் எல்லாத்தையும் உடைச்சுட்டோம்!''

மேலும் படங்களுக்கு....

''நாலு வார்த்தைகளில் கேள்வி கேட்டால், இரண்டு வார்த்தைகளில் பதில் சொல்வது விஜய் வழக்கம். மனிதர் ஸ்பாட்ல எப்படி?''

''விஜயைவிட நான் 10 வயசு சின்னவன். ஆனா, மனிதர் அவ்வளவு ஃப்ரெண்ட்லியா இருப்பார். ஏதாவது சீரியஸான ஷாட்டுக்கு முன்னாடி அவரைப் பயங்கரமாக் கலாய்ச்சுடுவேன். 'டேய்... நீ தயவுசெஞ்சு பக்கத்துல நிக்காதடா! டேஞ்சரஸ் ஃபெலோ நீ!’னு ஜாலியா மிரள்வார். ஒருமுறை அந்தமானில் படகில் போயிட்டு இருக்கும்போது... பேய் மழை. எந்தத் தீவில் இருக்கோம்னு தெரியாத அளவுக்கு கும்மிருட்டு. 'டேய்... இங்கேயே ஏதாவது நண்டு நத்தைகளைப் பிடி. சுட்டுச் சாப்பிட்டுப் பொழுதைக் கழிப்போம்’னு சொல்லிட்டு, ஜாலியா இருந்தார் விஜய்!''

''கௌதம், மிஷ்கின்னு அடுத்தடுத்து பெரிய இயக்குநர்களின் படங்களில் கமிட்டாகி இருக்கிறீர்களே?''

''உண்மையில் கௌதம் மேனனைத் தவிர இதுவரை வேறு யாரிடமும் நானாகச் சென்று வாய்ப்பு கேட்டது இல்லை. 'உங்க மாதிரி ஒரு டைரக்டர்கூட வொர்க் பண்ணணும்னு ஆர்வமா இருக்கேன். இல்லைன்னா, 'குவார்ட்டர் சொல்லு மச்சி’னு ராயபுரம் பக்கமே செட்டில் ஆகிடுவேன் போலிருக்கு’னு சொன்னேன். 'என்ன ஜீவா இப்படிச் சொல் றீங்க. நானே லோக்கலா ஒரு படம் பண்ணலாம்னு இருக்கேன்’னு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் கௌதம். 'லோக்கலா எடுத்தாலும் அதிலேயும் உங்க டச் இருக்குமே’ன்னேன். சமந்தாதான் ஜோடி. சந்தானமும் இருக்கார். கலக்கலாக் கலாய்ப்போம்!''

''மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கும் 'முகமூடி’ பற்றி சொல்லுங்க?''

''காதல், டெக்னாலஜினு ஒரு சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்டுக்குத் தேவையான எல்லா விஷயங்களும் 'முகமூடி’யில் இருக்கு. குங்ஃபூ பிராக்டிஸ், பாடி பில்டிங்னு ஏகப்பட்ட வேலைகள். சிக்ஸ் பேக் வைக்க முடியாட்டியும் அட்லீஸ்ட் நாலஞ்சு பேக் வெச்சாத்தானே மரியாதையா இருக்கும்? கண்டிப்பா 'முகமூடி’ பார்ட் 1, பார்ட் 2 வரும்னு நம்பறேன்.

'வந்தான் வென்றான்’ முடிச்சாச்சு. பிரமாதமா வந்திருக்கு. காமெடி, பாடல் கள்னு எல்லாத்தையும் கதையோட அழகாக் கோக்குறதுல கண்ணன் சார் ஸ்பெஷல். அடுத்து, நானும் ஜெயம் ரவியும் ஜனநாதன் சார் படத்தில் நடிக்கிறோம். ஒரு ஸ்ட்ராங்கான மெசேஜ் ஜனா சார் படத்தில் இருக்கும். அதைத் தொடர்ந்து நானும் ஆர்யாவும் சேர்ந்து நடிக்கலாம்னு இருக்கோம். அந்தப் படத்தை எஸ்.எம்.எஸ். ராஜேஸ் இயக்குவார். லைஃப் ஜாலியா இருக்கு பாஸ்!''

''ஆமா, நீங்களும் சிம்புவும் ஒரே தெருவில்தானே குடியிருக்கிறீர்கள். சமீபத்தில் 'சிம்பு எனக்கு நண்பன் இல்லை’ என்று சொல்லிவிட்டீர்களே, ரெண்டு பேருக்கும் அப்படி என்னதான் பிரச்னை?''

''எதுவுமே இல்லை என்பதுதான் பிரச்னை. 'கோ’ முதலில் அவர் நடிக்க வேண்டிய படம். பிறகு எனக்கு வந்தது. 'கஜினி’... அஜீத் சார் நடிக்க வேண்டியது, 'தூள்’, 'சிங்கம்’ இரண்டும் விஜய் சார் நடிக்க வேண்டியதுனு ஏற்கெனவே தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட முன் உதாரணங்கள் இருக்கு. முதலில் ஒரு படத்துக்கு ஒரு நடிகர் கமிட் ஆகி, பிறகு இன்னொரு நடிகர் நடிப்பது சாதாரணமான சம்பவம்.

அந்த வகையில்தான் 'கோ’ படத்தில் நான் நடிச்சேன். அடுத்து சிம்புவுக்குச் சொன்ன கதையைத்தான் கௌதம் சார் எனக்காகப் படம் பண்ணப்போறார்னு ஏகப் பட்ட வதந்திகள். ஆனால், இது புது ஸ்க்ரிப்ட். இப்படிப் பத்திரிகைகளில் கிசுகிசுவாக வந்த விஷயம் இது. சமீபத்தில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், 'சிம்பு உங்கள் நண்பரா?’னு கேட்டாங்க. 'இல்லை’னு சொன்னேன். தொடர்ச்சியா சிம்புவைப் பற்றியே கேள்விகள் வர, 'சிம்புவைக்கூட நம்பிடலாம். அவர் நேருக்கு நேர் சண்டை போடக்கூடியவர். ஆனா, நண்பர்கள் மாதிரி கூடவே இருப்பவர்களிடம்தான் ஜாக்கிரதையா இருக்கணும். அவங்கதான் பின்னாடி வந்து குத்திட்டுப் போயிடு வாங்க’னு சொன்னேன். ஆனால், நான் சொன்னது அப்படியே தலைகீழா மாறி பத்திரிகைகளில் நெகட்டிவா வந்துடுச்சு. டாம் குரூஸ் எப்படி எனக்குப் பழக்கம் இல்லையோ, நண்பர் இல்லையோ, அதே மாதிரிதான் சிம்புவும் எனக்கு நண்பர் இல்லை. அதே நேரத்தில் எனக்கு அவரோடு எந்தப் பிரச்னையும் இல்லை. சம்பாதிப்பதற்காக நான் சினிமாவுக்கு வந்தவன் கிடையாது. நான் பிறக்கும்போதே 'பார்ன் வித் சில்வர் ஸ்பூன்’தான். சின்ன வயதில் இருந்து சினிமா ஆர்வம் அதிகம். நல்ல படம் பண்ணணும், எல்லோரோடும் ஃப்ரெண்டா இருக்கணும்னு நினைக்கிறவன் நான். ஏனோ சிம்புவுடன் ஆரம்பத்தில் இருந்தே எனக்கு செட் ஆகலை. மற்றபடி விஜய் சாரில் தொடங்கி விஷால், ரவி, ஆர்யானு மற்ற எல்லோரும் ஃப்ரெண்ட்ஸாத் தான் பழகுறோம். நான் என் தன்னம்பிக்கையையும் உழைப்பையும் மட்டுமே நம்புறவன். மற்றபடி எனக்கு யாரைக் கண்டும் பயம் இல்லை!''

நன்றி விகடன்

Post Comment

Wednesday, August 24, 2011

நாஸ்ட்ரடாமஸான் மண்டையோட்டை எடுத்து மதுவை ஊற்றிக் குடித்தவன்!!

யார் இந்த நாஸ்ட்ரடாமஸ்?
இவர் ஒரு பிரெஞ்சு கத்தோலிக்கர். இவருடைய மூதாதையர் யூதர்கள்.
இவருடைய பாட்டனார்களிடம் எபிரேய மொழியும் சோதிடமும்
'கபாலா'(Kabbala) எனப்படு யூத மர்ம சாஸ்திரமும் கற்றார். அதன்பின்னர் மருத்துவக்கல்வி பயின்று டாக்டர் ஆனார்.அக்காலத்திய சமய சித்தாந்தங்களையும் தெளிவாகக் கற்றார்.பரவியிருந்த பிளேக் நோயை ஏதோ ஒரு ரகசிய முறையைப் பயன்படுத்தி குணப்படுத்தி வந்தார். மற்றவர்களால் குணப்படுத்தமுடியாத
பலவியாதிகளையும் அவராலே தீர்க்க முடிந்தது.
பிறகு யாருக்குமே தொ¢யாமல் ரசவாத வித்தை, மந்திரவாதம்,ஞான வித்தை முதலியவற்றையும் கற்றுக்கொண்டார். சில ஆண்டுகளில்
மருத்துவத்தில் டாக்டரேட் பட்டமும் பெற்றார். பல
காரணங்களால் அவர் ஒரு நாடோடியாக விளங்கினார்.
ஸ்காலிஜர் என்னும் இன்னொரு ஞானியிடம் மேலும் பல மர்ம சாஸ்திரங்களின் நுணுக்கங்களை அறிந்துகொண்டார்.
அக்காலத்தில் கத்தோலிக்க சமயத்தில் இன்க்விஸிஷன்(Inquisition)
எனப்படும் சமயச்சீரமைப்பு நடைபெற்று வந்தது. சமயத்தினுள்
புகுந்துவிட்ட பலவகையான கோட்பாடுகளையும் பகுத்தறிவு
வாதத்தையும்
ஆராய்ச்சிகளையும் நீக்குவதற்கு மிகக்கடுமையான விசாரணைகளையும்,சித்திரவதைகளையும், தண்டனைகளையும்
சமய அதிகாரிகள்
கடைபிடித்துவந்தனர்.
Nostredame's claimed birthplace before its recent renovation, Saint-Rémy-de-Provence

நாஸ்ட்ரடாமஸின் ரகசிய மருத்துவ முறைகள், சோதிடஞானம், மந்திரவாதம் முதலியவைகள் அந்த கத்தோலிக்க சமய அதிகாரிகளை ஈர்த்திருந்தன. ஆகவே அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். 'இன்குவிஸிஷன்' விசாரணையில் கடுமையான சித்திரவதைகளைப் பயன்படுத்தி வந்தார்கள். பலவகையான சித்திரவதைகளுக்குப் பின்னர்,
விசாரிக்கப்பட்டவர் விசாரணையின் முடிவில் - உயிரோடு இருந்தால் பெரும்பாலும் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டு உயிருடன்
கொளுத்தப்படுவார்.

ஒருமுறை ஒரு சிறு கிராமத்திலுள்ள கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்த இளம் சன்னியாசி ஒருவரைக் கண்டார். உடனே
அவர் இருந்த இடத்திற்குச்சென்று தொப்பியைக் கழற்றிவிட்டும் மண்டியிட்டு அந்த சன்னியாசியின் அங்கியின் நுனியை எடுத்து வணக்கத்துடன்
முத்தமிட்டார். ஒன்றுமறியாத சன்னியாசி காரணம் கேட்டதற்கு அவர் பிற்காலத்து போப் ஆண்டவருக்குத் தம் வணக்கத்தைத் தெரிவித்ததாகக் கூறினார்.
Nostradamus' current tomb in the Collégiale Saint-Laurent, Salon, into which his scattered remains were transferred after 1789.

1551-ஆம் சோதிடக்கணிப்புகளை 1550-ஆம் ஆண்டிலேயே வெளியிட்டார்.
அவர ்கூறியபடி அத்தனை நிகழ்ச்சிகளுமே நடந்துவிட்டன. ஆகவே அதிலிருந்து தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் சொந்தமாகப் பஞ்சாங்கம் தயா¡¢த்து வெளியிடலானார்.

இச்சமயத்தில்தான் உலகின் வருங்காலத்தைப் பற்றி ஆராயலானார்.ஈராண்டுகள் மிகவும் பிரயாசைப்பட்டு கி.பி.1553-ஆம் ஆண்டிலிருந்து கி.பி. 3797-ஆம் ஆண்டுவரை நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகளச்சுலோகங்களாக இயற்றிவைத்தார்.

ஹென்றி மன்னனுக்கு மரண ஆரூடம்

அப்போது பிரான்ஸை ஆண்டவர் இரண்டாம் ஹென்றி மன்னர். அவர் எப்போது எப்படி இறப்பார் என்று முன்கூட்டியே நாஸ்ட்ரடாமஸ் தம்முடைய சுலோகத்தில் கூறியிருந்தார். அதன்படி ஒரு வீர விளையாட்டின்போது அவர் இறந்தார். அப்போது அவர் அணிந்திருந்த
பொன்னாலான முகக்கவசத்திலுள்ள துவாரத்தின் வழியாக போட்டியாளா¢ன்
ஈட்டி நுழைந்து அவருடைய கண்ணில் பாய்ந்து மூளைக்குச் சென்று முனை முறிந்து விட்டது. கவசத்தையும் கழற்றமுடியாமல் ஈட்டிமுனையையும் எடுக்க முடியாமல் ஹென்றி துடிதுடித்து இறந்தார்.

இதையெல்லாம் முன்கூட்டியே அறிவித்த நாஸ்ட்ரடாமஸின் சுலோகங்களால் கவரப்பட்டாள் பிரெஞ்சுப் பேரரசி, கேத்தா¢ன் டி மெடிச்சி.ஸொலோன் நகரத்துக்கு தானே நோ¢ல் சென்று நாஸ்ட்ரடாமஸைக் கேத்தா¢ன் சந்தித்தார். 45 நாட்கள் மந்தி¡£கம், ஆவிகளின் தொடர்பு, வானநூல் போன்ற முறைகளைக் கடைபிடித்து வருங்கால நிகழ்ச்சிகளை ஒரு கண்ணாடியின் மூலம் பேரரசியைக் காணவைத்தார்.

சைத்தானின் சீடரா?

அதன்பின்னர் நாஸ்ட்ரடாமஸ் ஐரோப்பா முழுவதும் புகழ் பெற்றார். ஆனாலும்கூட அவரை சைத்தனின் சீடர் என்று கருதியவர்களும் பலர் இருந்தனர். மருத்துவர் என்ற ஹோதாவைவிட சோதிடர் என்ற முறையிலேயே
பொன்னும் பொருளும் புகழும் பெற்றார்.


நல்ல புகழின் உச்சியில் இருந்த நாஸ்ட்ரடாமஸ் கி.பி.1566-ஆம் ஆண்டு
இறந்தார். அவரைப் புதைத்துவிட்டார்கள்.


மண்டை ஓட்டில் மது ஊற்றினான்!

நாஸ்ட்ரடாமஸான் இறப்புக்குப் பின்னர் அவருடைய மண்டையோட்டில் மதுவை ஊற்றி யார் அருந்துகிறார்களோ அவர்களுக்கு நாஸ்ட்ரடாமஸின் சக்திகள் அனைத்தும் வந்துவிடும் என்றும், ஆனால் அவ்வாறு செய்பவர்கள் உடனேயே இறந்துவிடுவார்கள் என்றும் நம்பப்பட்டது.
நாஸ்ட்ரடாமஸ் இறந்து இருநூற்று இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் கி.பி. 1791-ஆம் ஆண்டு மே மாதத்தில் ஒருநாள் நள்ளிரவில் நாஸ்ட்ரடாமஸான் புதைகுழியைத் தோண்டி அவருடைய சவப்பெட்டியை மூன்றுபேர் திறந்தார்கள். அவர்கள் பிரெஞ்சுப் போர்வீரர்கள். அன்று அவர்கள் மிதமிஞ்சி குடிதிருந்தார்கள். போதை ஏறியநிலையில் அவர்கள் நாஸ்ட்ரடாமஸின் கல்லறையைத் தேடிச்சென்று திறந்தார்கள்.

அந்த சமயத்தில் பிரெஞ்சுப்புரட்சியின் தொடர்பாகக் கலவரம் நடந்து கொண்டிருந்தது.
சவப்பெட்டிக்குள் நாஸ்ட்ரடாமஸின் எலும்புக்கூடு இருந்தது. அதன்கழுத்தில் 'மே, 1791' என்று பொறிக்கப்பட்டிருந்த பித்தளைப்பட்டயம் ஒன்று விளங்கியது. நாஸ்ட்ரடாமஸை 225 ஆண்டுகளுக்கு முன்னர் அடக்கம் செய்யும்போது அந்தப் பட்டயம் அவருடைய கழுத்தில் மாட்டப்பட்டிருக்கவேண்டும்.

அம்மூவா¢ல் ஒருவன் நாஸ்ட்ரடாமஸான் மண்டையோட்டை எடுத்து அதில் மதுவை ஊற்றிக் குடித்தான். அப்போது எங்கிருந்தோ வந்த துப்பாக்கிக் குண்டு ஒன்று அவனுடைய கழுத்தில் பாய்ந்தது.
உடனே நாஸ்ட்ரடாமஸான் புதைகுழிக்குள்ளேயே அவன் விழுந்து மாண்டுபோனான்.
சுற்றி நிகழ்ந்துகொண்டிருந்த கலவரத்தில் யாரோ யாரையோ நோக்கிச்சுட்ட குண்டு அவனுடைய கழுத்தில் பாய்ந்துவிட்டது!

மற்ற இருவருக்கும் 'மே 1791' என்று பட்டயத்தில் எழுதியிருந்த காரணமும் அப்போதுதான் புலப்பட்டது. இன்ன ஆண்டு இன்ன மாதத்தில் தன்னுடைய புதைகுழியை யாராவது திறப்பார்கள் என்று நாஸ்ட்ரடாமஸ¤க்கு 225 ஆண்டுகளுக்கு முன்னமேயே தொ¢ந்திருந்திருக்கிறது. ஆகவேதான் தன்னுடைய கழுத்தில் அந்தப் பட்டயத்தைக் கட்டிக்கொண்டு இறந்திருக்கிறார்.

"புதைகுழியை யார் திறக்கிறார்களோ, அவர்கள் உடனடியாக அதை மூடவில்லையென்றால் பெருங்கெடுதல் நேரிடும்" என்று அவருடைய தீர்க்கதரிசனங்களின் 907-ஆவது பாடலில் கூறியிருந்தார்.அவருடைய புதைகுழியைத் திறந்தவர்களில் மற்றவர்களும் திரும்பிச்
சென்றுகொண்டிருந்தபோது எதிரிகளால் சுடப்பட்டு இறந்தார்கள்.

Michel de Nostredame

Nostradamus: original portrait by his son Cesar
Born14 December or 21 December December 1503
Saint-Rémy-de-Provence, France
Died2 July 1566 (aged 62)
Salon-de-Provence, France
OccupationApothecary, author, translator,astrological consultant
Known forProphecy


பதிவுக்கான தகவல் பல மூலங்கலிளிருந்து திரட்டப்பட்டது.

Post Comment

Tuesday, August 23, 2011

ஹக்கேர்ஸ் தொல்லை+நோன்பு பற்றிய வாதம் !

குறிப்பு:எனது பேஸ்புக் மற்றும் யாகூ எக்கவுண்ட்கள் ஹக் பண்ணப்பட்டன கடந்த இரு நாட்களில் இரண்டு தடவை.இன்னமும் முயற்சிகள் நடக்கின்றன.என்னால் கூட எனது பேஸ்புக்கிட்கு போக முடியவில்லை..மாறி மாறி தடைகள்.எனக்கு மட்டுமல்ல மதிசுதா,மதுரன் போன்ற பதிவர்களும் கடந்த சில நாட்களுக்குள் இதே வேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்.இவனுகளை என்ன செய்வதென்று தெரியவில்லை..நாயிலும் கேவலமான பிறப்புகள்.சரி அதனை விடுவோம்.
ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம், நன்மைகளை அதிகம் செய்யும் மாதம், பிழைப்பொறுப்புத் தேடும் மாதம், அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் வாய்ப்பைப் பெறும் மாதம், சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்படும் மாதம், சாத்தான்கள் விலங்கிடப்படும் மாதம், ஆயிரம் மாதங்களை விட சிறப்புமிக்க ஒரு இரவைக் கொண்ட மாதம், நரகவாதிகள் நரகத்திலிருந்து விடுதலை பெறும் மாதம், குர்ஆனை இப்பூவுலகத்தில் இறக்குவதற்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்த மாதம், துஆக்கள் அங்கீகரிக்கப்படும் மாதம் என்று இந்த மாதத்திற்கு பல சிறப்புக்கள் இருப்பதாக இஸ்லாமிய மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.இம்மாதத்திலும் நன்மைகள் செய்யாதவர் எல்லா நன்மைகளையும் இழந்தவர் என்றும் இந்த மாதத்தில் அல்லாவிடம் பாவமன்னிப்புக் கேட்காதவர் அல்லாவின் அருளை விட்டுத் தொலைவில் இருப்பார்கள் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்.

முஸ்லிம் நண்பர்கள் அனைவரும் இப்போது நோன்பு நோற்றுக்கொண்டு இருக்கின்றனர்.ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு நம்பிகைகள்.அதனை நாங்கள் குற்றம் குறை கூற முடியாது.நோன்பை முறிக்கும் செயல்களாக சில செயல்கள் விக்கிப்பீடியாவில் குறிப்பிடப்பட்டுள்ளன.அவையாவன,

1. சாப்பிடுதல், குடித்தல் போன்றவற்றால் (அவைகள் உடலுக்கு பயன்தராத புகைபிடித்தல் போன்றவையாக இருந்தாலும் சரியே) நோன்பு முறிந்து விடும்.

2. முத்தமிடுதல், அணைத்தல், சுய இன்பம் போன்றவற்றால் இந்திரியம் வெளியானால் நோன்பு முறிந்து விடும், தூக்கத்தில் தானாகவே இந்திரியம் வெளியானால் நோன்பு முறியாது.

3. வேண்டுமென்று வாந்தி எடுத்தால் நோன்பு முறிந்து விடும். தானாகவே வாந்தி வந்தால் நோன்பு முறியாது.

4. உணவைப் போன்று சக்தியூட்டக்கூடிய பொருட்களை (மருந்து, குளுக்கோஸ் போன்றவைகளை) ஊசி போன்றவற்றின் மூலம் உடம்புக்கு செலுத்தினாலும் நோன்பு முறிந்து விடும்.

5. மாதவிடாய் மற்றும் பிரசவ இரத்தம் வந்துவிட்டால் நோன்பு முறிந்து விடும்.


இவை அனைத்தும் ஓகே,எனக்கு என்ன சந்தேகம் என்றால்,நோன்பு காலத்தில் குறிப்பிட்ட அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி நோன்பு நோற்றால் மட்டும் போதுமா அல்லது மனதும் நல்ல சிந்தனைகளை செயல்களை சிந்திக்க வேண்டுமா?நோன்பு காலத்தில் கெட்ட விடயங்களை சிந்திப்பதும்,தகாத வார்த்தைகளை பேசுவதும் ஏற்புடையதா??அவ்வாறு அத்தகைய வார்த்தைப்பிரயோகங்களை பாவிப்பதன் மூலம் நோன்பின் மகத்துவம் சிதைக்கப்படுமா இல்லையா என்பதே!


"பசி எப்படிப்பட்டது என்பது உணரப்படுகிறது, உடலின் ஆரோக்கியம் பேணப்படுகிறது என்றெல்லாம் காரணங்கள் கூறினாலும் நோன்பினால் இந்தப் பயன்கள் இருக்கலாம். இந்தப் பயன்களைக் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு நோன்பு நோற்க வேண்டுமா? நிச்சயமாக இல்லை. நாம் பக்குவப்படுவதும், இறையச்சமுடையவராக ஆவதும்தான் நோன்பின் பிரதான நோக்கம். திருக்குர்ஆன் 2:183வது வசனம் இதனைத் தெளிவுப்படுத்துகிறது.

”பொய் சொல்வதையும், பொய்யான அடிப்படையில் செயல் படுவதையும் எவர் விடவில்லையோ அவர் தனது உணவையும் பானத்தையும் விட்டிருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை,” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், அபூஹூரைரா (ரலி) நூல்கள்- புகாரி, அஹ்மத், திர்மிதி, அபூதாவூத், இப்னுமாஜா.

தவறான நடவடிக்கைகளிலிருந்து விடுபடாமல், பட்டினிக் கிடப்பதோ, தாகித்திருப்பதோ இறைவனுக்குத் தேவையில்லை. என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து விளங்கலாம்"

(நன்றி இஸ்லாம் கல்வி)

எனக்கு தெரிந்த ஒரு முஸ்லிம் நண்பன் நோன்பு நோற்கும் இதே காலத்தில் தொடர்ந்து தகாத வார்த்தை பிரயோகங்களை சமூக வலைத்தளங்களில் பாவித்து வருகிறார்.இதனை பார்க்கும் பொது அவர் பிடிக்கும் நோன்பின் மகத்துவம் செயலற்றுப் போகிறது என்பதை நான் சிந்தித்தேன்.நிச்சயமாக எந்த ஒரு சமயமும் நோன்பின் போது இத்தகைய நடவடிக்கைகளை ஆதரிக்கப்போவதில்லை என்பது நிதர்சனம்.ஆனால் வெறுமனே கடமைக்காக நோன்பு பிடிப்பதை விட அதன் மகத்துவத்தை உணர்ந்து நோன்பு பிடிப்பவர்களுக்கே அதன் உண்மையான பயன் சென்றடையும் என்பது தெளிவு.


அதிகப்படியான கோபத்தின் வெளிப்பாடும்,தகாத வார்த்தைப்பிரயோகங்களும் நோன்பு காலத்தில் தவிர்க்கப்பட வேண்டிய விடயங்கள் தானே?வெறுமனே முஸ்லிம் நண்பர்களை அவமதிக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு இந்தப்பதிவை எழுதவில்லை ஆனால் நோன்பின் மகத்துவத்தை அனைவரும் புரிந்து கொள்ளல் வேண்டும் என்ற நோக்கத்துடனே எழுதுகிறேன்.இது முஸ்லிம் நண்பர்களுக்கு மட்டுமன்றி அனைத்து மத நண்பர்களுக்கும் பொருந்தும்.அனைத்து மதங்களும் அன்பு வழியையே அடிப்படியில் போதிக்கின்றன.அதனை விளங்கிக்கொள்ளாத நபர்கள் இத்தகைய புனிதமான ரமலான் மாதத்தில் தங்களை கீழ்த்தரப்படுத்துவது மட்டுமல்லாமல் நோன்பின் மீது மற்றையவர்கள் வைத்திருக்கும் மரியாதையையும் கெடுத்து விடுகிறார்கள்!!


May the light that we celebrate at Ramadan show us the way and lead us together on the path of peace and social harmony !!

அன்புடன்:

Post Comment

Saturday, August 20, 2011

சாமர சில்வா என்கிற தலைசிறந்த துடுப்பாட்டவீரர்!!இலங்கை ஒருநாள் துடுப்பாட்ட வரிசையில் அசைக்க முடியாத ஒரு வீரராக அண்மைய காலங்களில் வலம்வரும் ஒரு துடுப்பாட்ட நட்சத்திரம் தான் "லிண்டம்லிலகே பிரகீத் சாமர சில்வா"!இலங்கை என்று சொன்னாலே வெளிநாட்டவர்களின் வாயில் அண்மைய காலங்களில் கதைபடும் அளவுக்கு மிக பிரபலமாக இருந்து வரும் சாமர சில்வா இலங்கை கிரிக்கட் அணியின் தெரிவுக்குழுவின் நம்பிக்கை நட்சத்திரமும் கூட!

1979 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதின்னான்காம் தேதி இலங்கையில் பாணதுறை எனப்படும் இடத்தில் இலங்கை கிரிக்கட்டை வாழவைக்க உதித்த செம்மல் சாமர சில்வா!பாணதுற ராயல் கல்லூரியில் தனது கல்வியை தொடர்ந்த சாமர சில்வா 1998 இல் முதல்தர கிரிக்கட் போட்டிகளில் களமிறங்கி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்! 2007 ஆம் ஆண்டு உலகக்கிண்ண தொடரில் ஒரு நான்கு ஐந்து அரைச்சதங்களை மத்தியவரிசையில் வந்து விளாசி இப்போ இன்று மட்டும் ரசிகர்கள் மனதில் நாற்காலி போட்டு அமர்ந்திருக்கும் நாயகன் இப்போ நான் இந்தப் பதிவை எழுதும் போது கூட ஒரு சிறந்த சாதனையாக பூச்சியத்தில் ஆட்டமிழந்து அவுஸ்திரேலிய அணிக்கெதிரான தீர்க்கமான தொடரை தீர்மானிக்கும் போட்டியில் இலங்கை அணிக்கு ஒரு கிளுகிளுப்பை ஏற்படுத்திவிட்டு சென்றிருக்கிறார்!

மொத்தமாக எழுபத்தி இரண்டு ஒருநாள் போட்டியில் விளையாடியிருக்கும் சாமர சில்வா,ஒரே ஒரு சதம் மற்றும் 'பண்ணி இரண்டு" அரை சதங்களை விளாசித்தள்ளி இருக்கிறார்!இவற்றில் நான்கு 2007 ஆம் ஆண்டு உலகக்கிண்ண தொடரில் பெறப்பட்டதுடன் அந்த ஒரே ஒரு சதம் அந்த உலகக்கிண்ண தொடருக்கு முன்பதாக இந்திய அணிக்கெதிராக பெறப்பட்டது.அப்போ போர்ம்'க்கு வந்த சாமர சில்வா இன்று வரை அந்த போர்ம்'ஐ தொடர்ந்து வருகின்றமை அவரது அண்மைய சாதனைகளை பார்க்கும் போது தெட்டத்தெளிவாக தெரிகிறது!அவரது பன்னிரண்டு அரைச்சதங்களில்,முதலாவது அவரது முதல் அறிமுகப்போட்டியில் அவுஸ்த்ரேலிய அணிக்கெதிராக பெறப்பட்டது.உலகக்கிண்ணம்,அறிமுகப்போட்டி தவிர்த்து மிகுதியாக இருக்கும் எழு அரைச்சதங்களையும் இலங்கை அணியின் 'பல வெற்றி வாய்ப்புகளை தடுத்து" பெற்று சாதனை படைத்திருக்கிறார்.

பெரும்பாலும் ஒரு நாள் போட்டியில் முப்பத்தைந்து,நாற்பது ஓவர்களின் பின்னர் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அடித்தாட வேண்டிய இறுதி தருணங்களில் வந்து அத்தனை நாட்களாக நோன்பு நோற்று முடிந்து வந்தவனை போல பந்துகளை விழுங்கி ஏப்பம் விடுவதில் அவருக்கு நிகர் அவரே!!ரசல் ஆர்னோல்ட்'ஐ அவர் ஓய்வு பெறும் போது பிரதிநித்துவம் செய்ய அணிக்குள் வந்த புயல் என்று சாமர சில்வாவை ஆரம்ப காலத்தில் சொல்லும் போது நான் சந்தேகப்பட்டேன் அப்பவே..இப்ப அதனை நிரூபிக்கிறார் நம்ம தலைவர்!!


சமூக வலைத்தளங்களில் கிரிக்கட் விரும்பி இலங்கை ரசிகர்களால் பெரும்பாலும் பாவிக்கப்பட்ட ஒரே கிரிக்கட் நாமம் சாமர சில்வா!!எவ்வளவு தான் கடி மேல் கடி விழுந்தாலும் மீசையில மண் ஒட்டாத நட்சத்திரம் சாமர சில்வா,நாட்பத்தைந்தாவது ஓவர்களில் கஷ்டப்பட்டு பத்து பந்துகளை வீணாக்கி பெறப்படும் ஒரே ஒரு ஓட்டத்தை பூர்த்தி செய்ய உசிரைக்கூட பொருட்படுத்தாது பாயக்கூட தயங்கியதில்லை என்பதிலிருந்து அவர் எந்தளவுக்கு இலங்கை கிரிக்கட்டின் எழுச்சிக்கு பயன்பட்டிருக்கிறார் எனபதை நீங்கள் ஊகித்து அறியலாம்!!

சில சமயங்களில் அவருக்குள்ளே ஒரு வேகம் பிறக்கும்..அப்போது அடிப்பார் பாருங்கள் கையிலிருக்கும் பேட் கூட பறக்கும் பாஸ்!!சும்மா அவரின் இடத்தை தக்க வைக்க அவர் தட்டும் சிங்கிள் எங்கயாச்சும் மிஸ் ஆகி எல்லைக்கோட்டை தொட்டுவிட்டால் அவரின் சந்தோசத்துக்கு அளவே இருக்காது!!
இலங்கை கிரிக்கட் அணியின் ரசிகர்கள் கைகளில் சாமர சில்வாவோ,அல்லது அவரை சளைக்காமல் களைக்காமல் தெரிவு செய்யும் தெரிவுக்குழுவினரோ கைக்கெட்டிய தூரத்தில் சிக்குவார்களாய் இருந்தால் அவர்கள் பாடு ரொம்பக் கஷ்டம் தான் போங்கள்!அவ்வளவு அன்பில் இருக்கிறாங்க நம்ம பசங்க!!

இன்னிக்கு நடக்கும் நான்காவது ஒருநாள் போட்டியிலும் வான வேடிக்கை காட்டி இருக்கும் சாமர சில்வாவை நினைக்க நினைக்க மனம் பெருமை கொள்கிறது!!வாழ்க சாமர சில்வா..வளர்க உன் ரசிக பெருமக்கள்!!

Post Comment

Wednesday, August 17, 2011

அமெரிக்காவில் ஹனிமூன் போகலாம்!!

சுகாதாரம்,வேலைவாய்ப்பு,கல்வி,கலாச்சாரம் போன்ற காரணிகளை ஆராய்ந்து அமெரிக்காவின் தலைசிறந்த பத்து நகரங்களை தெரிவு செய்திருக்கின்றனர்.முக்கிய விடயம் என்னவெனில் அத்தனையும் மக்கள் தொகை ஐம்பது ஆயிரத்துக்குட்ட்பட்ட நகரங்களையே கருத்தில் கொண்டிருக்கின்றனர்.அதன் படி தெரிவுசெய்யப்பட்ட நகரங்களின் வரிசை இதோ:

No. 10 - Chanhassen, MN
Population: 23,000
Unemployment: 5.5%


No. 9 - Mukilteo, WA
Population: 20,300
Unemployment: 8.2%


No. 8 - Middleton, WI
Population: 17,400
Unemployment: 5.1%

No. 7 - Liberty, MO
Population: 29,100
Unemployment: 7.6%


No. 6 - Hanover, NH
Population: 8,600
Unemployment: 4.4%


No. 5 - Papillion, NE
Population: 18,900
Unemployment: 4.2%No. 4 - Leesburg, VA
Population: 42,600
Unemployment: 4.1%


No. 3 - Solon, OH
Population: 23,300
Unemployment: 8.2%


No. 2 - Milton, MA
Population: 27,000
Unemployment: 6.6%


No. 1 - Louisville, CO
Population: 18,400
Unemployment: 6.3%

கையில காசு இருந்தா எங்கயும் போய் வாழலாம்.முக்கியமா இந்த இடங்களில் கிரீஸ் மனிதர்கள் தொல்லை இல்லையாம்!!தாராளமாக நிம்மதியாக வாழலாம்.முன் பதிவு செய்ய என்னை தொடர்பு கொள்ளுங்கள்.தொலைபேசி கட்டணம் இலவசம்!!

இன்றைய கிரிக்கட்:

ஹராரேயில் நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று ஜிம்பாபே அணி ஒரு நாள் தொடரை கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது!டேவ் வட்மோர் பயிர்ச்சியாளராய் இருந்த போது பல முன்னணி அணிகளை வீழ்த்தி முன்னேறி வந்த வங்கப்புலிகள் இப்போது ஜிம்பாபே அணிக்கெதிராக தடுமாறிக்கொண்டிருப்பது சர்வதேச கிரிக்கட்டில் பங்களாதேஷின் எதிர்காலத்துக்கு ஒரு அலாரம்!!ஆசிய அணிகள் தோற்றுக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் நேற்று அவுஸ்திரேலிய அணிக்கெதிராக இலங்கை அணி வெற்றி பெற்று கொஞ்சம் மனசுக்கு நிம்மதி தந்தது!தோற்றால் காலடியில் விழுந்து மண் கவ்வுகிறார்கள் .எழுந்தால் ஒரேடியாக உச்சம் தொடுகிறார்கள்.ஹிஹி இந்திய அணியும் தான்!!

Post Comment

Monday, August 15, 2011

ஒலகப்பட விமர்சனம்-"மைந்தன் ரிட்டர்ன்ஸ்"!(சுய சொறிதல்)!


தலைப்பு வைக்கும் போது பெருசா வைச்சிடுவாங்க உள்ளே பார்த்தால் ஒண்ணுமே இருக்காது..இது பதிவுலகில ஒரு கண்டுக்காத பொது விதி.அது இருக்கட்டும்.கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பதிவுலக பக்கம் தலை வைத்துப் பார்க்கமுடியாத அளவு இவனுக்கென்ன வேலை?அதனால தான் நான் தலை வைத்து பார்க்காமல் கண்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தேன்.ஆமா இப்போ என்ன எழுதுறேன்?எனக்கே புரியல உங்களுக்கு எங்க புரிய போகுது?

நேரடியா கால்'ல விடுந்துடலாமா?தப்பில்ல தான் ஆனா நிக்கிற இடம் ஒரே கான்கிரீட்டா இருக்கு..விழும்போது எங்காச்சும் உரசிகிட்டா...அழகு மூஞ்சி அசிங்கமாயிடாது?நின்னுகிட்டே கேக்கலாம்னா கால் வலிக்குது பாஸ்...உக்கார்ந்துகிட்டே கேக்கலாம்னா...ஹிஹி நீங்க என்ன எதிர்பார்க்கிறீங்கன்னு புரியுது..என்ன தான் இருந்தாலும் கேட்டுக்கிறேன்..கடந்த பத்து நாட்களாக உங்கள் பக்கம் வருகை தராமைக்கு எனது கவலைகள்..(ஹிஹி உனக்கென்னடா கவலை எங்களுக்கு தானேன்னு நினைச்சீங்களா??)

எங்கடா உன்னிய ப்ளாக் சைட் காணேலயே அப்பிடீன்னு பலர் விசாரிச்சாங்க..அவங்களில சிலரின் பெயர்கள் இங்கே தருகிறேன்..யாராச்சும் பெயர்கள் விடுபட்டிருந்தா மன்னிச்சுக்குங்க.
ஒசாமா பின் லாடன்
சதாம் ஹுசெயின்
முல்லா ஓமர்
முகமத் கடாபி
இடி அமீன்
சேர் ஐசாக் நியூட்டன்
ஆபிரிக்கன் மங்கி

இவங்களோட தாங்கள் விசாரிச்சத வெளில சொல்லிடாதீங்கன்னு சிலர் விசாரிச்சாங்க..அவங்க பெயர் சொல்லவா?நீங்க அவங்ககிட்ட சொல்லிடாதீங்க ஓகே
நமீதா மேடம்
ஹன்சிகா மேடம்
கார்த்திகா மேடம்
அமலா பால் மேடம்
"செங்கோவி புகழ்" ஷகீ... மேடம்

பப்ளிக்கா நான் எல்லாரையும் மேடம் மேடம்னு தான் கூப்பிடுவேன்..அப்பிடி கூப்பிட்டாத்தான் அவங்களுக்கு பிடிக்கும்.தனிப்பட்ட முறையில நாம வாடி போடி போடா போடின்னு கலைச்சுக்குவம் ஏன்னா நம்ம பெர்போமான்ஸ் அப்பிடி!

எவ்வளவு நேரம் தான் என்னைய பத்தியே பேசிக்கிட்டிருக்கிறது...சில பல காரணங்கள் நான் வரமுடியாமல் போனதற்கு..
நான் வராம இருக்கிறதே பெரிய விசயம்னு சிலர் சொன்னாங்க...வெரி சொரி நான் வந்திட்டேன்..
"வெரி சொரி நான் வந்திட்டேன்" தான் எனது இறுதி வரி..அப்போ எப்பிடி கமென்ட் போடுவாங்க நம்ம பசங்க??
"ஆ வாங்க வாங்க..'
"வந்திட்டீங்களா"
"எங்க அப்பிடியே போயிடுவீங்களோன்னு சந்தோசமா இருந்தோம்"
"இன்னும் கொஞ்ச நாள் இருந்திட்டு வந்திருக்கலாமே?"
"என்ன இவ்வளவு சீக்கிரம்?"

மவனுகளே விழா எடுத்து பெரிய மாலை போட்டு ஆட்டம் பாட்டம்னு கலக்கிறீங்க ஆமா சொல்லிப்புட்டேன்!

Post Comment

Wednesday, August 3, 2011

அஜித் விஜய் படத்தில் ஹன்சிகா!!!

குசும்பு:அஜித் விஜய் ரசிகர்களே..ப்ளீஸ் வாங்க...இந்தாங்க கூலா கொக்ககோலா குடியுங்க...சூடு அடங்கிரிச்சா??வாங்க உள்ள போகலாம்:


நம்ம ஹன்சிகா மேடம் பாரிஸ்'ல இரவு ஷாப்பிங் பண்ண வீதியால நடந்து போய்கிட்டிருக்காங்க..திடீர்னு பார்த்தா ஒரு பெரிய லாரி படு வேகமா வருது ஹன்சிகாவ நோக்கி மோதிறதுக்கு!ஒரு அஞ்சு செக்கன்ட் டைம் தான் இருக்கு காப்பாத்துறதுன்னா..இதுதாங்க சிச்சுவேசன்...இப்போ விஜய்யும் அஜித்தும் இந்த இடத்தில இருந்திருந்தா என்ன பண்ணி இருப்பாங்க?

முதல்'ல நம்ம தளபதி விஜய்:
ஹன்சிகா மேடம் கீழ நடந்து போய்கிட்டி இருக்கேக தளபதி பக்கத்தில இருக்கிற பெரிய பில்டிங் ஒன்றின் நூத்தி பதினஞ்சாவது மாடில நிக்கிறாரு.இந்த சம்பவத்த பார்த்தோன ஒண்ணுமே அவர் மனசுக்க ஓடேல...உடன பழைய அனுபவம் அவருக்கு கைகொடுக்குதுங்க இந்த சந்தர்ப்பத்தில.குருவி படத்தில பாய்ந்த எக்ஸ்பீரியன்ஸ் இருக்கிறதால கொஞ்சம் கூட ஜோசிக்காம ரெண்டு ஸ்டேப் பாக் போய் ஓடி வந்து பாயிறார் ஹன்சிகாவ நோக்கி..அந்த உசரத்தில இருந்து பாய்ந்து கூட நல்ல safe 'ஆ தரையிறங்கிறார்.

தளபதி இறங்கின இடத்தில அம்பது கிலோமீட்டர் அளவு குழி ஒன்னு உருவாகிரிச்சு.தளபதி பாய்ந்ததால நிலத்தில காயம்.ஆனா தளபதி ஒண்ணுமே நடக்காத மாதிரி எழும்பி ஓரமா போறாரு..வேகமா வந்த லாரி அந்த குழிக்குள்ள விழுந்து பூமி'ட அடுத்த பக்கமான கென்யா'ல எந்திரிச்சு அப்புறமா ட்ராவல் பண்ணுது!!
ஹன்சிகா மேடம் தப்பிச்சாங்க..!!!
இப்போ ஒரு பாட்டு பாடுறாங்க பாரிஸ் வீதில டான்ஸ் ஆடிகிட்டே..நான் நடந்தால் அதிரடி..என் பேச்சு சரவெடி..

அப்புறம் நம்ம தல அஜித்!
ஹன்சிகா மேடம் நடந்து வரேக்க தல எதிர் பக்கத்தால நடந்து வாராரு..வழமை போல கோர்ட் சூட் ,டை எல்லாம் போட்டு,முக்கியமா மறக்காமல் கூலிங் கிளாசும் போட்டு வாராரு..இரவு நேரம் எண்டதால கூலிங் க்ளாஸ் வடிவா வேலை செய்யாம மக்கர் பண்ணுது தலைக்கு..தலைக்கு உடன எம் எம் எஸ் ஒன்னு வருது இதுதான் சிச்சுவேசன் உடன காப்பாத்துங்க அப்பிடின்னு பிரபு அனுப்புறாரு..பாவம் தல என்ன செய்வாரு,ஓடி போயி காப்பாத்தலாம்னா உடம்பு காண்டிசன் இடம் கொடுக்கல..


அதனால "துஷ்யந்தா பாடல்'ல அவர் ஆடுறதுக்கு பதிலா ஆட வைச்ச அல்லக்கை டான்சர்ஸ் அத்தனை பேரையும் உடனடியா கூப்பிட்டு ஹன்சிகா முன்னால ஆட சொல்றாரு...அவங்கட பச்சை மஞ்சள் டிரஸ்'ஐ பாத்து கண் கூசி அந்த லாரி டிரைவர் வண்டிய மத்த பக்கமா திருப்பிட்டாரு..தல அப்பிடியே பாக்கட்ல இருந்து ஒரு சுருட்டு எடுத்து பத்த வைச்சுகிட்டே நடந்து போறாரு...(கூலிங் க்ளாஸ் கழட்டாமலே!)
இங்கயும் ஹன்சிகா மேடம் தப்பிச்சாங்க!!!!
இப்போ ஒரு பாட்டு பாடுறாங்க பாரிஸ் வீதில..தல ஓரமா நிக்கிறாரு சுவரோட சாஞ்சுகிட்டே...அந்த காப்பாத்த வந்த அல்லக்கைகள் அவருக்கு பதிலா ஆடுறாங்க...இடையில வரும் மியூசிக்குக்கு எல்லாம் ஹன்சிகாவே ஆடுறாங்க....பில்லா தீம் மியூசிக் போகுது..

அப்புறமா நம்ம பவர் ஸ்டார் எப்பிடி காப்பாத்தி இருப்பார்னு நெனைச்சேன்...ஹிஹி வழுக்கி விழுந்திட்டேங்க!!

Post Comment

Tuesday, August 2, 2011

நான் அடிச்சால் தாங்கமாட்டாய்!!

எனக்கு கோபமே வராதுன்னு நான் அடிக்கடி பொய் சொல்லி இருக்கேன் நெருங்கிய பலரிடம்..ஆனால் உண்மையில் சில பல விசயங்களுக்கு நான் கோபப்படுவேன்..அதில் முக்கியமானது நேரம்..ஆமாம் நேரம் சரியாக கடைப்பிடிக்காவிடில் நல்ல கோபம் வரும் எனக்கு..எனது பாடசாலை "Panctuality" அதுதாங்க நேரம் தவறாமையை சீராக கற்பித்ததாலோ என்னமோ ஒரு நேரத்தை கூறிவிட்டு நேரம் தாமதமாய் வருபவர்களை எனக்கு கண்ணில் காட்ட கூடாது..அவ்வளவு கோபம்வரும்.


இவ்வாறு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விசயங்களில் கோபம் வருவது சகஜம்.எனக்கு கோபமே வராதுன்னு யாராச்சும் சொல்பவர்களாய் இருந்தால் அவர்கள் நிச்சயம் பொய் கூறுபவர்களாகவோ அல்லது பூமியின் அதிசய பிறவிகளாகவோ இருப்பார்!

அடிக்கடி கோபப்படுபவனை யாருமே பொருட்படுத்தமாட்டார்கள். “அவன் எதுக்கெடுத்தாலும் இப்படித்தான் கோபப்படுவான். விட்டுத்தள்ளு’ என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால் கோபப்படாமல் வாழும் ஒருவன் எப்போதாவது கோபப்பட்டால் சுற்றியுள்ள அனைவரும் மிரண்டு போய்விடுவார்கள். எப்போதாவது வெளிப்படும் கோபத்திற்கு சக்தி அதிகம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதனால்தான் பெரியவர்கள் சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்று சொல்வார்கள்.

கோபம் பசியை போன்றது..சாதி மத பேதமின்றி அனைவருக்கும் வரும்."என்னடா நீ அடிக்கடி எல்லாத்துக்கும் கோபப்படுறியாமே' அப்பிடி நீங்க கேட்டு பாருங்க கோபமே வராதவரிடம்..அன்று தெரியும் அவருக்கும் கோபம் வரும் என்று..ஹிஹி எல்லாம் ஒரு விஷப் பரீட்சை தான்!சிலருடைய கோபம் வரையறைக்குள் கட்டுக்குள் இருக்கும்.சிலரது கோபம் அணு ஆயுதம் போல பரவி வெடிக்கும் ஆற்றலை கொண்டது!
கோபம் இரு வகைப்படும் பெரும்பாலும்.ஒன்று உள்ளுக்குள் உடைந்து சிதறும் கோபம்..மற்றயது வெளிப்படையான கோபம்.வெளிப்படையான கோபம் பல ரச நாடகங்களை நடத்தும்.இதே உள்கோபம்,சில வேலை நம் உயர் அதிகாரிகளிடமோ அல்லது சீனியர்களிடமோ ஏற்படும்.அதை வெளிப்படுத்த முடியாத சூழலில் உள்ளுக்கே புகைந்து கருகும்.

இந்த வீடியோவை பாருங்கள்..உங்களில் என்ன தவறு இருக்கிறதென்று புரியும்!

அமைதியாக வாழப் பழகிக் கொள்ளுங்கள். அமைதியாக வாழ்பவர்களுக்கு எப்போதும் இந்த சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகம் என்பதை புரிந்து கொள்ளுங்கள். கோபத்தால் எந்த ஒரு நன்மையும் விளைந்ததாக சரித்திரமில்லை. அன்பாய் வாழ்ந்தவர்கள் அழிந்து போனதாகவும் சரித்திரமில்லை

மொத்தத்தில் கோபம் என்னும் கொலை வாள் வெட்டிச்சாய்த்த வாழ்க்கைகள் ஏராளம் ஏராளம்.எண்ணிலடங்காதவை.கோபமும் மன்னிப்பும் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றன என்பர்.நான் சொல்வது மட்டுமே சரி,மற்றையவர்கள் சொல்வது தவறானவை என்பதே பெரும்பாலான கோபங்களின் அடிப்படையாக அமைகின்றன.சுய நலமே கோபத்தின் அடி நாதம்.அனைவரும் மன்னிக்கும் பண்பை வளர்த்துக்கொண்டால் கோபங்கள் துளிரிலேயே கருகிவிடும்.அதற்காக மற்றவர்கள் மன்னிக்க இருக்கிறார்கள் என்று வீணே கோபப்படாதீர்கள்..
அப்புறம் கந்தசாமி,அந்நியனிடம் புகார் அளித்துவிடுவேன் நானே!!

ஒரு பெண் வேலைக்கு செல்வதற்காக வீதி வழியே சென்று கொண்டிருந்தாள். அவள் ஒரு பிராணிகள் விற்கும் கடையில் ஒரு கிளியை பார்த்தாள்.

அந்த கிளி அவளிடம் சொன்னது, “ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.”

அந்த பெண்ணுக்கு கோபம் வந்து விட்டது. ஆனால் அமைதியாக வேலைக்கு சென்று விட்டாள்.

அவள் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் போது அதே கடை வழியாக வந்தாள்.
அப்போதும் அந்த கிளி சொன்னது, “ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.”
அவளுக்கு மறுபடியும் கோபம் வந்தது. இம்முறையும் அவள் அமைதியாக வீட்டிற்கு திரும்பி விட்டாள்.

மறுநாள் வேலைக்கு செல்லும்போது மறுபடியும் அந்த கிளி, “ஏ, பெண்ணே, நீ ரொம்ப அசிங்கமாக இருக்கிறாய்.” என்றது. இப்போது அவள் கடைக்காரரிடம் சென்று முறையிட்டாள். கடைக்காரார் கிளியிடம் அப்படி சொல்லக் கூடாது என்றார். பின் அந்த பெண்ணிடம் கிளி மறுபடியும் அப்படி சொல்லாது என வாக்குறுதி தந்தார்.

அவள் மாலை வீடு திரும்பும் போது அந்த கிளி கூப்பிட்டது,”ஏ, பெண்ணே”

அவள் ”என்ன” என்றாள்

கிளி சொன்னது, “உனக்கே தெரியும்”!!!

படிச்சிட்டு ஓட்டு போடாம போனா நான் கோபமாயிடுவேன்..ஹிஹி கருத்து சொல்லாவிட்டால் கொலை தான்!!
ஜோக் இணையத்தில் சுட்டது.ஹிஹி

Post Comment

Related Posts Plugin for WordPress, Blogger...